Sunday, 22 September 2024

பஞ்சபட்சி தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.!!!


 தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.!!!

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சித்தர்கள் சூட்சுமங்களை மறைத்து அதில் உள்ள நுணுக்கங்களை ஒளித்து வைத்துள்ளனர். காரணம் பஞ்சபட்சி தெரிந்தால் அதை தவறான காரியங்களுக்கு பயன்படுத்திவிடக்கூடும் எனபதால். அதை அனைவருக்கும் வெளிப்படையாக கற்றுத்தராமல் தன்னுடைய சீடர்களுக்கு ரகசியமாக கற்றுககொடுத்தனர். பஞ்ச பூதங்கள் பட்சிகளாக குறிக்கப்பட்டன.— in Chennai.
அவை வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்.
அவைகள் ஜந்து விதமான தொழில்கள் செய்தன. அது ஊன் நடை அரசு துயில் சாவு எனவும் அதில் சூட்சுமாக பல உப தொழில்களும் செய்தன.
இதில் அரசுத் தொழில் பலம் வாய்ந்தது. நூறு சதம் பலம்வாய்ந்தது. அடுத்து ஊன் தொழில் முக்கால் பலம். அதாவது எழுபத்தைந்து சதவீதம் பலமுள்ளது. அதற்கு கீழ் நடை. அதன் பலம் ஊனில் பாதியாகும். அது முப்பத்தி ஏழரை சதவீதம். அடுத்து துயில் பட்சிபலம் பத்தொன்பது சதவீத பலம். அடுத்து சாவுபட்சி தொழில் பலம் ஒன்பது சதவீதமாகும்.
ஊன் பட்சி வல்லூறு. நடை பட்சி ஆந்தை அரசுப்பட்சி காகம் துயில் பட்சிகோழி சாவுப்பட்சிமயில்.
ஊன் எழுத்து மசிவயந. நடை எழுத்து நமசிவய. அரசு எழுத்து யநமசிவ துயில் வயநமசி. சாவுஎழுத்து சிவயநம.
இது வளர்பிறை பகலுக்கு. வளர்பிறை இரவுக்கு ஒன்றைவிட்டு ஒன்றை எழுத வேண்டும. அதிலிருந்து தேய்பிறை பகலுக்கும் அதிலிருந்து ஒன்றை விட்டு ஒன்றை தேய்பிறை இரவுக்கும் எழுத வேண்டும்.
அடுத்து அட்சரபட்சி அகரம் வல்லூறு. நமசிவய வில் ..ந. .இது திதி.அடுத்து .இகரம் ஆந்தை.. ம.. இது வாரம். அடுத்து உகரம் காகம் சி... இது நட்சத்திரம். அடுத்து எகரம் கோழி. வ.. இது யோகம். அடுத்து ஒகரம் மயில்.. ய... இது கரணம். பஞ்ச அங்கமே பஞ்ச பட்சியாச்சு. இது வளர்பிறையின் அட்சரபட்சி..
இந்த பக்கத்தில் தேய்பிறையின் அட்சரப்பட்சி பற்றி பார்ப்போம். தேய்பிறைக்கு அட்சரங்களின் நிலை என்னவென்றால். அகரம் நமசிவய என்பதில் வ ஆகும். கோழி. இது கரணம். .அடுத்து இகரம்.சி.வல்லூறு. இது யோகம். அடுத்து உகரம். ம. இது ஆந்தை. நட்சத்திரம். அடுத்து எகரம் என்பது நமசிவய என்பதில் ந ஆகும் இது மயில். வாரம். இறுதியில் ஒகரம் என்பது ய ஆகும் காகம். இது திதி.
பஞ்சபட்சியில் வளர்பிறை வல்லூறு தேய்பிறையில்மயில். வளர்பிறை ஆந்தை தேய்பிறையில் கோழி. வளர்பிறை காகம் தேய்பிறையில் காகமே ஆகும். வளர் கோழி தேய் ஆந்தை ஆகும். வளர்பிறை மயில் தேய்பிறையில் வல்லூறு ஆகும்.
அ முதல் ந வரை 9.இ முதல் ம வரை 11.உ முதல் சி வரை4.எ முதல் வ வரை 15.ஒ முதல் ய வரை 15.மொத்தம்பஞ்சாட்சரம் 51அட்சரமாச்சு.இந்த 51அட்சரங்களும் உலகை வெல்லலாச்சு. நன்றி.
சாமம் மற்றும் நாழிகை கணக்கு
சூரிய உதயம் தொடங்கி அடுத்த நாள் சூரிய உதயம் வரை ஒரு நாள். ஒரு நாளுக்கு 10சாமம் பகல் 5.இரவு5.ஒரு சாமம் என்பது 6நாழிகை.அதாவது 2மணி 24நிமிடம்.அதாவது 144நிமிடம்.1நாழிகைஎன்பது24நிமிடம்.1/2 நாழிகை 12நிமிடம்.1/4நாழிகைஎன்பது6நிமிடம்.1/8என்பது 3நிமிடம் .நாழிகையை சுருக்கி விநாழிகை ஆக்கினால் 60விநாழிகை என்பது 24நிமிடம்.30விநாழிகை என்பது12 நிமிடம். 15விநாழிகை என்பது6 நிமிடம். 7 1/2விநாழிகை என்பது 3நிமிடம். 2 1/2விநாழிகை என்பது 1நிமிடம். 60 விநாழிகை என்பது 1 தர்ப்பரை.
வல்லூறுவின் கணிதத்தைப் பார்ப்போம்.
வளர்பிறை பகல்
ஊன் 1 1/2 நாழிகையில்(36நிமிடத்தில்)
ஊனில் ஊன்9நிமிடம்.ஊனில் நடை7 1/2 நிமிடம். ஊனில் அரசு 12நிமிடம்.ஊனில் துயில் 4 1/2 நிமிடம். ஊனில் சாவு 3நிமிடம்.
அடுத்து நடை 30 நிமிடத்தில் ந. ந7 1/2நமிடம். நடையில் அரசு6 1/4.ந.துயில் 10 .நடையில் சாவு 3 3/4. ந.ஊன்2 1/2நிமிடம்.
அடுத்து அரசு 48 நிமிடத்தில் அ. அ 12. அ. து 10.அ.சா16 .அ. ஊ 6.அ.ந4.
அடுத்து துயில் 4 1/2+.3 3/4+6+2 1/4+1 1/2.(மொத்தம் 18நிமிடம்)
அடுத்துசாவு 3+2 1/2+4+1 1/2+1(மொத்தம்12நிமிடம்) ஆக வளர்பிறை பகலில் இது வல்லூரின் கணிதம். இது சூட்சுமப் பட்சியின் அடிப்படையில் மாறி மாறிஅந்தரத்தொழில் நடத்தும். அடுத்த பதிவில் வளர்பிறை இரவு வல்லூரின் அந்தர கணிதம் பற்றி பார்க்கலாம்.
வல்லூரின் சூட்சும அந்தர கணிதம்
தேய்பிறை பகல்
ஊன் சாவு துயில் அரசு நடை என தேய்பிறை பகவில் தொழில் நடக்கும்.
ஊன் 2நாழிகையில்
( ஊ) 16+10+4+6+12
சாவு 1 1/2 நாழிகையில்
(சா) 10+6 1/4+2 1/2+3 3/4+7 1/2
துயில் அரை நாழிகையில்
( து) 4 + 21/2+1+1 1/2+3
அரசு 3/4 நாழிகையில்
( அ) 6+3 3/4+1 1/2+2 1/4+4 1/2
நடை 1 1/2 நாழிகையில்
( ந) 12+7 1/2+3+4 1/2+9
என்ற நிமிடங்களில். அந்தர விநாழிகளை பிரித்து காலம் கடக்கும்.
இவைகள் சூட்சுமப் பட்சிகளின் படி முறையே மாறி மாறி காலம் கடக்கும் .
வல்லூறு
வல்லூரின் தேய்பிறை இரவின் சூட்சம அந்தர நாழிகை கணிதம். இது சூட்சும பட்சியின் அடிப்படையில் தொழிலை மாற்றி மாற்றி நடத்தும்.
தேய்பிறையில் பட்சிகளின் தொழில் ஊன் துயில் நடை சாவு அரசு என்று நடக்கும்.
ஊன் 1.3/4 நாழிகையில்(42)நிமிடங்களில்
(ஊ) 12.1/4+ 5.1/4+ 12.1/4+ 7+5.1/4
துயில் 3/4 நாழிகையில்(18) நிமிடங்களில்
( து) 5.1/4+ 2.1/4+ 5.1/4+3+2.1/4
நடை 1.3/4.நாழிகையில்(42)நிமிடங்களில்
( ந)12.1/4+ 5.1/4+ 12.1/4+ 7+5.1/4
சாவு 1நாழிகையில் (24 நிமிடங்களில்)
( சா)7+3+7+4+3
அரசு 3/4 நாழிகையில்( 18 நிமிடங்களில்)
(அ) 5.1/4+2.1/4+5.1/4+ 3+2.1/4
என்று நிமிடங்களாக பிரியும்.
நண்பர்களே இனி ஆந்தைப்பட்சியின் கணிதத்தைப் பார்க்கலாம்.
வளர்பிறை பகல்
ஊ-ஊன், ந-நடை, அ-அரசு, து-துயில்
,சா-சாவு.
( ஊ.ஊ)(ஊ. ந)(ஊ.அ)(ஊ. து)(ஊ.சா)
7.1/2. 12. 4.1/2. 3. 9
(ந. ந) ( ந. அ) ( ந. து) ( ந. சா) (ந. ஊ)
6.1/4. 10. 3.3/4. 2.1/2. 7.1/2
( அ. அ) (அ. து) (அ. சா)(அ. ஊ) (அ. ந)
10. 16. 6. 4. 12
( து. து) (து. சா) (து. ஊ) (து. ந) (து. அ)
3.3/4. 6. 2.1/4. 1.1/2. 4.1/2
(சா. சா) (சா. ஊ)(சா. ந) (சா.அ) (சா.து)
2.1/2. 4. 1.1/2. 1. 3
என்று நிமிடமாக தொழில்பண்ணும். சூட்சுமம் பட்சி எடுத்து செயல் படுத்தும் போது அந்தர தொழில் வரிசை மாறும்.
ஆந்தையின் சூட்சும கணிதம். (வளர்பிறை இரவு)
வளர்பிறை இரவில் ஊன் பட்சி ஊன் அரசு சாவு நடை துயில்எனவும் அரசுபட்சி அரசு சாவு நடை துயில் ஊன் எனவும் சாவுபட்சி சாவு நடை துயில் ஊன் அரசுஎனவும் நடை பட்சி நடை துயில் ஊன் அரசு சாவு எனவும் துயில் பட்சி துயில் ஊன் அரசு சாவு நடை எனவும் தொழில் நடத்தும். இந்த வகையில் தொழில் புரிந்தாலும் சூட்சுமப் பட்சியின் நிலை எடுத்து அந்தரத்தில் சூட்சம அந்தரம் கணிக்க வேண்டும்.
வளர்பிறை(இரவு)
(ஊஊ) ( ஊஅ) (ஊசா) (ஊந)( ஊது)
6.1/4. 5. 6.1/4. 5. 7.1/2
அஅ. அசா. அந. அது. அஊ
5. 4. 5. 4. 6
சாசா. சாந. சாது. சா ஊ. சாஅ
7.1/2. 6. 7.1/2. 6. 9
நந. நது. ந ஊ. ந அ. நசா
6.1/4. 5. 6.1/4. 5. 7.1/2
துது. துஊ. து அ. துசா. துந
5. 4. 5. 4. 6
ஊன்-30. அரசு-24. சாவு- 36. நடை-30 துயில்-24. நிமிடங்கள்.
ஆந்தை பட்சியின்சூட்சும அந்தர கணிதம்
தேய்பிறை (பகல்)
தேய்பிறை பகல் சாமத்தில் பட்சிகள் ஊன் சாவு துயில் அரசு நடை என காலம் கடந்து தொழில் நடத்தும்.
ஊன் பட்சியானது ஊன் சாவு துயில் அரசு நடை எனவும் சாவுப்பட்சி ஆனது சாவு துயில் அரசு நடை ஊன் எனவும் துயில் பட்சி துயில் அரசு நடை ஊன் சாவு எனவும் அரசு பட்சியானது அரசு நடை ஊன் சாவு துயில் எனவும் நடை பட்சியானது நடை ஊன் சாவு துயில் அரசு எனவும் தொழில் நடத்தும்.
ஆந்தை(தேய்பிறை பகல்)
ஊஊ ஊசா ஊது ஊஅ ஊந
4. 6. 12. 16. 10
சாசா. சாது சாஅ. சாந. சாஊ
2.1/2. 3.3/4. 7.1/2. 10. 6.1/4
துது. துஅ. துந. துஊ. துசா
1. 1.1/2. 3. 4.. 2.1/2
அஅ. அந. அஊ. அசா. அது
1.1/2. 2.1/4. 4.1/2. 6. 3.3/4
நந. நஊ நசா. நது. நஅ
3. 4.1/2. 9. 12. 7.1/2
என்று சூட்சுமத்தில் நிமிடங்களாக பிரியும். சூட்சூமபட்சி அடிப்படையில் மாறிமாறி தொழில் நடத்தும்.
ஆந்தையின் தேய்பிறை இரவு சாமத்தின் சூட்சும அந்தரத்தைப் பார்ப்போம்.
ஊன் பட்சி ஊன் துயில் நடை சாவு அரசு எனவும் துயில் பட்சி துயில் நடை சாவு அரசுஊன் எனவும் நடை பட்சி நடை சாவு அரசு ஊன் துயில் எனவும் சாவுபட்சி சாவு அரசு ஊன் துயில் நடை எனவும் அரசு பட்சி அரசு ஊன் துயில் நடை சாவு எனவும் அந்த அந்த சாமத்தில் தொழில் நடத்தும். இந்த வரிசை தொழிலானது சாமத்தில் இருந்தாலும் சூட்சூம அந்தர விநாழிகைகளில்ஒவ்வொரு சாமத்திலும் மாறி மாறி தொழில் நடத்தும். இதை நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஊஊ ஊது. ஊந ஊசா. ஊஅ
5.1/4. 12.1/4. 5.1/4. 12.1/4. 7.
துது. துந. துசா. துஅ. துஊ
2.1/4. 5.1/4. 2.1/4. 5.1/4. 3
நந. நசா. ந அ. ந ஊ. நது
5.1/4. 12.1/4. 5.1/4. 12.1/4. 7
சாசா. சாஅ. சாஊ. சாது. சாந
3. 7. 3. 7. 4
அஅ. அஊ. அது. அந. அசா
2.1/4. 5.1/4. 2.1/4. 5.1/4. 3
ஊன் -1.3/4 நாழிகை(42நிமி)
துயில் -3/4.நாழிகை(18நிமி)
நடை-1.3/4 நாழிகை. (42நிமி)
சாவு-1 நாழிகை (24நிமி)
அரசு -3/4. நாழிகை(18நிமி).
காகம்.வளர்பிறை பகல்.
ஊஊ ஊந ஊஅஊதுஊசா
12. 4 1/2. 3. 9. 7.1/2
நந. நஅ. நது நசா நஊ
10. 3.3/4. 2.1/2. 7.1/2. 6.1/4
அஅ அது அசா அஊ. அந
16. 6. 4. 12. 10.
துது. துசா. துஊ. துந. துஅ
6. 2.1/4. 1.1/2. 4.1/2. 3.3/4
சாசா சாஊ சாந. சாஅ. சாது
4. 1.1/2. 1. 3.. .2.1/2
நிமிடங்கள்.
ஊன் 1.1/2 நாழிகை. நடை 1.1/4 நாழிகை. அரசு 2நாழிகை. துயில் 3/4நாழிகை.சாவு 1/2 நாழிகை.
பட்சிகள் சூட்சுமப் பட்சியைப் பொறுத்து ஒவ்வொரு அந்தரத்திலும் மாறிமாறிதொழில் நடத்தும்.
காகம்
வளர்பிறை இரவு
சூட்சும அந்தரம்
ஊஊ ஊஅ ஊசா ஊந ஊது
5. 7.1/2. 6.1/4. 5. 6.1/4
அஅ அசா அந அது அஊ
.4. 6. 5. 4. 5.
சாசா சாந சாது சாஊ சாஅ
6. 9. 7.1/2. 6. 7.1/2
நந நது. நஊ. நஅ. நசா
5. 7.1/2. 6.1/4. .5. 6.1/4
துது துஊ. துஅ. துசா. துந
4. 6. 5. 4. 5
வளர்பிறை இரவில் ஊன்-30நிமிடம்.அரசு-24நிமிடம்.சாவு-36நிமிடம். நடை-30நிமிடம். துயில் 24நிமிடம்.என எடுத்துக்கொள்ளும். அந்தர வரிசை சூட்சுமப் பட்சியின் அடிப்படையில் மாறி மாறி சாமந்தோறும் வரும்.
காகம் (தேய்பிறை பகல்)
சூட்சும அந்தரம்
ஊஊ ஊசா ஊது ஊஅ ஊந
12. 16. 10. 4. 6.
சாசா சாது சாஅ. சாந. சாஊ
7.1/2. 10. 6.1/4. 2.1/2. 3.3/4
துது துஅ. துந. துஊ. துசா
3. 4. 2.1/2. 1. 2.1/4
அஅ அந அஊ அசா. அது
4.1/2. 6. 3.3/4. 1.1/2. 2.1/4
நந. நஊ. நசா. நது. நஅ
9. 12. 71/2. 3. 4.1/2
தேய்பிறை பகலில் ஊன் பட்சி ஊன் சாவு துயில் அரசு நடை எனவும்
சாவுப்பட்சி. சாவு துயில் அரசு நடை ஊன் எனவும்
துயில் பட்சி துயில் அரசு நடைஊன் சாவு எனவும்
அரசுப்பட்சி அரசு நடை ஊன் சாவு துயில் எனவும்
நடை பட்சி நடை ஊன் சாவு துயில் அரசு எனவும் சாமத்தில் தொழில் நடத்தும். சூட்சம பட்சியின் நிலை எடுத்து அந்தரத்தில் சூட்சும அந்தரத்தை ஆடவேண்டும்.
காகம்(தேய்பிறை இரவு)
சூட்சும அந்தரம்
ஊஊ. ஊது. ஊந. ஊசா. ஊஅ
7. 5.1/4. 12.1/4. 5.1/4. 12.1/4
துது. துந. துசா. துஅ. துஊ
3. 2.1/4. 5.1/4. 2.1/4. 5.1/4.
ந ந. நசா. ந அ. நது. ந ஊ
7. 5.1/4. 12.1/4. 5.1/4. 12.1/4.
சாசா. சாஅ. சாஊ. சாது. சாந
4. 3. 7. 3. 7
அஅ. அஊ. அது. அந. அசா
3. 2.1/4. 5.1/4. 2.1/4. 5.1/4
என்று நிமிடங்களாக பிரியும்.
வளர்பிறை பகல்
கோழியின் சூட்சும அந்தரம்
ஊஊ. ஊந ஊஅ ஊது. ஊசா
ந ந. ந அ ந து. நசா. ந ஊ
அஅ. அது. அசா. அஊ. அந
துது. துசா. துஊ. துந. துஅ
சாசா. சாஊ. சாந. சாஅ. சாது
4.1/2. 3. 9. 7.1/2. 12.(36)
3.3/4. 2.1/2. 7.1/2. 6.1/4. 10.(30)
6. 4. 12. 10. 16.(48)
2.1/4. 1.1/2. 4.1/2. 3.3/4. 6. (18)
1.1/2. 1. 3. 2.1/2. 4. (12)
என்ற நிமிடங்கள்.
கோழிப்பட்சியின் சூட்சும கணிதம்.
வளர்பிறை இரவு
ஊஊ. ஊஅ. ஊசா. ஊந. ஊது
5. 6.1/4. 5. 7.1/2. 6.1/4.
அஅ. அசா. அந. அது. அஊ
4. 5. 4. 6. 5.
சாசா. சாந. அது. அஊ. அஅ
6. 7.1/2. 6 9. 7.1/2
நந. நது. நஊ. நஅ. நசா
5. 6.1/4. 5. 7.1/2. 6.1/4.
துது. துஊ. துஅ. துசா. துந
4. 5. 4. 6. 5.
ஊன் 1.1/4. நாழிகை(30நிமிடங்கள்)
அரசு 1நாழிகை (24நிமிடங்கள்)
சாவு 1.1/2.நாழிகை (36.நிமிடங்கள்)
நடை 1.1/4. நாழிகைகள்(30நிமிடங்கள்)
துயில் 1நாழிகை (24நிமிடங்கள்)
இந்த கணிதம் இதே மாதிரி இல்லாமல் சாமந்தோறும் சூட்சும பட்சியின் அடிப்படையில் மாறி மாறி தொழில் புரிந்து மாறும்.
கோழிப்பட்சியின் சூட்சும கணிதம்.
தேய்பிறை பகல்
ஊஊ. ஊசா. ஊது. ஊஅ. ஊந
10. 4. 6. 12. 16.
சாசா. சாது. சாஅ. சாந. சாஊ
6.1/4. 2.1/2. 3.3/4. 7.1/2. 10.
துது. துஅ. துந. துஊ. துசா
2.1/2. 1. 1.1/2. 3. 4.
அஅ. அந. அஊ. அசா. அது
3.3/4. 1.1/2. 2.1/4. 4.1/2. 6.
நந. நஊ. நசா. நது. நஅ
7.1/2. 3. 4.1/2. 9. 12.
ஊன் 2நாழிகை.(48)நிமி.
சாவு. 1.1/4 நாழிகை (30)நிமி.
துயில் 1/2 நாழிகை (12)நிமி.
அரசு. 3/4 நாழிகை (18)நிமி
நடை. 1.1/2 நாழிகை. (36)நிமி
என்று நிமிடங்களாக தொழில் எடுத்து சூட்சுமபட்சியின் கணிதப்படி அந்த அந்த சாமத்தில் இந்த வரிசைப்படி இல்லாமல் மாறிமாறி தொழில் நடத்தும்.
கோழி
தேய்பிறை(இரவு)
சூட்சும அந்தர கணிதம்
ஊஊ. ஊது. ஊந. ஊசா. ஊஅ
12.1/4. 7. 5.1/4. 12.1/4. 5.1/4
துது. துந. துசா. துஅ. துஊ
5.1/4. 3. 2.1/4. 5.1/4. 2.1/4
நந. நசா. நஅ. நஊ. நது
12.1/4. 7. 5.1/4. 15.1/4. 5.1/4
சாசா. சாஅ. சாஊ. சாது. சாந
7. 4. 3. 7. 3
அஅ. அஊ. அது. அந. அசா
5.1/4. 3. 2.1/4. 5.1/4. 2,1/4
ஊன்--1,3/4. நாழிகை(42வநிமிடம்)
துயில் 3/4. நாழிகை. (18நிமிடம்)
நடை. 1.3/4 நாழிகை. (42நிமிடம்)
சாவு. 1. நாழிகை. (24 நிமிடம்)
அரசு. 3/4. நாழிகை. (18 நிமிடம்)
மொத்தம். 6 நாழிகைகள் 144. நிமிடம். 2மணி. 24. நிமிடம்.
மயில்
சூட்சும கணிதம்
வளர்பிறை பகல்
---------------------------
ஊஊ. ஊந. ஊஅ. ஊது. ஊசா
3. 9. 7.1/2. 12. 4.1/2
நந. நஅ. நது. நசா. நஊ
2.1/2. 7.1/2. 6.1/4. 10. 3.3/4.
அஅ. அது. அசா. அஊ. அந
4. 12. 10. 16. 6.
துது. துசா. துஊ. துந. துஅ
1.1/2. 4.1/2. 3.3/4. 6. 2.1/4.
சாசா. சாஊ. சாந. சாஅ. சாது
1. 3. 2.1/2. 4. 1.1/2
ஊன்--36நிமிடம்(1.1/2)நாழிகை
நடை--30நிமிடம்(1.1/4)நாழிகை
அரசு--48நிமிடம்(2நாழிகை)
துயில் --18நிமிடம்(3/4நாழிகை)
சாவு--12--நிமிடம்(1/2நாழிகை)
என்ற நிமிடங்களில் ஊன் பட்சி ஊன் நடை அரசு துயில் சாவு எனவும்
நடை பட்சி நடை அரசு துயில் சாவு ஊன் எனவும்
அரசுப்பட்சி அரசு துயில் சாவு ஊன் நடை எனவும்
துயில் பட்சி துயில் சாவு ஊன் நடை அரசு எனவும்
சாவுபட்சி சாவு ஊன் நடை அரசு துயில் எனவும் வளர்பிறைபகலில் தொழில் நடத்தும். அந்தரகணிதம் சூட்சும நிலையின் அடிப்படையில் மாறிமாறி வரும்.
மயில்( வளர்பிறை இரவு)
சூட்சம அந்தர கணிதம்
ஊஊ. ஊஅ. ஊசா. ஊந ஊது
7.1/2. 6,1/4. 5. 6.1/4. 5
அஅ. அசா. அந. அது. அஊ
6. 5. 4. 5. 4.
சாசா. சாந. சாது. சாஊ. சாஅ
9. 7.1/2. 6. 7.1/2. 6.
நந. நது. நஊ. நஅ. நசா
7.1/2. 6.1/4. 5. 6.1/4. 5
துது. துஊ. துஅ. துசா. துந
6. 5. 4. 5. 4.
ஊன்----30. அரசு --24. சாவு 36. நடை 32. துயில் 24.நிமிடங்கள்.
பஞ்சபட்சியில் மயில்
தேய்பிறை(சூட்சம கணிதம்) (பகல்)
ஊஊ ஊசா. ஊது ஊஅ ஊந
6. 12. 16. 10. 4.
சாசா. சாது. சாஅ. சாந. சாஊ
3.3/4. 7.1/2. 10. 6.1/4. 2.1/2.
துது. துஅ. துந. துஊ. துசா
1.1/2. 3. 4. 2.1/2. 1.
அஅ. அந. அஊ. அசா. அது
2.1/4. 4.1/2. 6. 3.3/4. 1.1/2
நந. நஊ. நசா. நது. நஅ
4.1/2. 9. 12. 7.1/2. 3.
ஊன்(48நிமிடங்கள்) சாவு(30நிமிடங்கள்)
துயில்(12நிமிடங்கள்)
அரசு (18 நிமிடங்கள்)
நடை(36நிமிடங்கள்)
தேய்பிறை(இரவு)
மயில் சூட்சூம கணிதம்.
ஊஊ. ஊது. ஊந. ஊசா. ஊஅ
5.1/4. 12.1/4. 7 5.1/4. 12.1/4
துது. துந. துசா. துஅ. துஊ
2.1/4. 5.1/4. 3. 2.1/4. 5.1/4
நந. நசா. நஅ. நஊ. நது
5.1/4. 12.1/4. 7. 5.1/4. 12.1/4
சாசா. சாஅ. சாஊ. சாது. சாந
.3. 7. 4. .3. 7.
அஅ. அஊ. அது. அந. அசா
2.1/4. 5.1/4. 3. 2.1/4. 5.1/4
ஊன்.(42நிமிடம்)
துயில்(18நிமிடம்)
நடை(42நிமிடம்)
சாவு( 24நிமிடம்)
அரசு(18நிமிடம்)........
பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் அடிப்படை அட்டவணை
வளர்பிறை (பகல்)
வா. ஊ. ந. அ. து. சா. சூ
--- -- -- --- ----- ----- ----- --
ஞா. வ. ஆ. கா. கோ. ம. அ
செ
வி. - கா. கோ ம. வ. ஆ. சா
சனி. - ம. வ. ஆ. கா. கோ. ந
தி.புத ஆ. கா. கோ. ம. வ. து
வெ. கோ. ம. வ. ஆ. கா. ஊ
வா--வாரம். ஞா. ...ஞாயிறு... தி... திங்கள். செ... செவ்வாய். பு... புதன். வி.... வியாழன்... வெ.. வெள்ளி.. ச. சனி.
ஊ.. ஊன்.. ந.... நடை.... அ... அரசு... து.... துயில்... சா.. சாவு... சூ... சூட்சுமபட்சி.
சூட்சமபட்சி
ஊன்.... மசிவயந
நடை... நமசிவய
அரசு... யநமசிவ.
துயில்... வயநமசி
சாவு.... சிவயநம. .
இது வளர்பிறைக்கு. பகலுக்கு உண்டான அடிப்படை. அட்டவணை. இதிலிருந்துதான் ஒவ்வொரு சாமத்திற்கும் பட்சிகளின் தொழில் வரிசையைப் பிரித்து எடுக்கவேண்டும். நன்றி.
வ... வல்லூறு... ஆ.. ஆந்தை.. கா.. காகம். கோ... கோழி... ம.. மயில்.. நன்றி.
(ஞா.. செ.).. வல்லூறு.. ஆந்தை.. காகம்..கோழி... மயில்.. என்று.. படிக்கவும்
அதில் சூட்சுமபட்சி அரசு என படிக்கவும்.
பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் வளர்பிறை இரவுக்கு உண்டான மூல தொழில் அட்டவணை.
வா ஊ அ சா ந து சூ
------ ----- ---- ---- ---- ---- ----
ஞா. கா. வ. கோ. ஆ. ம. (ந)
செ
வெ. வ. கோ. ஆ. ம. கா (அ)
திபு. கோ. ஆ. ம. கா. வ (து)
சனி. ஆ. ம. கா. வ. கோ (சா)
வி. ம. கா. வ. கோ. ஆ (ஊ)
வா=வாரம். ஊ=ஊன்..ந=நடை..அ=அரசு
து=துயில்..சா=சாவு..
வ=வல்லூறு..ஆ=ஆந்தை..கா=காகம்.கோ==கோழி.. ம=மயில்.
சூ=சூட்சும பட்சி
வளர்பிறை இரவில் ஞா. செவ். களில் வாரமும் வெள்ளி யோகமும். திங். புதன். களி திதியும் சனி நட்சத்திரமும் வியாழன் கரணமும் பட்சிகளாகி தொழில் புரியும்.
பஞ்சபட்சி சாஸ்த்திர பதிவில் அடுத்தாக தேய்பிறையில் பஞ்ச பட்சிகளின் தொழில் முறை மூல அட்டவணை பார்ப்போம்..
வா. ஊ. சா. து. அ. ந. ( சூ)
------ ----- ------ ---- ---- ---- ------
தி/ச. ம. கா. வ. கோ. ஆ. ( சா)
ஞா/செ கோ. ஆ. ம. கா. வ. (து)
பு. கா. வ. கோ. ஆ. ம. (அ)
வி. ஆ. ம. கா. வ. கோ. (ந)
வெ. வ. கோ. ஆ. ம. கா. (ஊ)
இது தேய்பிறை பகலுக்கானது.
பஞ்சபட்சியில் தேய்பிறை இரவுக்கான மூல அட்டவணை.
வா. ஊ. து. . ந. சா. அ. சூ
------ ------ ----- ----- ------ ---- -----
தி/ச. கோ. கா. ஆ. வ. ம. ( து)
ஞா/செ. வ. ம. கோ. கா. ஆ. (ந)
வி. கா. ஆ. வ. ம. கோ. (சா)
வெ. ம. கோ. கா. ஆ. வ. (அ)
புத. ஆ. வ. ம. கோ. கா. (ஊ)
இது தேய்பிறை. இரவுக்கான மூல அட்டவணை . இதிலிருந்துதான் ஒவ்வொரு. நாளுக்கும் சாமத்திற்கும்பட்சிகளின் தொழில் அட்டவணை யை பிரிக்க வேண்டும்.
வளர்பிறை பகலில்
ஞாயிறு.செவ்வாய் நட்சத்திரப்பட்சியும்
வியாழன் வாரப்பட்சியும் சனிக்கிழமை திதிப்பட்சியும் திங்கள் புதனில் கரணமும் வெள்ளி யோகப்பட்சியும் சூட்சுமப்பட்சிகளாக. தொழில்நடத்தும்.
வளர்பிறை இரவில்
ஞா.. செவ். ..வாரபட்சியும் வெள்ளி யோகப்பட்சியும் திங். புதனில் திதிப்பட்சியும் சனி நட்சத்திரபட்சியும் வியாழன் கரணப்பட்சியும் சூட்சூமப்பட்சிகளாக செயல்படும்.
அடுத்து தேய்பிறை.
தேய்பிறை பகலில் திங் சனி திதியும். ஞாயிறு. செவ்வாயில் வாரமும் புதனில் நட்சத்திரமும் வியாழன் கரணமும் வெள்ளி யோகம்படசியும் சூட்சுமப்பட்சிகளாக செயல்படும்
தேய்பிறை இரவு திங்கள் சனி திதி யும் ஞாயிறுசெவ்வாய் கரணமும் வியாழன் வாரமும் வெள்ளி யோகமும் புதன் நட்சத்திமும் சூட்சுமபட்சிகளாகி செயல்படும்.
பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் மிக முக்கியமான ஒன்று திசைகள். அரசு திசை முழு பலம் வாய்ந்து. அதற்குக் கீழாக ஊன் திசையும் நடை திசையும் தலா 75சதவீதமும் 37சதமும் பலன் கொடுக்கும். துயில் சாவு திசை என்று குறித்த திசையில் காரியம் நடத்தும் போது துயரமமான பலன்களை கொடுக்கும்.
வளர் பிறைக்கும் தேய்பிறைக்கும் பட்சிகளின் திசைகளைப் பார்க்கலாம்.
பொதுவாக வளர்பிறைக்கு பார்ப்போம்.
வளர்பிறையில் வல்லூறுக்கு கிழக்கு. ஆந்தைக்கு தெற்கு. காகத்திற்கு மேற்கு. கோழிக்கு வடக்கு. மயிலுக்கு ஆகாயம்.
தேய்பிறைக்கு மயில் மேற்கு. கோழி தெற்கு. காகம் கிழக்கு. ஆந்தை வடக்கு வல்லூறு மத்திமம்.
இது பொதுவான திசைகள்தான். சூட்சும திசைகளைப் பயன்படுத்தினால் 100 சதம் வெற்றியடையலாம்.
வளர்பிறை பகல்
வல்லூறு.
--------------
ஊன்---கிழக்கு.. நடை---தெற்கு. அரசு ---மேற்கு... துயில்---வடக்கு. சாவு---வட கிழக்கு.
வளர் பிறை இரவுக்கு இதற்கு எதிர் திசையை நிரப்பவும்.
ஆந்தை
-------------
ஊன் ----தெற்கு.. நடை---மேற்கு..
அரசு --வடக்கு. துயில் ---கிழக்கு. சாவு----
தென்கிழக்கு. (வளர்பிறை இரவுக்கு சொல்லிய திசைக்கு எதிர்திசையை நிரப்பவும்.)
காகம்
----------
ஊன்---மேற்கு... நடை---வடக்கு... அரசு ----கிழக்கு.துயில்----தெற்கு.. சாவு--தென்மேற்கு....
கோழி
----------
ஊன் ---வடக்கு.... நடை---கிழக்கு... அரசு ---தெற்கு... துயில் ----தென்மேற்கு... சாவு---வடமேற்க்கு...
மயில்
--------
ஊன் ---வடக்கு. நடை----தென்கிழக்கு.. அரசு---மேற்கு... துயில ---வடமேற்கு.. சாவு---கிழக்கு...
வளர்பிறை இரவுக்கு எதிர்திசையை நிரப்ப வேண்டும்..
அடுத்ததாக தேய்பிறைக்கான திசைகளை பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..
இந்தப் பதிவில் தேய்பிறையில் பச்சிகளின் சூட்சும திசைகளைப் பார்ப்போம்.
தேய்பிறை பகலுக்கு
----------------------------------
வல்லூறு
---------------
ஊன்...... வடக்கு..
நடை..... தென்கிழக்கு.
அரசு....... தென்மேற்கு.
துயில்...... வடமேற்கு.
சாவு..... வடகிழக்கு.
ஆந்தை
--------------
ஊன்.......... வடகிழக்கு.
நடை........ தென்கிழக்கு.
அரசு....... தென்மேற்கு.
துயில்..... வட மேற்கு.
சாவு....... வடக்கு..
காகம்.....
----------
ஊன்...... கிழக்கு..
நடை.... ...தெற்கு.
அரசு....... மேற்கு.
துயில்.... வடமேற்கு.
சாவு....... வடகிழக்கு.
கோழி.
----------
ஊன்..... தெற்கு.
நடை...... தென்மேற்கு.
அரசு...... வடக்கு.
துயில்..... கிழக்கு.
சாவு..... தென்கிழக்கு.
மயில்.
-----------
ஊன்..... மேற்கு.
நடை...... வடக்கு.
அரசு...... கிழக்கு.
துயில்.... தெற்கு.
சாவு....... தென்மேற்கு.
தேய்பிறை இரவுக்கு எதிர்நிலையில் உள்ளதை நிரப்பிக்கொள்ளவும். நன்றி
தொடரும்.!!!!

Friday, 30 August 2024

சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்



 சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்

1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க
22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற
24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக
25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) முன் ஜென்ம பாவம் விலக
27 திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
28 திருப்பராய்துறை ( திருச்சி ) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29 திருநெடுங்களம் ( திருச்சி ) தீரா துயரம் தீர ( இடர் களைய )
30 திருவெறும்பூர் ( திருச்சி ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) யம பயம் விலக
32 திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33 திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34 திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
35 திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
36 திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
37 திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38 திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39 திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
41 திருவாலவாய் ( மதுரை ) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக
47 திருவேற்காடு வாணிப பாவம் விலக
48 திருமயிலாப்பூர் மூன்று தலைமுறை தோஷம் விலக
49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு ) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50 திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) ஞானம் கிடைக்க
52 திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
53 திருவூறால் ( தக்கோலம் ) உயிர்வதை செய்த பாவம் விலக
54 திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
55 திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
56 திருவதிகை நல் மனைவி அமைய
57 திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) தீரா பாவம் விலக
59 திருக்கருவூர் ( கரூர் ) பசுவதை செய்வதன் வழிபட
60 திருப்பாண்டிக் ( கொடுமுடி ) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61 திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) தேவ தோஷம் விலக
63 திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) குல சாபம் நீங்க
65 திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) கர்வத்தால் குரு துரோகம்
67 திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68 திருப்புறம்பயம் மரண பயம் விலக
69 திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
70 திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
71 திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72 திருவலஞ்சுழி வறுமை அகல
73 திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) நவகிரஹ தோஷம் விலக
75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77 திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு ) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
79 திருவன்னியூர் ( அன்னூர் ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80 திருநன்னலம் ( நன்னிலம் ) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82 திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
83 திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84 திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
85 திருக்கோளிலி ( திருக்குவளை ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86 திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87 திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
88 திருவெண்டுறை ( வண்டுறை ) வறுமையிலிருந்து விலக
89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) வினைகள் விலக
90 திருஆலங்குடி புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91 கொட்டாரம் அமைதி பெற
92 திட்டை சந்திர தோஷம் விலக
93 பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94 கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
95 ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
96 தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97 மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
98 உத்தரகோச மங்கை கர்மவினைகள் அல்ல
99 இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
100 காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
101 பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
102 இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
103 அவினாசியப்பர் ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104 குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
105 பவானி பித்ரு தோஷம் போக்க
106 ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
107 ஆடுதுறை திருஷ்டி தோஷம் விலக
108 சங்கரன்கோவில் சர்ப்ப தோஷம் விலக.

Wednesday, 21 August 2024

வாழ்க்கை...


 வாழ்க்கை...

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே..
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்❗
31. வாழ்வை கண்டு களி❗
32. ரசனையோடு வாழ்❗
33. வாழ்க்கை வாழ்வதற்கே❗
34. நான்கு நபர்களை புறக்கணி!
மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்
35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்
36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி
37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
சேவகன்
38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
பொறுமை
சாந்த குணம்
அறிவு
அன்பு
39. நான்கு நபர்களை வெறுக்காதே!
தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி
40. நான்கு விசயங்களை குறை!
உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு
41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்
42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்
43. நான்கு விசயங்கள் செய்!
தியானம், யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்

Friday, 16 August 2024

தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யமும் ஒரு காரணம்!


  

தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யமும் ஒரு காரணம்!
மாங்கல்யத்தில் மறைந்துள்ள ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
என்ன இது? திருமாங்கல்யம் கழுத்தில் இருந்தால்தானே, தம்பதியர் என்பதற்கு அர்த்தம்.
ஒரு கணவன், மனைவியுடைய பிரிவதற்கு திருமாங்கல்யம் எப்படி காரணமாக இருக்கும்! என்ற சந்தேகம் கட்டாயம், இந்த தலைப்பை படித்த ஒவ்வொருவருமே எழும்.
இன்றைய சூழ்நிலையில் திருமண பந்தத்தில் இணையும் கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் அதிகரித்து, வாக்குவாதம் அதிகரித்து, விவாகரத்தும், பிரிவும், நிம்மதியற்ற சூழ்நிலையும் அதிகரிக்க முக்கியமான காரணம் என்ன? என்பதை பற்றிதான் ஜோதிடரீதியாக, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நம்முடைய சாத்திரப்படி திருமாங்கல்யத்தை எதற்காக மஞ்சள் கயிரில் அணிகிறார்கள், என்பதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடப்படி கயிறு என்பது கேதுவின் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த கயிரை வைத்தான் திருமாங்கல்யம் கட்டுகின்றோம்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கேது தரக்கூடிய பிரச்சனைகளை சரி செய்பவர் ‘குரு’. குருவின் அம்சமாக சொல்லப்படுவது மஞ்சள்.ஆகவே, மஞ்சள் கயிறால் தாலியை அணிந்து கொண்டிருக்கும் பெண்களின் வாழ்க்கையும், அந்தப் பெண்ணை மணமுடித்த கணவரின் வாழ்க்கையும், சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
இன்றைய நாகரீகச் சூழலில், மஞ்சள் கயிறை மாற்றி, தங்த்தால் சரடு அணியும் வழக்கத்திற்கு நாம் வந்துவிட்டோம். காலத்திற்கு ஏற்ப தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. கண்கூடாக இது நாம் காணும் உண்மை தானே!
நம்முடைய திருமண வாழ்க்கையில் கேதுவால், ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்றால் அது குருவினால் மட்டுமே முடியும். இந்த இடத்தில் சில பேருக்கு கட்டாயம் சந்தேகம் எழும்? தங்கத்தால் தாலி சரடு அணிந்து இருபவர்கள் எல்லாருக்குமே இந்த பிரச்சினை வந்து விடுகிறதா?
தங்கத்தால், சரடு போட்டிருக்கும் பெண்களும் கணவரோடு ஒற்றுமையாக தான் உள்ளார்களே, என்ற கேள்வி கட்டாயம் நம்மில் பல பேருக்கு தோன்றும். அது இயற்கை தான்.
நன்றாக ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருடைய ஜாதக கட்டமும், நேரமும், காலமும், சரியாக இருக்கும் பட்சத்தில், எந்த தோஷமும் எந்த பிரச்சனையும், நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் பிரச்சினை எப்போது ஆரம்பிக்கிறதோ, கஷ்ட காலம் எப்போது தொடங்குகின்றது! அப்போது தான், அவர்களுக்கு சாஸ்திரத்தை மீறியதால் பிரச்சனை உண்டாகும்.
அந்த சமயத்தில் அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய பாதிப்புகள், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் அதிகமாக தான் இருக்கும்.‘அதற்காக, மஞ்சள் கயிறில், தாலி சரடை போட்டுக் கொண்டால், கணவன் மனைவிக்கிடையே பிரச்சினையே வராது’ என்பதும் அர்த்தமல்ல. பிரச்சனைகள் வந்தாலும், அதை அனுசரித்து செல்லக் கூடிய பக்குவம் அவர்களிடத்தில் ஏற்படும், என்பதை வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
முடிந்தவரை, சரடை தங்கத்தில் போட்டிருந்தாலும், உங்களது மாங்கல்ய குண்டுகளை மஞ்சள் கயிரால் கோர்த்து கட்டிக்கொள்வது இல்லற வாழ்க்கைக்கு மிகவும் நல்லது.
இதேபோல் திருமண நாள், ஆடிப்பெருக்கு, சுமங்கலி விரதம், போன்ற மங்களகரமான நாட்களில் கணவன், மனைவியின் திருமாங்கலத்திலும், நெற்றியிலும், நெற்றி வகுட்டிலும் குங்கும பொட்டு வைப்பது என்பது மிகவும் விசேஷமானது.
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் ஏதாவது மாங்கல்ய தோஷம் இருந்தாலும், கூட கணவன் திரும்பத்திரும்ப, மனைவியின் நெற்றியிலும், வகிட்டிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் வைப்பதுனாலும், வரலட்சுமி விரதத்தன்றும், ஆடிப்பெருக்கன்றும் மஞ்சள் கயிறை கணவன்மார்கள், மனைவியின் கழுத்தில் கட்டுவதினாலும், எப்பேர்பட்ட தோஷமும் நிவர்த்தி ஆகி விடும் என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே, தான் இப்படிப்பட்ட பூஜையின்போது மங்களகரமான குரு பகவானின் அம்சம் பொருந்திய மஞ்சள்கயிறுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் நம் முன்னோர்கள் வெறுமனே சொல்லிவிடவில்லை. எல்லாவித சாஸ்திர சம்பிரதாயங்களின் பின்னணியில் ஒரு அர்த்தம் உண்டு, என்றைக்கு நம் வாழ்வில் சாஸ்திர சம்பிரதாயங்களை மறந்து, இந்த உலகம் நாகரீகத்திற்கு மாறிக்கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டதோ, அன்றே நம் வாழ்க்கையில் பிரச்சனையும் ஆரம்பித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
நம் முன்னோர்கள் சொன்ன கூற்றை நம் மனதில் வைத்துக்கொண்டு, நம்முடைய திருமாங்கல்யத்தில், கட்டாயம் மஞ்சள் பூசப்பட்ட கயிறு இணைத்து, நம்முடைய திருமண வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்வது, நம் கையில்தான் உள்ளது

Monday, 5 August 2024

மதுரை மீனாட்சி அன்னைதெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?


 மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?

பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள்.
அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.
சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.
ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.
முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.
பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது.
மதுரையில் மீனாட்சி தினமும்
8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.
இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
அவை ..
திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி
ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் –
புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கெளரி
மத்யானத்தில் – சியாமளா
சாயரக்ஷையில் – மாதங்கி
அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி
பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி
அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.
காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் வெள்ளிக் கவசமும், வெள்ளிக் கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.
இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.
*ஒரேநாளில் புவனேஷ்வரி,
கௌரி,சியாமளா,
மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்*
*வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை*!
எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.
இரவு அர்த்த ஜாமத்தில்
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.
இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும்.
பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.
உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.
அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவர்.
அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.
மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும்.
அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது.
(மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)
இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.
அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும்
பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.
அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.
*மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்*
குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் கட்டாயம் காண வேண்டிய அன்னை மீனாட்சியின் தரிசனம்!
குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் .
வியாபாரத்தில் நஷ்டம் தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் காண வேண்டிய தரிசனம்.
வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்
வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…
இவையெல்லாவற்றையும்
விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை *புவனேஷ்வரி*,
*கௌரி*,
*சியாமளா*,
*மாதங்கி*,
*பஞ்சதசி* என எல்லா அலங்காரத்திலும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அம்மனுக்கு தங்க கிரீடம், சுவாமிக்கு வைர பட்டை பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் மட்டும் அணிவிக்கப்படும்.
வழக்கமாக அம்மன் சன்னதியில் குங்குமம்தான் பக்தர்களுக்கு தருவார்கள். பள்ளியறை பூஜையின் போது, சுவாமி பாதம் அம்மன் சன்னதிக்கு வந்த பின், குங்குமத்திற்கு பதில் திருநீறு தருவர்.
மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!!வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!!!
ஸ்ரீமீனாட்சி தாயே போற்றி!

Sunday, 4 August 2024

" தந்தைக்கு செய்யும் பணிவிடை"


 "தந்தைக்கு செய்யும் பணிவிடை"

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.
இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.
வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.
வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.
சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.
மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்
குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.
ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.
வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.
தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.
குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!
"ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டியது "

Saturday, 27 July 2024

திருப்பட்டூர் அற்புதங்கள்!


 திருப்பட்டூர் அற்புதங்கள்!

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.
2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.
3. இத்தலத்தில் 3001 அந்தணர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.
4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.
6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.
7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.
9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.
10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.
12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.
14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
15. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.
16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.
17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.
19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.
20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.
22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து
வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.
23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.
24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.
25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.
26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.
28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.
29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.
30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்

Friday, 26 July 2024

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்


 

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…
1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.
2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.
3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.
4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.
5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!
6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.
7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.
8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.
9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.
10 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
11 ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.
12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.
13 போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
14 எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.
15 நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!
16 நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.
17 வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு.
18 நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.
19 உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.
20 புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!
21 விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.
22 ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.
23 நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.
24அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.
25 கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

ஹோமங்களின் ரகசியம்


 96 வகையான ஷண்ணவதி

-------------------------------------------------
ஹோமங்களின் ரகசியம்
(1)சமித்துவகைகள் _13
(2)ஹோமதிரவியம் _45
(3) ரஸவர்க்கம். _8
(4) பழவர்க்கம். _7
(5) கிழங்கு வகையறா_5
(6) உலோகம் _2
(7) வாசனாதிரவியம் _5
(😎 அன்னவர்க்கம் _ 4
(9) பக்ஷ்யம். _5
(10) பட்டுவஸ்திரம் _1
(11) தாம்பூலம் _1
மொத்தம்_ (96)
இதன் விளக்கம்.
===============
(1) 13:சமித்து
-----------------------
அரசன், ஆல், அத்தி, முருங்கை, கருங்காலி, சந்தனம், மா, மூங்கில், வன்னி, வில்வம், எருக்கன், பலா, பாதிரி சமித்து மேற்கண்ட சமித்தை தவிர வேற எந்த சமித்தும் ஹோமத்தில் போடக்கூடாது...
(2) 45:ஹோம திரவியம்
---------------------------------------
அரிசி மாவு, மூங்கில் அரிசி, வெல்லம்,
பச்சை கற்பூரம், நாட்டுச்சக்கரை, சத்துமாவு, பேரிச்சை, வால்மிளகு, வலம்புரிக்காய், இடம்புரி காய், மாசிக்காய், நாயுருவி, சீந்தில்கொடி, நெல்லி வத்தல், வெள்ளறுகு, சுக்கு , ஜட மஞ்சரி, களிப்பாக்கு, ஓமம், அகில்_குகில், அதிமதுரம், செண்பக மொட்டு, வெட்டி வேர் , ரோஜா மொட்டு, கிராம்பு, கோரோஜனை, அவல், நெல்லு பொரி, கொப்பரை தேங்காய், குங்குமம், விரளிமஞ்சள், வங்காளமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், கோதுமை, காராமணி, துவரை, பயறு, கருப்பு கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, இந்த 45 பொருட்கள் மட்டுமே.....
(3) 8:ரஸ வர்க்கம்
-----------------------------
நெய், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், வெண்ணெய், சந்தனாதிதைலம்,
(4) 7:பழ வர்க்கம்
----------------------------
வில்வம் பழம், பலாபழம், திராட்சைபழம் ,
அன்னாசிபழம், மலைப்பழம், விளாம்பழம், மாம்பழம்.
(5) 5:கிழங்கு வகையறா
-------------------------------------------
சக்கரவள்ளி, சேப்பங்கிழங்கு,
கருணை கிழங்கு, தாமரை கிழங்கு நீலோத்பல கிழங்கு, கரும்பு
(6) 2:உலோகங்கள்
---------------------------------
ஸ்வர்ணம், வெள்ளி
(7) 5:வாசனாதிரவியம்
----------------------------------------
ஜாதிபத்திரி, ஜாதிக்காய், ஏலக்காய், புனுகு, ஜவ்வாது,
(😎 4:அன்னவர்க்கம்
-----------------------------------
சக்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம்
(9) 5:பக்ஷ்யம்
-------------------------
லட்டு, பாயசம், வடை, அப்பம், மோதகம்
(10) பட்டு வஸ்த்திரம்.
(11) தாம்பூலம்
மேற்கண்ட பொருட்கள் அனைத்து ஹோமத்திலும் அவசியம் பயன் படுத்த பட வேண்டியவை...
ஒருசில யாகத்தில் சில பொருட்கள் மாறும் ....
ஹோம நெறிகளை கடைபிடிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ‌நீங்கள் ஹோமம் செய்யும் பொழுது 54,108 ஹோம திரவிய பொட்டலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதில் உள்ளதில் பல பொருட்கள் பூஜைக்கு கிடையாது. தயவுசெய்து நீங்கள் செய்ய கூடிய பூஜை பயன்உள்ளதாக அமைய மேற்கண்ட பொருட்கள் பயன்படுத்துங்கள். 

தன்னைச்சுடும் – ஒரு குட்டிக் கதை


  

தன்னைச்சுடும் – ஒரு குட்டிக் கதை
ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!
முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!
கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!
பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!
கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!
காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
சிறிது நேரத்தில்....
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது !!
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!
அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!
நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!
‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...
அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!
‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .
அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.
‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!
இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!
இது தான் உலகநியதி !!
நாம் எதைத் தருகிறோமோ
அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...
தீமையை தந்தால் தீமை வரும் !!
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,
ஆனா....
நிச்சயம் வரும் !!
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்...

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...