மனம் ஒரு குரங்கு..
Thursday, 27 May 2021
ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து...
மனிதன் 1: இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லா செல்வங்களோடு வைத்திருக்கிறான். ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்குத் தந்ததில்லை" என்று சலித்துக் கொண்டான்.
மனிதன் 2: நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு".
மனிதன் 1: இல்லை முடியாது .
மனிதன் 2: 10 லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1: இல்லை முடியாது .
மனிதன் 2: நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன். உனது இரு கண்களையும் எனக்குத் தந்துவிடு .
மனிதன் 1: நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களைக் கொடுத்தாலும் என் கண்களைக் கொடுக்க முடியவே முடியாது .
மனிதன் 2: இறைவன் உனக்கு எவ்வளவு விலையுயர்ந்த செல்வங்களைத் தந்திருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல், இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை என்று சலிக்கின்றாயே?
எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.
அவன் தான் இறைவன்
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.
உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.
இறைவன் சிலரை
வறுமையால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரை
நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரைக்
கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.
ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்" .
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.
இறைவனுக்கு நன்றி செலுத்து.
நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்து.
நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்" .
இறைவனுக்கு நன்றி செலுத்து.
நீ உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய்.
எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்" .
இறைவனுக்கு நன்றி செலுத்து.
நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய். எத்தனையோ மரித்த ஆத்துமாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் ".
இறைவனுக்கு நன்றி செலுத்து.
நீ நீயாக இருக்கின்றாய். எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்" .
இறைவனுக்கு நன்றி செலுத்து.
எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வி .
இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இரு.
பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது.
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்
(இந்த சம்பவம் உண்மை சம்பவமோ அல்லது ஒருவரின் கற்பனையோ. ஆனால் தெளிவு படுத்தியது பொருள் பொதிந்த உண்மை. ஆம் பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! நல்லதே நடக்கும்!
உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.
வழியில் பெரும் பனிப்புயல். ..!
அவரால் காரை ஓட்ட முடியவில்லை…
கஷ்ட்டப்பட்டு காரை செலுத்தி கொண்டிருந்த டாக்டர், ஒருவாறு ஒரு கிராமத்தை தாண்டிய போது, ஒரு இடத்தில் சாலை ,பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..!
வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால் தூர வீசப்பட்டிருக்கவே.டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல் குழப்பம்!
பின் ஒருவாறு தெளிந்து , தாமாகவே ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய், தனக்கு தோன்றிய ஒரு வழியில் காரை செலுத்த துவங்கினார் அவர் !
ஆனால் , அந்த வழியோ , ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது! சோதனையாக, இப்போது முன்பை விட மிக அதிகமாக புயல் வீசவே டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை …!
இரு பக்கமும் அடர்ந்த மரங்களாக இருந்ததால், ஒதுங்க எந்த இடமும் இல்லை.!
கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரு கட்டிடமோ, வீடோ தென்படாத நிலையில்,
சிந்தனையுடன் மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்த டாக்டரின் கண்களில் , சற்று தொலைவில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட உற்சாகத்துடன் அந்த வீட்டை நோக்கி காரை செலுத்திய அவர், பின் ஒரு வழியாய் அந்த வீட்டை அடைந்து .. பின்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் கதவை தட்டினார்…..!
மறுகணம், ஒரு இளம் பெண் கதவை திறந்தாள்!! அவர் இருந்த நிலையை பார்த்து , உள்ளே அழைத்து , அவரை அந்த சிறிய கூடத்தில் அமரச் சொல்லி விட்டு , பின் பரபரப்புடன் உள்ளே சென்றாள் அந்த இளம் பெண்….
மிக, மிக சிறிய அளவிலான வீடு!
அங்கு யாரும் இல்லாததால், …
வீடு வெகு நிசப்தமாக இருந்தது!
டாக்டர் அமர்ந்து கொண்டிருந்த அந்த நாற்காலியை தவிர , வேறு எந்த ஒரு பொருளும் அங்கு காணப்படவில்லை ! அந்த அளவுக்கு ஏழ்மை , அந்த வீட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தது! அந்த சிறிய கூடத்தின் ஒரு ஓரத்தில்,
குழந்தை ஒன்று தூளியில் தூங்கி கொண்டிருந்தது….!
சற்றைக்கெல்லாம் அந்த பெண் , சூடான தேநீர் கோப்பையோடு வெளியே வந்தவள், அன்போடு அவருக்கு அதை கொடுத்து அருந்த சொன்னாள்….
.
பின், பேச்சினூடே , அந்த பெண், அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும்….அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், அவர் செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினாள் ….
பின் , அவரை பார்த்து கனிவுடன் ,” பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். ! நான் prayer செய்து விட்டு வருகிறேன் ” என்று கூறிவிட்டு ….
அந்த சிறிய கூடத்தின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி , கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு , வெகு நேரம் பிரார்த்தித்து விட்டு,பின்,அவருக்கெதிரே தரையில் அமர்ந்து கொண்டாள்…
” என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? ” டாக்டர் அவளிடம் இயல்பாய் கேட்க
பதிலுக்கு அப்பெண் கண்ணீர் மல்க ,தூளியில் தூங்கி கொண்டிருந்த தன் குழந்தையை காட்டி,
” அதோ தூளியில் தூங்கி கொண்டிருக்கிறானே, அவன் என் மகன்! அவனுக்கு வயது இரண்டு! அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை..! …Brain nerves சரியாக வேலை செய்யவில்லை….. ! இதை சரி செய்வதென்றால் , ஒரே ஒருவரால்தான் முடியுமாம்…… ! ஆனாலும் , அந்த சிகிச்சைக்கு ஏகப்பட்ட பணம் செலவாகும் என்கிறார்கள்……! என்னிடம் இப்போது அத்தனை பணம் கிடையாது…! ஹூம்….இப்போது நானிருக்கும் இந்த ஏழ்மை நிலையில் , கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை ‘”
கண்ணீரை துடைத்தவாறு தலையை குனிந்து கொண்டாள் அவள்……. .
அவளை பார்க்க பரிதாபமாகயிருந்தது டாக்டருக்கு..பின் மெல்லிய குரலில் அவளை பார்த்து , ” அம்மணி …யார் அந்த டாக்டர்? ” இயல்பாக கேட்டார்
அவர்…” புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் ! “
அவள் பதிலை கேட்ட டாக்டர் அதிர்ந்து போய் , அவரையுமறியாமல், நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார். ….!காரணம் ,
….அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்…..!!
அந்த ஏழை பெண்ணின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையே , இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு காரணம் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார் அவர்! ..
பின் அங்கே நடந்தது தான் அதிசயமோ அதிசயம்! . …!
ஆம் …!
உடனடியாக , அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே க்ளினிக்குக்கு அழைத்து சென்று , தகுந்த மருத்துவம் செய்து , அந்த குழந்தையை காப்பாற்றினார் அந்த டாக்டர் ..!
ஆக,பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. …!
நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்….!
நாம் அனைவரும் ஒன்றிணைந்து , அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியே, ஒருமித்த மனதுடன் பிரார்த்தனை செய்து , உலகை உய்ய வைப்போம்.
கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!
நல்லதே நடக்கும்!
திருஷ்டி சுற்றி போடுதல்
திருஷ்டி சுற்றி போடுதல்
. கற்பூரம் ஏற்றுதல்: கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். 2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும். 3. உப்பு சுற்றி போடுதல்: கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை. 4. படிகாரம் சுற்றுதல்: மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம். 5. கருப்பு வளையல் பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம். 6.மண் : சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. 7. எலுமிச்சை குங்குமம்: சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம். 8. பூசணிக்காய் உடைத்தல் பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 9. தேங்காய் உடைத்தல் ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 10. ஆரத்தி கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும். பட்சி திருஷ்டி குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும் இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் "தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி ....." என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்கவேண்டும்.. தான் உபதேசம் பெற்ற திருஷ்டி மந்திரத்தின் சக்தியை அதிகரிக்க அவற்றை கிரஹண சமயத்தில் நீர்நிலைகளில் நின்றுகொண்டு ஜெபிக்க அவர்களுக்கு அந்த மந்திரத்தின் சக்தி கூடும் என்பதும் ஒரு நம்பிக்கை. . சீமந்த புத்திரன் அல்லது புத்திரி திருஷ்டி சுற்றி போட்டால் பலன் அதிகம் என்றும் கூறுவார்கள். வெளிநாட்டினர் கூட திருஷ்டி படாமலிருக்கட்டும் என்பதற்காக மரத்தை தொடுவார்களாம் "டச் வுட் " என்று கூறிக்கொண்டு. பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதைவிட என்ன சான்று வேண்டும் இவை உண்மை என்பதற்க்கு
ஒரு ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன,
ஆனால் ஒரு யானை மிகவும்
* சக்திவாய்ந்த,
* கீழ்ப்படிதலான,
* விவேகமான மற்றும்
* சண்டை திறன்களில் திறமையானது.
பல போர்களில்,
போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும்.
எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது .
நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது.
இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை.
எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது.
ஒரு நாள் யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது.
ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது .
அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை.
யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர்.
யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது. ராஜா உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை.
கவுதம புத்தர் அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கவுதம புத்தர் முதலில் சம்பவ இடத்தைப் பரிசோதித்தார், பின்னர் ஏரியைச் சுற்றி போர் முரசு இசைக்க வேண்டும் என்று ராஜாவுக்கு பரிந்துரைத்தார்.
சேற்றில் சிக்கிய யானை, முரசு வாசிப்பதன் மூலம் எப்படி சேற்றில் இருந்து வெளியே வரும் என்று, வினோதமாக அனைவரும் பார்த்தார்கள்.
போர் முரசு ஒலிக்கத் தொடங்கியவுடன்,
அந்த யானையின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டது.
முதலில் யானை மெதுவாக எழுந்து நின்று,பின்னர் சேற்றில் இருந்து தானாகவே வெளியே வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கவுதம புத்தர் செயலிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது :
🥁 யானையின் உடல் பலம் குறைந்து விட இல்லை, அதற்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டிய அவசியம் மட்டுமே இருந்தது.
🥁 மேலும் மனிதர்கள் வாழ்க்கையில் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சிறந்த குறிக்கோள், அதற்குரிய சிந்தனை மற்றும் மனநிலையையும் பராமரிக்க வேண்டியது அவசியம்.
மேலும் எந்த சூழலிலும் விரக்தி அடைய கூடாது *
இந்த சவாலான காலத்தில் நாம் அனைவரும், நம்மையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் நம்பிக்கையுடனும், உற்சாகப்படுத்தும் படியும் பேச வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்(போர் முரசு கொட்டுவது போல் )
வரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை பெற்று வாழ்க்கையை கொண்டாடுவோம் !
விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை
விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை
புதன் என்பது புத்தி, பேச்சு, கல்வி, கருத்து, பேச்சுவார்த்தை, இராஜதந்திர திறன் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றின் கிரகம்.
புதன் என்பது புத்தி, பேச்சு, கல்வி, கருத்து, பேச்சுவார்த்தை, இராஜதந்திர திறன் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றின் கிரகம்.
வேத நூல்களில் சொல்லப்பட்ட ஆதார சக்கரங்கள்
வேத நூல்களில் சொல்லப்பட்ட ஆதார சக்கரங்கள்
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு
குங்குமத்தில் உள்ள ரகசியம்
குங்குமத்தில் உள்ள ரகசியம்
#உங்கள்_நட்சத்திர #கடவுள்_மரங்கள்_பாடல்கள்..!!
#உங்கள்_நட்சத்திர #கடவுள்_மரங்கள்_பாடல்கள்..!!
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம்
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம்
பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.* 90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள். விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு. அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம். அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்.! பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்., முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.
Saturday, 8 May 2021
ஒரு குட்டி கதை..அவரவர் வினைப்பயன்!.
ஒரு குட்டி கதை... அவரவர் வினைப்பயன்!
ஒரு காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப் பெண், தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள்.
வெகு நாட்களாக இத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு இல்லாமல், பல விரதங்கள் அனுஷ்டித்து ஒரு குழந்தைப் பிறந்தது.
அந்தக் குழந்தையை இருவரும் சீராட்டி வளர்த்து வந்தனர். அந்த ஐந்து வயது பாலகனை உணவூட்டி உறங்க வைத்து விட்டு, நீர் எடுத்து வர அருவிக்குச் சென்றாள் அப்பெண், தன் குடிலுக்குத் திரும்பியவள் திடுக்கிட்டாள்.
அவளுடைய பாலகனை ஒரு நாகம் தீண்ட, விஷம் ஏறி உயிருக்கு மன்றாடுகிறான்.
தரையில் விழுந்து அழுது புலம்புகிறாள் அவள்.
கூக்குரல் கேட்டு ஓடி வருகிறான் கணவன், விஷயமறிந்து, அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து அந்தப் பாம்பைப் பற்றி சுபத்ரையிடம் இழுத்து வந்தான்.
சுபத்ரை, நம் குழந்தையை தீண்டிய இப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? என்கிறான் வேடன்.
இந்தப் பாம்பைக் கொன்று விட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா? எனக் கேட்கிறாள் சுபத்ரை.
இப்பாம்பைக் கொல்லா விட்டால் மாத்திரம் நம் குழந்தை உயிர்த்தெழுமா? என்கிறான் கணவன்.
இந்தப் பாம்பைக் கொன்று விட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல் போகுமா? பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது.
ஆனால், துஷ்ட பிராணிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் அல்லவா?
இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசியது;
மூடா! அவள் என்னைக் கொல்ல வேண்டாம் என்கிறாள்.
நீ கொல்வேன் என்று அடம் பிடிக்கிறாய். நன்றாக யோசித்துப்பார்.
இங்கு நீ, உன் மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள்.
நான் தீண்டிக் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ கொன்றிருக்கலாம்.
உங்கள் குழந்தையை மட்டும் தானே தீண்டினேன். அதுவும் என்னை ம்ருத்யு தேவதை ஏவியதால் தான் குழந்தையை கடிக்க வேண்டியதாயிற்று.
இதில் என் தவறு எதுவுமில்லை என்றது.
யார் அந்த ம்ருத்யு? என்றான் வேடன். ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்றினான்.
குழந்தை இறப்புக்கு நீயா காரணம்? என்றான் வேடுவன்.
நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான்.
பாம்பை ஏவி இந்தக் குழந்தையை கடிக்கச் செய்தேன் என்றான் ம்ருத்யு தேவதை.
காலன் என்பவன் யார்? என வேடுவன் கேட்க, யமதர்மன் அவன் முன் தோன்றினான்.
இந்தக் குழந்தை இறக்க நீதான் காரணமா? நான் காரணமில்லை, என்னை
பகவான் ஏவினார்..
நான் ம்ருத்யு தேவதையை ஏவினேன். ம்ருத்யு தேவதை பாம்பை ஏவினான்.
குழந்தையைக் கடித்தது என்றான் யமதர்மன்.
உன்னை ஏவிய அந்த பகவான் யார்?
ஸ்ரீமந் நாராயணன் அந்த வேடுவனுக்குக் காட்சியளித்தான்.
எல்லாற்றுக்கும் காரணம் நீதானா? என்றான் வேடுவன்.
பகவான் கூறுகிறார்; மண்ணில் பிறந்த ஒவ்வொரு வரும் இறக்க வேண்டும் என்பதே விதி.
கடித்து உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி.
அது நிர்ணயமானதால் நானே நடத்தி வைத்தேன்.
எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள்.
நான் நம்ப மாட்டேன். என்று குழந்தையைக் கடித்த இந்தப் பாம்பை வெட்டியே தீருவேன் என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்க தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன்.
வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் வேறொரு பாம்பு புகுந்து இருந்து.
அது அவனைத் தீண்டி விட்டது. உடனே அவன் வாயில் நுரை தள்ளி, மயங்கி கீழே விழுந்தான்.
இதைச் சற்றும் எதிர் பார்க்காத அவன் மனைவி உடனடியாக காட்டுக்குள் சென்று மூலிகையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில் சாற்றை ஊற்றினாள்.
வேடுவன் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து பிழைத்துக் கொண்டான்.
இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர்.
பகவான் சொன்னார்; எந்தப் பாம்பு கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும் என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி. அப்படியிருந்தும் தன் குழந்தை பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு ஏன் அந்த ஞானம் வரவில்லை?
குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை?
ஆனால் உன்னைக் காப்பாற்றி விட்டாள்.
அதற்கு என்ன? காரணம்?
கடித்து பிழைக்க வேண்டும் என்பது உன் விதி.
கடித்து இறக்க வேண்டும் என்பது உன் குழந்தையின் விதி.
அது அவரவர் வினைப்பயன்தான் என்றார்.
பரமாத்மா கூறியது எத்தகைய சத்தியம்..
Thursday, 29 April 2021
வில்வத்தின் பயன்களும் மருத்துவ குணங்களும்
வில்வத்தின் பயன்களும் மருத்துவ குணங்களும்
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்
சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.
வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்
ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்
வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்
தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு
மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்
வில்வ வழிபாடும் பயன்களும்
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்
வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்
எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன
வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்
அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது
சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிமை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்
அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்
ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்
வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்
ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது
நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.
மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது
ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ
்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்
வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்
மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே
பொருள் விளக்கம்
போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.
வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்
இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.
வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.
கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
விரிவான மருத்துவக் குணங்கள்:
வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.
கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.
கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும்.
இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.
பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
வேர் நோய் நீக்கி உடல் தோற்றம், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தோற்றம். பழ ஓடு காச்சல் போக்கும்.
தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும்.
வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஜன்னி ஜுரங்களைப் போக்கும்.இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் குணமாக்கும் ஆற்றல் உடையது
வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.
இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.
வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.
வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.
வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.
வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர சகல நோய்களும் குணமாகும்
இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரனாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம் மேலும் சிவபெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்.
வில்வ மரத்தை வீட்டில்_வளர்க்கலாம்; வளர்க்கக் கூடாது_என்பதற்கு_இரண்டு_காரணங்கள்_உண்டு_அதற்கான ஒரு_விளக்க_கண்ணோட்டம்*....
1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே போகக் கூடாது.
2)பொதுவாக, வில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும். அதனாலேயும் பயப்படுவர்கள். ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில், மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது.
எனவே, "யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்."
இனிய
சிவனுக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.
வில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்கள் உள்ளன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு வில்வத்திலும் மும்மூர்த்திகள் நித்தியவாசம் செய்வதாக ஐதீகம்.
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயமாவதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.
வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் சிறப்பினைத் தரும்.
வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.
தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை,
வில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.
வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும்.
வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது.
சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.
ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.
இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை. இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று
தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யாகத்திற்கு
பயன்படுத்துவார்கள்.
வடநூலார் இதை ஸ்ரீபலம் (மகாலட்சமி ரூபம்) என்று புகழ்வர்.
இந்த பழத்தால் யாகம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும். யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத்தருவார்.
மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஓமப் பொருட்களில் வில்வப்பழமும் ஒன்றாகிறது.
வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது பெரிதாகி கனி கொடுத்த பிறகே பூஜை செய்த அதன் இலைகள் அருகதை உடையது. ஆனால் வளரும் செடியை பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத்தொடங்கும்.
படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும்.
இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.
வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்
சமீப காலங்களில் வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது. சிவலிங்கம் வீட்டில் பூஜிக்கக்கூடாது என்று விரும்பியபடி
பேசி வருகின்றனர். வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.
பார்ச்சூன் ட்ரீ எனப்படும் அதிர்ஷ்ட வில்வமரத்தை விதையிட்டு வளர்த்து பூஜை செய்வதால் கடன் தொல்லைகள் அகன்று செல்வம்
அதிகமாகும்.
ஒரு பூத்தொட்டியில் பசும் சாணம் மண் கலந்து மூன்று நாட்கள் விதையை உள்ளே வைத்து அமாவாசை தினத்தில் எடுத்து ஈர மண்ணில் புதைக்க வேண்டும்.
45 நாட்கள் காத்திருந்தால் விதை முளைத்து வெளிவரும். விதை எல்லோரும் போடலாம்.சிலருக்கே அது முளைக்கும் யோகம் வரும். விதை
முளைத்து வந்ததும் உரமிட்டு வளர்த்து பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு,தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கினால் வளமே பெருகும்.
இவைகள் தான் எனக்கு தெரிந்த தகவல்கள். மேலும் பல நன்மைகள் உண்டு..
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ
சிவாய நம
சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)
நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!
நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...
-
எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/ குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
-
ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ ஆனந்தாய்பேச்சியம்மன் (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...




