Sunday, 4 November 2018

காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா?

                                     காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

பொதுவாக காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். அதுவும் சனிகிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. காகத்திற்கு சாதம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறோம். அதை பற்றி இங்கே பார்ப்போம்.
-
❈ சனி பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
-
❈ நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்
-.
❈ காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
-
❈ காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை.
-
❈ சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.
-
❈ இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை 'ஆகாயத்தோட்டி" என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாக சொல்வார்கள்.
**********************************************************************

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...