சிவராத்திரியில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள்
மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் மகா
சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி தினமான நாளைய தினம்
சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும்.
மகா சிவராத்திரி விரதம் பல மகிமைகளை கொண்டது. திரயோதசி அன்று ஒருபொழுது
மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம் மேற்கொள்ளவேண்டும். முடியாதவர்கள்,
வயதானவர்கள், எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். திரவ உணவாகவும் எடுத்துக்
கொள்ளலாம்
. சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில் நான்கு
ஜாமங்களில் நான்கு கால பூஜைகள் சிவன் கோயில்களில் விமரிசையாக நடைபெறும்.
அவற்றைக் கண் குளிரத் தரிசிக்கலாம். அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு
சிவபாராயணம் செய்யலாம். ருத்ரம் ஜபிக்கலாம்.
மகா சிவராத்திரி மகிமை
மகா சிவராத்திரி மகிமை
மகா சிவராத்திரி விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்து, தானங்கள்
செய்பவர்களுக்கு சிவ கடாட்சம் நிச்சயம். முக்கியமாக, ஏழைகளுக்கு அன்னதானம்
செய்வது மகா புண்ணியம் என்கின்றன சாஸ்திரங்கள்.
சிவ ராத்திரி விரதம்
இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள்
செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம்.
சிவராத்திரி விரத மகிமை
சிவராத்திரி விரத மகிமை
மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட
வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும்
என்பது முன்னோர்கள் வாக்கு. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது
நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கையில் நீராடிய பலனும்
புண்ணியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விரதம் இருப்பதால் நன்மை
விரதம் இருப்பதால் நன்மை
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக
கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த
புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும்
குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு
கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவ பூஜை மகிமை
சிவ பூஜை மகிமை
இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி,
வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.
சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின்
போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின்
சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
நான்கு ஜாம பூஜை
நான்கு ஜாம பூஜை
சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து
மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று
ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை
செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை
செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.
சிவராத்திரி விரதம்
சிவராத்திரி விரதம்
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன்,
பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதால்
தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை
நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை
மேற்கொள்ளலாம்.
சிவன் நாமம்
சிவன் நாமம்
சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைக்கு பூக்கள் மற்றும் அபிஷேகப்
பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம். சிவராத்திரியன்று
நள்ளிரவு 11.30 மணிமுதல் 1 மணிவரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில்
வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்கும். சிவனுக்குரிய பாடல்களைப்
பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள்
சேரும் என்கின்றனர்.
கண் விழிப்பதன் அவசியம்
கண் விழிப்பதன் அவசியம்
சிவராத்திரி தினத்தன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து,
மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால
அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த
குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக
அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
சிவகதி கிடைக்கும்
சிவகதி கிடைக்கும்
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும்
, சிவன்
கோயிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.மகா சிவராத்திரி
விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின்
சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி
இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி
அடைவார்கள் என்கின்றன புராணங்கள்.
No comments:
Post a Comment