ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Wednesday, 3 October 2018

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவு உங்களுக்காக.......

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவு உங்களுக்காக.......


🚩🔯⚜🕉பக்தி🕉⚜🔯🚩
🌹ஸப்த கன்னியர்🌹
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.
மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,
அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே......
🔯ப்ராம்மி,
🔯மகேஸ்வரி,
🔯கவுமாரி,
🔯வைஷ்ணவி,
🔯வராஹி,
🔯இந்திராணி,
🔯சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.
1🔯.🌹பிரம்மி🌹
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் தன் மீது அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.
இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
⚜பிராம்மியின் காயத்ரி மந்திரம் :
"ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்."
2🔯.🌹மகேஸ்வரி 🌹
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.
⚜இவளது காயத்ரி மந்திரம்
"ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்."
3🔯.🌹கெளமாரி🌹
அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி.கவுமாரன் என்றால் குமரன்.குமரன் என்றால் முருகக்கடவுள்.ஈசனும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள்.முருகனின் அம்சமே கெளமாரி.இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.
மயில் வாகனத்தில் வருபவள்.அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.இவளை வழிபட்டால்,குழந்தைச் செல்வம் உண்டாகும்.(குழந்தைச் செல்வத்திற்கு ஏங்குபவர்கள் கவனிக்கவும்)
⚜கெளமாரியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்."
4.🔯🌹வைஷ்ணவி 🌹
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி.சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி.குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
⚜வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்."
5🔯.🌹இந்திராணி🌹
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி.தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும்,அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும்,மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
⚜இந்திராணியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் "
6🔯.🌹வராஹி🌹
அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும்,ஓய்வுதருவதும் ஆகும்.இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்.இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின்
அவதாரங்களில் ஒன்றாகும்.இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.இது சிவனின் அம்சமாகும்.அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்,இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.எதையும் அடக்க வல்லவள்.சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.
🔯வராஹியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் "
7🔯.🌹சாமுண்டி 🌹
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள்,தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள்,பதினாறு விதமான ஆயுதங்கள்,மூன்றுகண்கள்,செந்நிறம்,யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள்.சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே!சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள்.
(மாந்திரீகத்தில்)இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது,இவளை அழைத்தால்,புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
⚜சாமுண்டி காயத்ரி மந்திரம்:
"ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் "
நிறைய அன்பர்கள் குலதெய்வமே தெரியவில்லை என வருத்தப்படுகிறார்கள்.அவர்கள் அனைவரும் மாற்றாக சப்தகன்னியர்களை வணங்கி குலதெய்வ அனுக்கிரகம் பெறலாம்.


at October 03, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, 1 October 2018

ஆயுள் வளர்க்கும் பிராணாயாமம்!

                                                   ஆயுள் வளர்க்கும் பிராணாயாமம்!

 *குழந்தைப் பேறு காலதாமதம் ஆகிறது என்று கவலைப்படுபவர்கள் ப்ராணாயாமம் செய்வது மிகவும் அவசியமாகும்.*
இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள உறுப்புகளில் உள்ள குறைபாடுகள், கட்டிகள் போன்றவற்றைத் தவிர மற்ற பெரும்பாலான குறைபாடுகள் ப்ராணாயாமம் செய்வதால் சரியாகிவிடும்.
எல்லாம் சரியாக இருக்கும் ஆனால், ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் குழந்தை பாக்கியத் தடை ஏற்படும்.
அப்படியே குழந்தை பாக்கியம் உண்டாகி அது ஜெனித்தாலும் அதற்கு ஆரோக்யக் குறைபாடுகள் காணப்படும்.
நமது மூச்சுக் காற்றில் இருந்து ப்ராண சக்தியை பிரித்து, எடுத்துக் கொடுப்பது ஹீமோகுளோபினே ஆகும்.
அதன் குறைபாடு இருப்பவர்களுக்கு உடலில் ப்ராண சக்தி குறைந்து விடுவதால் உயிர் அணுக்கள் வலிமையற்றவைகளாகப் போய் விடுகின்றன.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இதனால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில காயங்கள், கட்டிகள், புண்களில் தோன்றும் தொற்றுகள் உயிர் அணுக்களைக் கொன்று விடும்.
ப்ராண சக்தி அதிகமாகும் போது உடலில் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்கும். தொற்று நோய்க் கிருமிகள் அழிக்கப்படும்.
ப்ராணாயாமம் செய்தால் மட்டும் என்ன மாற்றங்கள் ஏற்பட்டு விடப் போகிறது ?
என்றால், எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ப்ராணனே வியக்தமாய் மாறும் போது சக்தியாகி மானுட சரீரத்தில் நடைபெறும் செயல்களாக வடிவெடுக்கிறது.
அதுவே உயிராகவும் திகழ்கிறது. அதுவே நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவின் உள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ப்ராணன் உடலில் தொழிலாக, நரம்பில் ஓட்டமாக, இதயத்தில் துடிப்பாக மேலும் நுரையீரல் விரிந்து சுருங்கவும், நாளமில்லா சுரப்பிகள் திறம்பட இயங்கி தம் சுரப்பு நீர்களை சுரப்பிக்கவும், உணவு செரிக்கவும், கழிவுகள் வெளியேறவும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனதை கட்டுப்படுத்தி எண்ணங்களை வலிமையாக்கவும் காரணமாக அமைகிறது.
இல்வாழ்க்கையானாலும், யோக நிலையானாலும் ப்ராணனின் பங்கு அளவிட முடியாததாகும்.
இல்வாழ்வைப் பொருத்தவரை உழைப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும், மற்ற எல்லா கடமைகளைச் செய்வதற்கும் ப்ராணசக்தி அதிகம் செலவாகிறது.
யோகநிலையிலோ அது பெருகி பெருகி திணிவு ஏற்பட்டு தன் மூலமான ப்ரம்மத்திடம் போய் சேர்கிறது. எனவே அதிகம் செலவு செய்கிற இல்வாழ்வில் உள்ளவர்கள் கட்டாயம் ப்ராண சக்தியை மேம்படுத்தி தக்க வைத்துக் கொள்ள அல்லது சமன் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
ப்ராணனை நம் உடல் பல வழிகளில் பெற்றுக் கொண்டாலும், மூச்சின் வழியாகவே அதிகம் பெற முடியும்.
அதன் சக்தியை நாம் உணர வேண்டுமானால் மூச்சின் மூலமாகவே உணர முடியும்.
மின்சாரத்தை டெஸட்டர் மூலம் அடையாளம் காண்பது போல ப்ராணனை மூச்சின் மூலம் அடையாளம் காணமுடியும்.
அதோடு மட்டுமல்ல மூச்சின் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்துவது என்பது அதை சமன் செய்வதைக் குறிப்பதே. அதாவது செலவுக்குத் தகுந்த வரவு இருந்தால் நம் உடலில் ப்ராண சக்தி குறைபாடு ஏற்படாது.
ப்ராண சக்தி குறைவற்றவர்கள் உடல், மனம் அறிவு எல்லாம் செம்மையாகச் செயல்படும்.
ப்ரம்த்தின் சக்தியே ப்ராணன் என்பதால் ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
எதிர்மறைச் சிந்தனைகள் தோன்றாது.
உண்மைகள் இயல்பாகவே தெளிவாகப் புரியும்.
மனிதன் தன் வாழ்நாளில் அறிவையும், மனோ சக்திகளையும் 10 சதவிகிதம் கூடப் பயன்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன.
காரணம் நன்கு மூச்சு விடுவதற்குக் கூட மனிதன் கற்றுக் கொள்ளவில்லை.
நம் முன்னோர்களின் பாடல்களில் நாயை இழிவானதாகப் பாடியிருப்பார்கள்.
ஏன் அப்படிப் பாடினார்கள் ?
நாய் நன்றி உள்ளது தானே ? என்றால், நாயானது தேவையில்லாமல் தன் மூச்சை விரையம் செய்து ப்ராணசக்தியை இழந்து குறைந்த ஆயுட்காலம் மட்டுமே வாழ்ந்து மடியும்.
அது போல மாடு, பெரியவர்கள் திட்டும் போது மாடு மாதிரி என்றெல்லாம் திட்டுவார்கள்.
அதுவும் அப்படித்தான் அசை போடுவதன் மூலம் தன் மூச்சை விரையம் செய்து ப்ராண சக்தியை இழந்து குறைந்த ஆயுட்காலத்தில் மறைந்துவிடும்.
இதிலிருந்து தெரியும் உண்மை என்னவென்றால் ப்ராண சக்தியை வீண் விரையம் செய்பவன் இழிவானவன் என்பதாகும் கருத்து.
எனவே நாம் முதலில் குழந்தைகளுக்கு மூச்சு விடக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மலைவாசிகள், காட்டுவாசிகள் கலாச்சாரங்களில் இந்தப் பழக்கம் உண்டு.
அவர்கள் குழந்தைகளை வாய் வழியே மூச்சு விடக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.
பிறந்த நாள் முதலே மூச்சு ஒழுங்குபடுத்தும் படியான பழக்கங்களைக் கையாளுவார்கள்.
படுக்க வைப்பது, உட்கார வைப்பது, தன் முதுகில் தொட்டில் போலக் கட்டிக் கொண்டு நடக்கும் போது குழந்தையை வைத்திருக்கும் முறை எல்லாவற்றையும் உற்று கவனித்தால் மூச்சுப் பயிற்சிக்கான நடவடிக்கைகளாக இருப்பது புரியும்.
அந்தக் குழந்தை வளரும் போது இயல்பாகவே அது நன்கு முறைப்படி மூச்சு விடும்.
நாம் மிகக் குறைந்த அளவு காற்றையே மூச்சாக உள் இழுத்து, அதையும் விரைவாக வெளியற்றி விடுகிறோம்.
எனவேதான் தற்காலம் மனிதனின் ஆயுள் மிகவும் குறைவாக உள்ளது.
அரை லிட்டர் காற்றை இழுத்து அரை லிட்டர் வெளியே விடுகிறோம்.
அதுவே முறைப்படி நன்கு சுவாசிக்கப் பழகிய மனிதன் இரண்டரை லிட்டர் காற்றை உள் இழுக்க முடியும்.
ஆனால், அவ்வாறு செய்வதில்லை. எனவே நுரையீரலின் ஐந்தில் ஒரு பங்கு பகுதி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
மற்ற பகுதியில் உள்ள செல்கள் எல்லாம் பயன்பாடு இல்லாத காரணத்தால் மரித்துப் போய்விடுகின்றன. இது மனிதனுக்கு பேரிழப்பாகும்.
அந்தோ பரிதாபம் இதை அறியாமலேயே அவன் மாண்டு போகிறானே.
இந்தப் பழக்கவழக்கங்களையெல்லாம் நம்மில் இருந்து மறைத்தவர்கள் கொடும் பாவிகள்.
மேலும் மூளைக்கு போதிய அளவு இரத்த ஓட்டம், ப்ராணவாயு, ப்ராணசக்தி கிடைக்காமல் போகிறது. மனம் அமைதியை இழக்கிறது.
உடல் உறுப்புகளில் உள்ள செல்கள் போதிய ப்ராணசக்தி இல்லாத காரணத்தால் மரித்துப் போய்விடுகின்றன.
பிறகு ஓய்வெடுக்கும் போது அவை மீண்டும் உயிர்ப்படைவதில்லை.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முறைப்படி ப்ராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள்.
இயலாதவர்கள் இந்த ஐந்து விஷயங்களையாவது கடைபிடியுங்கள்.
1. ஆழமாக மூச்சு விடுதல்.
2. மெல்ல மெல்ல மூச்சு விடுதல்.
3. இடையீடின்றி தொடர்ந்து மூச்சு விடுதல்.
4. சுலபமாக மூச்சு விடுதல்.
5. மூச்சை நன்கு உற்று கவனித்தல்.
வாழ்க வளமுடன்.
*"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்".

C
V Shanmuga Raj
.
at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

#ஐஸ்வர்யம்_பெருக_வழிமுறைகள்‬....

                                           #ஐஸ்வர்யம்_பெருக_வழிமுறைகள்‬....

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்க்கவும்.
2. குளித்தபின்பு முதுகை முதலில் துடைக்கவும். பின்பு, முகத்தை துடைக்கவும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டு கொண்டு தான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
6. பூஜை அறையில் பழனியாண்டவர் படம் வைப்பதாக இருந்தால், ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருப்பின் அதை எடுத்து விட்டு ராஜா கை வைத்து இருப்பது போல் வைக்கவும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்கவும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
9. படத்திற்கும், கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிற்கும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
12. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும்.அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படமோ. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமோவெல்லாம் மாட்டக் கூடாது.
13. ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்க மகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அதன்பின் பொருள்செல்வம் தானே வரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!


at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்

                                        பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்

No automatic alt text available.
பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்…
.
1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்….
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி…!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு..!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது.
at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

வெற்றிலை மருத்துவ குணங்கள்!

                                                வெற்றிலை மருத்துவ குணங்கள்!

Image may contain: plant, nature and outdoor

வெற்றிலை மருத்துவ குணங்கள்!
வெற்றி+இலை= வெற்றிலை
வெத்தலை என்பது தவறு.
*எங்கு தோன்றியது*
மகத்துவ மூலிகையான வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகும்,
இக்கொடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.
அதுவும் கும்பகோணம் வெற்றிலை என்பது தமிழ்நாட்டில் பெயர் போன ஒன்றாகும். கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வெற்றிலை பயிரப்படுகிறது,
கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன. *சுவைப்பதில் இன்பம்*
*ஜீரண சக்திக்கு வெற்றிலை ரொம்ப நல்லது. அதுதவிர நாம் சாப்பிடும் சாப்பாட்டினால் ஏதும் ஒவ்வாமை வந்தால் அதனை வெற்றிலை நீக்கும். *40 வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்த்து உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும். நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப்பட்டு சத்துக்கள் உடலில் முழுமையாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு[Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவையாகும். *வெற்றிலை, பாக்கு போடும் போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது,
'பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்'. மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். *வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
*வெற்றிலையில் உள்ள சத்துக்கள்* வெற்றிலையில்
84.4% நீர்ச்சத்தும்,
3.1% புரதச் சத்தும்,
0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.
இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால்(Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். *மருத்துவப் பயன்களை அள்ளித்தரும் வெற்றிலை* அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும். வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.
சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக
பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்ப்படும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும். வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
*16 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை *
1. இருமல்-சளி நீங்க* *இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து. *
2, வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாகக் கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட ன் வடிகட்டிக் குடிக்க வேண்டும். இதே போல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி* *சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இரண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென்றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாகக் குணமாகும்.
3. காணாக்கடிக்கு* *எந்தப் பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்* *கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 200 மில்லி நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வரக்காணாக்கடி விரைவில் குணமாகும்.
4. உற்சாக உணர்விற்கு* *வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு, தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கிறது.
5. வாத நோய் நீங்க* *வாத நோய்களைக் குணமாக்கும் “வாத நாராயணா” எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலைச் சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.
6. தீப்புண் குணமாக* *தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கிப் புண்ணின் மீது பற்றாகப் போட வேண்டும். விரைவில் அந்தப் புண் குணமாகும்.
7. நுரையீரல் பலப்பட* *வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.
8. வயிற்றுவலி நீங்க* *2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மை போல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்துக் காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில்அந்தக் கலவையைத் தடவிச் சட்டியிலிட்டு வதக்கிப் பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாகக்** கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டிக் கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.
9. சர்க்கரையின் அளவு கட்டுப்பட* *வெற்றிலை–4, வேப்பிலை – ஒரு கைப்பிடி , அருகம் புல் – ஒரு கைப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவைத்து ஆறியவுடன் வடிகட்டித் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
10. விஷக்கடி குணமாக* *உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டு கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
11. இருமல் குறைய' வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்
12. அஜீரணக் கோளாறு அகல *வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு* *க்** காய்ச்சி**க்** குழந்தை களுக்கு**க் கொடுத்து வந்தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக* *க் கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.*
13. தோல் வியாதிக்கு 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றி லையை போட்டுச் சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டிப் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்குத்தடவி வந்தால், எளிதில் குணமாகும்.*
14. தலைவலி நீங்க* *வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கிச் சாறு எடுத்துக் கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாகக் குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்றுப் போட்டால் தலைவலி பறந்து போகும்.*
15. தீப்புண் ஆற* *தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
16. அல்சர்* *அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.*
at October 01, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 28 September 2018

*இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !

                          *இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !



No automatic alt text available.
‎Mohamed Ali V‎ to நாட்டு மருந்து
January 4
*இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !*
இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு
அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி வந்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே.
முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.
நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.
உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும் ?...... எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.
இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.
இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.
பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?..... ம் சொல்லுங்க. ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும் அல்லவா.
உதாரணத்திற்கு வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால் ?... மின்சாரம் வேண்டும்.
இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ? நமது உடலுக்கு எது எரிபொருள் ? உணவு வேண்டும்ங்க. சரி அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்ன வாக மாறுகிறது ? நாம் உண்ணும் மாவுச்சத்து அனைத்தும் சர்க்கரையாக மாறுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.
நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.
இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம்.
இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும் ?...... சர்க்கரை எனும் சத்துப்பொருள் வேணுமுங்க. சரியா சொன்னிங்க.
ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ?... உடல் சூடாக இருக்கும். அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?... உடல் ஐஸ் போல் இருக்கும்.
உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.
இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.
இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும் ங்க. சரியா சென்னிங்க. இவருக்கு எல்லோரும் கை தட்டுங்க.
பாருங்கள் மக்களே. நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அதிஅவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம்.
இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.
நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில் உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.
வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.
பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.
எப்படி என்று கேட்கிறீர்களா ? இதோ செயல் முறை விளக்கம்.
இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... ஐய்யா எச்சில் ஊறுகிறது. ம் சரி.
அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.... சுரக்கவில்லைங்க, கொமட்டீட்டு தான் வருகிறது.
இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.
நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.
இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.
எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.
தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.
நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.
அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.
சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.
நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.
உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின் வழங்காது.
நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.
தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம். இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.
நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.
இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.
நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.
இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து ?... பணம் காசு வீடு, வாகனமா ? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.
எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.
இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.
நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.
சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.
மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்
வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.
விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்.
எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !, இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.
உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.
நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.
இவர்களின் அடுத்த கட்ட கொலைகார செயல்களை பார்போம்.
இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள், உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.
அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.
நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...
இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.
இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.
சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.
இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.
ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?
சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.
இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் இலக்கு.
இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.
உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.
ஒரு மனிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.
உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?.... இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி, அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் கொடூர பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.
நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.
இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.
உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.
உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.
சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.
இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.
சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.
நீரிழிவு காரணங்கள் !
சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.
1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்
சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள். என்னங்க நான் சொன்னது சரியா... !
https://www.youtube.com/channel/UCgBKNGCCD8eGGh7dH-xijFA
http://www.agathiyarjanachithar.in/
*எப்படி குணப்படுத்துவது ?*
1 : கவலை - சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
2 : அவசரமாக சாப்பிடுவது - அவசரமாக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம். "நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு", பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும்.
ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே. நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.
சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். உணவிற்கு முன் இனிப்பான பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.
கோதுமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3 : அதிக உடல் வெப்பம் - பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர்காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இனி இந்த செரிமானப்பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். நீரிழிவு என்பதே பொருந்தும். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. நீரிழிவை சரி செய்ய மேலே குறிப்பிட்ட மூன்று காரணத்தையும் சரி செய்தால் குணம் பெற்றுவிடுவீரகள்.
https://www.youtube.com/channel/UCgBKNGCCD8eGGh7dH-xijFA
http://www.agathiyarjanachithar.in/
சர்க்கரை நோய் - செரிமானக்கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை.
தீர்வு - இனிப்பான பழங்களை சாப்பிடுவது. உணவை பசிக்கும் போது மென்று ரசித்து ருசித்து சாப்பிடுவது.
இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மூளையில், மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.
பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர வச தன்மை உள்ள பொருட்களை விற்கும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.
"உள்ளமே பெருங்கோவில்
ஊநுடலே ஆலையமாம்"
ஆலயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
உண்மையில் சர்க்கரை நோய் என்று ஒரு நோய் உலகில் இல்லை
இது முழுக்க முழுக்க மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களின் வியாபார தந்திரம்.
இனிப்பிற்கும், சர்க்கரை நோய்கும் 0.1% கூட சம்பந்தம் கிடையாது.
இதற்கு சர்க்கரை நோய் என்று பெயர் வைத்ததிலேயே மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது.
லேசாக தலை சுற்றலே, சோர்வே, மயக்கமே வந்து விட கூடாது. உடனே
நீங்கள் பயந்து போய், பரிசோதனை செய்து பார்ப்பீர்கள், அளவு அவர்கள் நிர்ணயித்ததை விட குறைவாகவே, அதிகமாகவோ இருக்கக்கூடும், உடனே உனக்கு சர்க்கரை நோய் உள்ளது, இந்தா இந்த மாத்திரையை போடுனு எழுதி கொடுத்துவிடுவார்.
இதோட நிறுத்தினால் பரவாயில்லை, மாத்திரை போடலைனா அது வந்துரும், இது வந்துரும் னு பயப்படுத்தி, ஒரு பெரிய பட்டியலை காட்டி இதோ பாருங்க சர்க்கரை நோய் வந்தா இந்த எல்லா நோய்களும் வந்துவிடும்னு சொல்வார்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா, சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வராது. சர்க்கரைக்கு அவர்கள் கொடுக்கும் மாத்திரை சாப்பிடுவதால் மட்டுமே எல்லா நோயும் வருகிறது. அந்த மாத்திரை பெட்டியிலேயே இதை சாப்பிட்டால் சிறுநீரக கேன்சர் வரும் என்று எழுதியிருப்பது யாருக்காவது தெரியுமா !
ஆங்கில மருத்துவம் நிர்ணயிக்கும் அளவுகள் எல்லாம் நம் ஆரோக்கியத்தை மையப்படுத்தி நிர்னையிக்கும் அளவுகள் அல்ல.
அளவுகள் நிர்ணயிப்பது யார் தெரியுமா ? மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களே ! வியப்பாய் உள்ளதா, இது தான் உண்மை.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவரவர் வாழும் பகுதி, செய்யும் வேலை, உணவு, மனம், சுற்றுச்சூழல் இதை பொருத்து சர்க்கரை அளவு
மாறிக்கொண்டே இப்பது தான் இயற்கை.
இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது.
சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் சிறிய பிரச்சனைப்பற்றி மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு, அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தையாவது நிம்மதியுடன் வாழ வைக்க முடியும்.
#ஒருபினியாளரின்கருத்துபகிர்வு
நான் 10 வருடமாக நீரழிவு க்காக மாத்திரை சாப்பிட்டு கொண்டுதான் இருந்தேன் இப்போ ஒரு மாதமாக மாத்திரை எடுத்துகொள்வதில்லை உமில் நீருடன் மென்று சாப்பிடுகிறேன் சாப்பிட்டவுடன் நீர் குடிப்பதில்லை time க்கு சாப்பிடுகிறேன் பசி எடுத்தால்மட்டுமே சாப்பிடுவேன் இதைவிட ஒரு அதிசயம் மாத்திரை சாப்பிடும்பொழுது கால் பாதம் எரியும் மாத்திரையை நிப்பாட்டியபிறகு இப்பொழுது அந்த எரிச்சல் துளிகூட இல்லை
at September 28, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மூச்சுப் பயிற்சி

                                                                       மூச்சுப் பயிற்சி

 ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.
.
.
எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.
.
.
பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.
.
அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.
.
தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.
.
ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.
மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.
.
.
முதல் பயிற்சி :
.
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
.
.
இரண்டாவது பயிற்சி :
.
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.
.
மூன்றாவது பயிற்சி :
.
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.
ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது
பிராணயாமம்
.
.
.
நாடி சுத்தி :
.
பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.
நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.
இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.
இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.
மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.
மூச்சுப் பயிற்சி

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.
நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.
மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் குறையும்.
.
at September 28, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சிவதனுசு பற்றி தெரியுமா ??

சிவதனுசு பற்றி தெரியுமா ??

சிவதனுசு பற்றி தெரியுமா ??
சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு
என்றே கூறுகின்றோம்.
மக்களின் சிற்றறிவுக்குத்
தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார்.
இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.
சிவபெருமானே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா?
சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும்.
இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான்.
நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவதனுசுவின் சக்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது.
அனைத்து லோகங்களையும் வென்ற இராவணன் கடைசியில் பிரம்ம லோகத்திற்கும் சென்றான். பிரம்மாவையும் வென்று தன் அடிமையாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். பிரம்ம லோகம் சென்ற ராவணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இராவணனின் தவறான செய்கைகளால் தன் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த சிவதனுசு இராவணன் பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுதுமாகத் தன் சக்தியை இழந்து விட்டது.
இதைச் சற்றும் எதிர்பாராத இராவணன் செய்வதறியாது திகைத்தான். பிரம்ம லோகத்தை ஆளும் பிரம்மாவை எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான் இராவணன். தன் செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தன் சொந்த அரக்க லோகத்திற்கு வெறுங் கையுடன் திரும்பி விட்டான்.
இனி சிவ தனுசால் என்ன பயன் என்று எண்ணி அதைத் துõக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்தார் ஜனக மகாராஜா.
சிவ பிரசாதம் என்றுமே சிவப் பிரசாதம் அல்லவா? இதை இராவணன் அறியவில்லையே என்று வருந்தி அந்த சிவதனுசுவை தான் எடுத்து வைத்துக் கொண்டு அதற்குத் தினமும் எல்லா விதாமன அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் பன்னெடுங் காலமாக ஆற்றி வந்தார் ஜனக மகாராஜா.
காலச் சக்கரம் சுழன்றது…
குழந்தை பாக்கியம் இல்லாததால் சீதையைப் பூமியில் கண்டெடுத்துத் தன் மகளாக ஜனகர் வளர்த்து வந்தார் அல்லவா?
சீதை சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு போய் சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது.
பந்தைத் தேடி வந்த சீதை தன் இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக துõக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.
இந்தக் காட்சியைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அந்த சிவ தனுசுவை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால்தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடது கையால் துõக்கி விட்டதே.
அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு எற்பட்டது.
இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மீக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்?
உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது? இப்படி பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா.
மகளுக்கு திருமண வயது வந்தவுடன் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அற்புதமான யோசனைகளையெல்லாம் கூறினர்.
இறுதியில் சிவ தனுசுவை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று அறிவித்தார். அதன் பிறகு நடந்தவைகள் உங்களுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீராமர் சிவதனுசை நாணேற்றி உடைத்துவிட்டார். அதன் பிறகு அவருக்கு திருமணம் நடந்தது.
அதற்குப் பின் முறிந்த
சிவ தனுசு என்னவாயிற்று? என்பதனைப் பற்றி பார்ப்போம்.
நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசில் ஆயிரக் கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் வாசம் செய்தனர்.
தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, சுவாமி, பன்னெடுங் காலமாக நாங்கள் இந்த சிவ தனுசிலே குடி கொண்டுள்ளோம்.
இப்போது இந்தத் தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் இலயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில்தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களுக்கு எங்கள் மார்கத்திலேயே ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும், என்றவுடன் ஜனகர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.
பின்னர் சிவ தனுசிலிருந்து வெளிவந்த எல்லா தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார்.
அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடி கொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன.
இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் இராவணனின் உடலைத் துளைத்து அவனைப் பரலோகத்திற்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே.
இராவணன் சிவ தனுசை முறையாகப் பயன்படுத்தாது யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவன் உயிரைக் கவர்ந்தன.
உண்மையில் இராமர் இராவணனைக் கொல்லவில்லை. இராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்று முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசே
at September 28, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி?

                     பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி?

*பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்*
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.
கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.
அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.
சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.
அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.
ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.
இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.
இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.
அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.
அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.
இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.
ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.
பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.
இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.
எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.
நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.
தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.
அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.
அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார்.
தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.
இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.
பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.
புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.
இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.
தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.
அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.
பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.
கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.
அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.
*மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்...
Image may contain: one or more people
at September 28, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • கருப்பர் வரலாறு :
                                                                            கருப்பர் வரலாறு :  "கருப்பண்ணசாமி' கருப்பன், கருப்பணன...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ▼  2026 (815)
    • ▼  August (3)
      • நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!
      • நாம் சும்மா சொல்லும் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரி...
      • ஆம்! "கற்றல் நிற்கும் இடத்தில்தான் முதுமை தொடங்குக...
    • ►  July (18)
    • ►  June (3)
    • ►  May (4)
    • ►  April (77)
    • ►  March (150)
    • ►  February (134)
    • ►  January (426)
  • ►  2025 (472)
    • ►  December (284)
    • ►  November (128)
    • ►  October (25)
    • ►  September (9)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ►  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ►  September (96)
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (493)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (101)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.