Monday, 1 December 2025

கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்


 கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்

கைசிக ஏகாதசி.....!!!
கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும் "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".
மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி".
மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி". மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.
கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-
கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.
ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார்.
மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார். பகவான் கூறியது.
தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் "திருக்குறுங்குடி". இங்கு பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் "திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி" மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான். பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை "திருப்பள்ளியெழுச்சி" செய்து வந்தான். இந்த புண்ணியவானே "நம்பாடுவான்".
நம்பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.
கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார், அதுவே போதும். அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.
"கைசிகம்" என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான்.
நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான்.
இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் "ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம்பாடுவான்" எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மஹாத்மியம் "கைசிக புராணம்" என்ற நாமம் தாங்கி வராஹ புராணத்தில் உள்ளது.
ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான். அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் "சோமசர்மா" என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான். அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம். பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை.
பிரம்மராக்ஷஸனை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது.
நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செய்ய மலையேற வழிவிடுமாறு மன்றாடினான். பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான். இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்து கொண்டான் நம்பாடுவான்.
உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து "திருப்பள்ளியெழுச்சி" பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, "சண்டாளனே! பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.? என்றதோடு மட்டுமல்லாமல், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்"" என்றது.
அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான். (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்). 17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் "மிகக் கொடிய பாவம்" என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது.
அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????
மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் :
1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.
2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.
3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.
4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.
5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.
6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிறானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.
7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.
8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு ஏதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.
9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.
10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன்.
11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.
12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.
13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.
14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை வயதான காலத்தில் தனியே விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.
15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் "மகா பாவம்" என்னை வந்தடையட்டும்.
16. எவன் பிரம்மஹத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.
17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.
இந்த "17 சபதங்கள்" நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை.
18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த "ஸ்ரீமன் நாராயணனையும்" மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.
இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன்.
நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது. பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான். நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.
பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா! இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான். உள்ளிருந்த "அழகிய நம்பி பெருமாள்" நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். தான் ஆட்கொள்ள வேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன? என்று யோசித்தார்.
எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது.
"விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்! அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!! விலகு" என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.
எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்.
கொடிமரம் விலகிய அடுத்த நொடியே "பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா" என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான். ஆஹா! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம்.
நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது. அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான். இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது. நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்?. நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே"" என்று கூறினான்.
நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான்.
அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.
நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டினான்.
தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த "சுந்தரபுருஷன்" உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான்.
அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி.
நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாறப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது.
"ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான
அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.
அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்... ஆகவே என்னை புசித்துக்கொள்... நான் பாடிய "கைசிகப் பண்" ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான்.
அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான்.
பிரம்மராட்க்ஷஸனும், "அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன் ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது.
"நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான் நம்பாடுவான்.
அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது.
தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான்.
அதன்படியே, "நேற்றிரவு கைசிகம் என்ற பண்" பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான்.
நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான்.
ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த "பராசர பட்டர்" என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
ஒவ்வொரு கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது.
அப்பேற்பட்ட இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு "வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்" இந்த மஹாத்மியம்.
வராஹமூர்த்தி கூறுவது :-
நம்பாடுவானும் கால முடிவில் "திருநாடு பெற்றான்" என்ற வராஹமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-
எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!
என்று பூமிதேவி தாயாரிடம் இந்த "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.
விசேஷம் :-
பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராஹ புராணத்தின் உள்ளீடான "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" என்பதன் சாரமாகும்.
இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும்.
ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-
ஸ்ரீரங்கம் கோவிலில் "கைசிக ஏகாதசி" நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும்.
இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும். மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை "ஸ்ரீரங்கம்" சென்று தரிசித்திடுங்கள்.
திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது. திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் "கைசிகப்பண்" மற்றும் வராஹ மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டும்? நாம் அனைவரும் "பாக்கியசாலிகள்" "புண்ணியவான்கள்" என்று கூட சொல்லலாம்!.
அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும். மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம்.
உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.
இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.
ஓம் வராஹ மூர்த்தியே நமஹ!
திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!

குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்.

 


குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்.

எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும்கிராமத்தில்உள்ள பரசுராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில்உள்ள செங்கல்கிபிஒன்றாம்நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர் ,பாணர்,சோழர்கால கல்வெட்டுகள்காணப்படுகின்றன.இவற்றில்பழமையானது நந்திவர்மன்காலத்துகல்வெட்டு.லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில்பூணூல்இல்லை.ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின்கீழ்ஆவுடைபீடம்)காணப்படவில்லை.
எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) " இக்கோவில் கலை காணப்படுகிறது.
பழமையான சிவலிங்கம் :-உலகின்மிகப்பழமையான
சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.
அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர். இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர். அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில்ஒருமுறையாவதுஅந்தசிவலிங்கத்தை நேரில்சென்றுதரிசனம்செய்யதவறாதீர்கள்.
சிவ சிவ

எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே...

 எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே...

60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் நண்பர் ஒருவரிடம், "உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் உங்களுக்குள் நீங்கள் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?" என்று கேட்ட போது அவர் சொன்ன பட்டியல்:
1) என் பெற்றோரிடம்,
என் உடன்பிறந்தோரிம்,
என் இணையரிடம்,
என் குழந்தைகளிடம்,
என் நண்பர்களிடம்
அன்பும், பாசமும், காதலும்
கொண்டிருந்த நான், இப்போது
என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.
2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்கவில்லை என்பதை உணர்கிறேன்.
3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன். பேரம் பேசாமல் நான் தரும் உபரித்தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது
ஒருவகையில் உதவும்
என்று கருதுகிறேன்.
4) நாள் முழுதும் உழைக்கும்
டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறைக்காகக் காத்திராமல் திரும்புகிறேன். இதனால் அவர் முகத்தில் அரும்பும் புன்னகையை விரும்புகிறேன்.
5) என்னைவிட முதியவர்கள்
ஒரு செய்தியை - நிகழ்வை - கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும், 'இதை நீங்கள் முன்பே கூறிவிட்டீர்கள்' என்று முகத்தில் அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன்.
6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது (Peace is more precious than perfection) என்பதை உணர்ந்து கொண்டேன்.
7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம் இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை. தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன். (personality
speaks louder than appearances.)
9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன்.
10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை.
11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை.
12) உறவுகளை முறித்துக் கொள்வதைவிட என்னுடைய
egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.
13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன்.
14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை
என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளேன்.
15) மற்றவர்களைக் குறைசொல்வதையும், புறங்கூறுவதையும்
முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.
16) என்னால் மற்றவர்களுக்குச்
சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன்.
17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.
18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன்.
19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக் கொண்டுள்ளேன்.
20) அரசியல், ஆன்மீகம், மதம் தொடர்பான செய்திகளைப் பகிர்வதையோ, அவை தொடர்பாக மற்றவர்களிடம் விவாதிப்பதையோ முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டேன்.
•••••••••••••••••••••••••••
ஏன் வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்? எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே...

மனக்குழப்பம் தீர்க்கும் #திருவெண்காடு.


 மனக்குழப்பம் தீர்க்கும் #திருவெண்காடு.

திருவெண்காடு திருத்தலத்தை ஆதி சிதம்பரம் என்று போற்றப்படுகிறது. புதன் பரிகாரத் திருத்தலமான இங்கு வந்து வேண்டிக் கொண்டால், மனக்கிலேசங்கள், மனக்குழப்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
சீர்காழி அருகில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெண்காடு. மிகப்பிரமாண்டமான திருக்கோயில். தேவாரம் பாடப்பட்ட புண்ணிய திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். இங்கே இன்னொரு சிறப்பு... புதன் பகவான் இங்கே தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார்.
ஆமாம்... இது புதன் பரிகாரத் திருத்தலம். நவக்கிரக தலங்களில் இது புதன் பரிகாரத் திருத்தலம். பல பெருமைகளும் சாந்நித்தியமும் கொண்ட இந்தத் திருத்தலத்தை ஆதி சிதம்பரம் என்று போற்றுகிறது ஸ்தல புராணம்.
தில்லை என்று போற்றப்படும் சிதம்பரத்தில் சிவனார் திருநடனமாடினார். முன்னதாக, இந்தத் திருத்தலத்தில், சிவபெருமான் திருநடனம் புரிந்தார் என்கிறது ஸ்தல புராணம். மேலும் இங்கே, சிதம்பரம் தலத்தைப் போலவே, நடராஜருக்கு சபை அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்படிக லிங்கமும் ரகசியமும் கொண்ட தலம் இது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
நடராஜரின் திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் வியக்கவைக்கின்றன. நடராஜரின் திருப்பாதத்தில் பதினான்கு உலகங்களை உணர்த்தும் விதமாக, பதினான்கு சதங்கைகள் கொண்ட காப்பு அமைந்துள்ளது. பிரணவம் தொடங்கி இறுதியாக உள்ள 81 பத மந்திரங்களை உணர்த்துகிற வகையில், 81 சங்கிலி வளையங்கள் கொண்ட அரைஞாண் இடுப்பில் காட்சி தருகிறது.
28 யுகங்கள் முடிந்துவிட்டன என்பதைக் குறிக்கும் வகையில், 28 எலும்பு மணிகளால் கோர்த்துக் கட்டப்பட்ட ஆரத்தை நடராஜர் பெருமான் அணிந்துள்ளார். சிரசில் மயிற்பீலி அணிந்துள்ளார். மீன் வடிவில் கங்காதேவியும் இளம்பிறையும் ஊமத்தம்பூவும் வெள்ளெடுக்கும் சூடியுள்ளார் நடராஜர்.
மேலும் ஷோடஸ கலைகளை உணர்த்தும் விதமாக பதினாறு சடைகள் விரிய காட்சி தருகிறார் நடராஜர்.
திருவெண்காடு திருத்தலத்தில், ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் நடராஜ பெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். கவலைகளையெல்லாம் காணடிக்கச் செய்து அருளும் அற்புதத் திருத்தலம், மனக்கிலேசம் போக்கும் தலம், மனக்குழப்பம் நீக்கும் திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

*நைவேதியதை இறைவன் அருந்துகிறாரா?*


 *நைவேதியதை இறைவன் அருந்துகிறாரா?*

பூபாளம் இசைக்கும் காலை நேரம்....
சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.
இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.
சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது...
குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.
அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்... " எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?"
தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. " குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே..."
அவனை ஊடுருவி பார்த்த குரு, " ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்" என்றார்.
இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..
கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்*ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட "பூர்ணமிதம்" எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.
அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
"எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ," என்றார்.
"முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே".
"எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்"
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்.." பூர்ண மித பூர்ண மிதம் ..." என கூறி முடித்தான் ஜகதீஷ்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. "நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு"
பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. " குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்..."
"ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?".. என்றால் விஷ்வதீர்த்தர்.
மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..
சத்குரு தொடர்ந்தார்... " இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?"
குழப்பமடைந்தான் ஜகதீஷ்...
"எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். "
வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க...ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேதியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.

பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது ஏன் ?

 


பெரியவர்கள்

காலில் விழுந்து
ஆசி பெறுவது ஏன் ?
தகுதியில்லாதவர்களின் காலில் விழுந்தால் என்ன ஆகும். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.
மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்களின், பூதவுடல் நம் கண்ணில் படவில்லை என்றாலும், இன்னும் இந்தப் பூமியில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த சிரஞ்சீவிகளில் ஒரு பிரபலம் மார்கண்டேயன்.
பின்னே.. இவனைக் காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமானே காலனை காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன், சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், அவர் காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் அநேகருக்கு தெரிந்திருக்கும்.
மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா?
மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும், அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.
ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்றுக் கொள்” என்று சொல்லியிருந்தார்.
மார்க்கண்டேயனும், தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் எல்லாம் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.
ஒருமுறை அத்திரி, வசிஷ்டர், கவுதமர், கஷ்யபர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்தரிஷிகள் மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர்.
அவர்களின் பாதங்களில், மார்கண்டேயன் பணிந்தான்.
அப்போது அவர்கள், தீர்க்காயுஷ்மான் பவ (தீர்க்காயுளுடன் வாழ்க) என்று வாழ்த்தி விட்டார்கள்.
பிறகு தான் தெரிந்து கொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று.
என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் சொல்வதற்காக செல்கிறார்கள்.
மார்க்கண்டேயனும் அவர்களுடன் செல்கிறான்.
போனவன், பிரம்மாவின் காலிலும் விழுந்து ஆசி பெற்று விட்டான்.
விதியை எழுதிய அவரும், அவனுக்கு தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தி விட்டார்.
இப்படி பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.
பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமை.
ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 வயதாக, அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரம் தருகிறார்.
பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று.
பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியைப் பெறவேண்டும்.
அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றிவிடும்.
அதேநேரம், ஆதாயத்துக்காக தகுதியற்றவர்களின் கால்களில் விழாதீர்கள்.
அப்படி செய்தால் அவர்களின் பாவங்களையும் நீங்கள் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்.

கைசிக ஏகாதசி


 கைசிக ஏகாதசி

திருக்குறுங்குடி கிராமத்தில் பாணர் குலத்தில் பிறந்த நம்பாடுவான் என்ற ஏழை, கைசிகம் என்னும் பண்ணிசை பாடி பரந்தாமனை வழிபட்டு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் திருக்குறுங்குடி நம்பி கோயிலின் வாசலில் நின்று ஒவ்வொரு ஏகாதசி தினத்திலும் கைசிகப் பண் பாடி திருக்குறுங்குடி நம்பியை வழிபட்டு வந்தார்.
அதேபோல் ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் விரதமிருந்து கைசிகப் பண் பாடி தன் விரதத்தை முடிக்க, நம்பி கோயிலுக்கு காட்டு வழியாக வந்து கொண்டு இருந்தார். அப்போது மிகுந்த பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன், நம்பாடுவானை வழிமறித்து தனக்கு உணவாக வேண்டும் என்று பிடித்துக் கொண்டான்.
அதற்கு நம்பாடுவான், “ஏகாதசி விரதத்தை முடித்து, திருக்குறுங்குடி நம்பியை வணங்கி விட்டு வருகிறேன். பின்னர் என்னைக் கொன்று உணவாக ஏற்றுக் கொள்ளலாம்’ என்று கூறினார். அதை நம்பாத பிரம்ம ராட்சசன் நம்பாடுவானை விடுவிக்க மறுத்தான்.
அப்போது நம்பாடுவான் 18 விதமான சத்தியங்களை எடுத்துச் சொல்லி தன் ஏகாதசி விரதத்தை பூர்த்தி செய்ய விடுவிக்குமாறு பிரம்ம ராட்சசனிடம் மன்றாடினார். நம்பாடுவான் செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் அவரை பிரம்ம ராட்சசன் விடுவித்தான். நம்பாடுவானும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்று, திருக்குறுங்குடி நம்பி கோயில் முன்பாக திருமாலை கைசிகப் பண் பாடி வழிபட்டு பின்னர் பிரம்ம ராட்சசனிடம் செல்ல முனைந்தார்.
அவனது பக்தியைக் கண்டு திளைத்த திருக்குறுங்குடி நம்பியும் ஒரு வயோதிகராக நம்பாடுவானை வழிமறித்து பிரம்ம ராட்சசனிடம் செல்ல வேண்டாம் என்று தடுத்து பார்த்தார். ஆனால் நம்பாடுவானோ தான் ஏகாதசி விரதமிருந்து செய்து கொடுத்த சத்தியத்தை மீறமாட்டேன் என்று கூறி, பிரம்ம ராட்சசன் அருகே சென்று தன்னை உணவாக ஏற்றுக் கொள்ள வேண்டினார்.
இதைக் கண்டு திகைத்த பிரம்ம ராட்சசன், தான் முன் பிறவியில் சோம சர்மா என்னும் அந்தணனாக பிறந்து வாழ்ந்ததாகவும், அப்போது ஹோமங்கள் செய்யும்போது மந்திரங்களை தவறாக உச்சரித்ததால் பிரம்ம ராட்சசனாக மாற சபிக்கப்பட்ட உண்மையையும் தெரிவித்தான்.
தான் சாபவிமோசனம் பெற, நம்பாடுவான் மேற்கொண்ட ஏகாதசி விரத பலனைத் தருமாறு அவரின் திருவடிகளைப் பணிந்து வேண்டினான். அதற்கு மனமிரங்கி நம்பாடுவானும் தான் மேற்கொண்ட ஏகாதசி விரத பலனை பிரம்ம ராட்சனுக்கு அளிக்க, அவன் சாபம் நீங்க பெற்றான்.
தான் செய்த சத்தியத்துக்கு மதிப்பளித்து பிரம்ம ராட்சசனின் முன் வந்து தன்னை உணவாக ஏற்றுக் கொள்ள சம்மதித்த உத்தமர் நம்பாடுவான். அந்த நம்பாடுவானின் வரலாற்றை பூமி பிராட்டிக்கு வராகப் பெருமாள் கூறுகிறார். இந்த நம்பாடுவான் வரலாறு நிகழ்ந்த இடமே திருக்குறுங்குடி.
கைசிக ஏகாதசி நன்னாளில் விரதமிருந்து திருக்குறுங்குடி நம்பியை வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். ஏகாதசி தினத்தில் நம்பாடுவான் சரிதம் நாடகமாக இரவு முழுவதும் நடத்தப் பெறும். மறுநாள் துவாதசி தினத்தில் திருக்குறுங்குடி நம்பிக்கு கருடசேவை உற்சவம் நடைபெறும்.

🔥 தீபங்கள் ஒளிரும் திருகார்த்திகை மாதம்


🔥 தீபங்கள் ஒளிரும் திருகார்த்திகை மாதம்

" தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம்"
தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன?
இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழி செய்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம். ஆனால் இந்நாளின் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவதைப் பற்றி மட்டும் அல்ல.
ஒரு வருடத்தின் இந்த பாகத்தை, தக்ஷிணாயனம் (அ) சாதனா பாதை என்று அழைப்பர். இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் ‘கைவல்ய பாதைக்குள்’ மெதுமெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம். யோக சாதனா செய்யும் வகையில், தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம். சாதனா பாதையில் உழுவை செய்து, விதை விதைத்து, பயிர் செய்தாயிற்று. இப்போது நீங்கள் செய்த ‘சாதனா’விற்கான பலன்களை அறுவடை செய்யும் நேரம். இந்த நேரத்தில் தான் உங்கள் சாதனாவின் பலன்களை உங்களுக்கு பயன்படும் விதத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதை பல கதைகளில் கேட்டிருப்பீர்கள்.
பிதாமகர் பீஷ்மர், சாதனா பாதையில் இறக்க விரும்பாமல், அம்புப் படுக்கையில் காத்திருந்து, ‘உத்தராயண’த்தில் உயிர் நீத்தது நாம் அனைவரும் அறிந்த கதைதான். அவர் உத்தராயணத்தில் (அ) கைவல்ய பாதையில் இறக்க விரும்பியதற்கான காரணம், அந்த நேரத்தில் தான் வாழ்க்கையின் பலன்களை அறுவடை செய்யமுடியும். நம் உள்நிலையில் அறுவடை செய்ய வேண்டியவற்றை கைவல்ய பாதையில் மிக எளிதாக அறுவடை செய்துவிடலாம். இந்த கார்த்திகை மாதம், சாதனா பாதையில் இருந்து கைவல்ய பாதைக்கு மெதுவாக மாறும் நேரம். இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும் ஒளி, ஞானோதயம், விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள். இதைக் குறிப்பதற்குத் தான் வீட்டிலே பல விளக்குகள் ஏற்றி வைக்கிறோம்.
இது ஏதோ ஒரே ஒரு விளக்கை ஏற்றுவதைப் பற்றி அல்ல. நம் கலாச்சாரத்தில் பொதுவாக கார்த்திகை மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது என்பதால்.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் என்றால், நமக்கு 700 கோடி விளக்குகள் ஏற்ற வேண்டும். ஆனால் எல்லோருக்கும் நாம் ஒருவரே ஏற்ற முடியாது என்பதால், இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது இதையாவது செய்யவேண்டும். உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஒன்று, உங்களுக்கு சிறிதும் பிடிக்காதவருக்கு ஒன்று, என்று குறைந்தது மூன்று விளக்கேனும் நீங்கள் தினமும் ஏற்ற வேண்டும்

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!


 பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

ஜாதகம் ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா…? என்று பார்த்து நல்ல நேரம் பார்த்துத் தான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
ஆனாலும்
1.திருமணம் முடிந்து வந்தவுடன் இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில் இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன.
2.இதனால் கணவன் மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன.
இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும் வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள் எல்லோரையும்தான் சாரும்.
ஏனென்றால் பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன.
நாம் இவ்வேதனையின் உணர்வுகளைக் கேட்டறிய நேரும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. பதிவின் நிலை கொண்டு நாம் நுகர்கின்றோம்.
நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து “நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றி விடுகின்றோம்…” அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.
கணவனும் மனைவியும் வெறுப்பு என்ற நிலைகளோ வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி
1.அதிகாலையில் துருவ தியானத்தில் அமர்ந்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.என் கணவர் / மனைவி பெற வேண்டும்... எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
3.எங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.
இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.
நமது வாழ்க்கையில் இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும். வெப்பம் காந்தம் விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து ஒரு அணுத் தன்மை அடைகின்றது.
1.காந்தம் “ஆதிலஷ்மி…” எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும்
2.வெப்பம் “ஆதிபராசக்தி…” அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும்
3.விஷம் “ஆதிசக்தி…” எதனிலும் மோதலாகி அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும்
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
அதாவது பெண்பால் ஆகித்தான் ஆண்பால் ஆகின்றது. பெண்பால் என்னும் பொழுது அது தாயாகின்றது. பெண்பால் தான் தாய் என்னும் நிலையில் தன் குழந்தைகளையோ மற்ற நிலைகளையோ சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது.
1.ஆகவே நாம் பெண்களைத் தாயாகவும் நம்மை ஒரு சேயாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.இது போன்று பெண்கள் ஒவ்வொருவரும் தான் ஒரு தாயாகவும் தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும்.
இதைத்தான் இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நம்முடைய எண்ணங்களை (கணவன் மனைவி) ஒன்று சேர்த்து இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான் நாம் விண் செல்ல வேண்டும்.
நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால் நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.
நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்வுகள் படரும்.
ஒரு இல்லத்தில் பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது “அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது…”
அந்த இல்லத்தில் உள்ள பெண்களில் யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே குடும்பமே நரக லோகமாக மாறிவிடும். ஆகவே நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.
1.இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ
2.பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ
3.இதனின் உணர்வுகள் கொண்டு அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும் இருளை அகற்றும் சக்தியும்
4.அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும்
5.அன்பான உணர்வுகள் நமக்குள் பெருகவும் மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்ச்சிகள் வளரவும்
6.பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு.
பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!
இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுது தான் உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது.
எந்தக் குணத்தின் தன்மை உடலானதோ அதனின் உணர்ச்சியாக ஞானமான சரஸ்வதி நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் வெறுப்படைந்து விட்டால் அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால் அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள் மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு குறை கூறும் நிலையில் அங்கே குறையின் உணர்வுகளே வந்து விடுகின்றது.
முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும், இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்கின்றோம்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
முதுமை நிலையில் இருக்கும் நாம்… தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம் காலை துருவ தியானத்தில்
1.தன் மகன் மருமகளுடன் இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இதனின் உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
ஏனெனில் ஒரு குடும்பத்தில் பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும் அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.
ஆகவே அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும் வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வுகளையும் நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும்.
இது போன்று செய்து வரும் பொழுது
1.நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி தோஷங்கள் ஆகிவிட்டது என்றாலும் சரி
2.அல்லது நம்மை அறியாமலேயே சாப வினைகள் வந்தாலும் சரி
3.அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு அந்தத் தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.
உண்மையான யாகம் எது…?
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெற வேண்டும்” என்ற உணர்வை
1.உயிரான நெருப்பினுள் போட்டு இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால்
2.வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும் எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.
கணவன் மனைவிக்கிடையே எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும் மனஸ்தாபங்களும் வரும் போது பெண்கள் நரக வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள் இங்கே புவியில் படர்கின்றது.
இது போன்ற வேதனையின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறியும் பொழுது நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் இனியாவது… நமது குடும்பம் நமது குழந்தைகள் நமது ஊர் நமது நாடு என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெற வேண்டும். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும்.
நாம் ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என் கணவர் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற வேண்டும் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெற வேண்டும் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெற வேண்டும். இந்த உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நாம் எல்லோரும் பரப்புவோம்.
இதனின் தொடர் கொண்டு நமது குடும்பத்திலும் நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் இருளை அகற்றும் வல்லமையும் மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும்.
குடும்பமும் ஊரும் நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து அவர்களையும் பண்படச் செய்து மகிழ்ச்சியுடன் வாழச் செய்கின்றது.
மனிதர்களான நாம்
1.கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று உணர்ந்து
2.தனுசுகோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு
3.தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி இனி பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.
இதனின் உணர்வு கொண்டு மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று இருளை வென்று மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றுப் பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்றுப் பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

அட்ட வீராட்டாணம் 05 : திருவிற்குடி


 அட்ட வீராட்டாணம் 05 : திருவிற்குடி

அட்ட வீராட்டன தலங்களில் ஐந்தாம் தலம் திருவிற்குடி ஆலயம், இது நாகபட்டினம் அருகே அமைந்துள்ளது, தேவாரம் பாடபெற்ற மிக மிக பழமையான ஆலயம் இது
சம்ப்ந்தர் இப்படி முதல் பாடலை தொடங்கி ஒரு பதிகமே பாடினார்
"வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே."
அப்பர் பெருமான் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலை பாடுகின்றார்
"மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே"
இப்படி பல ஞானியராலும் அடியார்களாலும் பாடபட்ட அந்த தலம் காலத்தால் தொன்மையானது வழி வழி வந்த சோழர்களும் இதர மன்னர்களும் திருபணி செய்த ஆலயம் அது
இந்த ஆலயத்தின் வரலாறும் மூலமும் ஜலந்திரன் எனும் அசுரனை பகவான் ஆட்கொண்ட வரலாற்றிலிருந்து தொடங்குகின்றது, இந்த தலப்புராணம் அந்த ஜலந்திரன் கதைதான்
ஜலேந்திரன் கதை சிவபுராணத்தில் உண்டு இன்னும் பல புராணங்களில் உண்டு, இன்னும் பல இந்து நூல்களில் உண்டு
அவனின் கதை இதோ
தேவாதி தேவர்களின் அரசனான இந்திரனுக்கு தான் எனும் அகம்பாவம் எப்போதும் உண்டு, அவனின் அகந்தையின் உணர்ந்த சிவபெருமான் அவனை அழிக்க ஒரு நாடகமாடினார்
ஒருமுறை அவன் கயிலாயம் வந்தபோது காவலாளி போல அவன் பாதையினை மறித்து கொண்டவர் அவனை மேற்கொண்டு அனுமதிக்கவில்லை, "என்னையே தடுக்கின்றாயா?" என தாக்க தொடங்கினான் இந்திரன்
சிவபெருமான் காவலாளி வேடத்தில் தாக்க பெரும் யுத்தம் மூண்டது, ஒரு கட்டத்தில் தன் வஜ்ராயுதத்தை
வீசினான் இந்திரன், சிவன் அதை எளிதாக முறியடித்தாலும் அவருக்கு கடும் ஆத்திரம் வந்து அவனை விரட்டினார்
அவனோ அன்னை சக்தியிடம் சரணடைதான் சக்தி சிவனிடம் இருந்து அவனுக்கு மன்னிப்பு பெற்றுகொடுத்தாள்
சிவன் சமாதனமாகி தன் வியர்வையினை துடைத்து வீசினார் அதில் ஒருதுளி சமுத்திரத்தை அடைந்து ஒரு குழந்தையாயிற்று
நீரினால் உருவான அக்குழந்தை , ஜலத்திலிருந்து உருவான அக்குழந்தை ஜலேந்திரன் என்றாயிற்ற்று
ஜலேந்திரன் வளர்ந்தான் அவனோடு அசுர குணமும் வளர்ந்தது, பிரம்மனிடமிருந்து பல வரங்களை பெற்று கொணடவன் எல்லாவற்றையும் கைபற்ற கிளம்பினான்
அவனின் பெரும் பலம் அவன் மனைவி பிருந்தை, அந்த பிருந்தை கணவனை மட்டும் தொழும் நாயகி, அவனை தவிர வேறோருவனை மனதால் ஏற்று என்று அவள் பணிவிடை செய்வாளோ அன்று இவன் பலம் குறையும் என்பது அவனுக்குள்ள சாபம்
இந்த மனைவியின் பலமும் இன்னும் பிரம்மன் கொடுத்த சிறப்பு வரமும் அவனை காத்து கொண்டிருந்தது
அவன் இந்திரனின் அமராவதியினை கைபற்றினான் அந்த ஐராவதம் யானையினை அகபரித்தான், இன்னும் அக்னி பகவானின் ஜோதிபரத்தை பிடித்தான் வாயுபகவான் முதல் எல்லா தேவர்களையும் அடிமைபடுத்தினான்
அடுத்து குபேரனை பிடித்தான், எமதர்மன் அவனிடம் தோற்றோடினான்
இனி தன்னை எதிர்க்க யாருமில்லை என அவன் கொக்கரித்த நேரம் தேவர்களுக்கு பெரும் அச்சம் மூண்டது எல்லோரும் எதிர்க்க ஏன்ன செய்வது என திருமாலிடம் வந்து ஆலோசித்தார்கள்
திருமால் அவன் பலம் என்ன என்பதை அறிவார், அது அவள் மனைவி ஆனால் அதை தவிர அவனுக்கு சில வரங்கள் இருந்தன‌
அதுவும் கைகளாலும் அவனுக்கு ஆபத்து வரகூடாது இதுவரை இல்லா ஆயுதம், ஒருவராலும் ஏவாத ஆயுதம் ஒன்றால் மட்டும் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனும் வகையில் அது நுணுக்கமான வரமாக இருந்தது
சிவன் ஒருவரே அவனை அழிக்க வல்லவர் தன்னால் அவன் பலத்தை மட்டும் குறைக்கமுடியும் என சொன்ன விஷ்ணு, நாரதர் மூலம் அவனுக்கோர் செய்தியினை சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார்
நாரதரும் ஜலேந்திரனிடம் சென்று கயிலாய மலையின் அழகு, அங்கிருக்கும் மங்கையர் அழகு செல்வ செழிப்ப்பு என எல்லாம் சொல்லி, அமராவதியினைவிட கயிலாயமே சிறப்பானது அதை கைபற்றினால்தான் உனக்கு பெருமை என்றெல்லாம் தூண்டிவிட்டார்
ஜலேந்திரன் கைலாயத்தை கைபற்ற முடிவுசெய்தான், பெரும் படை அனுப்பினான் ஆனால் படை சிதறியது, இனி நானே செல்வேன் என கிளம்பி சென்றான் பெரும் பொர் வெடித்தது
அதே நேரம் விஷ்ணு அவன் மனைவி பிருந்தையினை சந்தித்தார் அவள் கவலையில் ஆழ்ந்திருந்தாள், அடிப்படையில் அவள் விஷ்ணுபக்தை
விஷ்ணுவினை கண்டதும் அவள் கலங்கி சொன்னாள், "சிவனுடன் மோத சென்ற கணவரை காணவில்லை பகவானே, நான் கலங்கியிருக்கின்றேன்" என்றாள்
விஷ்ணு ஒரு நாடகமாடினார, ஒரு மாயை உருவத்தை அவள் கணவன் போல் செய்து அதை தலைவேறு உடல் வேறாக்கி சில குரங்குகள் அதை சுமந்துவர செய்தார்
அதை கண்டதும் தன் கணவன் இறந்துவிட்டான் என அலறி ஆர்பரித்தவளை விஷ்ணு ஆறுதல் சொல்லி அந்த மாயைக்கு தலை உடல் சேர்த்து உயிர்கொடுத்து அவள் கணவன் ஜலேந்திரன் போலவே கொடுத்தார்
அவள் அந்த மாயைக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள், ஆனால் அது கணவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டவள் தான் விஷ்ணுவால் வஞ்சிக்கபட்டதை எண்ணி வருந்தி சாபமிட்டாள்
"எந்த குரங்குகளால் நீ என்னை ஏமாற்றினாயோ அதை குரங்குகளை தேடி நீ அவற்றின் உதவிக்காய் அலைவாய், எப்படி என்னை மாயையினை கொண்டு ஏமாற்றினாயோ அப்படி உன் மனைவி பிரிந்து நீ கதறுவாய்" என சொல்லிவிட்டு தீகுளித்தாள் அவள் சாம்பலே மிஞ்சிற்று
விஷ்ணு கண்ணீருடன் அந்த சாம்பலை பார்த்துகொண்டிருந்தார்
இப்படி பிருந்தை பிரிந்ததும் ஜலேந்திரன் வலுவிழந்தான் , அவன் சேனைகள் அழிய ஆரம்பித்தன ஆனால் சுக்கிராச்சாரியாரை கொண்டு சேனைகளை உயிர்ப்பிக்க செய்து போரை நடத்தி கொண்டிருந்தான்
நீண்ட போர் தொடர்ந்து நடந்தது, அப்பக்கமே தங்கியிருந்தான் ஜலேந்திரன்
அவனை ஒழிக்க சித்தம் கொண்ட சிவன் ஒரு முனிவன் போல அமர்ந்திருந்தார், நீராட வந்தவன் ஒரு காலை நேரம் அவரை சந்தித்தவன் வழமை போல் கர்வம் பேசினான்
சிவனை எளிதில் அழிக்கபோவதாகவும் கையாலத்தை கைபற்றி தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவரபோவதாகவும் கொக்கரித்தான்
அந்த முனிவன் புன்னகைத்து கேட்டான் "நீ அவ்வளவு பல்சாலியா?"
"ஆம், என்னால் எதையும் செய்யமுடியும், இந்த மலையினையே புரட்ட முடியும் விரைவில் புரட்டுவேன்" என்றான் ஜலேந்திரன்
"மலையினை புரட்டுவது இருக்கட்டும், நான் சொல்வதை உன்னால் தூக்க முடியுமா?" என்றார் முனிவர்
"என்ன செய்யவேண்டும்?" என திருப்பி கேட்டான் ஜலேந்திரன்
புன்னகைத்த முனிவன் தன் காலால் ஒரு சக்கரம் வரைந்து, "இதனை தூக்க உன்னால் முடியுமா?" என கேட்டார்
"என்னிடமே சவாலா?" என்றவன் அந்த சக்கரம் வரையபட்ட நிலத்தை அப்படியே தூக்கினான், அதனை தலைக்க்கு மேல் அவன் தூக்க முயன்று கழுத்துக்கு கொண்டுவந்தபோது அந்த சக்கரம் உயிர்பெற்று சுழல தொடங்கிற்று
அப்படியே அவன் கழுத்தை அறுத்தும் போட்டது
அத்தோடு ஒழிந்தான் ஜலேந்திரன, எல்லோரும் கூடி சிவனை போற்றினார்கள் துதித்தார்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினார்கள்
ஆனால் திருமால் அந்த பிருந்தையின் சாம்பலையே வருத்தத்துடன் பார்த்துகொண்டிருந்தார், அவள் குற்றமற்றவள் என்றாலும் த்ர்மத்தை காக்க அவளை பலிகொடுத்ததை எண்ணி கலங்கினார்
அங்கே வந்த பார்வதியும் சிவனும் அவரை ஆற்றுபடுத்தினார்கள், அந்த சாம்பலில் இருந்து துளசியினை எழுப்பிய தேவி அதை மாலையாக திருமால் கழுத்தில் அணிய சொல்லி இனி இந்த துக்க நினைவில் இருந்து விடுபடவேண்டும், உம் பக்தை உம்முடனே இருப்பாள் என வரமருளினாள்
அதிலிருந்து துளசி திருமாலுக்கு உகந்ததாயிற்று
சிவபெருமானும் அந்த சக்கரத்தை விஷ்ணுவிக்கே வழங்கி மகிழ்ந்தார், திருமாலுக்கு சக்கரமும் கிடைத்தது
( திருமால் பிருந்தையிடம் பெற்ற சாபம்தான் ராமாயணமாக தொடர்ந்தது, ராவணன் எனும் சிவபக்தன் அங்கும் அகங்காரத்தால் சாய்க்கபட்டான், திருமால் ராமனாக வந்து பெரும் துன்பபட்டு அவனை அழித்தார்)
இதுதான் ஜலந்தரன் கதை
இந்த கதை புராணத்தில் விஷேஷம் இன்னும் பல கதைகளில் விஷேஷம், இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் அவன் வாழ்ந்த இடம் ஜலந்தர் என அழைக்கபட்டு இன்றுவரை அந்த ஊர் உண்டு
அந்த மண்ணும் அங்கிருக்கும் ஆலயமும் அவன் வரலற்றை சொல்கின்றன‌
அந்த ஜலேந்திரன் வதத்தின் சாட்சியாக எழும்பியதுதான் திருவிற்குடி ஆலயம், அந்த வீராட்டனேஸ்வரரே ஜலந்தனை வதம் செய்தவராக வ்ணங்கபடுகின்றார்
யாராலும் ஏவபடாத ஆயுதம், இல்லாத ஆயுதம், கைகளால் தொடாத ஆயுதம் என அவன் கேட்ட வரம்படி அவனை கொன்றார் சிவன்
ஜலேந்திரன் கதையும் அவன் மனைவி கதையும் ஒரு ஆழ்ந்த ஆன்மீக போதனையினை சொல்கின்றது, கதை தொடங்குமிட்மான இந்திரன் கதை இன்னும் ஆழமாக போதிக்கின்றது
இந்திரன் அகநதையோடு சிவனிடம் மோதி வஜ்ராயுதம் எனும் தன் பலமிக்க ஆயுதத்தை எறிந்தான் ஆனால் அது வீழ்ந்ந்தது இந்திரனும் அகந்தை அழிந்தான்
அந்த இந்திரனின் அகந்தையினை அழிக்க உருவான வியர்வையில் இருந்து வந்த ஜலேந்திரன் பின் இந்திரனின் பதவியினையெ பறித்து அலையவிட்டான்
இந்திரனின் கர்வமே எல்லாவற்றுக்கும் தொடக்கம், அவன் கர்வமே அவனை பரதேசியாக்க்கி ஓடவைத்தது
இங்கு முதலில் அகந்தையினால் அழிந்து பின் அறிவுபெற்றவன் இந்திரன்
ஜலேந்திரன் சிவனின் வியர்வையில் இருந்து உருவானவன் அதாவது ஜீவாத்மா. ஆனால் அந்த ஜீவாத்மா லவுகீக மயக்கத்திலும் அற்ப உலக பலனிலும் நம்பிக்கை கொண்டு அகந்தையில் பரம்பொருளுக்கே கட்டுபட மறுத்து மோதினால் ஆடினால் நிச்சயம் ஏதோ ஒருவழியில் பரம்பொருள் ஜீவாத்மாவினை ஆட்கொள்வார்
இங்கு கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் அந்த பிருந்தை, மாயையில் மனதை கொடுத்தவள், பந்த பாச மயக்கத்தில் தன்னிலை மறந்து மாயையிடம் சிக்கியவள் வீழ்ந்தாள்
அவள் குற்றமற்றவள் என்றாலும் பந்த பாச மயக்கம் அவளை மாயையில் விழவைத்தது
இந்த சம்பவத்தை வெறும் கற்பனை என விலக்கிவிட முடியாது, இன்றைய விஞ்ஞானம் பல ஆய்வுகளை சொல்கின்றது, அதில் ஒன்று ஒரு காலத்தில் கடலால் பூமி மூடபட்டிருந்தது, கடல் பெரும் பெரும் அழிவுகளை கொடுத்தது பின் கட்டுபாட்டுக்குள் வந்து இன்றுகாணும் உலகம் உருவானது என்கின்றது
பாகவதபுராணமும் ஊழிகாலத்தில் நிலம் முழுக்க கடல் இருந்தது சிவன் அதன் மேல் படுத்திருந்தார் பின் மது கைடவ அரக்கர் வந்தனர் அவர்களை வதம் செய்யத்தான் நிலம் மீண்டது என்கின்றது
இன்னும் ஆழமாக விஞ்ஞானம் இந்த பூமியில் ஒரு காலத்தில் நீர் இல்லை, எங்கிருந்தோ வந்த வால் நட்சத்திரத்திலோ இல்லை வேறு குறுங்கோளிலொ இருந்த நீர்துளி பெரிதாக பரவி பின் பல மாறுதலுக்க்கு உட்பட்டு பெரும் கடலாக உதித்தது என்கின்றது
இன்னும் பல ஆய்வுகளை அது செய்கின்றது
எது எப்படியாயினும் கடலும் அதன் நீரும் பெரிதாகி நிலத்தை மூடி பெரும் மிரட்டலை கொடுத்திருப்பதை மறுக்கமுடியாது, ஜலேந்திரன் கதை இந்த சமுத்திரம் உலகை அழிக்க மூடிய மிரட்டலான காலத்தின் ஒரு கதைவடிவமாக இருக்கலாம்
ஆனாலும் பகவான் எனும் பரம்பொருள்தான் அந்த அபத்தை நீக்கினார் என்பது கவனிக்கதக்கது
விஞ்ஞானபடி நீர் என்பது ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் இணைந்தது, இதை எப்படி பிரிப்பது என இன்றைய விஞ்ஞானம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் இரண்டும் இல்லாமல் நீர் இல்லை
பிருந்தையினை விஷ்ணு பிரித்தா என்பது இந்த மூலக்கூறுகளை பிரித்துபோட்ட நுணுக்கமான வழிகாட்டல் , முழுக்க விஞ்ஞானம்
ஆக நீரால் எழுந்த பிரபஞ்ச மிரட்டலை பரம்பொருள் அழித்து லோகத்தை காத்தார் என்பது விஞ்ஞான ரீதியாக கூட விளக்க சிரமானது அல்ல, என்றோ நடந்திருக்க கூடிய சம்பவம் இவை
இந்துமதம் அவைகளைமானிடருக்கு புரியும்படி லவுகீக வடிவத்தில் சொல்லி ஆன்மீக தத்துவத்தையும் போதிக்கின்றது
ஆக இந்த் புராண கதையின் சுருக்கமான தத்துவம் இதுதான்
இந்திரன் எந்த அகந்தையில் ஆடினானோ அதே அகந்தை ஒரு உருவமெடுத்து வந்து அவனை அலறவைத்து விரட்டியது
அப்படியே ஜலேந்திரனின் ஆணவத்தையும் அவனே எதிர்பாராபடி, ஏன் யாருமே எதிர்பாராதபடி சிவன் அழித்துபோட்டார் அவரால் முடியாதது எதுவுமில்லை பரமாத்மாவினை ஜீவாத்மா ஒருகாலமும் வெற்றிகொள்ள முடியாது என்பதை காட்டுகின்றது
பரமாத்மாவினை சரணடைதலே முழுக்க சரியானது என்கின்றது இந்த கதை
அதைத்தான் ஐந்தாம் வீராட்டணமான திருவேற்குடி ஆலயமும் சொல்கின்றது, காவேரி கரையில் இருக்கும் அந்த தலத்தில் வணங்கினால் எல்லா நலமும் கைகூடும்
ஏன் நீரை சொன்னார்கள் இந்துக்கள்?
இந்த உடலில் பெரும் பாகம் நீர், ஓடும் ரத்தம் கொழுப்பு மூளை தங்கும் திரவம், ஹார்மோன்கள் இன்னும் என்னென்ன இயக்கம் உண்டோ அவை எல்லாமே நீர்மமானவை
இந்த உடலை இயக்கும் சக்தியில் கர்வமும் ஆணவமும் வந்துவிட கூடாது, ரத்தத்தில் சிந்தையில் அகங்காரமோ கர்வமோ வரகூடாது என சூட்சுமமாக சொல்லும் ஆலயம் அது
கர்வமும் அகங்காரமும் அது கொடுக்கும் விளைவும் உடலின் ரத்தவோட்டத்தை பாதிக்கும், நீர்மைகளை பாதிக்கும் அது உட்லை கெடுக்கும்
இந்த ஆலயத்தில் வணங்கினால் கர்வம் அகலும் அகங்காரம் அகலும் அந்நேரம் உடலும் மனமும் தெளிவாகும்
அதனாலே இந்த அலயத்தை அந்த சலேந்திரன் கதையாக படைத்தார்கள் இந்துக்கள்
அக்கோவில் பல அருள்வடிவங்களை கொண்டது, அங்கு சென்றால் ஆணவம் அகலும், உடல் நலம் கூடும் இன்னும் நன்மையின் பொருட்டு எதையெல்லாம் இழந்தீர்களோ அதைவிட அதிகமாக பெறுவீர்கள்
விஷ்ணு துளசியும் சக்கரமும் பெற்றதுபோல் உங்களுக்கும் புனிதமும் பலமும் இன்னும் கூடும், எல்லா நலனும் தேடிவரும்
அட்டவீரட்டானத்தில் ஐந்தாம் தலமான இந்த தலத்தில் வீற்றிருக்கும் சிவன் ஜலந்திர வத மூர்த்தியாக நிற்கும் சிவன் அகந்தையினை அழித்து அந்த அகந்தையினால் வந்த நோய்களை அழித்து எதெல்லாம் அகந்தையால் இழந்தீர்களோ அதையெல்லாம் திருப்பி தருவதற்கு தன் ஆலய கதவுகளை திறந்துவைத்து காத்திருக்கின்றார் சென்று அருள்வாங்கி வாழவேண்டியது உங்கள் கடமை

தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை


 தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா? நீங்க பேரதிர்ஷ்டசாலிதான்! ஏன் தெரியுமா?

எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது.
ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான்.
ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும்.
எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம்.
ஆரோக்கியமான தூக்கத்தினை பெற என்ன செய்யலாம்?
தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தம் நீக்கப்படுகிறது.
இது உங்கள் இடுப்பு பகுதி சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.
நன்மைகள் :
கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் போது, அது இடுப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது.
முதுகெலும்புகள் சீரமைப்பில் இருந்து நகர்வதையும் தடுக்கிறது.
கீழ் முதுகு வலி அல்லது கால் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக சியாட்டிகா உள்ளவர்களுக்கு, தலையணையை கால்களுக்கு இடையே வைத்து தூங்குவது மிகவும் நல்லது.
ஒருபுறமாக தூங்கும் போது, உங்கள் மேல் கால் ஓய்வெடுக்க முன்னோக்கி மெத்தையை பார்த்து செல்லக்கூடும். இது கீழ் முதுகில் ஒருவித அழுத்தத்தைக் கொடுத்து, சியாட்டிக் நரம்பை எரிச்சலடையச் செய்யும்.
குறட்டை விடுபவர்களுக்கு பக்கவாட்டு தூக்க நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் இந்த தூக்க நிலையில், காற்றுப் பாதைகள் மிகவும் நிலையானவை மற்றும் காற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
உங்கள் முதுகெலும்பை சீரமைத்து வைத்திருப்பது, கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கிறது. அதோடு இது தூக்கத்தில் மூச்சுத்திணறல்/குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
முக்கிய குறிப்பு :
உடலின் ஆற்றலையும், மன விழிப்புணர்வையும் புதுப்பிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.
இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், அடுத்த நாளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், நோயில் இருந்து மீளவோ அல்லது காயத்தில் இருந்து குணமடையவோ உதவும்.
நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, ஏதேனும் வலியை உணர்ந்தால், உடனே உங்கள் தூக்க தோரணையை சரிபார்க்கவும்.
மேலும் ஒவ்வொரு இரவு தூங்கும் போதும் தூக்க தோரணையை கவனிக்க வேண்டியது அவசியம்.
அதேப் போல் மறுநாள் காலையில் எழும் போது வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்...

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...