Tuesday, 21 August 2018

பொது அறிவு*

                                                                       பொது அறிவு*   
👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – *ஒட்டகப்பால்*.
👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
*கங்காரு எலி*.
👉துருவக் கரடிகள் அனைத்துமே *இடது கை* பழக்கம் உடையவை.
👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – *கரடி*.
👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் *கார்பன் மோனோ ஆக்சைடு* என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉சீனாவில் ஒரு மனிதனின் *பிறந்தநாள்* அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉ஆக்டோபஸ்க்கு *மூன்று இதயம்* இருக்கும். அதன் ரத்தம் *நீல நிறத்தில்* இருக்கும்.
👉குரங்குக்கு இரண்டு *மூளை* இருக்கிறது.
👉சூரியனின் வயது *470* கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய *பாறைகளை* கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.
👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் *ஜூலியஸ் சீசர்*. அதனால்-தான் இந்த முறைக்கு *சீசரியன்* என்று பெயர் வந்தது.
👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் *அழுதால்* கண்ணீர் வராது.
👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் *100* கேள்விகள் கேட்கும்.
👉தைவான் நாட்டில் உள்ள *மூன்யூச்* மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு *சிங்கம்*. ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் *15* ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் *சிங்கம்* கர்ஜிக்கும்.
👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – *சிங்கம்*.
👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் *ரத்தத்தால்* எழுதப்பட்டது.
👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – *ஒட்டகம்*.
👉இலைகள் உதிர்க்காத மரம் – *ஊசி இலை மரம்*.
👉காட்டு வாத்து *கருப்பு* நிறத்தில் தான் முட்டையிடும்.
👉குளிர் காலத்தில் *குயில்* கூவாது.
👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் *மூன்று மாதங்கள்* மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற *மோனாலிச ஓவியம்* இடது கையால் வரையப்பட்டது.
👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி *ஒன்பது நாள்* வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – *இதயம்*.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – *இதயம்*.
👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் *3100* பேர் தான்.
👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – *ஈரிதழ் சிட்டு*.
👉வால்டிஷ்ணி மொத்தம் *32* ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉ஒருதலைமுறை என்பது *33* ஆண்டுகள்.
👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – *புருஸ்லீ*.
👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை *குளிக்காமல்* தன் கூட்டுக்குள் நுழையாது.
👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி *ஆரஞ்சு* நிறத்தில் இருக்கும்.
👉சீல்வண்டுகள் *17* ஆண்டுகள் தூங்கும்.
👉யானை, குதிரை *நின்று* கொண்டே தூங்கும்.
👉நீர் நாய் *ஒன்றரை* நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉டால்பின் *ஒரு கண்* விழித்தே தூங்கும்
👉புழுக்களுக்கு *தூக்கமே* கிடையாது.
👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் *6* மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. ( இந்த அறிவியல் சிந்தனைகள் மனப்பாடம் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் எப்படி இருக்கும்.....நினைவு ஆற்றல் உலகத்தை ஜெயித்து விடலாம்...          

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.
3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5. ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6. ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7. ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர் வழங்க மாட்டார்.
8. ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும் , சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9. தேவை இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
10. ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள் அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக கருதாதீர்கள்.
11. வா வா என கூவி அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து, சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12. ஜோதிட ஆலோசனைப் பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து செல்லாதீர்கள்.



Monday, 20 August 2018

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும், என்ற ஆசை உண்டானது.

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும், என்ற ஆசை உண்டானது.

 அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும், என்ற ஆசை உண்டானது.
தீட்சை பெற வேண்டுமானால், அதற்கு குரு ஒருவரை அனுகி மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று, சாஸ்திரங்கள் கூறுவதை அவன் அறிந்திருந்தான்.
தொலைதூத்தில் இருக்கும் அந்த பிரம்மஞானியிடம் சென்று, மந்திரதீட்சை பெற முடிவு செய்தான்.
பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்கிடையே இருந்த குடிலுக்கு சென்றான்.
முதலில் அவரைப் பணிந்து வணங்கிக் கொண்டவன், எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.
மன்னனைஉற்று நோக்கிய பிரம்மஞானி, இவன் மந்திரதீட்சை பெறும் போதிய மனப்பக்குவம் இல்லாதவனாத் தெரிகிறான். இவனுக்கு மந்திரதீட்சை கொடுக்கும் தகுதி இப்போது இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்.
எனவே அரசனிடம், அரசே! நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை.
அதற்கு சில மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை என்று கூறினார்.
அரசன், தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தனால், ஞானி தீட்சை தராததால், மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.
தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார். எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு வேறு என்ன வழி? கூறுங்கள் என்று கேட்டான்.
மன்னர் பெருமானே!, நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவரிடம் நீங்கள் தீட்சை பெற்றுக் கொள்ளலாமே என்றார்.
மேலும், தாங்கள் விரும்பினால், உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் அமைச்சர்.
மன்னனும், அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான்.
அமைச்சர், பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார்.
பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.
அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கி அனுப்பி வைத்தான்.
அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது! தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு, இப்போது நான் பாடம் புகட்ட போகிறேன்!' என்று முடிவெடுத்தான்.
தன் வீரர்களை அழைத்தான். எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வர கட்டளையிட்டு அனுப்பினான்.
அரசன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் பிரமஞானியை வீரர்கள்.
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஞானியை ஏளனத்துடன் பார்த்து, என்ன எப்படி இருக்கிறீர்கள்? உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேனே ஞாபகம் இருக்கா!.
நீங்களோ, எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்களே! அதுவும் ஞாபகம் இருக்கா! இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ, அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன் என்றான்.
பிரம்மஞானி எதுவும் பேசாமல், அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான்.
ஓம் நமச்சிவாய இதுதானே மந்திரம்! இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்து விட்டது என்றான் ஆணவமாக.
அது கேட்ட பிரம்மஞானி, அரசே! இப்போது நான் சொல்வதுபோல், நீங்கள் சிறிது நேரம் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஏதும் புரியாத அரசனும் அதையும் பார்க்கலாம் என சம்மதித்தான்.
பிரம்மஞானி அரசனிடம், அரசே! நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில், நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள்.
அதே சமயம் நீங்கள், நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நிற்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன், பிரம்மஞானி நின்றுகொண்டிருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான்.
ஞானியோ சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.
பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தாரோ இல்லையோ, உடனே அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம், இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டார்.
இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு, அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள்.
திகைத்தார்கள்.
வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது அதிர்ச்சியாக அசையாது நின்றார்கள்.
இந்த நிலையில், பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன், அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி, இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டான்.
இவ்விதம் அரசன் சொன்னானோ இல்லையோ, வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள்.
அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார்....
அரசே! இப்போது இங்கு நடந்த சம்பவத்தில், உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும், பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்றார்.
நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால், என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை.
நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும், என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை, நிறைவேற்றவில்லை.
மாறாக, நீங்கள் அரியணையில் அமராமல், அங்கு நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். என்றாலும், உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றத் துணிந்தார்கள்.
எனவே நான் கூறிய அதே சொற்களை, நீங்கள் சொன்னபோதுதான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது.
நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் அதற்கு மதிப்பில்லாமல் போனது.
இதுபோல்தான் அரசே! மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள், சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம்.
ஆனால், மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான், அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும்.
இறையனுபூதி பெறாத ஒருவர், சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம்.
ஆனால், அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது.
தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும், மல மாசு நீங்கும், என்று கூறி முடித்தார்.
உண்மையையுணர்ந்த அரசன், ஞானியை கைது நிலையைத் தவிர்த்து, தன் தவறுக்கு வருந்தி இனி திருத்தமாக இருந்து கொள்வதாக அறிவித்தான்...
நிற்க...

நம்மில் பெரும்பாலோனோர் இந்த அரசனைபோலத்தான் இருக்க நேரிடுகிறது.
ஏன்... இந்த நிலை
நாம் அந்த ஞானியினை போல ஏன் இல்லை.
நாம்...
நமது அறிவினை எங்கிருந்து பெற்று... எப்படி உபயோகிக்கிறோம் என்பதிலேதான் இந்த கேள்விகளுக்கான சூட்சுமம் உள்ளது
பெரும்பாலும், மக்கள் தொடர்பில் வெற்றி பெற்றவர்கள் மிகப்பெரும் ஞானவான்களாக கருதப்படுவார்கள்.
ஆனால்...
அவர்கள் மிகப்பெரிய அறிவாளிகள் என்பதுதான் உண்மை
*ஞானி = குரு*
*அறிவாளி = புதன்*
இது பற்றி இன்னும் சில ஜோதிட குறிப்பு உள்ளது.
பொதுவாக ஞானிகள் இரண்டு விதமான பிரிவுகளில் வருவார்கள் என ஜோதிடம் கூறுகிறது
முதல் பிரிவினர் தனுசுவின் ஆதிக்கத்தில் இருப்பார்கள். இவர்கள் தனது அறிவினை உலகுத்துக்கு அறிவிப்பது... மற்றும் தனது பிரசங்க அறிவினை ஆதாரமாக கொண்ட முதல் பிரிவினரான இவர்கள் மதபோதகர்கள் ஆசான்கள் எனும் பிரிவில் வருவார்கள்
இரண்டாம் பிரிவினர் மீனம் ஆதிக்கம் மிகுந்தவர்கள். அமைதியாக உள்ளேயே இருந்து கொண்டே எதையும் அனுபவித்து மகிழ்வது.
ஆனால்
இந்த பிரிவினர் தன் அனுபவத்தினை தறுவதற்க்கு மிகவும் கஷ்டப்படுத்துவார்கள்.
இவர்களே சித்த புருசர்களாவார்கள்
அறிவாளிகள் பற்றியும் கருத்தினை ஜோதிடம் உரைக்கிறது
முதல் பிரிவு அறிவாளிகள்... மிதுனத்தின் ஆதிக்கம் மிகுந்தவர்களாக அமைந்திருக்கும்.
மக்களின் மத்தியில் பிரபலம் ஆவது சுலபமாக இருக்கும். அதனால் மிகப்பெரும் அளவில் செலவு செய்யகூட தயங்க மாட்டார்கள்.
ரகசியமான பின்புலம் பலமாக இருக்கும் இவர்களுக்கு...
இவர்கள் ஏற்றுக்கொள்ளாத விசயத்தினையும் கூட... அழகாக கூறுவதில் வல்லவர்கள்
இரண்டாம் பிரிவு அறிவாளிகள்... கன்னியின் புதன் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். இவர்கள் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் தெரியாமல் அனைத்தையும் சாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள்
இதனை அற்புதமாக ஜோதிடம் வகுத்து தந்துள்ளது என்து மீண்டும் வியப்புடன் நினைவு கூறத்தக்கது.

Sunday, 19 August 2018

ஆயுளைக் கணக்கிடும் முறை – ஆயுர்த்தாயம்

ஆயுளைக் கணக்கிடும் முறை – ஆயுர்த்தாயம்
  ஒரு மனிதனின் ஜாதகத்தை வைத்து அவனது ஆயுள் எத்தனை வருடங்கள் என்பதைக் கணிக்க முடியமா என்பது பெரும்பான்மை மக்களிடம் உள்ள ஒரு கேள்வி. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் எத்தனையோ சோதிட வல்லுனர்கள் தங்களது இடைவிடா முயற்சியில் பல்வேறு கணக்குகள் மூலம் இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று வந்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பல்வேறு கணக்குளோடு எந்தப் பரிச்சயமும் இல்லாத, அவைகளைத் தெரிந்து கொள்ள சிறிதும் முயற்சிக்காத, நவீனச் சோதிடர்கள், தங்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களின் எந்தக் கேள்விக்கும் சரியான பதிலைத் தராமல் புராணக் கதைகளைச் சொல்லியும், பரிகாரங்கள் செய்தும் இந்த அரிய சாத்திரத்தின் பெருமையைக் குலைத்து வருகின்றார்கள். உண்மையான சோதிடத்தின்பால் பற்றுள்ள, ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக அந்தப் பழைய கணக்குகளை இங்கே அறிமுகப்படுத்துகின்றேன்.

மந்திரேஸ்வரர் - பலதீபிகை
பலதீபிகை என்னும் சோதிட நூலை எழுதிய மந்திரேஸ்வரர் ஆயுள் பாவத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றார். லக்கினாதிபதியும் சுபக்கிரகங்களும் கேந்திரங்கள் என்னும் 1, 4, 7, 10ல் இருந்தால் தீர்க்காயுள் என்றும், பணபரங்கள் என்னும் 2, 5, 8, 11 ல் இருந்தால் மத்திமாயுள் என்றும், ஆபோக்லீமங்களில் இருந்தால் தீர்க்காயுள் என்றும் கூறும் அவர் இன்னொரு சித்தாந்தத்தையும் முன் வைக்கின்றார். அதாவது ஜன்மலக்னாதிபதியும், அட்டமாதிபதியும் மித்ருக் கிரகங்களாக இருந்தால் தீர்க்காயுள் என்றும், சமமானால் மத்திமாயுள் என்றும், சத்ருக்கிரகங்களாக இருந்தால் அற்பாயுள் என்றும் கணிக்கின்றார். இதுபோலவே சந்திர லக்னத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும். லக்னாதிபதியும் சூர்யனும் மித்ருக்கிரகங்களாக இருப்பின் தீர்க்காயுள் என்றும் சமராக இருப்பின் மத்திமாயுள் என்றும் சத்ருகிரகங்களாக இருப்பின் அற்பாயுள் என்றும் அவர் கணிக்கின்றார்.
இங்கே சில சந்தேகங்கள் எழுகின்றன. லக்னாதிபதியும், அட்டமாதியும் சத்ருக்களாக இருப்பின் அற்பாயுள் என்றால், ரிசப லக்னம், மகர லக்னம் ஆகிய லக்னங்களில் பிறப்பவர்கள் 36 வயதுக்கு மேல் வாழ முடியாது என்று அர்த்தமாகிவிடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை. எனவே நாம் மந்திரேஸ்வரரின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு அடிப்படையான விஷயத்தை அவர் முன் வைக்கிறார். லக்கினாதிபதியைவிட அட்டாமாதிபதி பலமாக இருந்தால் ஆயுள் குறைவு என்பதே அது. இவ்விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இருபதுக்குள் மரணத்தைச் சந்திக்கும் ஜாதகர்கள் விஷயத்தில் இது பொருந்திப் போகக் கூடும்.
வராகமிகிரர் - பிருஹஜ் ஜாதகம்
வராகமிகிரரின் சித்தாந்தத்தில் அற்பாயுள், மத்திமாயுள், தீர்க்காயுள் என்ற பேதங்கள் கிடையாது. ஒவ்வொரு கிரகமும் தத்தமது உச்ச பாகையில் இருந்தால் அக்கிரகங்கள் அவைகளுக்குச் சொல்லப்பட்ட வருடங்களை முழுமையாகத் தருகின்றன. மாறாக நீச்ச பாகையில் இருப்பின் அவைகளுக்குச் சொல்லப்பட்ட வருடங்களில் பாதியைத் தருகின்றன. ஒவ்வொரு கிரகமும் தத்தமது உச்ச அல்லது நீச பாகையில் இருப்பின் அவை கொடுக்கும் வருடங்கள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

ஆனால் சூர்யன் உச்சராசியில் இருக்கும் போது புதன் நீச வீட்டிலோ அல்லது மேஷத்திலோ இருக்க நேரும். எனவே அது நீச வீட்டில் இருப்பதாகக் கொண்டால் பாதி வருடங்கள் அதாவது ஆறு வருடங்களைக் கொடுக்கும். எனவே 127ல் 6ஜக் கழிக்க 121 வருடங்கள் வரும். எனவே அதிகபட்சமாக ஒரு மனிதன் 121 வருடங்கள் வாழ முடியும், புதனைத் தவிர்த்து எல்லாக் கிரகங்களும் உச்ச பாகையில் இருக்க நேரிட்டால்! ஆனால் வராகமிகிரர் என்ன காரணத்தினாலோ மனிதனின் பூர்ணாயுள் 120 வருடங்களும் 5 நாட்களும் என்று வரையறை செய்துள்ளார்.
இந்தப் பகுதியை நான் என் தந்தையாரிடம் பாடமாகக் கற்கும் போது “எல்லோருக்கும் எல்லாக் கிரகங்களும் எவ்வாறு உச்சமாக அமையாதோ அவ்வாறே நீச்சமாகவும் இருக்க முடியாதே! இரண்டுக்கும் இடைப்பட்டுத்தானே இருக்கும்? அப்படியானால் எல்லா மனிதரும் 127ல் பாதியான 63½க்கு மேல் வாழ்ந்தாக வேண்டுமே ஆனால் யதார்த்தம் அப்படியில்லையே” எனக் கேட்டேன். ‘சுலோகத்தின் அடுத்த பகுதியில் உனக்கு விடை இருக்கிறது’ என்றார் அவர். சத்துரு வீட்டில் இருக்கும் கிரகம் தனது வருடங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைக்கிறது. சனி, சுக்கிரன் தவிர்த்த மற்ற கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகியவை சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகும் போது தங்களது வருடங்களில் பாதியை இழக்கின்றன. அடுத்ததாகவும் ஒரு கணக்கு வருகிறது. லக்னத்துக்குப் பன்னிரண்டில் இருக்கும் பாபக் கிரகங்கள் தங்களது வருடங்களை முழுமையாக இழக்கின்றன. லக்னத்துக்குப் பதினோராமிடத்தில் உள்ள பாபக் கிரகங்கள் தங்களது வருடங்களில் பாதியை இழக்கின்றன. இதைப் போலவே பத்தில் 1/3, ஒன்பதில் ¼ , எட்டில் 1/5, ஏழில் 1/6 பங்குகளை இழக்கின்றன. சுபக் கிரகங்கள் பன்னிரண்டில் ½, பதினொன்றில் ¼, பத்தில் 1/6, ஒன்பதில் 1/8, எட்டில் 1/10, ஏழில் 1/12 பங்குகளை இழக்கின்றன. இவ்வாறு கணக்கிட்டபின் மிஞ்சி வருவதே ஒவ்வொரு கிரகமும் கொடுக்கும் ஆயுளாகும். ஏழு கிரகங்களும் கொடுக்கும் வருடங்களைச் சேர்த்து மொத்தமாகக் கிடைப்பதே ஒரு மனிதனுக்கு ஆயுளாகும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு கிரகம் மூன்று விதமாகத் தனது வருஷங்களைக் குறைக்கலாம்.
சத்ரு வீட்டில் இருக்கும் போது தனது ஆயுளில் 1/3 பங்கு குறைக்கிறது.
சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனமாகும் போது தனது ஆயுளில் பாதியைக் குறைக்கிறது.
லக்னத்துக்கு ஏழில் இருந்து பன்னிரண்டு முடியவுள்ள ராசிகளில் இருக்கும் போது பாபக்கிரகமாக இருந்தால் முறையே 1/6, 1/5, ¼, 1/3, ½, 1/1 பங்கைக் குறைக்கிறது. ஏழில் இருந்து பன்னிரண்டு முடியவுள்ள ராசிகளில் இருக்கும் போது சுபக்கிரகமாக இருந்தால் முறையே 1/12, 1/10, 1/8, 1/6, ¼, ½ பங்கைக் குறைக்கிறது.
சுக்கிரன் சனி இவர்களுக்கு அஸ்தமனக் குறைப்பு கிடையாது. வக்ரமாகக் கிரகங்கள் இருக்குமானால் அவை சத்ரு வீட்டில் இருந்தாலும் 1/3 பங்கு குறைக்க வேண்டியதில்லை

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:
⚫அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:⚫
⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.
⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?
⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.
⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.
⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...

நீ தேறமாட்டாய் " என்று வைத்தியர்

 நீ தேறமாட்டாய் " என்று வைத்தியர்

" நீ தேறமாட்டாய் " என்று வைத்தியர்
ஒரு நோயாளியைக் கைவிட்டு விட்டார்.
அவர் என்ன செய்தார் தெரியுமா?
இன்னொரு
டாக்டரைத் தேடிப் போகவில்லை.
வேறொரு
மருத்துவமனையை நாடவில்லை.

கடவுளைப் பக்கத்தில் இருக்கும்
ஒரு நண்பராகப் பாவித்துக் கொண்டார்.
" பார்த்தாயா தோழா!
டாக்டர் சொன்னது உன் காதில் விழுந்தது அல்லவா?
என்னைக் காப்பாற்றும் பொறுப்பு இனி உன்னுடையது.
நான் உழைக்க வேண்டும்.
அப்பொழுதுதான் என் குழந்தைகள் பிழைக்க முடியும்.
எனக்கு தைரியம் கொடு " என்று
உரத்த குரலில் பேசினார்.
பார்த்தவர்கள் அவருக்குப் பைத்தியமோ என்று பயந்தார்கள்.
வைத்தியர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வைத்தியநாதன் செய்தான்.
அன்று உற்சாகத்துடன் வேலை செய்தார்.
அடுத்த நாள்,
" டூகற்றுப் போலவே இன்றும் என்னுடன் இருக்க வேண்டும்.
என்னை முடுக்க வேண்டும்." என்று
வேண்டிக்கொண்டார்.ப
இப்படி அவர் ஒவ்வொரு செயலுக்கும் பக்கத்தில் உள்ள நண்பரைத் துணக்கழைப்பது போல் இறைவனை மனம் விட்டுக் கூவியழைத்தார்.
இரவு படுக்கும்பொழுது ,
" இறைவா!
உன்னால் இன்று முழுக்க நான் உற்சாகமாக இருந்தேன்.
என் குடும்பத்துக்கு உழைத்தேன்.
காலையில் இதே ஆர்வத்துடன் கடமையாற்ற என் பக்கத்திலேயே
பக்க துணையாக இரு " என்று
பிரார்த்தித்துக் கொண்டார்.
பிழைக்கமாட்டார் என்று கருதப்பட்டவர் குடும்பத்துக்குப் பிழைப்பு அளித்தார்.
எப்பொழுதும் நாம் இறைவனுடன் இருப்போம்.
அவன் உலக இச்சைகளை அடக்கி நம்மை உருப்பட வைப்பான்.
பலவீனம் இல்லாதவன் மனிதன் அல்ல.
மனித பலவீனத்தை மாற்றியமைக்க இன்னொரு மனிதனால் முடியாது.
இறைவனால்தான் இயலும்.
இறைவனை இறுகப்பற்றவும்.
இறுக்கிப் பிடிக்கவும்
பிரார்த்தனை துணை செய்யும்.
இந்த விடியல்
உங்கள் வாழ்விலும் விடியட்டும்.
முகமலர்ச்சியோடும்,
நம்பிக்கையுடனும் எழுந்து
புதிய நாளை துவங்க
இறைவன் அருள் புரியட்டும்.
ஒப்புயர்வான காலை வணக்கங்கள். 

இல்லறத்தில் இன்பம் பொங்க செய்ய வேண்டுமா

இல்லறத்தில் இன்பம் பொங்க செய்ய வேண்டுமா
உங்க இல்லறத்தில் இன்பம் பொங்க செய்ய வேண்டுமா? இந்த 3 விஷயத்தை முயற்சி பண்ணுங்க!
ஆரம்பத்தில் இனிக்கும் உறவுகள், போக, போக கசப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரம், ஆடம்பரம், குணாதிசயங்கள், தாம்பத்தியம், குழந்தை வளர்ப்பு, அழகு என பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் இல்லற வாழ்வில் பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் உண்டு.
எப்படி பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு இஞ்சி, பூண்டு, தேன் என்ற மூன்று நல்ல தீர்வளிக்க வல்லதோ. அதே போல தான் இல்லறத்தில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மூன்று வழிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கு காணலாம்...

செ(சொ)ல்வாக்கு!
உங்கள் துணைக்கு உங்கள் மீதான ஒரு செல்வாக்கும், சொல்வாக்கும் இருக்க வேண்டும். நீ சொல்வதை என்ன நான் கேட்பது, நீ என்ன பெரிய அறிவாளியா என்பது போல நடந்துக் கொள்ள கூடாது. இதை சரியாக பின்பற்றினாலே வீண் சண்டைகள், உறவில் விரிசல் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கேட்டால் என்ன தப்பு!
உங்கள் துணை உங்கள் சுதந்திரத்தை பறித்தால் தான் தவறு. உங்களுக்கு பாதுகாப்பாகவும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி கூறும் அறிவுரைகளை ஏற்பதில் எந்த தவறும் இல்லை. எனவே, உங்கள் மீது உங்கள் துணை அக்கறை எடுத்துக் கொள்ள தடை விதிப்பது தவறு. அக்கறை என்பது கொஞ்சுவது பாராட்டுவது மட்டுமல்ல, திட்டுவதும் கூட ஒரு வகையான அக்கறை தான்.
பாசம்!
கோபம் இருக்கும் இடத்தில் தான் பாசம் இருக்கும் என்பார்கள். அதற்கென கோபத்தை மட்டுமே காண்பித்து ஒ=கண்டிருக்க கூடாது. ரோட்டில் இருக்கும் குப்பையை வீட்டில் கொட்டுவோமா? இல்லை தானே. பிறகு ஏன் வெளியில் இருக்கும் கோபத்தை மட்டும் துணை மீது காண்பிக்க வேண்டும்.
பாராட்டு!
எல்லா உறவிலும் ஒரு பற்றை, அரவணைப்பை உண்டாக்குவது இந்த பாராட்டு தான். சில சமயங்களில் போலியான பாராட்டுகள் கூட நல்ல பலனை அளிக்கும்.
கேள்விகளும் வேண்டும்!
நம்மிடம் ஒரு பொருள் இருக்கும் வரை அதன் மதிப்பு தெரியாது. அதை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டோம். அதே அதை பிரிந்தால் மிகவும் வருத்தப்பாடுவோம். உடன் இருப்பவர் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். பேச்சுக்காகவாவது எப்படி இருக்க, இன்னிக்கு எப்படி போச்சு நாள், என்ன பண்ண இன்னிக்கி.. என சில கேள்விகள் கேட்டு பேச வேண்டும்.
அதற்கென நாளைக்கு என்ன சமையல், சட்டை இஸ்திரி பண்ணிட்டியா என வேலை ஆள் இடம் நடந்து கொள்வது போல கேள்வி கேட்க கூடாது.
இணைப்பு!
நெட்வர்க் இணைப்பு இருந்தால் தான் கால் செய்ய முடியும், இன்டர்நெட் இணைப்பு இருந்தால் தான் ஃபேஸ்புக், வாட்சைப் பயன்படுத்த முடியும். அதே போல கணவன், மனைவிக்குள் ஒரு நல்ல இணைப்பு இருந்தால் தான் குடும்பத்தை சரியாக வழிநடுத்த முடியும். இதை நீங்கள் செம்மையாக செய்து வந்தாலே, இல்லறம் எந்நாளும் நல்லறமாய் சிறக்கும்.

#பெண்களில்மனச்சோர்வுஎன்றால் என்ன?

#பெண்களில்மனச்சோர்வுஎன்றால் என்ன?

 பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு உடல் சார்ந்த நிலைகளைக் கடக்கிறார்கள்: பருவம் அடைதல், கர்ப்பம், தாய்மை, மாதவிடாய் முடிந்தகாலம் மற்றும் வயதான காலம். இந்த நிலைகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு மிகவும் திகைப்பூட்டக்கூடும். சில சூழ்நிலைகளில் இந்த நிலைகள் உடல் சார்ந்த நோய்களை உண்டாக்கி, அவை நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடும். அத்தகைய நோய்களைச் சமாளிக்க முயற்சி செய்வது அந்தப் பெண்ணின் மனநலத்தைப் பாதிக்கலாம், மனச் சோர்வு அல்லது பதற்றக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். ஐந்து பெண்களில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
#பெண்களில்மனச்சோர்வை உண்டாக்கக்கூடியசிலகாரணிகள்:
மாதவிடாய்ச் சுழற்சி மாற்றங்கள், அது தொடர்பான நோய்கள், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய அறிகுறிகள் (PMS), மெனோபாஸ், பாலியல் சார்ந்த மற்றும் உடல் பிம்பம் சார்ந்த பிரச்னைகள்
தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் இல்லாமல் இருத்தல் (பெற்றோர், கணவன் அல்லது மாமனார், மாமியாரால் கட்டுப்படுத்தப்படுதல்)
பணி, திருமணம் அல்லது இடம் பெயர்தல் காரணமாக ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள்
திருமணம் சார்ந்த பிரச்னைகள், உதாரணமாக விவாகரத்து, கள்ள உறவு அல்லது பொருந்தாத்தன்மை
இதற்கு முன் ஏற்பட்ட மனச்சோர்வுகள், குழந்தை பெற்றபிறகு ஏற்பட்ட மனச்சோர்வு
சமூக ஆதரவு இல்லாமல் இருத்தல்
விரும்பாத கர்ப்பம், கருச்சிதைவு அல்லது குழந்தைப்பேறு இல்லாமல் இருத்தல்
நிறையப் பொறுப்புக்களைச் சுமக்க நேர்தல் அல்லது தனிநபராகக் குழந்தையை வளர்த்தல்
உடல் மற்றும் மன முறைகேட்டினால் ஏற்படும் அதிர்ச்சி. இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள: நெருங்கிய கூட்டாளியின் வன்முறை.
#குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு என்றால் என்ன?
#குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனத் தளர்ச்சி:
பெரும்பாலான தாய்மார்களுக்கு இந்த விதமான உணர்வுகள் ஏற்படுகின்றன. அவர்கள் மனச்சோர்வுடன் காணப்படலாம், அவ்வப்போது அழலாம், எரிச்சல் அடையலாம், பதற்றம் அடையலாம், பசி எடுப்பதில் பிரச்சினைகள் வரலாம், தலை வலி ஏற்படலாம், ஞாபக மறதி வரலாம். இவையெல்லாம் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி ஆகும். இந்த நிலை தாற்காலிகமானது, பத்து நாள்களுக்குள் அந்தத் தாய் குணமடைந்து விடுவார். இந்த மனநிலை மாற்றங்கள் பல வாரங்களுக்குத் தொடர்ந்தால் அது குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு என்கிற பிரச்னையாக இருக்கலாம்.
#குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு:
குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு என்பது புதிய தாய்மார்களைப் பாதிக்கிறது, பொதுவாக முதல் ஆறு வாரங்களுக்கு இது நீடிக்கிறது. அதே சமயம் இந்த நோய் பல மாதங்களுக்கு அடையாளம் காணப்படாமலே இருக்கலாம். அல்லது எப்போதும் அடையாளம் காணப்படாமலே இருந்துவிடலாம். குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுக்குச் சிகிச்சை தரப்படவேண்டும்.
குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுக்கான உறுதியான காரணம் தெரியவில்லை, திடீர் ஹார்மோன் மற்றும் உடல் மாற்றங்கள், புதிதாகப் பிறந்த குழந்தையைக் கவனித்துக் கொள்கிற அழுத்தம் ஆகியவற்றால் இது ஏற்படலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
#குழந்தைபபேற்றுக்குப்பிந்தைய மனச்சோர்வின் அறிகுறிகள்:
* குறைந்த சுயமதிப்பு மற்றும் தன்னால் குழந்தையை வளர்க்க இயலுமா என்பது பற்றிய சந்தேகங்கள்
*தனக்கு யாரும் உதவுவதில்லை என்றும் எரிச்சலாகவும் உணர்தல். உண்மையில் இவர்களுக்கு சமூக, உணர்வு நிலை ஆதரவு நன்றாக இருந்தாலும் இவர்கள் இப்படி உணர்வார்கள்
*எப்போதும் குழந்தையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருத்தல் அல்லது குழந்தையைக் கவனிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருத்தல்
*வீட்டில் ஒழுங்கு நிலை மாறியிருப்பதால் ஏற்படுகின்ற அழுத்தம்
* உடல் மாற்றங்களைப்பற்றிக் கசப்பாக உணர்தல்
*குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது கூட இவர்களால் தூங்கமுடியாமல் இருத்தல்
~தங்களால் வேலைக்குத் திரும்ப இயலுமா இயலாதா என்பது பற்றிய அதீத பதற்றம்
தீவிர சூழ்நிலைகளில் தாய்க்குத் தற்கொலை அல்லது குழந்தையைக் காயப்படுத்துகிற சிந்தனைகள்கூட வரலாம். தனக்குப் பிரச்னை இருப்பதையே அவர் உணராமல் இருக்கலாம். அவருக்கு உடனடியாக உளவியல் உதவி தேவை, சில நேரங்களில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம். குடும்பம் அவரை நன்கு ஆதரித்து உதவினால் அந்தத் தாய் விரைவில் சிகிச்சை பெற்றுக் குணமாகிவிடுவார்.
#குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வை உண்டாக்கக் கூடிய ஆபத்துக் காரணிகள்
பின்வரும் காரணிகள் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வைத் தூண்டக்கூடும்:
*அந்தத் தாய்க்கு ஏற்கனவே குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு வந்திருக்கலாம்
*கர்ப்பத்துடன் தொடர்பு இல்லாத ஒரு மனச்சோர்வு நிலை ஏற்கனவே இருந்திருக்கலாம்
*அவருக்கு ஏற்கனவே இருதுருவக் குறைபாடு இருந்திருக்கலாம்
*குழந்தைப் பேற்றின்போது மருந்துகளைக் குறைத்திருக்கலாம் அல்லது நிறுத்தியிருக்கலாம்
*ஒரு கடினமான அல்லது மிகவும் அழுத்தம் தருகிற திருமணம் அல்லது உறவு அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்
கர்ப்பத்தின்போது அல்லது குழந்தைப் பேற்றின்போது மன அழுத்தம் தரும் வாழ்க்கை நிகழ்வுகள் ஏற்படடிருக்கலாம். (உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும்போது தீவிர உடல்நலக்குறைவு, குழந்தை முன்கூட்டியே பிறத்தல் அல்லது சிரமமான பிரசவம் அல்லது அன்புக்குரிய யாரையாவது பறிகொடுத்தல்)
*குடும்பம் அல்லது நண்பர்கள் ஆதரவளிக்காமல் இருக்கலாம்
*மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம்
#குழந்தைப்பேற்றுக்குப்பிந்தைய மனச்சோர்வுக்குச் சிகிச்சை பெறுதல்
சில தாய்களுக்கு உளவியல் சார்ந்த மருத்துவமோ மருந்துகளோ இரண்டுமோ சிகிச்சையாக வழங்கப்படும். அந்தத் தாயால் இயன்றால், அவர் தொடர்ந்து குழந்தைக்குப் பால் கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தையும் ஊட்டச்சத்து பெறும், அவரும் குழந்தையுடன் ஒரு பிணைப்பை உண்டாக்கிக் கொள்வார். மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இருக்கிற ஆபத்துகள் மற்றும் பலன்களின் சமநிலையை மருத்துவரும் அந்தத் தாயும் விவாதிப்பார்கள், ஆனால் மருந்துகளை எடுத்துக்கொள்வதா வேண்டாமா என்று அந்தத் தாய்தான் தீர்மானிக்க வேண்டும். குடும்பத்தினர் அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நன்கு ஆதரவளித்து அந்தத் தாயைப் பராமரித்தால் அவர் விரைவில் குணமாகி விடுவார்.
#குழந்தைப்பேற்றுக்குப்பிந்தைய மனச்சோர்வைச் சமாளித்தல் :
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ஆதரவு, உதவி கேட்கலாம். அப்படிக் கேட்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருந்துவிடக்கூடாது.
குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்குப் பிறருடைய உதவியைக் கேட்கலாம், அதன்மூலம் தங்களுக்குத் தேவையான தூக்கத்தை அவர்கள் பெற இயலும்.
வீட்டு வேலைகளான சுத்தப்படுத்துதல், சமைத்தல், துவைத்தல் மற்றும் இஸ்திரி போடுதல் போன்ற வேலைகளுக்குப் பிறருடைய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
தன்னுடைய குழந்தை தூங்கும்போது தூங்க முயற்சி செய்யவேண்டும்.
இவர்களுக்கு ஓர் ஒழுங்கு ஏற்படுவதற்குப் பலவாரங்கள் ஆகலாம்.
இவர்கள் தங்களுடைய சாப்பாடு, குளித்தல் மற்றும் சிறிய அளவிலான உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து நேரம் செலவிடவேண்டும்.
ஒருவர் தான் நன்றாக உணரவில்லை, தனக்குக் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கிறது என நினைக்கிறார் என்றால், எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதைப் பற்றி விவாதிக்கவேண்டும்.
மது மற்றும் பிற போதைப் பொருள்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.
குழந்தை பிறப்பதற்கு முன்னால் தான் மகிழ்ச்சியோடு செய்த ஏதாவது ஒன்றைக் கண்டறிந்து அதில் நேரம் செலவிடவேண்டும்.
நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு சிரமப்படக்கூடாது, அதே சமயம் எந்த வேலையும் செய்யாமலும் இருக்கக்கூடாது.
ஒரு நேரத்தில் ஒரு வேலையைப் பூர்த்தி செய்யவேண்டும்.
பெரிய வேலைகளைச் சிறிய வேலைகளாக மாற்றி எவ்வளவு இயலுமோ அவ்வளவு செய்யவேண்டும்.
பிறருடன் நேரம் செலவிடவேண்டும், ஒரு நண்பர் அல்லது உறவினரிடம் தன்னுடைய உணர்வுகளைப் பற்றிப் பேசவேண்டும்.
தன்னுடைய குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்குக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அல்லது நர்சின் உதவியை நாடலாம்.
தான் நன்றாக உணரும்வரை முக்கியமான வாழ்க்கைத் தீர்மானங்களை எடுக்காமல் இருக்க முயற்சி செய்யவேண்டும்.
நிதி, வேலை போன்ற முக்கியமான விஷயங்களைத் தன் குடும்ப உறுப்பினர்களிடம் விவாதிக்கவேண்டும்.
தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொள்ளக்கூடாது.
குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு எந்தப் புதிய தாயையும் பாதிக்கக் கூடும்.

சுகமான வாழ்வு தரும் துளசி கல்யாணம்!

சுகமான வாழ்வு தரும் துளசி கல்யாணம்!
 கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை மேற்படி நாளில் "உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும்.
கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும். அப்போது,
"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'
என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும். நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.
துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள்
துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.
துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா' என்ற பெயர்களும் உண்டு.
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம் வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்''
என்றார். மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை,
""பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள். ""பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.
ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான் சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசியாக மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய். அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.
கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள்.
அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. துளசி தெய்வீக சக்தி கொண்டது.
துளசிக்கு ஸுலபா, ஸரசா, அம்ருதா, ச்யாமா, வைஷ்ணவி, கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன.
மேலும், ஒன்பது வகையான துளசிச் செடிகள் உள்ளன. அவை: கரியமால் துளசி, கருந்துளசி, கற்பூர துளசி, செந்துளசி, காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை.
இதேபோல் ஆன்மிகத்திலும் இதற்கு தனிப்பெயர்கள் உள்ளன. அவை: திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி.
துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.
ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,
"துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம்
கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ
ஸோபதே'
என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும்.
பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.
சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி இடிக்கும்போது, இடியின் தாக்கம் நம் வீட்டின்மீது விழாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு உண்டு. நல்ல கிருமிநாசினியாகச் செயல்படுவதோடல்லாமல், ஆன்மிக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் போற்றப் படுகிறது.
வயிறு உபாதை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசி இலையை மென்று தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். ஜீரணசக்தியையும் புத்துணர்ச்சி யையும் அளிக்கவல்லது துளசி. மேலும் பல நோய்களை குணமாக்கும் சக்திகொண்டது.
வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு ஏற்றி வழிபட, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.
திருமால் ஆலயங்களில் துளசிவனம் இருக்கும். மேலும் துளசிமாடம் இருப்பதையும் காணலாம். துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம் ஒன்றுள்ளது. இது மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது.
ஆமையின் திருவுருவத்தின்மேல் அமைந்துள்ளது இந்தத் துளசி மாடம். இதன் அருகில் வில்வமரமும் உள்ளது.
ஜலந்திரனை அழிக்க சிவபெருமானுக்கு உதவிய மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் இருக்க, அவருக்குப் பிடித்தமான பிருந்தையான துளசி அவர் முதுகில் மாடத்தில் உள்ளாள்.
இந்தத் துளசிமாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி கணவனும் மனைவியும் வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம். இந்தத் துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; சுமங்கலிகள் நீடூழி வாழ்வர்.
வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும்.

குற்றத்தை செய்துவிட்டு..

குற்றத்தை செய்துவிட்டு..

குற்றத்தை செய்துவிட்டு..
அந்த குற்றத்தை எவ்வளவு பேர் ஒப்புக்கொள்கிறார்கள்..?
இறை அருளில் மூழ்காமல்
தன் விருப்பம் போல் ஆட்டம்
போடும் ஏ பிண நெஞ்சே..!

உன்னைப் போலத் தீவினை
செய்தவர்கள் இந்த உலகில் வேறு
யார் இருக்கிறார்கள்?
உன்னை விலக்கிவைக்க வேண்டு
மென்ற எண்ணம் சிறிதளவுகூட
இறைவனுக்கில்லை.
ஆனால் நீ தான் உன் வினைப்
பயனால், அவனுடைய திருவடி
மலர்களை அணுகாதிருப்பதை
உணர்ந்து, உன் தலையை முட்டி
மோதிக் கொள்ளவில்லை.
உன் உணர்ச்சியெல்லாம் இரும்பாக,
உள்ளம் கல்லாக இருக்கின்றன.
காது என்றால் என்ன என்றே எனக்குத்
தெரியவில்லை என நொந்துகொள்கிறாய்..
மனசு கல்லாகி விட்டது என
கூப்பாடு போடுகிறாய்...
உணர்வுகளும் இரும்பாகிப்
போச்சு என்கிறார்.
உனக்கு காது கேட்கவில்லையா என
கேட்டால் காது என்றால் என்ன? எனக் கேட்கிறாய்..
‘காது அடைத்திருக்கிறது’ என்று
சாக்குச் சொல்லாமல் “காதே இல்லை”
என ஒரே அடி அடிக்கிறாய்.
💜என் இறைவா.!
சிவபெருமானே..!💜
'எல்லாப் புகழும் இறைவனாகிய
உன் ஒருவனுக்கே' அதுபோல 'எல்லாத் தவறும் என்னுடையதே'
💚வினை என்போல்
உடையார் பிறரார்
உடையான் அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது
திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நன்மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் இன்னது என்று அறியேனே.💚
ஆத்ம சுத்தி
திருச்சதகம்..
கடவுள் நம்மை ஏற்றுக் காப்பாற்ற
எப்போதும் தயாராகவே இருக்கிறார். ஆனால் நாம்தாம் அவரை அணுகி
அருள் பெற முனைவதில்லை...
💚திருச்சிற்றம்பலம்.. 

நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.

நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.

 கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!!!!!!!!!!!!!!!!!!!!
நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.
ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.
நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது.
பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.
குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .
நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.
ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.
கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!
பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.
பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி
மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!
என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?
வேண்டுமானால் ‘பணத்தறிவில் ‘ முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.
ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!
உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.
இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.
இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம்.
நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?
அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?
நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?
தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?
இந்த நாலரை கோடி மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.
பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.

இந்திய தேசியச்சின்னங்கள்

இந்திய தேசியச்சின்னங்கள்

 தேசிய பறவை - மயில்
தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்
தேசிய மலர் - தாமரை
தேசிய விளையாட்டு - ஹாக்கி
தேசிய கொடி - மூவர்ணக் கொடி
தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தை உணர்த்திகிறது.
பச்சை நிறம் செழுமையை உணர்த்துகிறது,
வெண்மை நிறம் தூய்மையை உணர்த்துகிறது.
தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது.
தேசியக் கொடியில் அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்கள் 24
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை 22, 1947
மூவர்ணக் கொடியை இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலாக ஏற்றுக் கொண்ட வருடம் 1931
தேசிய விலங்கு -புலி
தேசிய சின்னம் - உத்திரபிரதேசத்தில் உள்ள அசோகரின் சாரநாத் ஸ்தூபி.
சாரநாத் ஸ்தூபியில் உள்ள நான்கு மிருகங்கள் சிங்கம், யானை, குதிரை, காளை.
தேசியகீதம் - ஜனகனமண
தேசிய கீதத்தை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்.
தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 24.1.1950.
முதன்முதலில் பாடப்பட்டது - 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள்.
தேசியப் பாடல் - வந்தே மாதரம்.
தேசியப் பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
முதன்முதலில் பாடப்பட்டது - 1896ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய நாட்காட்டி - சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது.
சக வருட நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது - 1957 அண்டு மார்ச் 22
தேசிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை.
தேசிய மரம்-ஆலமரம்.
தேசிய நதி - கங்கை / கங்கா
தேசிய பாரம்பரிய விலங்கு - யானை
தேசிய நாணயத்தின் அடையாளம் ₹

அசோக) சக்கரம்:

அசோக) சக்கரம்:

 அசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் என்ற சிந்தனை வட்டம் பற்றிய கருத்துக்களை நடத்தும்போது பல இடங்களில் இதற்கான காரணத்தை தேடியபோது சிக்கியதுதான் இது. வட்டத்தை 24 சமபாகங்களாக பிரிப்பது சற்று கடினமாக இருந்தது. பிறகு எப்படி எந்த கணக்கின்படி பிரித்திருப்பர் என தோன்றியது சிந்தனையை சற்று ஓடவிட்டபோது தோன்றியது
360° ஐ 24 ஆரக்கால்களால் வகுத்தால் 15° வருகிறது. ஒவ்வொரு ஆரக்கால்களுக்கும் இடையில் 15° இடைவெளி எதற்கு என பல கேள்விகளால் தேடல் பணியில் ஈடுபட்டபோது கிடைத்த சில தகவல்கள்.
தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்
அசோகர் பரப்பிய 24 தர்மங்களை குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தது.
அவைகள்:
1.அஹிம்சை
(உயிர்களுக்கு இன்னா செய்யாமை)
2.அப்பந்தா
(சிக்கனம், சேமிப்பு)
3.அபிச்சதி
பயபக்தி (பெரியோர்&ஆசிரியர்)
4.அபசினவம்
(மானமுடைமை)
5.உத்சஹா
(உற்சாகமாக செயலாற்றுதல்)
6.கிருதக்ஞாதா
(செய்நன்றி அறிதல்)
7.சத்யம்
(நேர்மையாக இருத்தல், உண்மையை போற்றுதல்.)
8.சமயப்பொறை
( மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்)
9.சாதுதா
( நல்லவர்களாக இருத்தல்)
10.சாம்யமா
(புலனடக்கம்)
11.சாத்வம்
(நன்மை தரும் செயல்களைச் செய்தல்)
12.சிரமசேவிதம்
( கடின உழைப்பு)
13.சுஷ்ருதா சரீர சஹாயம்
(உடல் நோய் தீர்த்தல்)
14.சௌசம்
(உடல் தூய்மை)
15.தயை
(இரக்ககுணம்)
16.தானம்
(வறியோர்க்கு வழங்கல்)
17.தம்மதானம்
( தர்மத்தைப் பரப்புதல்)
18.தம்ம விஜயம்
(அறத்தின் வழிபெறும் வெற்றி)
19.தர்மதாமதா
(அறம் செய்வதில் ஆர்வம்)
20.த்ருதபக்திதா
(மாறாத அன்புள்ளம்)
21.பயம்
(பாவம் செயவதில் அச்சம்)
22.பரிக்‌ஷா
(தன்னம்பிக்கை)
23.பாவசுத்தி
(எண்ணத்தூய்மை)
24.மார்த்தவம்
(அருளுடைமை)அசோக சக்கரம்:
கவிதை எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் ஆனால் அறிய தகவல்களை அதற்குண்டான நேரத்தில் பதிந்தால்தான் அதற்க்கான மதிப்பு நம் நெஞ்சத்தில் தங்குமென்பதால்தான் இதை இங்கு இப்போது பதிவிட்டேன்.

கண் திருஷ்டியில் இருந்து காக்கும் தர்மம்

கண் திருஷ்டியில் இருந்து காக்கும் தர்மம்

 எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன.
ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங் களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை ஏற்பட கண்ணேறு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.
அதனால்தான் ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். சிலருடைய பார்வைக்கு அவ்வளவு வலிமை உண்டு. எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும். எனவே நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, ‘திருஷ்டி’யாக மாறுகிறது. இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.
இதனை முற்காலத்தில் உணர்ந்த நம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு பொட்டு வைக்கும் பொழுது திருஷ்டி பொட்டு என்று ஒன்றைக் கன்னத்தில் வைப்பார்கள். அதே போல் நன்கு ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு இரவு திருஷ்டி சுற்றித்தீபம் ஏற்றி வைப்பார்கள்.
ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் வாயிற்படியின் நிலையில் மாவிலை தோரணம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக கட்ட வேண்டும். மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதனால் எதிர்மறைச் சக்திகள் மாறி, நேர்மறை சக்திகள் வீட்டில் வியாபிக்கத் தொடங்குகின்றது. வழிகாட்டும் காலடி மண், மிளகாய், உப்பு போன்றவற்றை சுற்றி நெருப்பிலிட்டு அதிலிருந்து வரும் நெடியைப் பொறுத்து நமது கண் திருஷ்டியை அறிந்து கொள்ளலாம். எலுமிச்சை, படிகாரம், குங்குமம், கற்றாழை, பூசணிக்காய் போன்றவை எல்லாம் திருஷ்டியைப் போக்கும் பொருட்களாகும்.
வீட்டில் எப்பொழுதும் உயரமான விளக்கு மாடம் அமைப்பது கண்திருஷ்டியைப் போக்கும். அதே போல இல்லத்தில் நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருப்பது போல் வைப்பதும் நல்லது. வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டாலும் எதிரிகளின் தொல்லை குறையும். சிலர் வீட்டில் படிகாரத்தைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த படிகார உப்பு கரைவது போல, நமது துன்பங்களும் கரையும் என்பது நம்பிக்கை.
கிராமங்களில் உள்ள பெரியவர்கள் கல் உப்பை திருஷ்டி சுற்றி தண்ணீரில் கரைய வைப்பர். இல்லத்தில் கண்திருஷ்டி விநாயகர் படத்தை வாசல்படியில் நுழையும் இடத்தில், வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். திருஷ்டி பொம்மை படத்தையும் வைக்கலாம். வீட்டின் நுழைவு வாசலில் நந்தி வீதியைப் பார்க்கும் படி வைக்கலாம். அதனால் நமது தடைகள் அகலும். தனவரவு கூடும். வீடுகட்டும் பொழுது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம். அதில் மற்றவர்களின் கண்பார்வை பதியும் போது திருஷ்டி மாறும் என்பது நம்பிக்கை.
வீட்டில் தும்பை, துளசி, மணிபிளாண்ட், வெற்றிலை, அருகம்புல் போன்ற செடிகளை வளர்க்கலாம். இவை இல்லத்தை மட்டுமல்ல நமது உள்ளத்தையும் புனிதமாக்கும் மூலிகைகளாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு கண் திருஷ்டி இருந்தாலும் தீபத்திற்கு அதை மாற்றும் ஆற்றல் உண்டு. வீடு எப்பொழுதும் லட்சுமிகரமாக இருந்தாலே நம்மை எந்த எதிர்ப்பு சக்தியும் அணுகாது.
பூஜை அறைக்குள் தேவையில்லாத நபர்களை அனுமதிக்கக் கூடாது. சிலர் படங்களை மாற்றி அமைக்க யோசனை சொல்வார்கள். யாருக்காகவும், எதற்காகவும் அதையெல்லாம் மாற்றியமைக்கக் கூடாது. நம் வீட்டு பாரம்பரியப்படி தான் படங்களை வைத்து வழிபட வேண்டும்.
பெரிய இல்லங்கள் கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் எல்லாம், பாதிவேலை முடிந்த உடனேயே பால் காய்ச்சி விடுகின்றனர். பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவர். கிரகப் பிரவேசத்திற்கு வருபவர்களின் எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். எனவே நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். ஹோமங்கள் வைப்பதெல்லாம் நேர்மறை சக்தி, நம் வீட்டில் நிலைத் திருப்பதற்காகத்தான் செய்கின்றோம். மணமக்களுக்கு மஞ்சு நீராடல் என்ற ஒரு சடங்கு இருக் கிறது. இது மணமகன், மணமகளுக்கு இருக்கும் திருஷ்டியைப்போக்குவதற்காக வைத்ததாகும். மஞ்சளுக்கு திருஷ்டி தோஷம் போக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அழகான தம்பதியர் திருஷ்டி தோஷத்தால் உடல்நலம் பாதிக்காமல் இருக்க இந்த சம்பிரதாயம் நடத்துவர்.
வீட்டில் எல்லா அறைகளையும் திறந்து வைக்கக்கூடாது. சரியான முறையைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எப்படிப்பட்டவர்கள் பார்வை நம்மீது பட்டாலும் அது நம்மை பாதிக்காது. முருகப்பெருமானைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வழிபடுவது, எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும். மேலும் கணபதி ஹோமத்திலிருந்து கிடைக்கும் சாம்பலை வீட்டு பூஜையறையில் வைக்கலாம்.
எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் ஏழைகளுக்கு உதவுதல், முதியோர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தல், வறுமையில் வாடுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தாலே, அவை நமக்கு நல்ல வழிகாட்டும். அதனால் தான் ‘தர்மம் தலைகாக்கும்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருஷ்டி தோஷம் போக்கும் வல்லமை, முதியோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் உண்டு.

ஆண்ட தலைவர்கள் விபரம்!

ஆண்ட தலைவர்கள் விபரம்!

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!
முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .
1193 : முஹம்மது கோரி
1206 :குத்புதீன் ஐபக்
1210 :ஆரம்ஷா
1211 : அல்தமிஷ்
1236 : ருக்னுத்தீன் ஷா
1236 : ரஜியா சுல்தானா
1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266 : கியாசுத்தீன் பில்பன்
1286 : ரங்கிஷ்வர்
1287 : மஜ்தன்கேகபாத்
1290 :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292 :அலாவுதீன் கில்ஜி
1316 :ஷஹாபுதீன் உமர் ஷா
1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா
1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக் வம்சம்
1320 :கியாசுத்தீன் துக்ளக்
1325 : முஹம்மது பின் துக்ளக்
1351 :பெரோஸ்ஷா துக்ளக்
1388 : கியாசுத்தீன் துக்ளக்
1389 : அபுபக்கர்ஷா
1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394 :அலெக்சாண்டர் ஷா
1394 : நாஸிருத்தீன் ஷா
1395 : நுஸ்ரத் ஷா
1399 :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413 :தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414 :கஜர்கான்
1421 :மெஹசுத் தீன் முபாரக் ஷா
1434 : முஹம்மது ஷா
1445 :அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி
1451 : பெஹ்லூல் லோதி
1489 : அலெக்சாண்டர் லோதி
1517 : இப்ராஹிம் லோதி
(லோதி ஆட்சி 75 வருடம்)
முகலாயர் ஆட்சி
1526 : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி
1539 : ஷேர்ஷா சூரி
1545 :அஸ்லம் ஷா சூரி
1552 :மெஹ்மூத் ஷா சூரி
1553 :இப்றாஹிம் சூரி
1554 :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி
1555 :ஹிமாயூன்
1556 :ஜலாலுத்தீன் அக்பர்
1605 :ஜஹாங்கீர் சலீம்
1628 :ஷாஜஹான்
1659 : ஒளரங்கசீப்
1707 :ஷாஹே ஆலம்
1712 :பஹதூர் ஷா 1713 :பஹாரோகஷேர் 1719 :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754 :ஆலம்கீர் 1759 :ஷாஹேஆலம்
1806 :அக்பர் ஷா
1837 :பஹதூர்ஷா ஜஹபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி
1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ;லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 : லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ்கர்னல்
1905: லார்டு
கில்பர்ட்
1910 :லார்டு
சார்லஸ்
1916 :லார்ட் பிடரிக்
1921 : லார்ட் ரக்ஸ்
1926:.லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936 :லார்டு ஐ கே
1943:லார்டு அரக்பேல்
1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங் 1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P.V. நரசிம்மராவ்
1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி
1996: A.J. தேவகொளடா
1997: I.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு மிகவும் சக்தி உண்டு

                                                    ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு
                                                        மிகவும் சக்தி உண்டு

பறவைகளிலேயே ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு
மிகவும் சக்தி உண்டு கூறுவர். இந்த ஒலியை ‘கருடத்வனி’ என்று கூறுவர். இது சாம வேதத்வனியாகும்.
திருமணத்தில் திருமாங்கல்யம் கட்டும்போது
கருடத்வனி ராகத்தில் நாதஸ்வரத்தில்
இசைப்பார்கள். அவ்வளவு மகிமை வாய்ந்தது.
ஶ்ரீ கருட துவாதச நாமவளி:
ஸ்ரீ கருட பகவானின் பன்னிரண்டு துவாதச நாமங்கள் அடங்கியுள்ள இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் பாராயணம் செய்து வந்தால் அன்றைய தினம் அனைத்தும் ஜெயமாகும்.
ஸுபர்ணம் வைனதேயம்ச நாகாரீம் நாகபூஷணம்
விஷாந்தகம் ஸஸாங்கம் ச ஆதித்யம் விஸ்வதோ முகம் 1
கருத்மந்தம் ககபதிம் தார்க்ஷயம் கஸ்யப நந்தனம்
த்வாதச யேதானி நாமானி கருடஸ்ய மஹாத்மன: 2
ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வத்ர விஜயீ பவேத்
விஷம் நாக்ரமதே தஸ்ய ந தம் ஹிம்சதி பன்னக: 3
ஸங்க்ராமே வ்யவாஹாரே ச கார்யஸித்திம் ச மானவ:
பந்தனான்முக்தி மாப்நோதி யாத்ராயாம் ஸித்தி மாப்னுயாத் 4
கார்யஸித்திம் குருஷ்வார்ய விஹகாய நமோஸ்துதே 5
இதி ஸ்ரீகருட த்வாதஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும்
ஆளாக மாட்டார்கள்.
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
கருட அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் வைநதேயாய நம:
ஓம் ககபதயே நம:
ஓம் காச்யபேயாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் தப்தகாஞ்சநவர்ணாபாய நம:
ஓம் ஸுபர்ணாய நம:
ஓம் ஹரிவாஹநாய நம:
ஓம் ச்சந்தோமயாய நம:
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் விஷ்ணுபக்தாய நம:
ஓம் குந்தேந்து தவளாநநாய நம:
ஓம் சக்ரபாணிதராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் நாகாரயே நம:
ஓம் நாகபூஷணாய நம:
ஓம் விஜ்ஞாநதாய நம:
ஓம் விசேஷஜ்ஞாய நம:
ஓம் வித்யாநிதயே நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் புவநத்ராத்ரே நம:
ஓம் பயக்நே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்யச்சந்தஸே நம:
ஓம் மஹாபக்ஷாய நம:
ஓம் ஸுராஸுரஸுபூஜிதாய நம:
ஓம் கஜபுஜே நம:
ஓம் கச்சாபாசிநே நம:
ஓம் தைத்யஹந்த்ரே நம:
ஓம் அருணாநுஜாய நம:
ஓம் அம்ருதாம்சுவே நம:
ஓம் அம்ருதவபுஷே நம:
ஓம் ஆநந்தநிதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் நிகமாத்மநே நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிஸ்த்ரைகுண்யாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிர்விகல்பாய நம:
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம:
ஓம் பராத்பரதரப்ரியாய நம:
ஓம் சுபாங்காய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் சூராய நம:
ஓம் ஸூக்ஷ்மரூபிணே நம:
ஓம் ப்ருஹத்தமாய நம:
ஓம் விஷாசிநே நம:
ஓம் விஜிதாத்மநே நம:
ஓம் விஜயாய நம:
ஓம் ஜயவர்த்தநாய நம:
ஓம் ஜாட்யக்நே நம:
ஓம் ஜகதீசாய நம:
ஓம் ஜநார்த்தநமஹாத்வஜாய நம:
ஓம் ஜநஸந்தாபஸஞ்சேத்ரே நம:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம் கல்யாணதாய நம:
ஓம் கலாதீதாய நம:
ஓம் கலாதரஸமப்ரபாய நம:
ஓம் ஸோமபே நம:
ஓம் ஸுரஸங்கேசாய நம:
ஓம் யஜ்ஞாங்காய நம:
ஓம் யஜ்ஞவாஹநாய நம:
ஓம் மஹாஜவாய நம:
ஓம் அதிகாயாய நம:
ஓம் மந்மதப்ரியபாந்தவாய நம:
ஓம் சங்கப்ருதே நம:
ஓம் சக்ர தாரிணே நம:
ஓம் பாலாய நம:
ஓம் பஹுபராக்ரமாய நம:
ஓம் ஸுதாகும்பதராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் துராதர்ஷாய நம:
ஓம் அமராரிக்நே நம:
ஓம் வஜ்ராங்காய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வந்த்யாய நம:
ஓம் வாயுவேகாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் விநதாநந்தகாய நம:
ஓம் ஸ்ரீ கருத்மதே நம:
ஓம் விஜிதாராதிஸங்குலாய நம:
ஓம் பதத்வரிஷ்டாய நம:
ஓம் ஸர்வேசாய நம:
ஓம் பாபக்நே நம:
ஓம் பாசமோசநாய நம:
ஓம் அர்நிஜிதே நம:
ஓம் ஜயநிர்க்கோஷாய நம:
ஓம் ஜகதாஹ்லாதகாரகாய நம:
ஓம் வக்ரநாஸாய நம:
ஓம் ஸுவக்த்ராய நம:
ஓம் மாரக்சாய நம:
ஓம் மதபஞ்ஜநாய நம:
ஓம் காலஜ்ஞாய நம:
ஓம் கமலேஷ்டாய நம:
ஓம் கலிதோஷ நிவாரணாயயோம் நம:
ஓம் வித்யுந்நிபாய நம:
ஓம் விஸாலாங்காய நம:
ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம:
ஓம் ஸோமபாத்மநே நம:
ஓம் த்ரிவ்ருந்மூர்த்நே நம:
ஓம் பூமிகாயத்ரி லோசனாய நம:
ஓம் ஸாமகாநரதாய நம:
ஓம் ஸ்ரக்விநே நம:
ஓம் ஸ்வச்சந்தகதயே நம:
ஓம் அக்ரண்யே நம:
ஓம் கருத்மதே நமஹ.



!"ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்"

!"ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்"

 தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம்.
பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.
ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்.
இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனிகிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்கிர(வெள்ளி)கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்.
நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம்_
இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்.
ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்
இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்_
தங்கம்
தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும்.
அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள்.
கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை.
இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்.
வெள்ளி
வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது. இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது சூட்சமம்.
செம்பு
செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை விழிப்புடன் வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது.
இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது,
மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும்,
மூளையின் செயல் திறன் அதிகமாகும்.
இரும்பு
இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்.
இதன் சூட்சம ரகசியம்
“இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வை” என்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும்.
குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்.
ஈயம்
இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது.
இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்.
இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும்.
இதன் விலையும் மலிவாக தான் உள்ளது.
இந்த பஞ்சலோகத்தால் ஆன பழைய சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் விற்கிறார்கள் என்றால் அதில் விசயம் இல்லாமல் இல்லை.
அது பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை.
எப்படி இருப்பினும் இந்த பஞ்சலோகத்தால் நன்மை அதிகம் என்பது திண்ணம்.

தீபங்கள் பற்றிய

                                                         

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

                                                        தீபங்கள் பற்றிய
 1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. நெய்வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.
3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது. ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது. இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.
4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும். திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம். பூஜைக்குரிய வெற் றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.
5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.
7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.
8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.
9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.
10. விநாயக பெருமானுக்கு - 1, 7 தீபம், முருகருக்கு - 6 தீபம், பெருமாளுக்கு - 6 தீபம், நாக அம்மனுக்கு - 4 தீபம், சிவனுக்கு - 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு - 2 தீபம், மகாலட்சுமிக்கு - 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன் - சிங்கம் - நந்தி முன்பாக, பிள்ளையார் - பெருச்சாளி முன்பாக, பெருமாள் - கருடன் முன்பாக, முருகர் - மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.
12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு - 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந் தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயா லாற்ற வைத்து, நிலை யான அமைதியைத் தரும்.
14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில தீபம் ஏற்ற வேண்டும்.
15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடைய லாம்.
17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண் டாது.
18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.
19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண் டும்.
20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.*

பயனுள்ள ஆன்மீக தகவல்கள் 🌹

பயனுள்ள ஆன்மீக தகவல்கள்
 1 சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.
2 துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

3 சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு சீட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.
4 மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
5 இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.
* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும். துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
6 சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.
7 வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.
8 தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும்.
9 மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.
10 சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.
11 குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.
12 இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.
13 வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.
14 அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.
15 சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்

Saturday, 18 August 2018

நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை*_

நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை*_ 

 நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.
நீண்டகாலமாக பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது தான் ‘விதியை வெல்ல முடியுமா?’. ‘முடியும்’ என்கிறார்கள் ஒரு சாரார். ‘முடியும் என்பதற்கு பின்னால் முயற்சியும் இருக்க வேண்டும்’ என்பது அவர்கள் கூற்று.
‘முடியாது’ என்பது இன்னொரு தரப்பினரின் வாதம். அவர்கள், ஊழ்வினை, பூர்வ புண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்கு துணைக்கு அழைக்கிறார்கள். ‘பிறப்பின் போதே அமர்ந்த கிரகங்கள் தான் ஒருவரின் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. எது எப்போது நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று’ என்பது அவர்களின் வாதம்.
இவை ஒருபுறம் இருந்தாலும், கிரக பலன்களை சொல்ல வந்த ஞானிகள், பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்க முடியாது. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால், அதற்கு எதிர்முனையில் முடிவு ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நம்மை ஆளும் நவக்கிரகங்கள் நம்மை பாதிக்கும் போது, அதில் இருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம் தான் பரிகாரம்.
வியாதி வருவது விதி என்று எடுத்துக் கொண்டால், மருந்து உண்டு நிவாரணம் தேடுவது விதியை வெல்லும் வழி. விதியை வெல்லும் வழியை இறை வழிபாட்டின் மூலமும், சில சமயம் மருந்துகளின் துணையோடும் வெல்ல முயன்றிருக்கிறது மனித இனம். அவர்கள் தான் நம் முன்னோர்கள்.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். மனிதனுக்கு தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.
அதனால்தான்...
‘கலையாத கல்வியும், குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும், கன்றாத வளமையுங்
குன்றாத இளமையும், கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்..’ கேட்டு அம்பிகையிடம் வேண்டுதல் வைக்கிறார் அபிராமிபட்டர்.
அப்படி அபிராமிபட்டர் ‘கழுபிணி இல்லாத உடல்’ என்ற ஒன்றை தர வல்லவர், தன்வந்திரி பகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வது போல், மருத்துவ கடவுள், இந்த தன்வந்திரி பகவான்.
அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலில் இருந்து தோன்றியவர், தன்வந்திரி பகவான். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு அவதரித்தவர். நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.
அதுமட்டுமல்ல.. மருந்து உண்பதற்கு நேரமும் இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள் கொடுத்த மகத்தான கொடை தான் பஞ்சாங்கம். அது வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை சொல்வதோடு நின்று விடவில்லை. இந்த காலக் கணிதத்தின் வாயிலாக சகலமும் அறியலாம்.
அந்த பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலில் இருந்து, நாம் எடுக்க நினைக்கும் முத்து தான், அமிர்தகடிகை அல்லது அமிர்த நாழிகை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வியாதிக்கு மருந்து உண்ணும் நேரம். இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது.
அந்த வகையில் அமிர்த நாழிகையை கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை, மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற வேண்டும். அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும் என்பது கவிகாளிதாசர் எழுதிய ‘உத்திரகாலாமிர்தம்’ என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.
மருந்து உண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல் இருக்கிறது. எனவே அமிர்த நாழிகை தொடக்கம் முதல் முடிவு வரை 1½ மணிநேரம் இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால் கூட, அதன் மத்திம நேரத்தில் மருந்து உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த இடத்தில் இன்னொறு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.
ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காக காத்திருக்க முடியாது. அதே போல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால் அந்த நோய் பூரணமாக குணமாகும்.
மருந்து உண்ணும் நேரம்
நோய்கள் குணமாக மருந்து உண்ண வேண்டிய அமிர்த நாழிகை நேரம் வருமாறு:-
அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்
பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்
கார்த்திகை 50 முதல் 54 நாழிகைக்குள்
ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்
மிருகசீரிஷம் 30 முதல் 34 நாழிகைக்குள்
திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்
புனர்பூசம் 14 முதல் 18 நாழிகைக்குள்
பூசம் 16 முதல் 20 நாழிகைக்குள்
ஆயில்யம் 40 முதல் 44 நாழிகைக்குள்
மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
பூரம் 30 முதல் 34 நாழிகைக்குள்
உத்திரம் 33 முதல் 37 நாழிகைக்குள்
ஹஸ்தம் 7 முதல் 11 நாழிகைக்குள்
சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்
சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்
விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
அனுஷம் 14 முதல் 18 நாழிகைக்குள்
கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்
மூலம் 14 முதல் 18 நாழிகைக்குள்
பூராடம் 10 முதல் 14 நாழிகைக்குள்
உத்திராடம் 14 முதல் 18 நாழிகைக்குள்
திருவோணம் 20 முதல் 24 நாழிகைக்குள்
அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்
சதயம் 20 முதல் 24 நாழிகைக்குள்
பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்
உத்திரட்டாதி 18 முதல் 22 நாழிகைக்குள்
ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்
இந்த கால நேரத்தில் மருந்து உண்டால், நோய்கள் விரைவில் பூரண குணமடையும் என்பது நமது சித்தர்கள் கண்ட ராஜ வைத்தியமாகும்...

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...