ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Saturday, 13 October 2018

வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு கர்மவீரர் காமராசர் சென்றார்

               வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு கர்மவீரர் காமராசர் சென்றார்



அந்த விருந்தை அளித்த பணக்காரரின் உணவு மேஜையில் பலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான் என வகைவகையாக இருந்தன.
.
"நான் தினம் ஒரு தட்டு வீதம் 30 நாளைக்கு 30 தட்டில் சாப்பிடுவேன்' என்றார் அந்தப் பணக்காரர்.
.
"எங்கள் நாட்டில் சிறு கிராமத்தில் இருக்கும் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுமுறை சாப்பிட மாட்டான்' என்றார் காமராசர் .
..
பணக்காரர் உட்பட அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக, "எப்படி?' என்று கேட்டனர்.
...
"அது வாழை இலை' என்றாராம்.

இன்று எந்த அசைவ உணவகத்துக்கு சென்றாலும், மற்ற மாமிசங்கள் விற்கும் இடங்களுக்கு சென்றாலும், ஒரு அறிவிப்பு பலகையை பார்த்து இருப்பீர்கள். " ஹலால் செய்யப்பட்டது" என்று!
"ஹலால்" ஹிந்து மதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
ஹிந்துக்களின் புலால் உண்ணும் முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.
"ஹலால்" இஸ்லாமியர்களுக்கானது .
சிறிது விளக்குகிறேன்
"ஹலால்" என்றால் என்ன? ஒரு விலங்கை, அதன் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து, அதன் ரத்தம் முழுக்க வடிந்து அதனை இறக்க விடுவது! இந்த முறையில் கொல்லப்படும் விலங்கு உடனே சாகாது. அது மரண அவஸ்தையை முழுமையாக அனுபவித்து, துடித்து துடித்து சாகும். அதற்கு வலி தெரிய வேண்டும் என்பதற்காக தண்டுவடத்தை அறுபடாமல் பார்த்துக்கொள்வர். அவ்வாறு அறுக்கப்படும் பொழுது ஒரு இஸ்லாமியர் குரான் ஓதுவார். கிராம புறங்களில் முஸ்லிம்கள் இதனை " ஓதி அறுப்பது" என்பார்கள்.
ஹிந்து மதம் அஹிம்சை விரும்பும் மதம். சைவம் . புலால் உணவும் மறுக்கப்படவில்லை.
ஆனால் ஹிந்து மதத்தில் வலி ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள படாத ஒன்று. கோயில்களில் பலி கொடுக்கும் போது கூட ஒரே வெட்டில் விலங்கை கொன்று விட வேண்டும் என்பது தான் முறை. அதாவது அந்த விலங்கிற்கு தான் வெட்டப்பட்ட வலி தெரிவதற்கு முன்பே மரணம் எட்டி விடும். ஓங்கி வெட்டும் போது முதலில் தண்டுவடம் வெட்டுப்படும்படி பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடி, மற்றும் வலி இல்லா மரணம். இந்த முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.
சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் சீக்கியர்களுக்கு ஹிந்து முறையான "ஜட்கா" மாமிசத்தை மட்டுமே உண்ண வலியுறுத்தி உள்ளபடியால் பஞ்சாப் மாநிலத்தில் எல்லா கடைகளிலும் " ஜட்கா" மாமிசம் என்ற பலகை இருக்கும்.
ஒரு முஸ்லீம், அது ஹலால் செய்யப்பட்டதா என்று தெரியா விட்டால் அசைவம் சாப்பிட மாட்டார். ஆனால் ஹிந்துக்கள் ஹலால் செய்யப்பட்டது என்று தெரிந்தாலும் சாப்பிடும் நிலை.
ஒரு முஸ்லீம் , இந்து சாமிக்கு படைத்த ஒரு லட்டுவை ஒரு கோடி கொடுத்தாலும் தின்ன மாட்டார் . ஆனால் ஹிந்துக்கள் குரான் ஓதி அறுத்த மாமிசத்தை சாப்பிட தயாராகவே உள்ளனர்.
இதனால் தானே பத்து சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்காக தொண்ணூறு சதவிகிதம் ஹிந்துக்களுக்கும் ஹலால் உணவை கொடுக்கிறார்கள்.
" ஜட்கா" மாமிசம் இல்லை என்று தெரிந்தால் ஒரு ஹிந்து வாங்காமல் திரும்ப வரும் நாள் வரும் போது, எந்த கடையிலும் பெருமையுடன் "ஹலால்" பலகை தொங்காது.
ஆதலால் தயவுசெய்து உயிர்களை துடிதுடிக்க கொன்று ஊன் உண்ணுவதை இன்றே.. இப்போதே.. கைவிடுங்கள்.. 😐🙏இயலாவிட்டால்... 😑

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
குறள் விளக்கம்:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
திருக்குறள்
ஜீவகாருண்யமே மோட்ச சாம்ராஜ்ய அடையும் ஒரே மார்க்க வழி..
at October 13, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...

                                            சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...


 ``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.
ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’
அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’
மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’
அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். 
at October 13, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

நவராத்திரி நாயகி சரஸ்வதி*

                                                   நவராத்திரி நாயகி சரஸ்வதி*

 *சரஸ்வதி:* புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதி காரணி என இவளைப் போற்றுகிறது.
சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.
இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார்.
காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.
வந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார்.
தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள்.
ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் பிப்பலாதன் என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான்
வளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான்.
தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார் நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன்.
இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு.
நெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர்.
தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்: தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள். என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது.
ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது? அதை எப்படி அழிப்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும். எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.
சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்
சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் கொண்டுள்ளனர்
கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.
இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய வஸ்திரங்கள்
ஆடையை நாம் இறைவனுக்குச் சூட்டி வழிபடும்போது, அவனது திருவருள் கிடைக்கப் பெற்று பாவங்கள் நீங்கி மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம்.சிவன், திருமாலுக்குத் தூய வெண்மை நிறமுடைய பட்டாடை, அம்பாளுக்கு சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறப் புடவைகளைச் சூட்டி வழிபட்டால் சிறக்கலாம். நாட்டில் தவறாமல் மழை பெய்து, செழிப்பு ஏற்படவும் இறைவனுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.
ஏழை மக்களால் இறைவனுக்கு காணிக்கை ஏதும் படைக்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். இந்த ஆதங்கத்தை மனதைவிட்டு முதலில் ஒழிக்க வேண்டும். இதை ஒழித்தாலே செல்வ வளம் பெருகி விடும் என்பது நம்பிக்கை. ஆண்டவனை வணங்க உதிரிப்பூவும், தண்ணீரும் போதும்.
இதைக் கோயிலில் கொண்டு கொடுத்தாலே இறைவனின் அருள் கிடைத்துவிடும். வீட்டில் சுவாமியை வணங்கும் போதும் மிகப்பெரிய படையலைப் படைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படங்களில் பெரிய மாலைகளை மாட்ட வேண்டும் என எண்ண வேண்டாம்.
சிறிது பூவைத் தூவி, தண்ணீரை படத்தின் கீழே லேசாக தெளித்தாலே போதும். இறைவன் அன்பை மட்டுமே விரும்புகிறான். நமது பொருட்கள் அவனுக்குத் தேவைப்படுவதில்லை. பூவைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்து,எமனையே வென்றவன் மார்க்கண்டேயன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
கல்வி தெய்வமான சரஸ்வதியின் பொருள்
சரஸ் என்றால் பொய்கை . வதி என்றால் வாழ்பவள். சரஸ்வதி என்றால் மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பது பொருள். இவளை கலைமகள், நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞானவடிவு, பனுவலாட்டி, பிராஹ்மி, பூரவாஹினி, அயன்மனைவி, வெண்தாமரையாள், சாவித்திரி வாக்தேவி என்ற பெயர்கள் சூட்டியும் அழைப்பர்.
கல்விவளம் தரும் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்துகிறார்கள். அதுபோல சரஸ்வதிக்கு வெண்தாமரை மலர் மாலை ஏற்றது. வெண்ணிறத்தில் உள்ள மல்லிகை, முல்லையும் அணியலாம்.
at October 13, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்.*

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்.*

 ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும். வாங்க பார்க்கலாம்
_*நமஸ்காரம்:*_
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.
_*மெட்டி:*_
திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.
_*பொட்டு:*_
ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ளல ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும்.
_*கோவில் மணிகள்:*_
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.
_*துளசியை வழிபடுதல்:*_
இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.
_*அரசமரம்:*_
பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.
_*உணவருந்திய பின் இனிப்பு உண்ணுது:*_
இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
_*கைகளில் மருதாணி வைப்பது:*_
அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.
_*தரையில் அமர்ந்து உண்ணுவது:*_
நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்
காலையில் சூரியனை வழிபடுதல்:-
விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.
_*கோவிலை வலம் வாருங்கள்:*_
உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையல் சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும், வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன, பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள், புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும். வாட்சப் பகிர்வு
ஓ...ம்
at October 13, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 12 October 2018

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

                                                           விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ? கேட்கமாட்டீர்கள் ...
மதம் மாற்றிவிட்டால்.......
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!
“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?
தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.
அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.
எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.
சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.
நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.
பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.
ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.
ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்
மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.
ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.
எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.
ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.
மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.
இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.
அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.
இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.
குறிப்பு:-
மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.
ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.
மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.
விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
at October 12, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, 11 October 2018

சனாதன தர்மம்

                                                                 சனாதன தர்மம்

 அடுத்து, பித்ரு யக்ஞம் என்ற இந்த வழிபாடு, அனைவராலும், மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யப்படுகின்றது.
இந்த, சிரார்த்தம் (திதி), மற்றும் தர்பணத்தை ஒவ்வொரு குடும்பத்தாரும் செய்ய விரும்புவது அவர்களது பெற்றோர்கள் நற்கதியை அடைய வேண்டும், அவர்களது ஆசிர்வாதம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற சுய நல எண்ணமும் காரணம் ஆகும். இருப்பினும், இந்த சுய நலத்தின் வாயிலாக, பித்ருக்களுக்கு படையல் போட்டு வழிபட்ட உணவை, காகம், பசு போன்ற ஜீவர்களுக்கு கொடுப்பதின் மூலமாக, அது பொது நலமாக மாறியும் விடுகின்றது.

பித்ருக்கள் என்றால் நம் முன்னோர்கள் என்று பொருள். அவர்கள் இந்த உடலை விட்டு இறந்து இறைவனடி சேராதவர்கள் ஆகின்றார்கள். ஆம்!. ஒரு ஜீவன் இறைவனடி சேர்ந்து விட்டால், அது மீண்டும் பிறப்பிற்கு வராது.
இந்த பித்ருக்களான நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலோ, அல்லது வேறு லோகங்களிலோ விடுதலை அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு கிடைத்த அரிதான மானிடப் பிறவியை சரியாகப் பயன் படுத்தி பரமா(ஆ)த்மாவை அறியாமல், தேகத்தை விட்டவர்கள் ஆவார்கள்.
அவர்கள் தெய்வங்கள் என்று நம்மால் அழைக்கப்பட்டாலும், உண்மையில் அவர்கள் தெய்வமாக ஆகிவிடவில்லை. அவர்கள் தெற்கிலே உள்ள பித்ரு லோகத்தில் இருந்து வடக்கே உள்ள பிரம்ம லோகத்திற்கு கொண்டுவந்து அங்கு கிரம முக்தியை அடைய வைக்கும் முயற்சிதான் நாம் அவர்களுக்கு செய்கின்ற தர்பணம், சிரார்த்தம் மற்றும் திதி போன்றவைகளாகும்.
இந்த முன்னோர்களின் பித்ருக்கடன் என்ற காரியத்தின் மூலமாக, நாம் அவர்களுக்கு நன்றிக் கடனை திருப்பி செலுத்துகின்றோம்.
எப்படியென்றால், உடல் கிடைக்க காரணமான தந்தையிடமிருந்து அணுவாக வெளிப்பட்டு, அந்த உடலை பாதுகாப்பாக, பேணிக்காத்து வெளியே கொண்டு வரும் வரை நாம் தாயின் வயிற்றில் இருந்து கொண்டு, அவர்கள் உண்ணும் உணவு, நீர், காற்று என்று அனைத்திலும் அவருடன் பங்கிட்டு இந்த உடலை 10 மாதங்கள் பாதுகாப்பாக தாயிடமிருந்து வெளியே கொண்டு வந்து இருக்கின்றோம்.
இவ்வாறு உடல் எடுத்து இந்த பூமிக்கு வர பெற்றோர் உதவி புரிந்துள்ளனர்.
அதனால்தான் நாம் பிறக்க முடிந்தது.
இவ்வாறு அவர்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
அதனால் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நாம் பேணிக்காத்து, பாதுகாப்பாக, அவர்கள் நம்மை அரவணைத்து வளர்த்தது போன்றே, நாமும் அவர்களை அரவணைத்து, ஆதரித்து, அவர்கள் இந்த உடலை விட்டு விட்டு சென்ற பிறகும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இல்லறத்தானின் கடமைகளில் ஒன்றாக இந்த “பித்ருக்கடன்” செய்கின்றோம்.
பித்ருக்கள் வழிபாடு என்பது, அவர்களை நினைத்து அடையாளப்படுத்தும் வகையில், அவர் பெயரால், மற்ற ஜீவராசிகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் சிறந்த உணவும், புத்தாடையும் கொடுத்து உதவுதல் ஆகும்.
இதனையே சாஸ்திரம் “அறம்” என்று கூறுகின்றது.
இந்த அறச்செயல்கள் இன்றும் நம் பெரும்பாலனவர்களின் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம்.
தென்புலத்தார் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும், அவர்களையும் வீடுபேறு அடைய வழிவகுக்கும் என்பதும் உண்மை.
நாம், நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”.
– திருக்குறள்.
இந்த குறளின் வாயிலாக திருவள்ளுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சாஸ்திரத்தின் உண்மைத் தன்மையை அறிந்து, பித்ரு, ரிஷி, தேவ, நர, பூத, என்ற ஐந்து வழிபடும் முறைகளை தனது குறட்பாவின் வாயிலாக இந்த மக்களுக்காக வெளிப்படுத்தியிருக்கின்றார்.
தங்களுடைய குடும்பத்தில் இறந்தவர்களுக்கும், குலதெய்வத்திற்கும், ரிஷிகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தனக்கும் என இந்த ஐந்து இடங்களிலும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாகும் என்பது இக்குறளின் கருத்து.
நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை, குறிப்பாக, நமக்கு மிகவும் நெருங்கியவர்களும், அன்பிற்குரியவர்களும், இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதலாகும்.
இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும்.
இந்த அறச்செயல்களின் வாயிலாகவே, அந்த பரம் பொருளை அறிந்து, இன்பத்துடன் என்றும் நிலைத்திருக்க “பிறவாமை” என்ற வீடுபேறு கிடைக்கின்றது.
இதனை, அறம், பொருள், இன்பம், வீடு என்ற முறையில் மனிதனின் இலட்சியம் (புருஷார்த்தம்) என்கின்றது சாஸ்திரம்.
இந்த பித்ருக்களுக்கு செய்கின்ற கடனை, இல்லறத்தான் கடன் பட்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இதனால், மேலும், இல்லறத்தானில் இன்னல்கள் அதிகமாகிவிடும் என்ற கோணத்தில் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி குறிப்பிடுகின்றார்.
இறந்த மனிதன் அல்லது மிருகம் தன்னுடைய பரு உடலில் அனுபவிக்கும் புலன் இன்பங்களான உணவு உண்பது, தூங்குவது, மல, ஜலம் கழிப்பது, புணர்ச்சியில் ஈடுபடுவது போன்ற அனைத்து செயல் இன்பங்களையும், அந்த மனிதன் இறந்த பிறகு அவனுக்கு ஸ்தூல உடல் இல்லாத காரணத்தினால் அனுபவம் பெற முடியாது.
அப்படி ஸ்தூல உடல் அற்ற, இறந்த ஒருவனுக்கு என்னதான் படையல் போட்டு, வகை வகையான வடை, பாயாசங்களோடு, பதார்த்தங்களை செய்து படத்தின் முன்போ, சிலைகளின் முன்போ படைக்கப்பட்டால், அவைகளுக்கு ஸ்தூல உடல் இல்லாததினால் இவைகளை ஏற்க முடியாது.
இதை அறிந்து, உயிருடன் இருக்கின்ற பொழுதே அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வது சிறப்பு.
இறந்த பின்பு அவரது நினைவாக மற்றவர்களுக்கு உணவு, உடைகளை தானமாக கொடுக்கின்ற அறச்செயல்களினால், அந்த இறந்தவர்களின் ஆத்மாவிற்கு சாந்தியையும், சந்தோசத்தையும் கொடுத்து, இந்த புண்ணிய பலன்களை அவர்களுக்கு எள்ளு நீரினால் தாரை வார்த்து கொடுத்து, அவர்களை வீடுபேறு பெறும் நிமித்தம், பிரம்ம லோகத்திற்கோ, அல்லது இந்த பூலோகத்தில், மீண்டும் மனிதப் பிறவி கிடைத்து, அறிவை அறிந்து தப்பித்துக்கொள்ளச் செய்வதற்கோ, உண்டான ஒரு வழிமுறை என்பது மட்டுமே உண்மையாகும்.
அதை விடுத்து, இறந்துபோன பித்ருக்கள் திதி அன்று பூமிக்கு வந்து, உணவு உண்பார்கள் என்று எதிர்பார்த்து, இந்த தர்பணத்தைச் செய்கின்றேன் எனக் கூறிக்கொண்டு, படத்தின் முன்பு படையலைப் போட்டு, அத்தனை உணவு வகைளையும் தங்கள் குடும்பத்தாருடன் உட்கார்ந்து, தாங்களே ஒரு பிடி பிடித்து, அனைத்தையும் உண்டு விடுவதல்ல இந்த பித்ருக்கடன் என்பது.
பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்ற பொழுது உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்து, அவர்கள் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே, அவர்கள் இறந்த பிறகு, அதன் பயனாக, இவர்கள் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். அவர்களின் ஆசிர்வாதமும் இவர்களுக்கு கிடைக்கும்.
வழிபாட்டின் நோக்கத்தை, நன்றாக புரிந்து கொண்டு, நல் வாழ்க்கை வாழ முற்படவேண்டும். சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று வகுத்துக் கொண்டு, அதன் பிடியில், அதன் உண்மைத் தன்மை தெரியாமல், குருட்டுத் தனமாக செய்வது என்பது பலனற்ற செயலாக முடியும்.
உதாரணமாக,
ஒரு யானையால் உண்ணும் உணவின் அளவிற்கு, ஒரு எறும்பினால் உண்ண வயிறு கிடையாது, அதுப்போல, உடலே இல்லாத நம் தாத்தா, பாட்டிகள் திதி தினத்தன்று எப்படி வந்து இவர்கள் படைக்கும் படையல் உணவை உண்ண முடியும்?.
சிலர் “காகா” வடிவில் வந்து உணவை எடுத்துச் செல்கின்றனர் என்று கூறுவது, நாம் நம் முன்னோர்களை, சிறு மதி படைத்த பறவையுடன் ஒப்பிடுவதற்குச் சமம்.
அதனால், நம் வீட்டுப் பெரியவர்களான முன்னோர்களை, சாதாரண பறவையாக, அதுவும் காகாவாக பாவித்து, அவர்களை அவமதிப்பதாகும்.
ஆனால், இந்த காகா, குருவி, நாய், பூனை, பசு போன்ற மற்ற ஜீவன்களுக்கு இந்த மனிதன் கொடுக்கின்ற உணவுகளினால், அவைகள் பசியாறி, திருப்தியடைந்து, தன்னுடைய அன்பை இவனிடம் வெளிக்காட்டும்.
இந்த அன்பின் வெளிப்பாடே, “அன்பேசிவம்” என்ற தகுதிக்கு அவனை உயர்த்தி, அனைத்து உயிர்களிலும் இறைவனைக் காணும் மனம் உண்டாகி, அந்த தெள்ளத் தெளிந்த மனதைக் கொண்டு, அவனது உள்ளத்தில் “சீவன் சிவலிங்கம்” என்று இறைவனைக் காணும் உயர்ந்த நிலை உண்டாகும்.
இது போன்ற அறச் செயல்களினால், இந்த பாமர மனிதனிடம் அன்பு எதிர்பார்த்த அளவிற்கு உயர்வடையவில்லை என்றாலும், இவன் செய்த, இந்த நற்செயலினால், புண்ணிய பலன்கள் உண்டாகி, இவனது முன்னோர்களுக்கும், இவனுக்கும் அமைதியும், ஆனந்தமும் உண்டாகும்.
இந்த அமைதியும், ஆனந்தமும் வேண்டித்தானே அத்தனை ஜீவர்களும் எதை எதையோ இறைவனிடம் வேண்டிக் கொண்டு அலைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தொடரும்... 🙏
Image may contain: text and food

at October 11, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.
அதெப்படி?
சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான்.
அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.
சங்கு பெற்ற கதை.
----------------------------------
சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று.
பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்ச சைனம் எனப்பெயர் பெற்றது.
காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார்.
சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.
திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது.
திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.
சக்கரம் பெற்ற கதை.
-------------------------------------
சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.
அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான்.
அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.
அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான்.
அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான்.
சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார்.
தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.
சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார்.
சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான்.
அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.
இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார்.
பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார்.
தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார்.
அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.
at October 11, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, 3 October 2018

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவு உங்களுக்காக.......

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவு உங்களுக்காக.......


🚩🔯⚜🕉பக்தி🕉⚜🔯🚩
🌹ஸப்த கன்னியர்🌹
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.
மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,
அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே......
🔯ப்ராம்மி,
🔯மகேஸ்வரி,
🔯கவுமாரி,
🔯வைஷ்ணவி,
🔯வராஹி,
🔯இந்திராணி,
🔯சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.
1🔯.🌹பிரம்மி🌹
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் தன் மீது அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.
இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
⚜பிராம்மியின் காயத்ரி மந்திரம் :
"ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்."
2🔯.🌹மகேஸ்வரி 🌹
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.
⚜இவளது காயத்ரி மந்திரம்
"ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்."
3🔯.🌹கெளமாரி🌹
அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி.கவுமாரன் என்றால் குமரன்.குமரன் என்றால் முருகக்கடவுள்.ஈசனும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள்.முருகனின் அம்சமே கெளமாரி.இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.
மயில் வாகனத்தில் வருபவள்.அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.இவளை வழிபட்டால்,குழந்தைச் செல்வம் உண்டாகும்.(குழந்தைச் செல்வத்திற்கு ஏங்குபவர்கள் கவனிக்கவும்)
⚜கெளமாரியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்."
4.🔯🌹வைஷ்ணவி 🌹
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி.சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி.குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
⚜வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்."
5🔯.🌹இந்திராணி🌹
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி.தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும்,அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும்,மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
⚜இந்திராணியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் "
6🔯.🌹வராஹி🌹
அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும்,ஓய்வுதருவதும் ஆகும்.இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்.இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின்
அவதாரங்களில் ஒன்றாகும்.இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.இது சிவனின் அம்சமாகும்.அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்,இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.எதையும் அடக்க வல்லவள்.சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.
🔯வராஹியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் "
7🔯.🌹சாமுண்டி 🌹
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள்,தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள்,பதினாறு விதமான ஆயுதங்கள்,மூன்றுகண்கள்,செந்நிறம்,யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள்.சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே!சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள்.
(மாந்திரீகத்தில்)இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது,இவளை அழைத்தால்,புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
⚜சாமுண்டி காயத்ரி மந்திரம்:
"ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் "
நிறைய அன்பர்கள் குலதெய்வமே தெரியவில்லை என வருத்தப்படுகிறார்கள்.அவர்கள் அனைவரும் மாற்றாக சப்தகன்னியர்களை வணங்கி குலதெய்வ அனுக்கிரகம் பெறலாம்.


at October 03, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, 1 October 2018

ஆயுள் வளர்க்கும் பிராணாயாமம்!

                                                   ஆயுள் வளர்க்கும் பிராணாயாமம்!

 *குழந்தைப் பேறு காலதாமதம் ஆகிறது என்று கவலைப்படுபவர்கள் ப்ராணாயாமம் செய்வது மிகவும் அவசியமாகும்.*
இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள உறுப்புகளில் உள்ள குறைபாடுகள், கட்டிகள் போன்றவற்றைத் தவிர மற்ற பெரும்பாலான குறைபாடுகள் ப்ராணாயாமம் செய்வதால் சரியாகிவிடும்.
எல்லாம் சரியாக இருக்கும் ஆனால், ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் குழந்தை பாக்கியத் தடை ஏற்படும்.
அப்படியே குழந்தை பாக்கியம் உண்டாகி அது ஜெனித்தாலும் அதற்கு ஆரோக்யக் குறைபாடுகள் காணப்படும்.
நமது மூச்சுக் காற்றில் இருந்து ப்ராண சக்தியை பிரித்து, எடுத்துக் கொடுப்பது ஹீமோகுளோபினே ஆகும்.
அதன் குறைபாடு இருப்பவர்களுக்கு உடலில் ப்ராண சக்தி குறைந்து விடுவதால் உயிர் அணுக்கள் வலிமையற்றவைகளாகப் போய் விடுகின்றன.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இதனால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில காயங்கள், கட்டிகள், புண்களில் தோன்றும் தொற்றுகள் உயிர் அணுக்களைக் கொன்று விடும்.
ப்ராண சக்தி அதிகமாகும் போது உடலில் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்கும். தொற்று நோய்க் கிருமிகள் அழிக்கப்படும்.
ப்ராணாயாமம் செய்தால் மட்டும் என்ன மாற்றங்கள் ஏற்பட்டு விடப் போகிறது ?
என்றால், எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ப்ராணனே வியக்தமாய் மாறும் போது சக்தியாகி மானுட சரீரத்தில் நடைபெறும் செயல்களாக வடிவெடுக்கிறது.
அதுவே உயிராகவும் திகழ்கிறது. அதுவே நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவின் உள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ப்ராணன் உடலில் தொழிலாக, நரம்பில் ஓட்டமாக, இதயத்தில் துடிப்பாக மேலும் நுரையீரல் விரிந்து சுருங்கவும், நாளமில்லா சுரப்பிகள் திறம்பட இயங்கி தம் சுரப்பு நீர்களை சுரப்பிக்கவும், உணவு செரிக்கவும், கழிவுகள் வெளியேறவும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனதை கட்டுப்படுத்தி எண்ணங்களை வலிமையாக்கவும் காரணமாக அமைகிறது.
இல்வாழ்க்கையானாலும், யோக நிலையானாலும் ப்ராணனின் பங்கு அளவிட முடியாததாகும்.
இல்வாழ்வைப் பொருத்தவரை உழைப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும், மற்ற எல்லா கடமைகளைச் செய்வதற்கும் ப்ராணசக்தி அதிகம் செலவாகிறது.
யோகநிலையிலோ அது பெருகி பெருகி திணிவு ஏற்பட்டு தன் மூலமான ப்ரம்மத்திடம் போய் சேர்கிறது. எனவே அதிகம் செலவு செய்கிற இல்வாழ்வில் உள்ளவர்கள் கட்டாயம் ப்ராண சக்தியை மேம்படுத்தி தக்க வைத்துக் கொள்ள அல்லது சமன் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
ப்ராணனை நம் உடல் பல வழிகளில் பெற்றுக் கொண்டாலும், மூச்சின் வழியாகவே அதிகம் பெற முடியும்.
அதன் சக்தியை நாம் உணர வேண்டுமானால் மூச்சின் மூலமாகவே உணர முடியும்.
மின்சாரத்தை டெஸட்டர் மூலம் அடையாளம் காண்பது போல ப்ராணனை மூச்சின் மூலம் அடையாளம் காணமுடியும்.
அதோடு மட்டுமல்ல மூச்சின் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்துவது என்பது அதை சமன் செய்வதைக் குறிப்பதே. அதாவது செலவுக்குத் தகுந்த வரவு இருந்தால் நம் உடலில் ப்ராண சக்தி குறைபாடு ஏற்படாது.
ப்ராண சக்தி குறைவற்றவர்கள் உடல், மனம் அறிவு எல்லாம் செம்மையாகச் செயல்படும்.
ப்ரம்த்தின் சக்தியே ப்ராணன் என்பதால் ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
எதிர்மறைச் சிந்தனைகள் தோன்றாது.
உண்மைகள் இயல்பாகவே தெளிவாகப் புரியும்.
மனிதன் தன் வாழ்நாளில் அறிவையும், மனோ சக்திகளையும் 10 சதவிகிதம் கூடப் பயன்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன.
காரணம் நன்கு மூச்சு விடுவதற்குக் கூட மனிதன் கற்றுக் கொள்ளவில்லை.
நம் முன்னோர்களின் பாடல்களில் நாயை இழிவானதாகப் பாடியிருப்பார்கள்.
ஏன் அப்படிப் பாடினார்கள் ?
நாய் நன்றி உள்ளது தானே ? என்றால், நாயானது தேவையில்லாமல் தன் மூச்சை விரையம் செய்து ப்ராணசக்தியை இழந்து குறைந்த ஆயுட்காலம் மட்டுமே வாழ்ந்து மடியும்.
அது போல மாடு, பெரியவர்கள் திட்டும் போது மாடு மாதிரி என்றெல்லாம் திட்டுவார்கள்.
அதுவும் அப்படித்தான் அசை போடுவதன் மூலம் தன் மூச்சை விரையம் செய்து ப்ராண சக்தியை இழந்து குறைந்த ஆயுட்காலத்தில் மறைந்துவிடும்.
இதிலிருந்து தெரியும் உண்மை என்னவென்றால் ப்ராண சக்தியை வீண் விரையம் செய்பவன் இழிவானவன் என்பதாகும் கருத்து.
எனவே நாம் முதலில் குழந்தைகளுக்கு மூச்சு விடக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மலைவாசிகள், காட்டுவாசிகள் கலாச்சாரங்களில் இந்தப் பழக்கம் உண்டு.
அவர்கள் குழந்தைகளை வாய் வழியே மூச்சு விடக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.
பிறந்த நாள் முதலே மூச்சு ஒழுங்குபடுத்தும் படியான பழக்கங்களைக் கையாளுவார்கள்.
படுக்க வைப்பது, உட்கார வைப்பது, தன் முதுகில் தொட்டில் போலக் கட்டிக் கொண்டு நடக்கும் போது குழந்தையை வைத்திருக்கும் முறை எல்லாவற்றையும் உற்று கவனித்தால் மூச்சுப் பயிற்சிக்கான நடவடிக்கைகளாக இருப்பது புரியும்.
அந்தக் குழந்தை வளரும் போது இயல்பாகவே அது நன்கு முறைப்படி மூச்சு விடும்.
நாம் மிகக் குறைந்த அளவு காற்றையே மூச்சாக உள் இழுத்து, அதையும் விரைவாக வெளியற்றி விடுகிறோம்.
எனவேதான் தற்காலம் மனிதனின் ஆயுள் மிகவும் குறைவாக உள்ளது.
அரை லிட்டர் காற்றை இழுத்து அரை லிட்டர் வெளியே விடுகிறோம்.
அதுவே முறைப்படி நன்கு சுவாசிக்கப் பழகிய மனிதன் இரண்டரை லிட்டர் காற்றை உள் இழுக்க முடியும்.
ஆனால், அவ்வாறு செய்வதில்லை. எனவே நுரையீரலின் ஐந்தில் ஒரு பங்கு பகுதி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
மற்ற பகுதியில் உள்ள செல்கள் எல்லாம் பயன்பாடு இல்லாத காரணத்தால் மரித்துப் போய்விடுகின்றன. இது மனிதனுக்கு பேரிழப்பாகும்.
அந்தோ பரிதாபம் இதை அறியாமலேயே அவன் மாண்டு போகிறானே.
இந்தப் பழக்கவழக்கங்களையெல்லாம் நம்மில் இருந்து மறைத்தவர்கள் கொடும் பாவிகள்.
மேலும் மூளைக்கு போதிய அளவு இரத்த ஓட்டம், ப்ராணவாயு, ப்ராணசக்தி கிடைக்காமல் போகிறது. மனம் அமைதியை இழக்கிறது.
உடல் உறுப்புகளில் உள்ள செல்கள் போதிய ப்ராணசக்தி இல்லாத காரணத்தால் மரித்துப் போய்விடுகின்றன.
பிறகு ஓய்வெடுக்கும் போது அவை மீண்டும் உயிர்ப்படைவதில்லை.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முறைப்படி ப்ராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள்.
இயலாதவர்கள் இந்த ஐந்து விஷயங்களையாவது கடைபிடியுங்கள்.
1. ஆழமாக மூச்சு விடுதல்.
2. மெல்ல மெல்ல மூச்சு விடுதல்.
3. இடையீடின்றி தொடர்ந்து மூச்சு விடுதல்.
4. சுலபமாக மூச்சு விடுதல்.
5. மூச்சை நன்கு உற்று கவனித்தல்.
வாழ்க வளமுடன்.
*"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்".

C
V Shanmuga Raj
.
at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

#ஐஸ்வர்யம்_பெருக_வழிமுறைகள்‬....

                                           #ஐஸ்வர்யம்_பெருக_வழிமுறைகள்‬....

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்க்கவும்.
2. குளித்தபின்பு முதுகை முதலில் துடைக்கவும். பின்பு, முகத்தை துடைக்கவும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டு கொண்டு தான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
6. பூஜை அறையில் பழனியாண்டவர் படம் வைப்பதாக இருந்தால், ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருப்பின் அதை எடுத்து விட்டு ராஜா கை வைத்து இருப்பது போல் வைக்கவும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்கவும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
9. படத்திற்கும், கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிற்கும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
12. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும்.அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படமோ. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமோவெல்லாம் மாட்டக் கூடாது.
13. ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்க மகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அதன்பின் பொருள்செல்வம் தானே வரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!


at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்

                                        பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்

No automatic alt text available.
பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்…
.
1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்….
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி…!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு..!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது.
at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

வெற்றிலை மருத்துவ குணங்கள்!

                                                வெற்றிலை மருத்துவ குணங்கள்!

Image may contain: plant, nature and outdoor

வெற்றிலை மருத்துவ குணங்கள்!
வெற்றி+இலை= வெற்றிலை
வெத்தலை என்பது தவறு.
*எங்கு தோன்றியது*
மகத்துவ மூலிகையான வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகும்,
இக்கொடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.
அதுவும் கும்பகோணம் வெற்றிலை என்பது தமிழ்நாட்டில் பெயர் போன ஒன்றாகும். கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வெற்றிலை பயிரப்படுகிறது,
கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன. *சுவைப்பதில் இன்பம்*
*ஜீரண சக்திக்கு வெற்றிலை ரொம்ப நல்லது. அதுதவிர நாம் சாப்பிடும் சாப்பாட்டினால் ஏதும் ஒவ்வாமை வந்தால் அதனை வெற்றிலை நீக்கும். *40 வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்த்து உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும். நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப்பட்டு சத்துக்கள் உடலில் முழுமையாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு[Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவையாகும். *வெற்றிலை, பாக்கு போடும் போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது,
'பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்'. மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். *வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
*வெற்றிலையில் உள்ள சத்துக்கள்* வெற்றிலையில்
84.4% நீர்ச்சத்தும்,
3.1% புரதச் சத்தும்,
0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.
இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால்(Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். *மருத்துவப் பயன்களை அள்ளித்தரும் வெற்றிலை* அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும். வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.
சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக
பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்ப்படும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும். வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
*16 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை *
1. இருமல்-சளி நீங்க* *இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து. *
2, வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாகக் கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட ன் வடிகட்டிக் குடிக்க வேண்டும். இதே போல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி* *சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இரண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென்றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாகக் குணமாகும்.
3. காணாக்கடிக்கு* *எந்தப் பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்* *கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 200 மில்லி நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வரக்காணாக்கடி விரைவில் குணமாகும்.
4. உற்சாக உணர்விற்கு* *வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு, தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கிறது.
5. வாத நோய் நீங்க* *வாத நோய்களைக் குணமாக்கும் “வாத நாராயணா” எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலைச் சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.
6. தீப்புண் குணமாக* *தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கிப் புண்ணின் மீது பற்றாகப் போட வேண்டும். விரைவில் அந்தப் புண் குணமாகும்.
7. நுரையீரல் பலப்பட* *வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.
8. வயிற்றுவலி நீங்க* *2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மை போல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்துக் காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில்அந்தக் கலவையைத் தடவிச் சட்டியிலிட்டு வதக்கிப் பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாகக்** கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டிக் கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.
9. சர்க்கரையின் அளவு கட்டுப்பட* *வெற்றிலை–4, வேப்பிலை – ஒரு கைப்பிடி , அருகம் புல் – ஒரு கைப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவைத்து ஆறியவுடன் வடிகட்டித் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
10. விஷக்கடி குணமாக* *உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டு கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
11. இருமல் குறைய' வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்
12. அஜீரணக் கோளாறு அகல *வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு* *க்** காய்ச்சி**க்** குழந்தை களுக்கு**க் கொடுத்து வந்தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக* *க் கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.*
13. தோல் வியாதிக்கு 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றி லையை போட்டுச் சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டிப் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்குத்தடவி வந்தால், எளிதில் குணமாகும்.*
14. தலைவலி நீங்க* *வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கிச் சாறு எடுத்துக் கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாகக் குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்றுப் போட்டால் தலைவலி பறந்து போகும்.*
15. தீப்புண் ஆற* *தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
16. அல்சர்* *அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.*
at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • கருப்பர் வரலாறு :
                                                                            கருப்பர் வரலாறு :  "கருப்பண்ணசாமி' கருப்பன், கருப்பணன...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ▼  2026 (815)
    • ▼  August (3)
      • நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!
      • நாம் சும்மா சொல்லும் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரி...
      • ஆம்! "கற்றல் நிற்கும் இடத்தில்தான் முதுமை தொடங்குக...
    • ►  July (18)
    • ►  June (3)
    • ►  May (4)
    • ►  April (77)
    • ►  March (150)
    • ►  February (134)
    • ►  January (426)
  • ►  2025 (472)
    • ►  December (284)
    • ►  November (128)
    • ►  October (25)
    • ►  September (9)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ►  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ►  September (96)
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (493)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (101)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.