Sunday, 30 November 2025

வாழை மரம்,


 வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும்.

உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிகபசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது.
கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது. வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், இருமல் போன்றவைம் நீங்கும். வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாயுத்தொந்தரவு அதிகமாகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.
வாழைபிஞ்சுகளை சாப்பிடலாம் என்றாலும் அது மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் நீங்கும். வாழை பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. பூவன் வாழைபழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கலால் உண்டான முலநோய் குறையும்.
ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுபடும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்று புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தை போக்கும். செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கருந்துளுவன் வாழைபழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைபழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. முளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்’ என்னும் ரசாயன பொருள், வாழைபடும் சாப்பிடுவதால் சுரக்கிறது.
இதனால் தூக்கம் நன்றாக வரும். பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைபழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்கு பின்னர், படிபடியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைபழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிபிடத்தக்கது.

🪷 சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்


 🪷 சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்

சத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் உட்கார்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை இப்படி வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஈடுபட்ட துர்வாச முனிவருக்கு ஓரிடத்தில் ஸ்வரம் பிசகிவிட்டது. அதைக் கேட்டு வாக் தேவியான சரஸ்வதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கோபக்காரரான துர்வாசர், வாக்தேவி `சுளுக்’கென்று சிரிக்கவும் சினமடைந்தார்.
வேதத்தில் எவ்வளவு பெரிய சமர்த்தர்களாக இருந்தாலும் சில சமயங்களில், அவர்களுக்கும் ஸ்வரம் பிசகிப் போய்விடுவது இயல்புதான். வாக்குகளுக்கெல்லாம் தேவதையான நீ இதை அறிந்தும்கூட என்னைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரித்ததால் பூவுலகில் மானிடப் பெண்ணாகப் பிறப்பாயாக!” என்று சாபம் கொடுத்தார் துர்வாசர்.
இந்து தர்மத்தை ஒருங்கிணைத்து கட்டிக்காக்கும் பொருட்டு ஆதிசங்கர பகவத்பாதாள் பூவுலகில் அவதரித்த காலம் அது.
முருகப்பெருமான் வேதாந்தக் கோட்பாடுகளை நிலைநாட்டும் பொருட்டு குமரிலபட்டர் என்ற பெயரில் அவதரித்திருந்தார்.
துர்வாசரின் சாபத்துக்கு இணங்க சரஸ்வதி தேவி ஸோனா நதிக்கரையில் விஷ்ணுமித்திரர் என்பவரின் மகளாகப் பிறந்தாள். பிரம்மதேவர் மண்டனமிஸ்ரர் என்ற பெயரில் அவதரித்து, குமரிலபட்டரின் முதன்மையான சீடராக விளங்கி வந்தார்.
விஷ்ணுமித்ரரின் பெண்ணாகப் பிறந்த வாக்தேவியை மண்டனமிஸ்ரர் மணம் புரிந்துகொண்டார். கர்ம காண்டக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் தீவிரத்துடன் ஈடுபட்டு வந்தவர் குமரிலபட்டர். ஆதிசங்கரர் ஞானகாண்டத்தின் கோட்பாடுகளைப் பரப்பி வந்த தருணத்தில், குமரிலபட்டர் பிற மதங்களின் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் வேதாந்த மதமே உயர்வானது என்பதை நிலைநாட்டவும், சில காலம் அந்தந்த மதங்களைத் தழுவியிருந்தார்.
பிற மதங்களைத் தழுவியிருந்ததற்காக, தமக்குத்தாமே தண்டனை விதித்துக்கொள்ள முடிவு செய்த குமரிலபட்டர், தம்மைச் சுற்றிலும் உமியைக் குவித்து அதற்குத் தீ வைத்துக்கொண்டார். நெருப்பு சிறுகச்சிறுக அவரது உடலைப் பொசுக்கிக் கொண்டிருந்த தருணத்தில், ஆதிசங்கரர் குமரிலபட்டருடன் வாதம் செய்ய வந்தார். தீயில் தம்மைப் பொசுக்கிக்கொண்டிருந்த குமரிலபட்டர், தம்முடைய சீடரான மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்யும்படிக் கூறிவிட்டார்.
ஆதிசங்கரரும் மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்வதில் ஈடுபட்டார். வாதத்தில் ஆதிசங்கரர் தோற்றால் அவர் மண்டனமிஸ்ரரைப் பின்பற்றி கிருகஸ்தராகிவிட வேண்டும் என்றும், மண்டன மிஸ்ரர் தோற்றால் அவர் ஆதிசங்கரரைப் போல் துறவறம் மேற்கொண்டு சங்கரரின் சீடராகிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துக் கொண்டார்கள். விவாதத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பொறுப்பை கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய வாக்தேவியான மண்டனமிஸ்ரரின் மனைவியிடமே ஒப்படைத்தார்கள்.
விவாதத்தைக் கேட்டுக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் போய்விடும். உங்களுக்கு உணவு சமைக்கவும் முடியாது. அதனால் உங்கள் இருவருக்கும் இரண்டு மலர் மாலைகளை அளிக்கிறேன். மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு விவாதத்தைத் தொடங்குங்கள். யார் கழுத்தில் உள்ள மலர் மாலை வாடுகிறதோ அவர்கள் விவாதத்தில் தோற்றுவிட்டதாகக் கொள்ளவேண்டும்” என்று கூறி இரண்டு மாலைகளை அளித்தாள், வாக்தேவி. இருவருக்கும் நடுவராக இருந்த அவளுக்கு ‘உபயபாரதி’ என்ற பெயர் உண்டாயிற்று.
விவாதம் நடந்த நாள்களில், உணவு தயாரானதும் கிருகஸ்தரான தன் கணவரைப் பார்த்து, “வைஸ்வ தேவத்திற்கு வாருங்கள்” என்றும், துறவியான ஆதிசங்கரரைப் பார்த்து “பிட்சை ஏற்க வாருங்கள்” என்றும் அழைப்பது வழக்கம். இல்லறத்தில் இருப்பவர்களை உணவுக்கு அழைக்கும்போது ‘வைஸ்வ தேவம்’ ஏற்க வருமாறும், துறவிகளை அதற்கென அழைக்கும்போது ‘பிட்சை’ ஏற்க வருமாறும் அழைப்பது மரபு.
விவாத இறுதியில் மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மலர்மாலை வாடிவிட்டது. அன்று மதிய உணவின்போது உபய பாரதி கணவரையும், ஆதிசங்கரரையும் உணவு அருந்த அழைத்தபோது, இருவரையுமே ‘பிட்சைக்கு வாருங்கள்’ என்று அழைத்து, தன் கணவர் மண்டனமிஸ்ரர் விவாதத்தில் தோற்றுவிட்டார் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்!
அதன் பிறகு சங்கரர் தன்னையும் விவாதத்தில் வென்றால்தான் அவரது வெற்றி முழுமை பெறும் என்று கூறினாள்.
“மனைவி என்பவள் கணவனின் சரிபாதியானவள். எனவே, நீங்கள் என்னையும் விவாதத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்” என்று அதற்குக் காரணமும் கூறிய உபயபாரதி, இல்லறம் தொடர்பான விஷயங்களை விவாதப் பொருளாக்கி விடவே, துறவியான ஆதிசங்கரர் தகுந்த விளக்கம் அளிப்பதற்காக இரண்டு மாதம் தவணை பெற்று அமருகன் என்ற அரசனின் உடலில் பரகாயப்பிரவேசம் செய்து மீண்டு வந்தார். விவாதம் தொடர்ந்தது. இறுதியில் ஆதிசங்கரர் வெற்றி பெற்றார்.
தோல்வியடைந்த வாக்தேவி உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தினால் பந்தனம் செய்து தன் பின்னால் வரச் செய்து புறப்பட்டார். `பின்னால் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னால் வருவேன். எங்காவது திரும்பிப் பார்த்து விட்டீர்களானால் நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்’ என்று வாக்தேவி விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் ஆதிசங்கரர். இருவரும் ஒருவர் பின் ஒருவராக வழிநடந்து, விபண்டக மகாமுனி என்பவரின் ஆசிரமத்தின் வழியாக துங்கா நதி தீரத்தையொட்டிச் சென்றனர். சித்திரை மாதத்து உச்சி வேளைப் பொழுதான அந்தச் சமயத்தில் வெயிலில் சூடேறிய மணலில் கருவுற்ற தவளையொன்று தவித்திருக்க, அதற்கு நிழல் கொடுத்து உதவும் பொருட்டு, ஒரு நாகம் தன் படத்தைத் தூக்கிக் குடையாகக் கவித்து வைத்திருப்பதைக் கண்டார், ஆதிசங்கரர்.
ஒன்றுக்கொன்று பகையான இருபிராணிகள் இப்படி ஒற்றுமையுடன் இணைந்திருக்கும் விசித்திரத்தைக் கண்ட ஆதிசங்கரர், அந்த இடத்தின் மகிமையால்தான் அவை இவ்வாறு பகை உணர்வு மறைந்து வாழ முடிகிறது என்பதைப் புரிந்துகொண்டார். வாக்தேவியை ஸ்தாபிக்க இந்த இடமே பொருத்தமான இடம் என்று முடிவு செய்து, பின்னால் திரும்பிப் பார்த்தார். உடனே, அவரைப் பின் தொடர்ந்து வந்த வாக்தேவி சிலையென நின்றுவிட்டாள். அதுவரை ‘ஜல்ஜல்’ என்று ஒலித்து வந்த அவளது கால் சலங்கைகளின் சப்தம் நின்றுவிட்டது. ஆதிசங்கரர் ஶ்ரீசக்கரம் ஒன்றை அங்கு நிறுவி, வாக்தேவியை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். வாக்தேவிக்கு ஶ்ரீசாரதாம்பிகை என்ற திருநாமம் சூட்டி, சிருங்கேரியில் தாம் நிறுவிய திருமடத்தின் அன்றாட வழிபாட்டுத் தெய்வமாக பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர்.
அன்று முதல் —
சிருங்கேரி மடத்தின் முதன்மை தெய்வம்
ஸ்ரீசாரதாம்பிகையே!

ஏழைகளின் பாதாம்’

 ஆயுளை அதிகரிக்கும் வேர்க்கடலை… இப்படி செய்து சாப்பிடுங்க..!)

நிலக்கடலை… கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
வேர்க்கடலை
இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘
ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.
நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்.
மறந்துபோன நம் பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், நிலக்கடலை குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது.
கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ்-ம் கூட.
இதன் மகிமை தெரிந்தால்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.
கடலை மிட்டாய்
சத்துகள்
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
மேலும் வேர்க்கடலையை சாப்பிடுபவர்கள் நீண்ட நாள் வாழலாம். Ñமரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
தசைகளை வலிமையாக்கும்
நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.
நிலக்கடலை
கொழுப்பைக் குறைக்கும்
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது.
நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். ((Low-density lipoprotei) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein – HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
மன அழுத்தம் போக்கும்
நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.
நினைவாற்றல் அதிகரிக்கும்
இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.
கடலை
இதயம் காக்கும்
நிலக்கடலையைறீத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), , ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள்கள் நிலக்கடலையைச் சாப்பிட்டு வருவது இதய நோய்களைத் தடுக்க உதவும்.
புரோட்டின் நிறைந்தது
கடலையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ளது. அதாவது, இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.
இளமை பராமரிக்கும்
இதிலுள்ள சத்துகள் முதுமையைத் தள்ளிப்போடுவதுடன், இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.வேர்க்கடலை
கருப்பைக் கோளாறுகள் நீங்கும்
நிலக்கடலையில் உள்ள சத்துகள் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. குறிப்பாக நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பகக்கட்டி ஏற்படாமல் தடுக்கிறது.
பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
பித்தப்பை கல் கரைக்கும்
நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
வேகவைத்த கடலை
எலும்புக்கு வலிமை தரும்
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

பரணி தீபம் ஏற்றுவதன் காரணம்


 பரணி தீபம் ஏற்றுவதன் காரணம்

வசிஸ்ரவஸ் ஒரு யாகத்தின் நிறைவில் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். நசிகேதன் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான்.
தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப்போகிறீர்களா? ஆமாம். உன்னை எமனுக்குத் தரப்போகிறேன். எமனுலகம் சென்றான். ஊனுடலோடு எமதர்மனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்றுத் திரும்பினான்.
பூலோகத்திலிருந்து எமனுலகு செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதைப் பார்த்தான் நசிகேதன். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திரத்தன்று யார் வீடுகளில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிச்சம் தெரியும்.
அது மட்டுமல்ல. கார்த்திகை தீபத் திருநாளன்று சொக்கப்பனை எரித்தால் அனைத்து உயிர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும்.
அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது.
உலக உயிரினங்கள் அனைத்துக்காகவும் மோட்ச தீபம் ஏற்றும் தினம் இது. உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வணங்குவது நம் மரபு. கார்த்திகை என்றாலே ஒளி என்று பொருள். கார்த்திகை தீபத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு.
பாவங்களைப் போக்கும் பரணி தீபம் மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. நல்லெண்ணெயிலும், இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுது அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும். ஐஸ்வரியம் பெருகும்

Saturday, 29 November 2025

மனப் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சுந்தர காண்டத்தின் சக்தி வாய்ந்த ஸ்லோகம்!

 


மனப் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சுந்தர காண்டத்தின் சக்தி வாய்ந்த ஸ்லோகம்!

சுந்தரகாண்டம் அனுமனின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்வது. சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தாலோ, கேட்டாலோ நம் துயர்கள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு அடிப்படை ராமாயணத்திலேயே இருக்கிறது.
பரம்பொருள் ஸ்ரீராமர், லோகமாதா சீதாதேவி. இவர்களின் மனத் துயரையே நீக்கியருளியவர் அனுமன் சுவாமி. அந்தப் பகுதிதான் சுந்தரகாண்டம். அப்படிப்பட்ட சுந்தர காண்டத்தைக் கேட்டாலோ, படித்தாலோ மானுடர்களாகிய நம் துயரங்கள் நிச்சயம் தீரும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
அனுமன் பல்வேறு தடைகளைத் தாண்டி பறந்து வருகிறார். மைநாகத்தின் பாசத்தை வென்று, சுரசையின் சோதனைகளைக் கடந்து, இலங்கை மாநகருக்கு அருகில் வருகிறார். அங்கே லங்கினி என்னும் அரக்கி எதிர்ப்படுகிறாள்.
அனுமனின் வழியை மறித்தாள் லங்கினி. அவளிடம் தப்பிப்போக அனுமன் முயன்றார். ஆனால் அவளோ விடாது தாக்கவே, அனுமன் பேருருக் கொண்டு அவள் தலையில் குட்டினார். அந்த நொடியில் அவளுக்குத் தன் முன்ஜன்ம ஞாபகம் வந்தது.
லங்கினி முற்பிறவியில் பிரம்மலோகத்தைக் காப்பவள். அவள் பெயர் சத்யங்கினி. அகந்தையால் அங்கிருந்த முனிவர்களையும் தேவர்களையும் அவமரியாதை செய்தாள். இதுகுறித்து அவர்கள் பிரம்மதேவரிடம் முறையிட்டபோது, அவர் விசாரித்து சத்யங்கினி செய்ததே பிழை என்று கண்டார். கோபம் கொண்டு அவளை சபித்தார். ‘பூலோகத்தில் சென்று அரக்கியாகி ராட்சசர் வாழும் நாட்டைக் காப்பாயாக’ என்று சாபம் இட்டார்.
சத்யங்கினி தன் பிழையை எண்ணி வருந்தினாள். பிரம்மதேவரை வணங்கி சாபவிமோசனம் வேண்டினாள். பிரம்மதேவரும் மனம் இரங்கி, ‘எப்போது உன் தலையில் வலிமையுடைய ஒரு குரங்கு குட்டுகிறதோ, அப்போது உன் சாபம் நீங்கும்’ என்று தெரிவித்தார். பிரம்மன் இட்ட சாபத்தின்படி இத்தனை நாள்களும் அரக்கியாக இருந்து லங்கினி இலங்கை நகரைக் காத்துவந்தாள். அனுமன் அவள் தலையில் குட்டியதும் அவளுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டன.
அனுமனை அவள் வணங்கினாள். பிரம்மன் சொன்ன அனைத்தும் நிகழும் என்று கூறி, ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்று அனுமனுக்கு மன உறுதி அளித்தாள். மேலும் `அனுமன் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் இனி வெற்றிகரமாக நிறைவேறும்’ என்றும் வாழ்த்தி, இலங்கைக்குள் செல்ல வழிவிட்டு நின்றாள்.
அனுமன் இலங்கைக்குள் புகுந்தான். அவன் புகுந்த நேரம் நள்ளிரவு. ஊர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. ஓர் ஊரின் அருமையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், அங்கு இரவு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஊரில் இரவு அமைதியானதாகவும் மக்களுக்குத் தூக்கம் தடை இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்த ஊர் உண்மையிலேயே நல்ல ஊர் என்பதில் சந்தேகமேயில்லை.
இலங்கையில் உத்தமர்கள் எல்லாம் தங்களின் தினப்படியான பணிகளை முடித்துவிட்டு நிம்மதியாக உறங்குகின்றனர். எப்போதும் யோகம் செய்யும் யோகியரும் உறங்குகிறார்கள். ராவணன் அரண்மனையில் இருக்கும் இந்திரனின் வெண் களிறான ஐராவதமும் உறங்குகிறது. பொதுவாக இரவு வேளையில் மனநிலை பிறழ்வு கொண்ட பித்தர்களுக்கு உறக்கம் வராது. ஆனால் இலங்கையில் அவர்களும் நிம்மதியாக உறங்கினார்கள் என்கிறார் கம்பர். இவ்வாறு விரிவாகச் சொல்லக் காரணம் இலங்கை, குறைவற்ற ஒரு தேசமாகத் திகழ்ந்தது என்பதை விளக்கத்தான்.
துளசிதாசர் தன் ராமாயணத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
அனுமன் இலங்கையில் சுற்றித் திரிந்தபோது, ஒரே ஒரு வீடு மட்டும் வைஷ்ணவ லட்சணத்தோடு இருந்ததாம். வெளியே துளசி மாடம். சுவர்களில் சங்கு, சக்கர, கத ஆயுதங்களின் ரேகைகள் இருந்தன. அங்கே இருந்தவன் விபீஷணன். அவன் பெருமாளின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தான் என்று சொல்கிறார் துளசிதாசர். ஆனால் இது மூல ராமாயணத்தில் இல்லை. ஆனால் விபீஷணன் எத்தனை உத்தமமான பாகவதன் என்பதை எடுத்துரைக்க துளசிதாசர் இவ்வாறு விளக்குகிறார் என்று அதனைப் புரிந்துகொள்ளலாம்.
அனுமன் அரக்கர்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்றார். அவர் வந்த நோக்கம் சீதையைக் கண்டுபிடிப்பது. சீதை எப்படி இருப்பாள் என்று ராமன் அடையாளம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தக் குடியிருப்புகளில் அவர் பார்த்த பெண்கள் அனைவரும் அரக்கிகள். அவர்கள் அலங்கோலமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே பெரிய பாத்திரங்களில் மது இருந்தது. ஸ்ரீராமர் சொன்ன அடையாளங்களோடு யாரேனும் இருக்கிறார்களா என்று விளக்கின் வெளிச்சத்தில் தேடினார். ஆனால் ஒருவர்கூட அந்த அடையாளத்தில் அங்கு இல்லை.
அனுமன் ராவணனின் அரண்மனைக்குள் நுழைகிறார். அங்கே படுக்கையறையில் ஒரு வீரன் படுத்திருக்கிறான். அவன் மார்பில் யானைகள் தந்தங்களால் குத்திய தடங்கள் பல இருந்தன. இதைக் கண்ட அனுமன், இந்த ஊரில் இப்படிப்பட்ட ஒரு வீரன் இருக்கிறான் என்றால் அது ராவணனாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்கிறார். அனுமனின் முடிவு மிகவும் சரியானது. அவன் ராவணன்தான்.
அவன் அருகிலேயே ஒரு பெண் அடக்கமாகப் படுத்திருக்கிறாள். சாந்தமான அவள் முகத்தைக் கண்டதும் அனுமன் ஒரு கணம் அவள்தான் சீதை என்று நினைத்து மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தார். பொதுவாகக் குரங்குகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால் தன் வாலுக்கு முத்தம் கொடுத்துக் கொள்ளுமாம். அப்படி அனுமனும் தன் வாலை எடுத்து முத்தமிட்டுக் கொண்டார்.
சந்தோஷத்தில் அருகில் இருந்த தூணில் மேலே ஏறி இறங்கினார். ஆனந்த நடனமிட்டார். அடுத்த கணம் அவருக்குள் ஏதோ ஒன்று தோன்றியது. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினார்.
‘ஆண்களில் புருஷோத்தமர் என்று போற்றப்படுபவர் ராமர். அவரே சீதையின் பிரிவை நினைத்து அழுகிறார் என்றால், சீதாதேவி எப்படிப்பட்ட கல்யாணகுணங்கள் உடையவராக இருப்பார்? லோகமாதாவான சீதா, ராவணன் அருகே படுத்திருப்பாரா... அவ்வாறு எண்ணியதே பாவம் அல்லவா’ என்று தனக்குத் தானே வருந்தினார் அனுமன். பிறகு, அங்கிருந்து புறப்பட்டு நகரின் பல பகுதிகளிலும் தேடினார். ஆனால் சீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அனுமன் மனம் உடைந்தார். அவருக்கு ராமர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருந்தினார். சுக்ரீவனின் சேனையில் ஆயிரக்கணக்கான குரங்குகள். அவற்றை மூன்றாகப் பிரித்து மூன்று திசைகளிலும் சீதையைத் தேட அனுப்பினார்.
ஆனால் அனுமனை மட்டும் தெற்கு திசை நோக்கி அனுப்பினார். அதுவும் தன் கை மோதிரத்தைக் கொடுத்து அனுப்பினார் என்றால் அதற்குக் காரணம் ராமர் அனுமன் மீது வைத்த நம்பிக்கை. அதை நினைத்ததும் அனுமனின் மனம் கனத்தது.
இப்போது திரும்பிச்சென்று சீதையைக் காணமுடியவில்லை என்று சொன்னால் ஸ்ரீராமர் உயிர் தரித்திருப்பாரா? அவர் உயிர் துறந்தால், லட்சுமணப் பெருமாள் தாங்குவாரா? சுக்கிரீவன் முதலான வானர சேனைகள் தாங்குமா? அயோத்தி மக்கள் அதைத் தாங்கிக் கொள்வார்களா? தன் சொல்லால் எத்தனை பேருக்குத் துயரம் உண்டாகிவிடும் என்று தவித்தார்.
இப்படி அனுமனுக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஏன் தன்னால் சீதாதேவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று யோசித்தார்.
‘சீதாதேவி இந்த உலகின் தாய். அவள் அனுக்கிரகம் இல்லாமல் அவளை அறியமுடியுமா? தான் இலங்கையை நோக்கிப் புறப்படும் போது, குருவான சூரியனை வணங்கினேன். ஸ்ரீராமரை வணங்கினேன். லட்சுமணரை வணங்கினேன். அஷ்டதிக் பாலகர்களை வணங்கினேன். ஆனால் சீதாபிராட்டியை வணங்கவில்லை. தேடுவதோ அவளைத்தானே... அவள் அனுக்கிரகம் இல்லாமல் அவளை அறிந்துகொள்ள முடியுமா...’ என்று நினைத்தார். அடுத்த கணம் சீதாதேவியை நினைத்துத் துதிக்கலானார்.
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக
நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:
சுந்தர காண்டத்தில் உள்ள இந்த ஸ்லோகம் மிகவும் முக்கியமானது. நமக்கு முடிவெடுக்க முடியாமல் திணறும் நேரத்தில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அனுமனை தியானித்தால், நல்ல முடிவு தோன்றும். மனதில் பலம் பெருகும். பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பெரியோர்கள்.

பசங்க நன்றாக படிக்க வழிபட வேண்டிய கோவில்கள்

 


பசங்க நன்றாக படிக்க வழிபட வேண்டிய கோவில்கள்
எல்லோருக்கும் தெரிந்தது கூத்தனுர் சரஸ்வதியும் ஹயகிரிவரும். இன்னமும் சிலர் சுவாமிமலையை கருத்தில் எடுத்து கொள்வார்கள்.
ஆனால் இவைகளை தவிர பல கோவில்கள் நம் தமிழகத்தில் உள்ளன.
1. சீர்காழி முல்லை வன நாதர். பார்வதிக்கு சிவன் பிரணவ மந்திரம் சொல்லி தந்த ஸ்தலம்.
2. திருவானைக்காவல் சிவபெருமான் குருவாகவும், உமையவள் மாணவியாகவும் உள்ள ஸ்தலம்.
3. திருக்காட்டுப்பள்ளி அக்னிபுரீஸ்வரர் - யோக குரு சிவன் அம்பாளுக்கு போதிக்கும் வடிவம்.
4. திருவெண்காடு பிரம்மனுக்கு அம்மன் போதித்த ஸ்தலம்.
5. தொட்டியம் திருநாராயணபுரம் வேதநாராயணபெருமாள் = தலைக்கு கீழே 4 வேதங்களையும் வைத்து கொண்டு இருப்பார். பிரம்மனுக்கு மறந்து போன வேதங்களை பெருமாள் உபதேசித்த ஸ்தலம்.
6. காஞ்சி மறைநூபுரம்- யுகத்தின் முடிவில் வேதங்கள் சிவனை வழிபட்டுச் சிவபெருமானுக்கு காலில் அணியும் சிலம்பம் ஆகின. சிவபெருமான், தமது தூக்கிய திருவடியை அசைத்து சிலம்பொலி மூலம் பிரம்மனுக்கு வேதங்களை உபதேசித்த தலம்.
7. ஓமாம்புலியூர் இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவ மந்திரத்தை விளக்கிய தலம் இது. இத் தலத்திற்கு ‘பிரணவ வியாக்கியான புரம்’ என்ற பெயரும் உண்டு.
8. திருவேற்காடு வேதபுரீஸ்வரர்= நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம்
9. வேதாரண்யம்- நான்கு வேதங்களும் தல மரங்களாக உள்ள ஸ்தலம்.
10. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாமரம், நான்கு கிளைகள் நான்கு வேதங்கள்
குற்றாலம் பலா மரம் - வேதங்களாக உள்ள ஸ்தலம்.
11. கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்: சப்த கன்னியருக்கு குரு உபதேசம் செய்து அவர்களுக்கு கொலை பாவம் நீங்க அருள் செய்த ஸ்தலம்.
இன்னமும் சில ஸ்தலங்கள் கூட உள்ளன. 

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் உள்ள விநாயகர் காப்பு

 


திருமூலர் அருளிய திருமந்திரத்தில் உள்ள விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே !
விளக்கம்:
கணபதிக்கு நான்கு கரங்களோடு தும்பிக்கையைச் சேர்த்தால் ஐந்து கரங்கள் இருப்பதால் ஐந்து கரத்தன் எனப்படுகிறார்.
பாடலும் ஐந்து கரத்தனை என்று ஆரம்பிக்கிறது.
அடுத்து அவருக்கு யானை முகம் இருப்பதால் யானை முகத்தனை என்று வருகிறது.
அவருடைய தந்தம் சந்திரனின் இளம் பிறை போல இருக்கிறது .
எனவே "இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை" என வருகிறது.
இவர் பரமேச்வர புத்திரன் ஆனபடியால் நந்தி மகன் தன்னை என்று போற்றப் படுகிறார்.
நந்தி என்பது ஈச்வரனுக்கு ஒரு நாமம்.
நமக்கெல்லாம் ஞானத்தைக் கொடுக்கும் தெய்வம் ஞானமயமாகவும் ஞானக் கொழுந்தாகவும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே?
ஆகவே "ஞானக்கொழுந்தினை" எனப்படுகிறார்.
இப்படிஆப்பட்ட மூர்த்தியை சிந்தையில்/புத்தியில் வைத்து அவனது பாதங்களைப் போற்றி வணங்குகின்றேன்.
மூலரின் அருள்கொண்டு மூலத்தில் உள்ள மூலவனை ஆராய்ந்ததை விளக்கமுடன் விளக்கி விளக்கின் நெய்போல் உருக விழைகிறேன் .
முழுவதையும் படித்தவுடன் யோசிப்பீர்கள்!
.
முதல் பாடலிலே அனைத்தையும் மூலர் உரைத்திருப்பதை.
ஐந்து கரமென்பது
முதல் கரம் ~மும்மலங்கள் இருவினையொப்பு , மலபரிபாக , சத்திநிபாக அதாவது ஆணவம், கன்மம் , மாயையை நீக்க உதவும் கரம்.
இரண்டாம் கரம் ->
முப்பத்தாறு தத்துவங்கள் தொன்னிற்றா ராக விரிந்து காணப்படும் , இவைகளை வெட்ட அருளும் கரம்.
மூன்றாம் கரம் -> மூன்று அவஸ்தைகளை ( கேவல, சகல மற்றும் சுத்த அவஸ்தைகள்) உணரச்செய்து தன்னையறிய பக்குவப்படுத்த அருளும் கரம்.
நான்காம் கரம் -> ஸ்தூல, சூட்சும , அதி சூட்சும, காரண அதி காரண தேகங்களிற்கு தேவையான ஞானமாகிய பலவகையான அட்சரங்களை அருளும் கரம்.
ஐந்தாம் கரம் -> வாசி அருளி அதைக் கொண்டு குண்டலினி எனும் மகாசக்தியை தூண்டும் தந்திக் கரம்.
சாதகன் இவரின் இந்த ஐந்து கரங்களின் உதவிக் கொண்டுதான் மேவிய ஞானத்தை அறிய முயல்வான்.
எனவே இவரின் கரத்தின் மகத்துவம் இங்கு அழகாகவும் அழுத்தமாகவும்
கூறப்பட்டுள்ளது.
யானை முகமென்பது -> குண்டலி உறங்கும் பொழுது தலைகீழாய் தொங்கும் வாழைபூ போல் அல்லது யானையின் தும்பிக்கை போல் காட்சியளிப்பதால், இங்கு
வீற்றுள்ள இறையின் திருமுகம் யானையின் முகம் என்று விளக்குகிறார்.
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை -> இந்து என்பது சந்திரனாகி ய இட நாடியைக் குறிப்பது.எயிறு என்பது தந்தத்தைக் குறிக்கும் .
இறை அமர்ந்திருக்கும் இடத்தில் அந்த நாடியானது பிறை சந்திரன் போல் வளைந்து அவரது திரு முகத்தில் தந்தமாக அமைகிறது. எனவே திருமுகத்தில் தந்தியுடையோன் யென்று அழைக்கப்படுகிறார்.
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை - நந்தி என்பது குண்டலினி எழும் பொது பிறக்கும் ஈசனின் ஆண்சத்தி.
இந்த சத்தி எழும் பொழுதே கணபதி எனும் மகன் மூலதாரத்தில்
உணரப்படுகிறார்.
அப்போது அவர் ஞானத்தின் உறைவிடமாய்
காட்சியளிக்கிறார் என்பதால் ஞானக் கொழுந்து என்று மூலர் வர்ணிக்கிறார்.
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே-- புந்தி என்பதற்கு அறிவு என்று பொருள்.
மூலாதாரமாகிய அடியில் அதாவத மலவாய் உள்ள இடத்தில் வீற்றிக்கு ம் இறையை அறிவின் பயனாக மூலத்தில் வைத்து உணருகிறேன்
என்றுரைக்கிறார்.

காஞ்சிப்பெரியவரின் சீடர் குமரேசன் கூறிய உண்மைச் சம்பவம் இது



காஞ்சிப்பெரியவரின் சீடர் குமரேசன் கூறிய உண்மைச் சம்பவம் இது.🌸🌸🌸

திருக்கோவிலூரைச் சேர்ந்த பெரியவரின் பக்தரான மணி, தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்திருந்தார்.
பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தன்று தவறாமல் விரதமிருந்து பூஜை செய்வது அவரது வழக்கம். முடிந்தால் அனுஷத்தன்று காஞ்சிப் பெரியவரை தரிசிக்கவும் செய்வார்.
மணிக்கு இரு குழந்தைகள். மூத்தவள் பெண். இளையவன் பையன். பெண்ணுக்குத் திருமணம் முடிந்து பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். பையன் படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தான். இந்நிலையில் தான், மணி தம்பதி பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அன்று அனுஷம் என்பதால் மடத்தில் பெருங்கூட்டம் காத்திருந்தது. வீட்டில் நிறைமாத கர்ப்பிணி தனியாக இருக்கிறாளே என்ற எண்ணம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்!
காஞ்சிப்பெரியவர் சீடர்களிடம் வரிசையில் நிற்கும் திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” என்று சொல்லிக்கொண்டே அட்சதை கொடுத்து ஆசியளித்தார்.
தாமதம் செய்யாமல் மணியும் உடனே டாக்சியில் திருக்கோவிலூர் திரும்பினர்.
வீட்டிற்குள் நுழையும் போதே அடுத்த வீட்டுப் பெண்கள் ஓடி வந்தனர். “உங்களுக்கு இப்ப தான் பேரன் பிறந்திருக்கான். சுகப்பிரசவம் தான்” என்று சொல்லி விட்டு 'தந்தி ஒண்ணு வந்திருக்கு' என்று சொல்லி அதையும் கையில் கொடுத்தனர். அதைப் பிரித்து பார்த்த மணியின் கண்கள் அகல விரிந்தன. மகனுக்கு ரயில்வே துறையில் நாக்பூரில் சேர்வதற்கான பணி குறித்து தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மகிழ்ச்சியுடன் மணி பேரக்குழந்தையைப் பார்க்கச் சென்றார். தாத்தாவிடம், 'எல்லாம் காஞ்சிப்பெரியவரின் கருணையே' என்று அந்தக் குழந்தை சொல்வது போலிருந்தது. குழந்தைக்கு 'சந்திரசேகரன்' (பெரியவரை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைப்பது வழக்கம்) என்று பெயரிட்டு வாழ்த்தினார். வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.
இதே போலவே, வேறொரு அற்புதமும் பெரியவரால் நிகழ்ந்தது.
ஒருமுறை பெரியவரை தரிசிக்க பெங்களூருவில் இருந்து பணக்காரர் ஒருவர் வந்தார். பழம், பூ, பட்டுப்புடவை, திருமாங்கல்யம் ஆகியவற்றை தாம்பாளத்தில் வைத்தபடி அவரது மனைவி உடன் நின்றாள்.
பெரியவரை வணங்கிய அவர்கள், “சுவாமி... யாராவது ஒரு ஏழைப் பெண்ணுக்கு இதை அளிக்க விரும்புகிறோம்,” என தெரிவித்தனர்.
அதே நேரத்தில், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலைச் சேர்ந்த ஏழை சமையல்காரர் ஒருவர் தன் மனைவி, மகளுடன் அங்கு வந்திருந்தார். தன் மகளுக்கு திருமணத் தேதி குறித்து விட்டதை தெரிவித்து ஆசியளிக்கும்படி வேண்டினார். அப்போது பணக்காரரை அழைத்த பெரியவர், “திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே இவாளை இங்க அனுப்பியிருக்கா... அதுக்கு காஞ்சி காமாட்சி வழிகாட்டியிருக்கா... கொடுக்க விரும்பினதை இந்த பொண்ணுக்குச் சீதனமாக கொடுங்கோ” என்று சொல்லி ஆசியளித்தார்.
பணக்காரரும் மகிழ்ச்சியுடன் திருமாங்கல்யம் உள்ளிட்ட அனைத்தையும் அவரிடம் கொடுத்தார். அப்போது அந்தப் பெண்ணை தீர்க்க சுமங்கலியாக வாழ பெரியவர் வாழ்த்தினார்

தன்வந்திரி 108 போற்றி


 தன்வந்திரி 108 போற்றி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
உடல்நலத்துடன் திகழ இந்த 108 தன்வந்தரி போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாடுங்கள்.
1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி
16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி…
31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி
61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி
76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி
91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ.
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

#அகம்பிரமாஸ்மி தன்னுள்ளே இறைவனை உணர்ந்து


 #அகம்பிரமாஸ்மி தன்னுள்ளே இறைவனை உணர்ந்து அனுபவித்தால் என்ற நிலைப்பாடு ..

அவன் அருளால் அவன் தாழ் வணங்கி ..
சிதம்பரம் என்றால் கோயில், கோயில் என்றால் சிதம்பரம் என்பது யாவரும் அறிந்ததே ..
முதலில் சிதம்பரம் சென்று எல்லா கோயிலை போலவே இங்கும் அனுபவித்தது உண்டு ..
ஆனால்
அங்கு போகப்போக இவனுள்ளே நிறைய மாற்றங்கள்,
என் உடலையே கோயிலாக கொண்டு அதனுள்ளிருந்து அதை இயக்கி ஆளும் அற்புதத்தை இவனுள்ளே உணரும்படி யான திருவருளை குறித்தே இப்பதிவு .. பதியவிட்டவன் திருவருளால்
அம்பலவாணர் என்று கூறப்படும் தில்லை நடராஜா பெருமான் இருக்கும் பொன்னம்பலம் நம் உடலோடு அப்படியே பொருந்தும் தன்மை பெற்றதே ..
நம் உடலில் 9 துவாரங்கள் 9 கலசங்களாக
நாம் வாழ்வே சுவாசத்தை பிராதனாமாக கொண்டே அந்த சுவாசம் ஒவ்வொரு உடலும் 21,600 தங்க ஓடுகள் கொண்ட கூரையில்,
அந்த சுவாசத்தை கொண்டு 72,000 (ஆணிகள் ) நாடி நரம்புகள் வழியே கட்டப்பட்ட இந்த உடலின் உள்ளே
இடது பாகமாக ஆனந்த தாண்டவம் ஆடும் பிரபஞ்ச இயக்க நாயகன் ஆதலால் உள்ளே அம்பலத்தில் இடது பக்கமாக நடராஜ பெருமான் திருவுரு ..
நம் உருவத்தை உருவமாக தக்கவைக்க அவனது திருநடனமே பிரதானமாக,
அந்த இருதய துடிப்பின் வழியே அவன் ஆடும் திருநடனம் என்ற ஆற்றல் வழியே நாம் உடலில் ஒவ்வொரு அணுக்களும்/ உறுப்புகளும் .. இயங்க .
சுவாசம் என்ற காற்று எதன்வழியே உள்ளடங்கி அது இருதய இயக்கமாக திருநடனத்தின் வழியே உந்தப்பட்டு இந்த 72,000 நாடி நரம்புகள் இயக்கப்பட்டு அவனே உருவமாய் ( இருதயம் ), அருவுருவாய் ( ரத்தம் / சதை / திசு ), அருவாய் ( உடலில் உள்ளே வெற்றிடமாய் ) இருந்து இயக்க படவதாலேயே,
நாம் நாமாக இருக்கிறோம் ..
அமபலத்தில் ஆடும் நாயகன் உங்கள் உள்ளே உங்களை பிணைத்து, நாடி நரம்புகள் வழியே ஒரு உருவமாக கட்டி, அதில் உருவாய் / அருவுருவாய் / அருவாய் இருந்து உங்களுள் புரியும் திருநடனத்தால் தான் எதுவும் அதுவாக இருக்கிறது ..
இந்த அமபலத்தை கண்ணால் அனுபவிக்கும் வரையில் உணர முடியாத உங்களை அவனிடம் சரணாகதி என்ற நிலையில் இருந்து அனுபவிக்கும்போது ..
உங்களை மீறிய ஒன்றாய் உங்களை அவனே உங்கள் உடலை சிற்றம்பலம் - சின்ன அமபலமாக ( கோயிலாக ) கொண்டு,
உங்களுள் அணுவணுவாக அவன் ஆட்டத்தின் வழியே பின்னிபிணைத்து அவனது இருப்பை உங்களுள் ஒரு சில நொடிகளாவது அவன் உணர்வாய் ஆக்கிரமித்து உணர்வற்ற நிலையில் உங்களை வைத்து ..
தன் இருப்பை உங்களுள்ளும் உணர்விப்பான் ..
அந்த உணர்வை நீங்கள் பெறும் வரையில் #சிற்றம்பலம்(என் உடல்) என்ற நிலையில் இருந்து, திரு (இறைவனால்) இருந்து இயக்கப்படும் என்ற மெய்யை அனுபவிக்க #திருச்சிற்றம்பலம் ஆகா அனுபவிக்க தொடங்கும் ..
அந்த இருப்பை நீங்கள் மீண்டும்மீண்டும் உங்களுள் கொண்டு வர இந்த சில நொடிகள் ஆக்கிரமித்து அருளிய மெய்யை, நான் என்ற மாயையை கொஞ்சம் கொஞ்சமாக உணரதொடங்குவோம் ..
அதற்க்கு பிறகு
நாமே நம்மை கவனித்து பார்க்க விளைந்தால், நாம் இதுவரையில் எங்கு சென்று என்ன கடவுளை எப்படி அனுபவித்தாலும் அது உங்கள் உள்ளே ஒரு தனித்துவமாக அனுபவத்தை தந்திருக்கும் .. அந்த அனுபவத்தை ஏன் எப்படி எதற்காக என்று வெளியே விவரித்து சொல்ல முடியாவிட்டாலும் அந்த அனுபவம் உங்கள் உள்ளே நிகழ்திருக்கும் ..
இது கடவுள் என்ற ஒன்றை கடந்து சில உயிர்கள் / உறவுகள் / நிகழ்வுகள் என்று உங்களுள் ஓர் ஆத்மார்த்தமான அனுபவத்தை தந்திருக்கும் ..
என்னதான் வெளியே நாம் ஆயிரம் அனுபவித்தாலும் ?? அனுபவித்ததாக நினைத்தாலும் அது அத்தனையும் உங்கள் உள்ளே ஒரு தனித்துவமாக அனுபவத்தையே தந்திருக்கும் ..
அதாவது உங்களை இயக்கும் பேராற்றல் என்ற பிரபஞ்ச பொதுநடனம் வழியே உங்களுள் அனுபவித்ததே யாவும் ..
எது எல்லாம் உங்களுள் இயக்கப்படும் அதிர்வலைகளோடு பொருந்தி போகிறதோ அதுவெல்லாம் உங்களுக்கு இன்பமாகவும் / விருப்பமாகவும் இருக்கும் ..
அந்த அதிர்வலைகள் கொஞ்சம் வேறுபாடுகள் உடன் இடம்பெறும் போது நம் உணர்வுகள் மாறும் ..
அப்போது உங்கள் உடலின் இயக்கம் கடந்து !!
உங்கள் உணர்வின் வெளிப்பாடும் அவனது இயக்கத்தை பொறுத்தே நிகழ்கிறது ..
இதை ஒவ்வொரு ஆன்மாவும் அதற்க்கான பரிபக்குவ நிலையில் இருந்து அனுபவிக்க ..
நான் என்று பெருமை / சிறுமை கொள்ள ஏதுமில்லாது ..
உன்னை உன்னை மீறி இயக்கி அருள்பவனே உன்னை நீ யாக காட்டிகொண்டு இருக்கிறான் என்ற மெய் புரியும் ..
அதில் அகம்பிரமாஸ்மி என்பது நானே கடவுள் என்று வெளியே கேலிகூத்தாக சித்திகரிக்க படுகிறது ..
ஆனால்
அகம் என்ற நம்முள்ளே நம்மை இயக்கி கொண்டு இருப்பதே ..
பல கோடி கோள்களை கொண்ட இந்த பிரபஞ்சத்தை இயக்கி அருளி கொண்டு இருக்கிறது என்று உணர்வது தான் ..
அதுமட்டும் இல்லாது ..
நம்மை இந்த பிரபஞ்ச இயக்கத்தோடு பொருத்தி எப்போதும் நம்மை மீறி நம்மை இயக்கி அருளிக்கொண்டு இருப்பதால் தான் .. நாமே நாமாக தெரிகிறோம் ..
இப்படி அகத்தை அனுபவிக்க !!!
அது பரத்தை உணர்விக்க !!
இரண்டும் வேறல்ல இரண்டையும் இயக்கியருள்வது ஒன்றே என்ற நிலைப்பாட்டை ..
நாம் ஆன்மா எய்தும் போது ..
நிர்வான நிலை என்ற ஒன்று தானே வெளிப்பட துவங்கி விடும் ..
அதுவரையில் நான் ?? நான்தான் ?? என்ற சுழற்ச்சியில்
அது தான் இறைவன் !! அங்கு தான் இருக்கிறான் !! அப்படிதான் வணங்க வேண்டும் .. போன்ற பாவனைகள் தொடரும் ....
ஒவ்வொரு ஆன்மாவும் அனுபவித்துணர வேண்டிய அற்புதமே, உருவம் கடந்து, உலகம் கடந்து, அண்டம் கடந்து, பேரண்ட பெருவெளியாக , பிரபஞ்சமாக வியாபித்து இருக்கும் நடராஜா என்று நாமமும் கடந்த இறைப்பேராற்றல் ..
திருச்சிற்றம்பலம் 

சூரியோதயமா? அருணோதயமா?🤔


 சூரியோதயமா? அருணோதயமா?🤔

இந்து தர்ம புராணங்களின்படி ஒற்றைச் சக்கரம் உள்ள தேரில் அமர்ந்து, வானவில்லின் வர்ணங்களாலான ஏழு குதிரைகள் இழுக்க விண்வெளியில் வலம் வந்து, தன் வெப்பத்தாலும் வெளிச்சத்தாலும் உலகைக் காக்கும் அனுக்ரஹ தேவதையே சூரியன். ஸ்ரீமன் நாராயணரின் அம்சமான அவரை, ஸ்ரீசூரிய நாராயணர் என்று பூஜித்து வணங்குகிறோம்.
அவர் நவக்கிரகங்களின் நடுநாயகன். மனித ஜாதியின் அறிவு, ஆற்றல், புத்தி, நினைவு, பகுத்தறிவு ஆகிய சக்திகளுக்கு அவரே ஆதார தேவதை. மகரிஷி காஸ்யப முனிவருக்கும் அவரின் மனைவி அதிதிக்கும் மகனாகத் தோன்றியவர். உலகில் இருளை நீக்கி உயிரினங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்தும் உயிர் வாழ ஆதார சக்தியாக இருப்பவரும் அவரே! பஞ்ச பூதங்களில் அக்னியாக இருப்பவர். அவருக்கு ஆதித்யன் என்ற பெயரும் உண்டு. சூரிய உதயத்தை அருணோதயம் என்றும் குறிப்பிடுவார்கள். இது ஏன் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
சூரிய பகவானுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவர் அருணன்; மற்றவர் கருடன். காஸ்யப முனிவருக்கு திதி, அதிதி மட்டுமின்றி கத்துரு, வினதை ஆகிய மனைவியரும் உண்டு. உலகில் தோன்றிய சர்ப்பங்களுக்குத் தாய் கத்துரு. வினதைக்குக் கால்களே இல்லாத மனித உருக்கொண்ட ஒரு குழந்தையும், கழுகின் தலை வடிவமும், மனித உடலும் கொண்ட ஒரு குழந்தையும் பிறந்தனர்.
அவர்களே அருணன் மற்றும் கருடன். இவர்களில் கால்கள் இல்லாத அருணனே சூரியனின் தேரோட்டியானான். அதனால்தான் சூரிய உதயத்தை அருணோதயம் என்று குறிப்பிடுகிறோம்.
அருணன் சூரியபகவானுக்குத் தேரோட்டியான வரலாற்றைக் காண்போம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி, பாற்கடலைக் கடைந்தனர். முதலில் விஷம் தோன்றியது. சிவபெருமான் அதனை உண்டு, தேவர்களையும் அசுரர்களையும் காத்தருளினார். அதைத் தொடர்ந்து, அமிர்தம் தோன்றியது. ஸ்ரீமஹாவிஷ்ணு மோகினி வடிவெடுத்து வந்தார்.
நல்லவர்களுக்கு மட்டும் மரணமில்லா வாழ்வு தர வேண்டும் எனக் கருதி அமிர்தத்தை முதலில் தேவர்களுக்கு மட்டுமே வழங்கினாள் அந்த மோகினி. அப்போது அசுரன் ஒருவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே நின்று, அமிர்தத்தைப் பெற்றுப் பருகிவிட்டான்.
அதனை சூரிய- சந்திரர்கள் மூலம் அறிந்ததும், மோகினி அவனது சிரசைத் துண்டித்து விட்டாள். இருப்பினும், அமிர்தம் அசுரனின் உடலில் கலந்து விட்டதால், வெட்டுப் பட்ட தலை ஒரு பாம்பின் உடலைப் பெற்று உயிர் பெற்றுவிட்டது; வெட்டுப் பட்ட உடல் ஒரு பாம்பின் தலையைப் பெற்று உயிர் பெற்றது. அவர்களே ராகு, கேது எனும் சாயா கிரகங்களாகி, நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றனர்.
தங்களை மோகினியிடம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களைப் பழிவாங்க அவர்களுக்குப் பகைவர்கள் ஆனார்கள் ராகுவும் கேதுவும். கிரஹண வேளைகளில் அவர்கள் சூரிய- சந்திரர்களை மறைத்து அவர்களின் ஒளியும் சக்தியும் இல்லாமல் செய்தனர்.
தொடர்ந்து இந்தப் பகையால் பாதிக்கப்பட்ட சூரியன், ஒருமுறை கடும் கோபம் கொண்டார். அப்போது அவர் விஸ்வரூபம் எடுத்தார். அவர் வீசிய அக்னிக் கதிர்கள் ஏழுலகங் களையும் சுட்டெரிக்க ஆரம்பித்தன. எங்கும் அக்னி ஆறு பெருக்கெடுத்து ஓடியது. எரிமலைகள் அக்னிக் குழம்பைக் கக்கின. கடலே வற்றும் அளவுக்கு வெப்பம் தாக்கியது. தேவர்கள் கலங்கி நின்றனர்.
ஆபத்துகள் வரும்போது அனைவரும் ஸ்ரீமந் நாராயணரிடம் சென்று முறையிடுவதே வழக்கம். அந்த நாராயணனே கோபத்தீயைக் கக்கும் போது யாரிடம் முறையிடுவது? இதனை அறிந்த பிரம்மதேவன் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி, அகில உலகங்களையும் காக்க ஒரு வழி செய்தார்.
சுட்டெரிக்கும் சூரியக் கதிர்கள் அண்ட சராசரங்களில் பரவி அழிவை ஏற்படுத்தாமல் இருக்க, சூரியனுக்கு ஒரு திரை போட முடிவு செய்தார். அந்தத் திரைதான் சூரிய ரதம். அதனை ஓட்டுவதற்கு சூரியனின் சகோதரனான அருணனை நியமித்தார்.
ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களைக் குதிரைகளாக்கி, சூரியனுக்கு முன்னே நிறுத்தினார். குதிரைகளைச் செலுத்தும் சாரதியான அருணன் அவற்றின் பின்னே அமர்ந்தார். இவர்களுக்குப் பின்னே சூரிய தேவனை அமரச் செய்தார் பிரம்மன்.
தேரும், வண்ணக் குதிரைகளும், அருணனும் சூரியனுக்கு ஒரு கவசமாகப் போட்டது போல் அமைந்ததால், சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து ஜீவராசிகள் காக்கப்பட்டனர். சூரியன் உதிக்கும் முன்பே கீழ் வானில் தோன்றும் வர்ண ஜாலங்கள் உலகை விழித்தெழச் செய்கின்றன.
சூரியனுக்கு முன்னே உலகுக்குத் தோன்றுவது அருணன்தான். அதனால்தான் அதிகாலை நேரத்தை அருணோதயம் என்கிறோம். தவம், தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு உகந்த காலம் அது. கோபத்தால் கொதித்தெழுந்த சூரியன், தனது தேர் மற்றும் சாரதியின் சக்தியால் சாந்தி அடைந்தான்.
அருணனுக்கு சூரியனின் அனுக்ரஹம் பூரணமாகக் கிடைத்தது. ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனைப் 'புத்திரகாரகன்’ என்று சொல்வார்கள். குழந்தைச் செல்வங்களை நல்கவல்ல அனுக்ரஹ தேவன் சூரியன். அதனால், அருணனுக்கு நான்கு குழந்தைச் செல்வங்களைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. இது பற்றிய விவரம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்படுகிறது.
ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்த ஜடாயு, சம்பாதி எனும் கழுகு வடிவம் கொண்ட தேவர்கள் அருணனின் புதல்வர்களே. சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்ற போது, அவனோடு போராடி, அவனால் சிறகுகள் வெட்டப்பட்டு வீழ்ந்து, உயிர் துறக்கும் முன் இந்தச் சம்பவத்தை ராம- லட்சுமணருக்கு எடுத்துக் கூறி பெரும் தியாகம் செய்த ஜடாயுவை தன்னுடைய தந்தைக்கு நிகராகப் போற்றி வணங்குகிறார் ஸ்ரீராமர்.
ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து பறக்கமுடியாத நிலையில் இருந்தார். எனினும், கண்ணுக்கெட்டாத வெகு தூரம் வரையிலும் பார்க்கும்படியான பார்வை தீட்சண்யம் பெற்றிருந்தார் அவர். அவரே சீதை இருக்குமிடத்தை அனுமன், சுக்ரீவன் முதலா னோர்க்கு தெரிவித்து, அனுமன் இலங்கை செல்ல வழிவகுத்து தந்தவர்.
இவ்வாறு ஸ்ரீராம சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இரண்டு புதல்வர்களின் தந்தை என்ற பெருமை அருணனுக்கு உண்டு. ஜடாயு, சம்பாதி தவிர, அருணனுக்கு வேறு இரண்டு புதல்வர்களும் இருந்தனர். அது பற்றிய சுவையான சம்பவம் ஒன்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருமுறை நாராயினி என்ற பதிவிரதையின் சாபத்தில் சூரியனே உதிக்காமல் போகும் நிலை ஏற்பட்டது. உலகெங்கும் இருள் சூழ்ந்தது. சூரிய ரதம் நின்றது. அப்போது, அருணன் சூரியனின் அனுமதியுடன் பிரம்மலோகம் சென்று, பிரார்த்தனை செய்துவரப் புறப்பட்டார்.
தேவலோகம் சென்று இந்திரனை முதலில் வழிபட நினைத்தார் அருணன். எனவே, அழகான அப்சரஸ் வடிவை எடுத்து, அருணாதேவி என்ற பெயருடன் இந்திரனைச் சந்தித்தார். அவள் அழகில் மயங்கினான் இந்திரன். அவர்கள் இருவருக்கும் ஒரு தெய்வீக குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் விட்டுவிட்டு, மீண்டும் தனது ரதத்துக்கு திரும்பிய அருணன், சூரிய பகவானிடம் நடந்ததை விவரித்தார்.
அருணனின் எடுத்த அப்சரஸ் வடிவை சூரியபகவானும் பார்க்க விரும்பினார். எனவே, அருணன் மீண்டும் அருணாதேவியாக மாற, சூரிய தேவனின் அனுக்ரஹ பார்வையில் ஒரு தெய்வீக குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும் அகல்யாதேவியிடம் விட்டுவிட்டு, தனது தேரோட்டும் பணியைத் தொடர்ந்தார் அருணன்.
இந்திரனுக்கும் சூரியனுக்கும் பிறந்த தெய்வீகக் குழந்தைகளால் தன் மனைவி அகல்யாவின் தவம் கெட்டுவிடக் கூடாது எனக் கருதிய கௌதம ரிஷி, அந்தக் குழந்தைகளை வானர வடிவம் பெறுமாறு மாற்றிவிட்டார்.
இதை அறிந்த இந்திரன் இரண்டு குழந்தைகளையும் எடுத்துச்சென்று, கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர அருள்புரிந்தான். இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் புதல்வன்தான் சுக்ரீவன்.
நீண்ட வாலைக் கொண்டவன் வாலி. அழகிய கழுத்தைக் கொண்டவன் சுக்ரீவன். ஸ்ரீராம காவியத்தில் இருவருக்குமே சிறப்பான இடம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே!
ஸ்ரீராமன் சூர்ய வம்ஸத்தில் உதித்தவர். அன்றாடம் சூரியனை வணங்கியவர். அதனால்தானோ என்னவோ, அந்த ராமனுக்கு சேவை செய்து ஸ்ரீராம காவியத்தில் அழியாத இடம் பெற நினைத்த அருணனின் எண்ணம் நிறைவேறும் விதமாக அவரது நான்கு புதல்வர்களும் ஸ்ரீராம சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
1
ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம்.
அயோத்யா
இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம்.
வடக்கு ரயில்வேயின் வாரணாசி – லக்னோ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னோவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
பக்ஸர்
சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று வேறு பெயர்களாலும் இது பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது. கிழக்கு ரயில்வேயின் பாட்னா – மொகல்சராய் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.
அகல்யாசிரமம்
கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி-தர்பங்கா ரயில் மார்க்கத்தில் கம்தௌல் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி மேற்கே 15 மைல் தொலைவில் உள்ள அஹியாரி என்ற கிராமத்தை அடைந்து கௌதம குண்ட் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அஹல்யா குண்ட் உள்ளது. இதுவே அஹல்யா சாப விமோசனம் பெற்ற இடம்.
ஜனக்பூர்
மிதிலை அரசர் ஜனகரின் ராஜதானி ஜனக்பூர். இது சீதாமடியிலிருந்து ஜனக்பூர் சாலையைக் அடைந்து அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்தது.
பரத்வாஜ ஆசிரமம்
ஆதிகாலத்தில் அனைவரையும் ஆகர்ஷித்து ஈர்த்த பிரயாகையின் முக்கிய கேந்திரம் பரத்வாஜ ஆசிரமம். பரத்வாஜ மாமுனிவர் தம் சிஷ்யர்களுடன் இருந்த இடம் இது. ப்ரயாகை தீர்த்தராஜம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது தீர்த்தங்களிலெல்லாம் சிரேஷ்டமான தீர்த்தம் என்று பொருள். இந்தப் பகுதி இப்போது அலகாபாத் என்று பிரசித்தி பெற்ற இடமாகத் திகழ்கிறது.
வால்மீகி ஆசிரமம்
ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் வாழ்ந்த இடம். ப்ரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடூரில் கங்கை கரையிலும் சீதாமடி அருகேயும் அவர் வசித்ததாகக் கூறப்படுகிறது.
சித்ரகூடம்
ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது. அலகாபாத்- ஜபல்பூர் ரயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் சித்ரகூடம் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.
அனசூயா ஆசிரமம்
ரிஷிபத்தினி அனசூயா வசித்த இடம். சித்ரகூடத்திலிருந்து தெற்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
சுதீக்ஷ்ண ஆசிரமம்
வீரசிங்கபுரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சரபங்க ஆசிரமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஜைத்வாரா ரயில் நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் வீரசிங்கபுரம் உள்ளது. சரபங்கர் ஆசிரமமும் இந்தப் பகுதியில்தான் உள்ளது.
அகஸ்தியாசிரமம்
குந்தாபூர் – கோகர்ண மார்க்கத்தில் கங்கோலி உள்ளது. கங்கோலியிலிருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைக் காணலாம். இங்கே பல அபூர்வ கோவில்கள் உள்ளன. இங்கேதான் கடல் அருகே அகஸ்திய ஆசிரமம் உள்ளது.
ராம்டேக்
இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள். ராமர், லக்ஷ்மணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது சிறிது காலம் தங்கி இருந்தனர். ஆதலால் இது புண்ய ஸ்தலமாகக் கருதப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர்-சிவனி-ஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக். நாக்பூரிலிருந்து 46 கிலோமீட்டர் தூரம் தான்!
பஞ்சவடி
ராமாயணத்தில் கோதாவரியை ராமர் அடைந்தது விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பஞ்சவடி மிக முக்கியமான இடம்.இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் த்ரயம்பகேஸ்வரத்திலிருந்து கோதாவரி தோன்றுகிறது.
சென்ட்ரல் ரயில்வேயின் மும்பை – புசாவல் தடத்தில் நாசிக் ரோட் ஒரு பெரிய ரயில் நிலையம். இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் பஞ்சவடி உள்ளது.
சபரி ஆசிரமம்
சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது.
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்ற புராதன நகரம் ஹம்பி ஆகும். இது 36 கிலோமீட்டர் விஸ்தீர்ணத்தில் பரவிய பெரிய நகரம். நகர மத்தியில் விரூபாட்சர் கோவில் உள்ளது. இங்கே துங்கபத்ரா நதி கோலாகலத்துடன் துள்ளி வருகிறது. இதை சக்ர தீர்த்தம் என்கின்றனர். இதன் அருகே உள்ள மலையில் ஸ்ரீ ராமர் ஆலயம் இருக்கிறது. இந்த மலை மதங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மதங்க மாமுனிவர் வசித்து வந்தார்.
இவர் ஆசிரமத்திற்கு அருகேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
கிஷ்கிந்தா
கர்நாடகத்திலிருந்து ஹூப்ளி – கதக் – பெல்லாரி மார்க்கத்தில் ஹான்ஸ்பேட் முக்கிய ரயில் நிலையம் ஆகும். பெல்லாரியிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. ஹூப்ளியிலிருந்து 145 கிலோமீட்டர் தூரத்திலும் கதக்கிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் ஹம்பி உள்ளது.
ஹான்ஸ்பேட் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பழைய ராஜதானி ஆகும். இதை ஒட்டிய பகுதியே கிஷ்கிந்தா ராஜ்யம் ஆகும். இதை ஆண்டவரே சுக்ரீவ மஹாராஜா. இந்தப் பகுதியில் உள்ள சிவ-விருபாட்சர் கோவில் மிகவும் பிரசித்தமானது.
ருஸ்யமுகம்
கிஷ்கிந்தா ராஜ்யத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அனாகுந்தி என்ற கிராமம் உள்ளது. இதற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் பம்பா சரோவர் உள்ளது. இதைச் சார்ந்த பகுதியே ருஸ்யமுக பர்வதம் ஆகும்.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும் சென்னையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ராமசேது
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா ஜெமினி -11 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி ராமேஸ்வரம் -ஸ்ரீலங்கா இடையே அமைந்துள்ள. பாலத்தின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது. ஒப்பற்ற தனித்தன்மையுடைய வளைவுடன் கூடிய மனிதனால் அமைக்கப்பட்ட பாலம் என்று நாஸாவே புகழ்ந்த பாலம்தான் ராம சேது. (நாஸா எடுத்த இந்தப் படத்தை 1993ம் ஆண்டு டில்லி பிரகதி மைதானில் நடந்த தேசிய விஞ்ஞான மையத்தின் கண்காட்சியில் பிரதானமாக வைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.)
இதன் மீது நடந்தே ராமர் தன் சைனியத்துடன் இலங்கை சென்றார்.
இலங்கை
குபேரன் வாழ்ந்த எல்லையற்ற செல்வத்துடன் இருந்த நாடு. அவனிடமிருந்து ராவணன் இதை அடைந்து இங்கு வாழ்ந்து வந்தான். பத்துத் தலைகளுடன் கூடிய இவனை வீழ்த்தி சீதா தேவியை அசோகவனத்திலிருந்து ராமர் மீட்டு விபீஷணனை அரசனாக நியமித்து அயோத்தி மீண்டார்.
ராமாயணம் தென் கிழக்கு ஆசியாவிலும், திபெத்திலும், மலேசியாவிலும், ஸ்ரீலங்காவிலும், பிலிப்பைன்ஸிலும், அரேபியா, பல்கேரியா நாடுகளிலும் பரவி உள்ளது. பர்மிய, கம்போடிய, சீன, செக், எகிப்திய, ரஷிய, ஆங்கில மொழிகள் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் ராமாயணம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ராமரின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவர் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவி உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றையே மேலே பார்த்தோம். மர்யாதா புருஷோத்தமான ராமன் தன் ஜீவியத்தால் வாழ்க்கை முறையைக் காண்பித்தான். இது கர்மயோகம். தன் நாமத்தால் உலகைக் காப்பாற்றுகிறான். இது பக்தி யோகம். தனது அகண்டாகார பொருளால் மெய்ப்பொருளை விளக்குகிறான். இது ஞான யோகம்.
2
ஆஞ்சநேயர் அருளிய ஸ்ரீ ராமர் திருப்பள்ளியெழுச்சி
வனவாசம் முடிந்து அயோத்தி வந்த மறுநாள் காலை ஸ்ரீராமபிரான் விழித்தெழ, ஸ்ரீ ஹனுமார் பாடிய திருப்பள்ளி யெழுச்சி.
இதைத் தினமும் அதிகாலையில் பாராயணம் செய்து வந்தால் ஸ்ரீ சீதாராமரின் அருளோடு ஆஞ்சநேயரின் அருளும் கிட்டும்.
இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் இராமாயணம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்.
அருள்மிகு ராமபிரான் திருப்பள்ளியெழுச்சி பாடல்.:-
தேவானு குலவா, தேவி கௌசலை பாலா
தசரத ராமனே எழுந்திரும்.
ஆவலோடு அழைத்திட்ட கௌசிகன் வேள்வியை
அன்புடன் காத்தவனே எழுந்திரும்.
கல்லைக் பெண்ணாக்கிய கமல பொற்பாதனே
கல்யாண ராகவா எழுந்திரும்.
வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் சீதையை
விவாஹம் செய்தோனே எழிந்திரும்.
அட்டகாசமாய் வந்த பரசுராமனை ஜெயித்து
அயோத்தி வந்த துரையே எழுந்திரும்.
தட்டாமல் தந்தை மொழி பிசகாமல் தம்பி, சீதையுடன்
தண்டகாரண்யம் வந்தவரே எழுந்திரும்.
சித்தம் மகிழ்வுடன் குகனார் தோழமை கொண்டு
சித்ரகூடம் வந்தவரே எழிந்திரும்.
பக்தியுடன் அழைத்த பரதர்க்கு மகிழ்வுடன்
பாதுகை அளித்தோனே எழுந்திரும்.
மூர்க்கன் விராதனைக் கொன்றவனே! சூர்ப்பனகை
மூக்கை அறுத்தவரே எழுந்திரும்.
ஜடாயுவுக்கும், சபரிக்கும் மோட்சமளித்துவிட்டு
அடியேனை எதிர்கொண்டவரே எழுந்திரும்.
சுக்ரீவனிடம் நட்புகொண்டு மாமரங்களைத் துளைத்த
கோதண்ட ராமரே எழுந்திரும்.
வாலியை வதம் செய்து தாசனைத் தூதுவிட்ட
காருண்ய ராகவா எழுந்திரும்.
அரக்கர் விபீஷணருக்கு அபயம் கொடுத்து கடல்
துணையால் அக்கரை சென்றவனே எழுந்திரும்.
வம்சத்துடனே இலங்கை எதிர்த்து இராவணனை அவன்
வம்சத்தோடு அழித்தவரே எழுந்திரும்.
தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன்
திருவுளம் மகிழ்ந்தோனே எழுந்திரும்.
திசை எங்கும் புகழவே புஷ்பரத மேறிய திருவை
அயோத்தி வந்தவரே எழுந்திரும்.
உலகம் புகழ் பரதன் மனம்மிக மகிழ்ந்திட
மகுடாபிஷேகம் ஏற்றுக் கொள்பவரே எழுந்திரும்.
உன் அருள் பெற அடியேனும் சீதாபிராட்டி உதவி
அருளவேணும் எழுந்திரும்.
சங்கீத ராமனே, ஜானகி நேசனே, ஸ்ரீ பரந்தாமனே
ஜனகரின் மருகரே எழுந்திரும்.
ஆத்ம ராமனே, கல்யாண ராமனே பட்டாபிஷேகம் காண
அருள வேண்டும் எழுந்திரும்.
3
இராமன் பாலம் அமைத்தது தொடர்பான கதையைச் சொல்வது சேது புராணம் என்ற பழைமைவாய்ந்த நூல் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அப்புராணத்தை தேடிக் கண்டு அதை ஆய்வு செய்தால் இவர்களின் மோசடியும், அயோக்கியத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
இராமன் சேது அணையைக் கட்டியதை கூறும் அப்புராணம், இராமன் கையாலே, தனது வில்லினால் சேது அணையை தகர்த்து அழித்து விட்டான் என்ற செய்தியையும் அறிவிக்கிறது.
அதாவது, கடலுக்கு மேலே (நீருக்கு மேலே) மிதவைக்கல்லால் இராமன் பாலம் அமைத்தான் என்றும். இராவண வதம் முடிந்து, அப்பாலத்தைக் கடந்து மீண்டும் தனுஷ்கோடிப்பகுதிக்கு இராமன் கூட்டம் வந்த போது, விபீஷணன், இராமனைப் பார்த்து, இலங்கைக்குச் சென்று வர நீங்கள் அமைத்த இப்பாலத்தை இப்படியே விட்டுச் சென்றால், இலங்கையில் உள்ள கொடியவர்கள் இப்பாலத்தின் வழியே வந்து பல பகுதிகளுக்கும் சென்று அக்கிரமம், கொடுமை, அழிவு செய்வார்கள். எனவே, நீங்கள் அமைத்த இப்பாலத்தை நீங்களே தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமன் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விட்டான் என்கிறது சேது புராணம்.
இராமன் பாலத்தை தகர்த்ததையும் கூறும் சேது புராண பகுதி இதோ: மஹருஷிகளே கோதண்ட மென்னும் வில்லைக் கரத்திலேந்தி யிலகாநின்ற ஸ்ரீராம மூர்த்தியானவர் பத்து சிரங்களையும், இருபது கரங்களையுமுடைய இராவணனைச் சங்காரஞ் செய்து பண்ணுதற்கரிய தசக்ரீவனென்னும் ராவணனாலே தரிக்கப்பட்டிருந்த கிரீடத்தை, விபூஷணனுடைய சிரத்திற்தரித்து பட்டாபி ஷேகஞ்செய்து இலங்கைக்கு அரசனாக்கிச் சமுத்திரத்திற் கட்டியிருக்குஞ் சேது மார்க்கத்தில் சீதாதேவியோடு தனது தம்பியாகிய இலட்சுமணன் அனுமான், சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் யாவரும் புடைசூழந்திறைஞ்சப் புட்பக விமானத் திலேறிச் சந்திர சூரியரும் விலகிநிற்கும் படியாய் கருட காந்தர்வ சித்த வித்யாதரர்கள் போற்றச் சேதுவைக் கடந்து அந்தவாகனத்தி லிறங்கித் திருவிளையாடல் செய்ய வெண்ணியிருக்கையில் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதபத்மங்களை விபீஷணனானவன் பணிந்து கூறுவான் சுவாமீ வேதவேதாந்த மூர்த்தியே தேவரீரிப்போது இராவணாதி ராட்சதர்களைக் கண்டிக்கும் பொருட்டு வானராதி வீரற்களாற் செய்யப்பட்ட இச்சேதுவை இவ்வாறே யிருக்கச்சயன்றால், இலங்கையில் உள்ள இராக்கதர்கள் யாவரும் இம்மார்க்கத்தில் எங்கும் போக்குவரவாயிருந்து உலகிலுள்ள ஜீவர்களை இம்சை செய்வார் களாதலால் இச்சேதுவாகிய அணையை சோதிக்க வேண்டுமென்று சொல்ல, அப்போது ஸ்ரீராம மூர்த்தியானவர் அவ்வாய் மையைக் கேட்டு மெய்தானென்று சிந்தித்து மனக்களிப்பினோடு தனதுகரத்தில் விளங்குங் கோதண்டமென்னும் வில்லினாலே நல்ல சர்ப்பத்தை கருடன் தன் கால்நகங்களினால் தாக்கிக் கிழித்ததுபோலவும் முன்னர் இலங்கையில் இந்திரசித்துவினால் விடப்பட்ட நாகபாசத்தை கருடபகவான் பொடி படச் செய்ததுபோலவும் கிழித்துச் சேதுவாகிய திருவணையை உடைத்துப் போட்டார்.
மேலே கண்ட புராணக் கதையிலிருந்து இராமன் பாலம் கடலுக்குள் அமைக்கப்பட்ட மணல் பாலம் அல்ல.அது மிதவைக் கற்களால் கட்டப்பட்டது. கடல் நீரின் மேல் மிதக்கும்படி கட்டப்பட்டது. (வருணனின் முதுகின்மேல். இராவணனை அழிக்க இலங்கைக்குச் சென்று வர மட்டுமே மிதவைப் பாலம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் விபீஷணனின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை இராமன் ஏற்று, அப்பாலத்தை இராமனே தகர்த்து விட்டான். அதுவும் எப்படித் தகர்த்தான்? பாம்பை கீரியானது குதறி எறிவது போல்; இந்திரசித்து விட்ட நாகபாசத்தை, கருடன் சிதைத்ததைப் போல் இராமன் தன் கையாலே, தன் வில்லாலே தகர்த்தான்.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...