Thursday, 27 April 2017

நீங்கள் உடனடியாக செல்வந்தர் ஆக வேண்டுமா


      நீங்கள் உடனடியாக செல்வந்தர் ஆக வேண்டுமா


தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும். 


இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.


வாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா? எந்த விஷயமும் வெற்றி பெற 
மாட்டேன்கிறதா ? 8 அல்லது 11 அல்லது 19 முக ருத்ராக்ஷும் அணிந்து பாருங்கள்.. வெற்றிகள் குவியும்.

மன சஞ்சலம் மற்றும் மன அமைதியின்மை, சதா விரக்தி மற்றும் ஸ்திர புத்தியின்மை போன்றவற்றிற்கு நான்கு,ஆறு,எட்டு அல்லது பதினோரு முக ருத்ராக்ஷும் சிறந்தது.

வாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா? எந்த விஷயமும் வெற்றி பெற 
மாட்டேன்கிறதா ? 8 அல்லது 11 அல்லது 19 முக ருத்ராக்ஷும் அணிந்து பாருங்கள்.. வெற்றிகள் குவியும்.

மன சஞ்சலம் மற்றும் மன அமைதியின்மை, சதா விரக்தி மற்றும் ஸ்திர புத்தியின்மை போன்றவற்றிற்கு நான்கு,ஆறு,எட்டு அல்லது பதினோரு முக ருத்ராக்ஷும் சிறந்தது.


குடும்ப உறவுகளுக்குள் பிரச்சினை மற்றும் வெளி தொடர்பு/நட்பு உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது இரு முக ருத்ராக்ஷும்.

சினிமா நட்சத்திரங்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மார்கெட்டிங் துறையில் உள்ளோர்க்கு ஏற்றது 13 முக ருத்ராக்ஷும் .




குடும்ப உறவுகளுக்குள் பிரச்சினை மற்றும் வெளி தொடர்பு/நட்பு உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது இரு முக ருத்ராக்ஷும்.

சினிமா நட்சத்திரங்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மார்கெட்டிங் துறையில் உள்ளோர்க்கு ஏற்றது 13 முக ருத்ராக்ஷும் 


சிறந்த உடல் நலம் பெற மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.

சதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம் அணியலாம்

குழந்தையின்மைக்கு ஆறு, பதிமூன்று மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய வேண்டும்.

மனக்கவலைகள் மற்றும் இனம் தெரியாத பயம் அகல மூன்று,ஒன்பது மற்றும் பத்து சேர்த்து அணியலாம்.

மனோவியாதி, பைத்தியம் போன்ற எல்லா விட மன நோய்களுக்கும் நான்கு, ஒன்று மற்றும் ஆறு முகம் சிறந்தது.

ஒன்று, இரண்டு, ஐந்து, பதிநான்கு மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய சிவ பக்தி கை கூடும்.

வழக்குகளில் வெற்றி பெற, எதிரியை வெல்ல பத்து,பதினாரு மற்றும் பத்தொன்பது முகம் சேர்த்து அணிய வேண்டும்.

Saturday, 22 April 2017

ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!

ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!


இன்றைக்கு உள்ள இளைய தலைமுறயினர் பத்தில் ஒருவருக்கு ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்த நோயானது மவுனமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம்
இன்றைக்கு பெரும்பாலோனோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகிறது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே உடலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.
பாரம்பரிய உணவுகள்
உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
குழந்தைகள் பர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப் படுத்தலாம்.
நெல்லிக்கனி ஜூஸ்
ஹைபர் டென்சன் ஏற்பட்டவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாக உள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. இதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
தினசரி காலையில் நெல்லிக்கனி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஜூஸாக கலந்து பருகலாம். இதனால் உயர்ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
உயர் ரத்த அழுத்த நோய்க்கு தர்பூசணி சிறந்த மருந்தாக உள்ளது. தினசரி தர்பூசணி பழத்தை சாப்பிடலாம் அல்லது தர்பூசணி பழச் சாறுடன் கசகசா சேர்த்து அரைத்து தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
துளசி, வேப்பிலை
துளசி 5 இலைகள் வேப்பிலை 5 சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து பருகவேண்டும். ஒருவாரத்திற்கு தொடர்ந்து இதனை குடித்து வர உயர்ரத்த அழுத்தம் குணமாகும்.

சிரிக்கும் புத்தரை வீட்டில் எங்கே வைப்பது நல்லது?

சிரிக்கும் புத்தரை வீட்டில் எங்கே வைப்பது நல்லது?

அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும்.
அப்படிப்பட்ட சிரிக்கும் புத்தரை வீட்டில் வைப்பதற்கு பயனுள்ள சில டிப்ஸ்கள் உள்ளது. உங்களது நிலை மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப, அவரை எங்கே வைக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
கிழக்கு திசையில் வைத்தல்
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும். பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.
தனிப்பட்ட ஷெங் சி திசையில் வைத்தல்
ஃபெங் ஷுய் மரபில், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு குறிப்பிட்ட திசை, அவருக்கான தனிப்பட்ட ஷெங் சி திசையாக வழங்கப்படும். சிரிக்கும் புத்தரை வீட்டில் இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகுவதிலும், ஒட்டு மொத்த நலனிலும், வாழ்க்கையில் வெற்றி கிட்டுவதிலும் உதவிடும். அதேப்போல் தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறையான விளைவுகளை கொண்டு வரவும் கூட இது ஆதரவாக இருக்கும்.
தென் கிழக்கு திசையில் வைத்தல்
சிரிக்கும் புத்தரை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார். சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.
வேலை மேஜையின் மீது வைத்தல்
சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும். கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.
சிரிக்கும் புத்தரை எந்த திசையில் வைக்க கூடாது?
சிரிக்கும் புத்தரின் மீது மதிப்பை வைத்திருக்கும் ஃபெங் ஷுய்யும் புத்த மதமும், அவரை மிக மரியாதையாக கருதுகிறார்கள். சிரிக்கும் புத்தர் என்பவர் வழிபட்டு, மதிப்பளிக்க வேண்டிய சிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தினால் துரதிஷ்டம் வந்து சேரும். அதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நீங்கள் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இச்சிலையை குளியலறை, சமையலறை அல்லது தரையில் வைக்கக்கூடாது. மேலும் நகரும் பாகங்கள் அல்லது தொடர்ச்சியான சத்தத்தை எழுப்பும் மின்கம்பிகள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகிலும் அவற்றை வைக்க கூடாது. இதனால் இச்சிலை நமக்கு வழங்கும் ஆற்றை திறனை இது குறைக்கும்.

நோயை தீர்க்கக் கூடிய இசை மருத்துவம்

நோயை தீர்க்கக் கூடிய இசை மருத்துவம்


இசையை அடிப்படையாக வைத்து நோயை தீர்க்கக் கூடிய மருத்துவம் உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படுகிறது. உடலின் அதிர்வுகளை கடத்தக் கூடிய நரம்பு மண்டலத்தை சீர்படுத்துவதில் இசை பெரும் பங்கு வகிக்கிறது. பொதுவாக உடலின் அனைத்து உணர்வுகளையும் தூண்டுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தனித்துவமான இசை உண்டு.
நரம்பு தொடர்பான கோளாறுகள், சில அதிர்ச்சி சம்பவங்களால் ஏற்படும் உடல் கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய சில வகையான இசை பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் மசாசூஸ் என்ற நகரில் ஒரு பல் மருத்துவர் பல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அவர்களுக்கு பல் வலி தெரியாமல் இருப்பதற்காக இசை எழுப்பிக்கொண்டே சிகிச்சையினை மேற்கொள்வாராம். அந்த இசையை நோயாளிகள் கேட்கும் போது மயக்க மருந்தோ, வலி மருந்தோ இல்லாமல் பல் சிகிச்சையை எளிதாக எடுத்துக் கொள்கின்றனர்.
மனிதனுக்கு மனநோயின் அறிகுறிகள் தோன்றினால் சில குறிப்பிட்ட ராகங்களை அடிக்கடி கேட்குமாறு அநேக நாடுகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த இசையும், ராகமும் மன நோயாளிகளின் பாதிக்கப்பட்ட நரம்புகளை சரி செய்து அவர்களது மன நோயினை விரட்டும் என்று நம்புகிறார்கள். பொதுவாக பலரையும் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி கொடுமையானதாகும். இந்த தலைவலியை போக்குவதற்கு வயலின் இசையை தொடர்ந்து கேட்குமாறு சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒற்றைத் தலைவலிக்கு வயலின் ஒரு சிறந்த மாமருந்தாக பயன்படுகிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். மேலும் இசை கேட்கும் பசுக்கள் அதிக அளவில் பால் தருவதாகவும் நம்பப்படுகிறது. இசையை கேட்கும் செடிகளும் அதிக அளவில் பூப்பூத்து காய் காய்க்கின்றன என்று விவசாயிகள் நம்புகிறார்கள். வெளிநாடுகளின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை பராமரிக்கும் அறைகளில் மெல்லிய இசை தொடர்ந்து இசைக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக் கூடங்களிலும், பிரசவ அரங்குகளிலும், இருதய சிகிச்சை கூடங்களிலும் மெல்லிய இசை தொடர்ந்து இசைக்கப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத இன்னிசையானது நோயாளியின் நாடி, நரம்புகளில் ஊடுருவி ஏதாவது ஒரு வகையில் நோய் குணமாவதற்கு ஆதாரமாக இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். நமது நாட்டில் கூட அமிர்தவர்சினி ராகத்தை இசைத்தால் மழை வரும் என்பது நம் முன்னோர்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.

ஏன் சில இந்து மத ஆண்கள் பூணூல் அணிகிறார்கள் என்று தெரியுமா?

ஏன் சில இந்து மத ஆண்கள் பூணூல் அணிகிறார்கள் என்று தெரியுமா?


ஒரு தனி நபரின் வாழ்க்கையில், 16 புனித சடங்குகளை இந்து மதம் வலியுறுத்துகிறது. இதனை சம்ஸ்கரஸ் என அழைக்கின்றனர். பூணூல் என்பது ஒரு சிறுவன் தன் ஐந்து, ஏழு மற்றும் பன்னிரெண்டாம் வயதுகளில் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சடங்காகும்.
பூணூல் என்றால் புனித நூலை ஒரு சிறுவன் அணிய தொடங்கியவுடன், அவன் இரண்டாவது முறையாக பிறந்து விட்டான் என அறிவிக்கப்படும். சரி, இப்போது ஏன் இந்து மத ஆண்கள் பூணூல் அணிகிறார்கள் என்பது குறித்து காண்போம்.
காயத்ரி மந்திரம்
பூணூல் அணிவது, குறிப்பாக பிராமணர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒன்றாகும். காயத்ரி மந்திரத்துடன் தொடங்கும் பூணூல் சடங்கை அந்த சிறுவனுக்கு அளிக்கக்கூடிய கூடுதல் பார்வையாக, அதாவது உட்புற பார்வையாகவும் பார்க்கப்படுகிறது. பூணூல் சடங்கை (காயத்ரி மந்திரம் ஓதுதல்) ஒரு சிறுவன் மேற்கொள்ளும் போது, அவன் பூணூல் அணியும் போது, சீரான பிரார்த்தனைகளிலும், பரிந்துரைக்கப்பட்ட வழியில் காயத்ரி மந்திரத்தை ஓதுவதிலும் அவன் ஈடுபட எதிர்ப்பார்க்கப்படுகிறான்.
யஜ்நோபவீடம்
இந்த புனிதமான நூலான பூணூல் யஜ்நோபவீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனை அணியும் ஒரு தனிப்பட்ட நபர் உயர்ந்ததாக கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தீவிர விருப்பத்தை கொண்டிருக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறார். பூணூல் என்பது வ்ரிதாஸ் எனப்படும் மூன்று நூலால் செய்யப்படுவது. ஒவ்வொரு நூலும் மூன்று சுருக்கப்பட்ட கயிறுகளைக் கொண்டிருக்கும். அவை முடிச்சு போடப்பட்டிருக்கும். அந்த சிறுவன் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான உயர்ந்த சின்னமாக பூணூல் கருதப்படுகிறது.
வாழ்க்கை பயணம்
நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்ற வாக்குறுதியை இந்த பூணூல் உணர்த்தும். மூன்று நூல்களும் இடா, பிங்களா மற்றும் சுஷும்னா என்ற மூன்று வகையான சுவாசத்தைக் குறிக்கும் அல்லது சத்வா, ராஜாஸ் மற்றும் டமாஸ் என்ற மூன்று இயற்கை குணங்களைக் குறிக்கும். மனித வாழ்க்கை என்பது பூர்ணத்துவத்திற்காக இந்த இரண்டு அம்சங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதே. அதனால் வாழ்க்கை பயணத்தின் உண்மையான நோக்கத்தை அடையலாம்.
இடது தோள்பட்டையில் பூணூல் அணிய வேண்டும்
பூணூலை இடது தோள்பட்டையில் அணிய வேண்டும். பொறுமையுடன் வாழ்க்கையின் சுமைகளைச் சுமப்பது என்பது தான் இதற்கான அர்த்தமாகும். இதயம் வழியாக செல்லும் இந்த நூல் வாழ்க்கையின் மீதான நம்பிக்கை மற்றும் உறுதியைக் குறிக்கும். அது நம் முதுகை தொடுவது, அர்பணிப்பின் சின்னமாகும். அதனால் பூணூல் என்பது ஒரு மனிதன் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டிய அர்பணிப்பு, தைரியம், உறுதி, நம்பிக்கை, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை குறிக்கும்.
மூன்று நூல்கள்
தனிப்பட்ட நபர் தான் கடமைப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களான ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னோர்கள் மற்றும் சாதுக்கள் மற்றும் கடவுள்களை தொடர்ச்சியாக நினைவுப்படுத்துவது இந்த மூன்று நூல்களே. வாழ்க்கையை முறைப்படுத்தப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள வழியில் வாழ்ந்திட தேவையான அறிவை அளிக்கிறார்கள் ஆசிரியர்கள்; இந்த உலகத்தில் ஒரு தனி நபர் இருப்பதற்கு காரணமே அவனின் பெற்றோரும் முன்னோர்களும்; கடவுள்களும் சாதுக்களும் அவனை சொத்து, அறிவு மற்றும் சந்தோஷத்துடன் அருளளித்துள்ளார்கள். அதனால் அவர்கள் அனைவரிடமும் அவன் நன்றியுடன் இருக்க வேண்டும்.
ஞானத்தை அளிக்கும்
சமஸ்கிருதத்தில் உள்ள ஒரு வாக்கியத்தின் படி, பூணூல் அணிந்திருக்கும் ஒரு தனி நபர் ஞானத்தைப் பெற்று, சூரியனைப் போல் அறிவுடன் மிளிர்வார்கள். கலைகள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் அவர்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் தலைவனாவார்கள். அனைத்து களத்திலும் சிறப்பறிவுத் தன்மையை பெறும் அவர்கள் கடைசியாக மோட்சத்தை (மனிதனின் உச்ச இலக்கு) அடைவார்கள்.
பூணூலின் அர்த்தம்
அதனால் பூணூல் அணிவதால் ஒரு மனிதனுக்கு அவனின் பல்வேறு கடமைகள், நடத்தைகள், பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையின் அர்த்தங்களை அது நினைவுப்படுத்தும். இதன் அடிப்படையில், வாழ்க்கையில் சிறந்து, உயர்ந்து நிற்பதற்கான அர்த்தத்தை உணர்த்துகிறது இது. பூணூல் அணிவதன் உண்மையான அர்த்தமும், மனநிலையும் வலுப்படுத்தப்பட்டால், ஆன்மீக வாழ்க்கைக்கு அது பாதையை வகுத்துக் கொடுக்கும்.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...