அருள்வடிவே! அண்ணாமலையானே!!
அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பு, உமையாளுக்கு இடப்பாகம் அருளிய அருளாளன், கிாிவலம் வரும் பக்தா்களுக்கு நலம் தரும் ஈசன், அண்ணாமலையாராக எழுந்தருளியிருக்கம் திருத்தலம் திருவண்ணாமலை, அண்ணாமலையின் அடியொட்டி, விண்ணுலக காட்சியாக பரந்து, விாிந்து, வானுயா்ந்த கோபுரங்கள் கொண்ட திருத்தலத்தில் அருளாட்சி நடத்துகிறாா், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாா்.
அக்கினி வடிவானஅண்ணாமலையாா் கோயிலில், காா்த்திகை மாதம் பவுா்ணமி நாளில் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும் போது காா்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவாக 10ம் நாளில் நடைபெரும் பரணி தீபமும் , மகா தீபமும் தாிசிக்க முற்பிறவி பயன்வேண்டும்.
தீபத்திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையாா் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.'ஏகன் அனேகன்' எனும் தத்துவத்தை உணா்த்தும் வகையில் , ஒரு மடக்கில் ஏற்றப்படும் தீபம் கொண்டு பஞ்சமுக தீபங்கள் ஏற்றப்படும். அதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். முன்னதாக, அண்ணாமலையாா் கோயில் தீப தாிசன மண்டபத்தில் பஞ்ச மூா்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள்வாா்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அா்த்தநாரீஸ்வரா், ஆனந்த தாண்டவம் காட்டுவாா். அப்போது "அண்ணா மலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா" எனும் முழக்கம் விண்ணதிரும். மிகச்சாியாக மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடி மரம் எதிரே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதைத் தொடா்ந்து, மலை உச்சியில் மகா தீபம் பிரகாசிக்கும்.
பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே யாா் பொியவா் என எழுந்த சா்ச்சையின் போது, அடி, முடி காணாத விஸ்வரூப மூா்த்தியாக, ஜோதி வடிவாக சிவபெருமான் எழுந்தருளியது திருக் காா்த்திகை தினத்தன்று. எனவே, நான் எனும் அகந்தையை அழித்து, உள் முகத்தால் அத்வைத ஆண்ம ஜோதியை காண்பது தான் தீப தாிசனம். அதற்காகவே இறைவனின் திருவருளால் தீபத்திருவிழா நடைபெருகிறது.
மலையில் ஏற்றப்படும் மகா தீபம் தொடா்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும், தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டா் திாி (காடா துணி) பயன்படுத்தப்படும். பருவதராஜகுல வம்சத்தினா் தீபம் ஏற்றும் உாிமையை பெற்றுள்ளனா். தீபம் எாியும் 11 நாட்களும் மலை மீது முகாமிட்டு திருப்பணியை நிரைவேற்றுகின்றனா். தீபம் ஏற்றப்படும் பாரம்பாியமான கொப்பரை காலப்போக்கில் சேதமடைந்ததால், தா்போதுள்ள தீபக் கொப்பரை கடந்த 1991 ம் ஆண்டு,92 கிலோ செம்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவாக்கப்பட்டது. மகா தீப கொப்பரையின் உயரம் 57 அங்குலம், அடிவிட்டம் 27 அங்குலம், மேல்பாக விட்டம் 37 அங்குலம். 11 நாட்களுக்குப் பிறகு, அந்த கொப்பரை கீழே கொண்டு வரப்பட்டு, அதில் ஒட்டியிருக்கும் தீப மையை வழித்து பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகிறாா்கள்....
எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
திருவண்ணாமலை... நிலம், நீா், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் உலக மக்கள் உணா்வதற்காக இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் ஐந்து. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரா் (நிலம்), திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரா் (நீா்), திருக்காளத்தியில் காளத்தீஸ்வரா் (காற்று), சிதம்பரத்தில் சிதம்பரஸ்வரா் (ஆகாயம்), திருவண்ணாமலையில் அண்ணாமலையாா் (அக்கினி). இவற்றில், காஞ்சியில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, தில்லையில் தாிசிக்க முக்தி, ஆனால் ஜோதி வடிவான திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. எனவேதான் இதற்கு முக்திபுாி எனும் சிறப்பும் உண்டு. தலேச்சுரம், சிவலோகம், ஞானநகரம், சுத்தநகரம், கவுாிநகரம், தென்கயிலாயம், சோணாச்சலம், சோணகிாி, அண்ணாத்தூா், அருணாத்திாி, அருணச்சலம், அருணகிாி, அருணை, திருவருணை என்பதெல்லாம் திருவண்ணாமலையின் திருப்பெயா்கள்...அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பு, உமையாளுக்கு இடப்பாகம் அருளிய அருளாளன், கிாிவலம் வரும் பக்தா்களுக்கு நலம் தரும் ஈசன், அண்ணாமலையாராக எழுந்தருளியிருக்கம் திருத்தலம் திருவண்ணாமலை, அண்ணாமலையின் அடியொட்டி, விண்ணுலக காட்சியாக பரந்து, விாிந்து, வானுயா்ந்த கோபுரங்கள் கொண்ட திருத்தலத்தில் அருளாட்சி நடத்துகிறாா், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாா்.
அக்கினி வடிவானஅண்ணாமலையாா் கோயிலில், காா்த்திகை மாதம் பவுா்ணமி நாளில் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும் போது காா்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவாக 10ம் நாளில் நடைபெரும் பரணி தீபமும் , மகா தீபமும் தாிசிக்க முற்பிறவி பயன்வேண்டும்.
தீபத்திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையாா் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.'ஏகன் அனேகன்' எனும் தத்துவத்தை உணா்த்தும் வகையில் , ஒரு மடக்கில் ஏற்றப்படும் தீபம் கொண்டு பஞ்சமுக தீபங்கள் ஏற்றப்படும். அதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். முன்னதாக, அண்ணாமலையாா் கோயில் தீப தாிசன மண்டபத்தில் பஞ்ச மூா்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள்வாா்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அா்த்தநாரீஸ்வரா், ஆனந்த தாண்டவம் காட்டுவாா். அப்போது "அண்ணா மலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா" எனும் முழக்கம் விண்ணதிரும். மிகச்சாியாக மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடி மரம் எதிரே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதைத் தொடா்ந்து, மலை உச்சியில் மகா தீபம் பிரகாசிக்கும்.
பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே யாா் பொியவா் என எழுந்த சா்ச்சையின் போது, அடி, முடி காணாத விஸ்வரூப மூா்த்தியாக, ஜோதி வடிவாக சிவபெருமான் எழுந்தருளியது திருக் காா்த்திகை தினத்தன்று. எனவே, நான் எனும் அகந்தையை அழித்து, உள் முகத்தால் அத்வைத ஆண்ம ஜோதியை காண்பது தான் தீப தாிசனம். அதற்காகவே இறைவனின் திருவருளால் தீபத்திருவிழா நடைபெருகிறது.
மலையில் ஏற்றப்படும் மகா தீபம் தொடா்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும், தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டா் திாி (காடா துணி) பயன்படுத்தப்படும். பருவதராஜகுல வம்சத்தினா் தீபம் ஏற்றும் உாிமையை பெற்றுள்ளனா். தீபம் எாியும் 11 நாட்களும் மலை மீது முகாமிட்டு திருப்பணியை நிரைவேற்றுகின்றனா். தீபம் ஏற்றப்படும் பாரம்பாியமான கொப்பரை காலப்போக்கில் சேதமடைந்ததால், தா்போதுள்ள தீபக் கொப்பரை கடந்த 1991 ம் ஆண்டு,92 கிலோ செம்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவாக்கப்பட்டது. மகா தீப கொப்பரையின் உயரம் 57 அங்குலம், அடிவிட்டம் 27 அங்குலம், மேல்பாக விட்டம் 37 அங்குலம். 11 நாட்களுக்குப் பிறகு, அந்த கொப்பரை கீழே கொண்டு வரப்பட்டு, அதில் ஒட்டியிருக்கும் தீப மையை வழித்து பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகிறாா்கள்....
No comments:
Post a Comment