Wednesday, 11 October 2017

சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா?

சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா? 

 இருக்கிறது என்றால் என்ன?சர்ப தோஷம் என்பது என்னவென்றால் 

லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம். ராசிக்கும் இதுபோல் இருந்தால் அதுவும் சர்ப தோஷம். ராகு, கேது தவிர எல்லா கிரகங்களும் அடங்கிவிடுகிறதென்றால் அதற்குப் பெயர் கால சர்ப தோஷம். 




சர்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், 


கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷயத்திற்கு சர்ப தோஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது.

 அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம்.

 
ஆனால், கால சர்ப தோஷத்திற்கு கால சர்ப தோஷத்தை சேர்க்கக்கூடாது. கால சர்ப தோஷம் என்பது என்னவென்றால், எல்லாவற்றையுமே காலம் கடத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, படிச்சாரு, வேலை கிடைக்கவில்லை. 


இல்லையென்றால் படித்ததற்கும், வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரியெல்லாம் கொண்டு போகும். இதேபோல, கூடுதலா 2 மார்க் வந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை எங்கேயோ போயிருக்கும், இல்லையென்றால் ஐஐடியில் சேர்ந்திருப்பார் என்றெல்லாம் கூறுகிறார்களே இதெல்லாம்தான் கால சர்ப தோஷம். 

அதாவது வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று கடைசி நேரத்தில் வெற்றியை குறைக்கக் கூடிய அம்சம் இந்த கால சர்ப தோஷத்திற்கு உண்டு. காலமெல்லாம் நினைத்து நினைத்து வருந்துவது என்று சொல்வார்களே,


 அதுதான் கால சர்ப தோஷம். இதேபோல எல்லாவற்றையுமே தாமதமாக்கும். படித்து முடித்தால் வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்தது பிறகு கல்யாணத்திற்கு எவ்வளவோ தேடினார்கள், கடைசியில் ஏதோ ஒன்று சிம்ப்பிளாக பார்த்து முடிக்க வேண்டியதா போய்விட்டது. சரி, குழந்தை அது அதைவிட தாமதம். பிறகு அதற்காக டாக்டர்களிடம் அலைந்து அதன்பிறகுதான் குழந்தை பிறந்தது. இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இப்படி கால, நேரத்தை விரயமாக்கி, காலத்தைக் கடத்தி தரக்கூடியது கால சர்ப தோஷம். 

இப்படி கால சர்ப தோஷத்தில் இருப்பவர்களுக்கு பிறக்கிற குழந்தைக்கும் கால சர்ப தோஷம் தொடரும்.


 எனவே அந்தக் குழந்தையை வளர்க்கிற விதத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசப்பட வேண்டும்.

 குழந்தையை நெருக்குதல் கொடுக்காமல், கடினமாக நடந்துகொள்ளாமல் இயல்பாக திட்டமிட்டு வளர்க்க வேண்டும்

. இதுமாதிரி கொண்டு வந்தால் கொஞ்சம் தவிர்க்கலாம். இல்லை, கொஞ்சம் அவர்கள் மாறிப் போகிறார்கள் என்றால், அவர்களை விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.

 அதைவிட்டு விட்டு அவர்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்தால் அது கொஞ்சம் சிக்கலாகும்.

 இதுபோன்று சில விஷயங்களெல்லாம் உண்டு. கால சர்ப தோஷ அமைப்பில் பிறந்த குழந்தைகளை பெருந்தன்மையாக கொண்டு செல்ல வேண்டும். அப்பதான் அவர்கள் நன்றாக இருப்பார்கள். 

அதைவிட்டு விட்டு, ஆரம்பத்திலேயே நீ டாக்டராக வேண்டும், எஞ்ஜினியர் ஆக வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் எதையும் விதைக்கக் கூடாது. நன்றாக படி, என்ன கிடைக்கிறது என்று பார்க்கலாம். 


அந்த நேரத்தில் என்ன விருப்பமாக இருக்கிறதோ அதில் சேர்ந்துகொள் என்று பேசி வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு டாக்டராக்குகிறேன் என்று சொல்லி வளர்த்துவிட்டு, கடைசியில் 2 மார்க் சிக்கல் வந்தால், அந்தக் குழந்தைக்கு அப்பா, அம்மாவோட எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை அந்தப் பையனுக்கு வளர ஆரம்பித்துவிடும். கால சர்ப தோஷத்தில் பிறப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதை சந்திக்கிற அளவிற்கு பிள்ளைகளை முன்னெச்சரிக்கையோடு வளர்க்க வேண்டுமே தவிர, இப்படித்தான் ஆக வேண்டும், இதுதான் நல்லது, மற்றதெல்லாம் நல்லதில்லை என்றெல்லாம் வளர்க்கக் கூடாது.

கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் எ‌ன்ன? 

சர்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு
கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). பொதுவாக கால சர்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும். 

கால சர்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். 26இல் இருந்து 38 வயது வரை ஓரளவிற்கு பரவாயில்லை, ஒரு சிலதெல்லாம் கிளியராகும். ஆனால், 39இல் இருந்து 46 வயது வரை அதிகப்படியான உயர்வைத் தரும். 
எனவே கால சர்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது.

இறைவன் எங்கு

இறைவன் எங்கு

இறைவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், 

தேவாலையத்தில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா 

என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பைகூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம்.

வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். தினமும் குளிக்கிறோம். 


இதெல்லாம் செய்வது கூட அடுத்தவர் பார்வைக்காகவே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை என்பதால் அதை பெரும்பாலோர் குப்பையாகவே வைத்திருக்கிறோம். 

அகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு என்று எத்தனையோ அழுக்குகள் மனதிற்குள் இருக்கிறது. அதைத் துடைத்து எடுப்பதற்குப் பதிலாக அழுக்கின் மேல் அழுக்காக சேர்த்துக் கொண்டே போகிறோம். 


எத்தனை கால அழுக்குகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நம் எல்லாத் துயரங்களுக்கும் இந்த அழுக்குகள் தான் காரணமாக இருக்கின்றது.

 ஆனால் அதை உணர்வதற்குக் கூட உள்ளத்தில் ஒரு ஊசிமுனை இடமாவது சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாதவர்களுக்கு இந்த உண்மை புலப்படாது.


இந்த அழுக்குகளைத் துடைத்தெடுக்க என்ன தான் வழி? தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என்று எத்தனையோ வழிகளைப் பெரியோர்கள் சொல்கிறார்கள். உங்களுக்குப் பொருத்தமான, உங்கள் இயல்பிற்குத் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். நாட்பட்ட அழுக்குகளைக் களைவது அத்தனை சுலபமல்ல.



ஆனால் உங்கள் மனத்தை உங்களால் தூய்மைப்படுத்தி வைக்க முடிந்தால் இறைவனைத் தேடி நீங்கள் கோயில்களுக்குப் போக வேண்டாம். உங்களைத் தேடி இறைவன் வருவது உறுதி.



இப்போது உள்ளே எட்டிப்பார்த்து சொல்லுங்கள். இறைவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் உள்ளத்தை சுத்தம் செய்து இறைவனை வரவழையுங்கள். அந்த இறையானுபவத்தை, அதனால் ஏற்படும் சச்சிதானந்தத்தை உணருங்கள். பின் ஒரு போதும் அந்த அழுக்குகள் உங்களை நெருங்குவதை நீங்கள் சகிக்க மாட்டீர்கள்..



குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?

குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம். 


குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. 



எவ்வளவோ பேர் எங்கெங்கோ போய் வருகிறார்கள். காசிக்கு ஒருவர் போய்விட்டு வந்தார். அவருடைய கனவில் வந்து, ஏண்டா நான் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். மூன்று வருடமா என்னை வந்துப் பார்க்காமல் எவ்வளவோ செலவு செய்து கொண்டு அங்கெல்லாம் போய்விட்டு வருகிறாயா? என்னை நீ பார்க்காமல் போன பிறகு உனக்கு காசி போனால் பலன் கிடைக்குமா? என்று கனவில் வந்து கேட்டிருக்கிறது. பிறகு ஓடிப் போய் வணங்கினார். 


வசதி வாய்ப்பு இழந்தவர்களும் பெரிய கோபுரங்கள் உள்ள கோயில் தெய்வங்களை குலதெய்வம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 
அப்படியில்லை, முன்னோர்கள் கூடி கூடி வழிபட்ட அந்த இடத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. இன்றைக்கு நாம் சொல்லவில்லையா? காந்தி நின்ற இடம், வ.உ.சி. செக்கிழுத்த இடம் என்று எவ்வளவு பெருமையாகச் சொல்கிறோம்


. அதுபோல நம் முன்னோர்களும் நமக்குத் தலைவர்கள் மாதிரிதானே. அவர்கள் நின்று வழிபட்ட இடம். அவர்கள் பொங்கல் வைத்தது. அதெல்லாம் நாம் மதிக்க வேண்டாமா? அதனால் குலதெய்வத்திற்கு சக்தி உண்டு. குலதெய்வம் என்பது என்ன? தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்கூடியதுதான்

 குலதெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் வேண்டித்தான் கூப்பிட வேண்டும். இவர்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் நம்மிடம் வந்து நமக்கு நல்லது செய்யக்கூடிய தெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.

ஆன்மீக கேள்வி – பதில்கள்

ஆன்மீக கேள்வி – பதில்கள்



சிவபெருமான்சந்திரனைச்சடைமுடியில்ஏன்தரித்துக்கொண்டிருக்கிறார்.அதுவும்ஒருகலையுள்ளதாயிருக்கினறதேயல்லது சோடசகலை யுள்ளதாகயிருக்கவில்லையே?
தக்கன்தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோதுஇவர்களெல்லாரிடத்திலும் ஒரே தன்மையானஇஷ்டமுள்ளவனாய்இருஎன்றுசொல்லிஅவ்வண்ணமாகயிருந்த சந்திரன் தன் ஸ்திரீகளுள் மிகுந்த சவுந்தரியமுள்ளகார்த்திகை உரோகணி யென்னும் இரண்டு ஸ்திரீகளிடத்தில் மாத்திரம்மிகுந்தஇஷ்டமுள்ளவனாய் மற்ற இருபத்தைந்து ஸ்திரீகளிடத்திலும்இட்டமில்லாதவனாயிருந்தான். அவர்கள் மனம்வருந்தித் தக்கனிடத்தில்சொல்லிக்கொண்டார்கள். அவன் கோபங்கொண்டவனாய்ச் சந்திரனுடைய சோடசகலைகளும்அழிவுறும்படிச் சபித்தான். அந்தச்சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப்பதினைந்து கலை குறையக்கண்ட சந்திரன் துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில்
சொல்ல, இந்தச்சாப மென்னால் நீக்கத்தக்கதல்ல வென்னப் பிரமதேவனிடத்தில் போய்ச் சொல்லிக்கொண்டான். “நான் சொன்னாலுந் தக்கன் இந்தசாபத்தை நிவர்த்திசெய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விண்டுவிடத்தில்விண்ணப்பஞ்செய்துகொள்" எனச் சந்திரன் அப்படியே செய்ய, தன்னால் முடியாதுஸ்ரீ கைலாசகிரிக்குப்போய்ப் பரமசிவனிடத்தில் விண்ணப்பஞ்செய்துகொண்டால்இந்தச் சாபம் நிவர்த்தியாகுமென்று விண்டு சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டுசந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தோத்திரம்செய்தான். பரமசிவன் கிருபை கூர்ந்து சந்திரனிடத்தி லிருந்த ஒருகலையினையுந் தமதுமுடியில்தரித்துக்கொண்டு இது உன்னிடத்திலிருந்தால்தக்கன் சாபம் இதனையுமழித்துவிடும். இனி நம்முடைய திருமுடியிலிருக்கிறகலையைத் தொடராது. இந்தக் கலையழியாமலிருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோலநாளுக்கு நாளொவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படிநிறைந்தாலும் வளர்ந்ததுபோல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாகஇருக்குமென்று அநுக்கிரகஞ் செய்தார். சந்திரன் சந்தோஷத்துடன் சுவாமியைத்தோத்திரஞ்செய்து விடைபெற்றுக்கொண்டு தன் பதவியிற்போய் சேர்ந்தான்.
பரமசிவன் ஒரு திருக்கரத்தில் மான் தரித்துக் கொண்டிருப்பதற்குக் காரண மென்ன?
அந்தமான் தாருகாவனத்து ரிஷிகளால் அனுப்பப்பட்டது. அவர்களேன்
அனுப்பினார்களெனில் பரமசிவன் பிக்ஷ¡டன மூர்த்தமாகத் தாருகாவனத்துக்கெழுந்தருளினபோது ரிஷிபத்தினிகள் கண்டு மோகித்துத் தங்கள் கற்புகுலைந்தார்கள். அதைக்கண்டு தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடையவர்களாய் ஒருவேள்விசெய்து அதிலுண்டான புலியை நோக்கிச் சிவனைக் கொல்லும்படியேவஅதனைக்கொன்று தோலை யாடையாக அணிந்து கொண்டார். பின்னுமந்தவேள்வியில்மானுண்டாகிவர அதனையிடக்கையில்வைத்துக்கொண்டருளினார்.பின்புமழுவுண்டாய்வந்தது. அதனை ஆயுதமாக வைத்துக்கொண்டனர். பின்புசர்ப்பங்களுண்டாய்வர அவைகளை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். பின்முயலகனென்னு மசுரனுண்டாகிவர அவனைக் கீழேதள்ளி முதகிலேறி நின்றார்.
மந்திரங்களை யேவினார்கள்; அவகைள் டமருக ரூபங்கொண்டு வர திருக்கரத்தில்வைத்தருளினார்.
விஷ்ணு மீன் கண், ஆமையோடு, பன்றிக்கொம்பு, எலும்புமாலை, கையில் கபாலம் இவைகளை ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார்?
விஷ்ணுகடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை அபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனைவதைத்த இரத்த வெள்ளங்குடித்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக்
கலக்கியபோது தேவர்கள் கயிலையிற்சென்று தாங்கள்வந்த காரியத்தை விண்ணப்பஞ்செய்துகொள்ளச் சுவாமி கிருபை கூர்ந்து ஒரு வயிரவரையனுப்ப அவர்போய் வலைவீசியந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால்தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார். அமிர்தமுண்டாகும்படித்
தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத்தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலிலாழ அதைக்கண்டுதேவர்கள் விஷ்ணுவைத் தோத்திரஞ்செய்ய அவர்வந்து ஆமையாகி மந்தரகிரிதன்முதுகில் நிற்கும்படித் தாங்கின காலத்தில் மமதை கொண்டு கடலைக் கலக்கஅதைக்கண்ட தேவர்கள் கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். சுவாமி
கிருபைகூர்ந்து விநாயகரையனுப்ப அவர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக்கடநீரை யெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய்விட்டது. பின்பு விநாயகர் நீரைச்சிந்தினார். அந்த நீருடன் ஆமையும்வெளிவந்து விழுந்து மதிமயங்கிக்கிடக்க அதை விநாயகர்கண்டு அதன் ஓட்டினைத்தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக்காணிக்கையாகக் கொடுக்கக்கண்டு மகிழ்ந்து தேவர்கள் வேண்டுதலினால் தலைமாலையுடன் அந்த ஆமையோட்டையும்மார்பில்தரித்துக்கொண்டருளினார்.ரணியாட்சனென்னும் ஒரு அசுரன் பிரமதேவனை தோத்தித் தவஞ்செய்துவரம்பெற்றுக்கொண்டு போகிறவன் பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். பரமசிவன் திருவுளமிரங்கிச்சுப்பிரமணியரையனுப்ப அவர்போயந்தப் பன்றியின் தலையை வேலினால் குத்தியமுக்கி யதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்கஅதை முன்போலத் தரித்துக்கொண்டார். பிரம விஷ்ணுக்களை யுண்டாக்கி யவர்களில்
பிரமனைக் கொண்டு சிருட்டித்தும் விஷ்ணுவைக் கொண்டு இரக்ஷ¢த்தும் பின்புசங்கரித்தும் பலவாறு இம் முத்தொழில்களைச் செய்கையில் பிரம விஷ்ணுக்களைமுடிவான காலத்தில் சங்கரித்து அவர்கள் எலும்புகளையும் சிரங்களையும்மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக்கொண்டதேயல்லது பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டதேயல்ல. முன்பொருகற்பமுடிவில் இவர்களையெல்லாம் நெற்றிக்கண் பொறியால்நீறுபடுத்தியந்தப்பொடியைத் தமது திருமேனியில் தரித்துக்கொண்டருளினார். இதுவும்அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்கிற காருண்யமேயாம்.
முன்னொருகாலம்பிரமா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்துதலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலையணிந்திருப்பதனால் சிரமாலியென்றும் கபாலந்தரித்துக்கொண் டிருப்பதனால்கபாலியென்றும் பெயருண்டாயது.
பரமசிவன்கண்டத்தில் விஷம் பொருந்தி யிருப்பதற்குக் காரணமென்ன?
தேவர்கள்அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக்கண்டு தேவர்கள் முறையிட அவர்களை இரக்ஷக்கும் பொருட்டு விஷத்தைக்கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன்,
நீலகண்டன் எனப்பெயர்பெறுவர்.
பரமசிவனுக்கு ரிஷபவாகன முண்டானதற்குக் காரணமென்ன?
தருமதேவதையானதுபிரமவிஷ்ணு முதலானவர்களெல்லாம் அழிந்துபோவதைக்கண்ட தானவ்வாறுமாண்டுபோகாமல் என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்கிற எண்ணங்கொண்டுரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்திற்சென்று பணிந்து “கர்த்தனே!நானிறவாமலிக்கும்படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டு" மென்று தோத்திரஞ்
செய்ய சுவாமி கிருபைகூர்ந்து அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்
இன்னும் யார் ரிஷப மானது?
விஷ்ணு திரிபுரசம்ஹாரகாலத்தில் ரிஷபமாகிக் கயிலாயபதி தன்னை வாகனமாகக் கொண்டருளும் பேறுபெற்றார்.
பரமசிவன் வீணாதண்டம் வைத்திருக்கக் காரணமென்ன?
விஷ்ணுவாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்கமுயலுகையில் சிவபெருமான் திருவுளமிரங்கி வைரவரையனுப்ப, அவரந்தவிஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்துஎம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாகவைத்துக்கொண்டார்.
பரமசிவனுக்குச் சிம்ஹாசனம் இருப்பதற்குக் காரணம் என்ன?
இரணியனைக்கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்கயிலாயபதிக்கு விண்ணப்பித்துக்கொள்ள, அவர் சரபரூபமெடுத்து அச்சிம்மத்தின்
தலையைப்பிளந்து இரத்தத்தைக் குடித்துக்கொன்றனர். தேவர்களதன்
தோலையுரித்துச் சுவாமிக்குத தவிசாக வைத்துச் சுவாமியை வேண்டிக்கொள்ளஅவரும் அவ்வாறே அங்கீகரித்தனர்.
பரமசிவன் யானைத்தோல் போர்த்திருப்பதற்குக் காரணமென்ன?
யானைரூபமாகத்தோற்றிய கஜாசுரனென்பவன் பிரமதேவனை நோக்கித் தவஞ்செய்துதேவர்களையெல்லாம்வென்று ஜயம்பெற வேண்டுமென்கிற வரங்கேட்டான். பிரம தேவன்அப்படியே வரங்கொடுத்துப், பரமசிவனெதிரில் போகாதே, போனால் இந்தவரமழிந்துபோமென்று சொல்லக் கேட்டுக்கொண்டு போனவன் தேவேந்திரன்முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டுபயந்து ஓடிக் காசி சேர்ந்தார்கள். அங்குமவர்களைத் தொடர்ந்து சென்றான்.அவர்கள் கண்டு பயந்து மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப்
பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். கஜாசுரனுக்குக் காலமுடிவு நேரிட்டதனால்பிரமதேவன் சொன்னதை மறந்து அங்குஞ் சென்று முனிவர்களைக் கொல்லவேண்டுமென்றுஉறுமுகிறபோது சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தைமிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
சிவபெருமான் கொக்கிறகைத் தரிக்கக் காரணமென்ன?
குரண்டாசுரனென்னும்ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக்கொரித்து, தேவர்களைவருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகையணிந்தருளினார்.

ஆன்மீக கேள்வி -பதில்!!! 1)

ஆன்மீக கேள்வி -பதில்!!! 1)


1)
வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது ?
பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.
2)
கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?
பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் "கோமாதா' என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.
3)
மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?
யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர்
ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள். அதிகமாக தீக்குச்சிகளை உபயோகிப்பதால் குச்சிகள் குவியும் தொந்தரவும் இருக்காது.
4)
மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?
திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது ""என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,'' என்று தான் கூறுவோமே தவிர, ""மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,'' என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
5)
பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அதன் சரியான கால அளவு எவ்வளவு?
""ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பது பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம். அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான். தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது. இதற்கு "நித்யபிரதோஷம்' என்று பெயர். வளர்பிறை திரயோதசிக்கு பக்ஷ பிரதோஷம், தேய்பிறை திரயோதசிக்கு மாத பிரதோஷம், தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம் என்று பெயர்.
6)
குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.
7)
அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?
அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.
8)
வீட்டில் ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் செய்ய நினைக்கிறேன். என் எண்ணம் சரியானது தானா?
மிக சரியானது. நீங்கள் ஹோமம் செய்வதோடு பிறரையும் செய்யச் சொல்லுங்கள். ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல! உங்கள் ஊரையே காப்பாற்றும். இப்படி எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும். கடந்த சில ஆண்டுக்கு முன் நிகழ்ந்த போபால் விஷவாயு, தினமும் ஹோமம் செய்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9)
கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?
ஒருவர் இறந்த பிறகு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரண நாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோயில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.
10)
மாலையில் தீபமேற்றி வழிபட்ட பின், கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடலாமா?
சந்தேகமே வேண்டாம். தாராளமாக வீட்டில் தீபமேற்றிய பின் கோயிலிலும் தீபமேற்றி வழிபடுங்கள். அதனால், உங்களுக்குப் புண்ணியம் பன்மடங்கு சேரும்.

ஆன்மீக கேள்வி-பதில் 2

ஆன்மீக கேள்வி-பதில் 2


* குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா? 

விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. 

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்? 

நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றே புரியவில்லை. 
கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது. 

* எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோயிலில் நடலாமா? 
*
இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும். 

** வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை. 
+
வீட்டில் சாமி சிலைகளை ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம். 

* பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாதா? 

பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளியன்று ஜென்மநட்சத்திரம் வந்தால் சும்மா இருந்து விடாதீர்கள். அது விதி விலக்கு. 

* வீடு, தீர்த்தக்கரை, கடற்கரை இம்மூன்றில் பிதுர்தர்ப்பணத்தை எங்கு செய்வது சிறப்பானது? 

கடற்கரையில் செய்வது முதன்மையானது. நதி, குளக்கரைகளில் செய்வது விசேஷமானது. வீட்டில் செய்வது மத்திமம் தான். அவசர கதியில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், ஏதாவது ஓரிடத்தில் விட்டுவிடாமல் செய்வதே மிக மிக உத்தமமானது தான். 

* பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம)சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா? 

பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது. 

* கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா? 

உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும். 
கோயில்களில் கொடுத்த பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போடுவது சரிதானா? 
. 
ஒருமுறை சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு எடுக்கப்படும் மாலைக்கு "நிர்மால்யம்' என்று பெயர். நிர்மால்ய மாலைகளை வேறு தெய்வத்திற்குச் சாத்துதல் கூடாது. 

* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா? 

சுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு. 

* அசைவம் சாப்பிடும் நாட்களில் கோயிலுக்கு செல்வது தவறுதானா? 
*
கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கும் நீங்கள் அந்த கருமத்தை விட்டுவிடக்கூடாதா? உலகிலேயே அதிகமாக அசைவம் சாப்பிடும் சீனர்கள் கூட இன்று சைவத்திற்கு மாறி வருகிறார்கள். உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் இந்து தர்மம் புலால் சாப்பிடுவதை அனுமதிப்பதில்லை. எனவே இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்படுகிறது. 

* என் தாய் பூஜை செய்து வந்த விக்ரஹங்களுக்கு என்னால் சரிவர பூஜை செய்ய முடிவதில்லை பூ, பால் வைத்து வணங்கினால் போதுமா? 

தாய் தந்தை விட்டுச் சென்ற மற்ற எல்லாவற்றையும் பராமரிக்கிறோம். பூஜை மட்டும் சரிவர செய்யமுடியவில்லை என்றால் எப்படிப் பொருந்தும்? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே உங்கள் தாய் பூஜை செய்து வந்திருக்கிறார்கள். உங்கள் வாரிசுகளும் நன்றாக இருக்க, நீங்களும் முடிந்த வரை நன்றாகவே பூஜை செய்யுங்கள். 

** வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்த என்னால் இயலவில்லை. இதனால் ஏதேனும் பாதிப்பு நேருமா? 

வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்தவில்லையே என உங்கள் மனம் உறுத்துகிறது. இதுவே பெரிய பாதிப்பு தானே! சீக்கிரம் நிறைவேற்றிவிடுங்கள். 

* திருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்? 

திருமணம், காதுகுத்தல் போன்றவை நம் குலம் அபிவிருத்தியடைவதற்காகச் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகளாகும். இவை நல்ல முறையில் நடந்து நம் குலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். 

* இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திவசம் பண்ணலாமா? 

தாயின் சிராத்தம் முறை வேறு. தந்தையின் சிராத்தம் முறை வேறு. இரண்டையும் அவரவர்கள் திதியில் செய்தால் தான் பித்ருக்கள் திருப்தியடைவார்கள். ஒன்றாக செய்யக் கூடாது. 

* திருமாங்கல்யத்தில் "சிவாயநம' என எழுதி வழங்கலாமா? 

திருமாங்கல்யம் என்பது பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் செய்து வருகிற ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. நம் குடும்பத்துப் பெரியவர்கள் கூறும் முறைப்படி செய்வது தான் நல்லது. சுவாமி அம்பாள் உருவங்கள் பொறிப்பது தான் வழக்கம். எழுத்துக்கள் எழுதுவது இல்லை.

Tuesday, 10 October 2017

படிப்பில் கவனமில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம்

படிப்பில் கவனமில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம்


படிப்பில் கவனமில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம்
----------------------------------------------------------------------------
படிப்பில் கவனம் இல்லாத குழந்தைகளுக்கு தினமும் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட கொடுத்தால். சில நாட்களில் அவர்களுக்கு படிப்பில் கவனம் உண்டாகும்.
 _________________________________
கணவன்-மனைவி சண்டை தீர பரிகாரம்
------------------------------------------------------------
கணவன்-மனைவி இருவரும் இடுப்பில் சிவப்பு நிற அரைஞான் கயிறு கட்டிக்கொண்டால்,கணவன்-மனைவியிடையே உள்ள பிணக்குகள் நீங்கும்.
___________________________________

உத்யோகம் அல்லது தொழில் அமைய பரிகாரம்
-----------------------------------------------------------------------
நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி+துண்டு,( குரு பெண்ணாக இருந்தால் மஞ்சள் சேலை) மற்றும் ஒரு பாத ரட்சை(செறுப்பு) இவைகளை அவருக்கு தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகமோ அல்லது தொழிலோ அமையும்.
ருண,ரோக,சத்ரு பீடை நீங்க பரிகாரம்
-------------------------------------------------------

நாம் குருவாக ஏற்றுக்கொண்டவரின் கால்களை நீரினால் சுத்தம் செய்து ,பாதத்தில் மஞ்சள் குங்குமமிட்டு பூஜை செய்து ஆசி பெற ருண,ரோக,சத்ரு பீடைகள் நம்மை விட்டு நீங்கும். குருவின் பாதங்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்து விட்டால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும்.  

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்


துளசி
         துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.
சந்தன மரம்
              சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
அத்திமரம்
                அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
மாமரம்
               மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும்  போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.
அரசமரம்
              அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
ஆலமரம்
                 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
மருதாணிமரம்
                 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.
ருத்ராஷ  மரம்
                ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை  உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
ஷர்ப்பகந்தி
                 இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.
நெல்லி மரம்
                   நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.
வில்வமரம்
                    வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால்  சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.
வேப்பமரம்
                     வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
கருவேல மரம்
                  கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.
காட்டுமரம்
                   காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.
அசோக மரம்
                     அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
புளிய மரம்
                    புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.
மாதுளம் மரம்
                     மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்.

 

உன் கையே உன்னுடைய வாழ்க்கையின் நிர்ணயம்

உன் கையே உன்னுடைய வாழ்க்கையின் நிர்ணயம்

இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒருவித சக்தி இருக்கிறது. சிலர் அதை உயிர் என்றும் மனிதசக்தி, இறைசக்தி, ஞானசக்தி அல்லது மிருகசக்தி என்றும் சொல்வார்கள். அது அவரவரின் விருப்பப்படியே இருக்கட்டும். அன்பென்னும் சக்தி (இரத்தம்) அநேக நரம்புகளின் வழியாக நாடி-சிரை வரை சென்று வியாபித்துள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம். இவனுடைய எண்ணம், செய்கை பழக்க வழக்கமெல்லாம் அறிமுகம் செய்யப் படுகின்றன. அவனவன் செய்கையை அவன் முகம் சொல்லும். அவன் கண்ணும் ஒரு கதையை சொல்லும்.
நமது சரீரத்தில் நாடிகளின் செயல்பாடு மிக முக்கியமானது அதில் அசுர நாடிகளும் தேவ நாடிகளும் இருக்கின்றன. அசுர நாடி மிகச் சொற்பமே. ஆயினும் அதன் விருத்தியே மாயப் பிரபஞ்சமாகி ஆசைக்கு உட்பட்டு தீய வினைகள் அதிகரிக்கின்றன.
 
“விதியையும் விதித்து என்னை விதித்திட்ட
மதியையும் விதித்து அம்மதி மாயையில்
பதிய வைத்த நின்னருளை எப்படி கண்டு களிப்பதே”
–தாயுமானவர்—
 
மனிதனின் கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. தெய்வீகம் – இய்றக்கை – தாந்திரீகம் அல்லது சக்தி – ஸ்தூலம்-சம்பத் என மூன்றாக வகுக்கப்பட்டு இருக்கின்றன. விரல்களுக்கும் இந்த பகுதியில் தொடர்புண்டு. தத்துவ சாத்திரங்களில் ஆத்மா – மணம் -சரீரம் என்ற இம் மூன்றும் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறதோ, அப்படியே அதனோடு சம்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. ஐந்து விரல்களும் ஐந்து கிரகங்களை குறிக்கின்றன. உள்ளங்கைக்கு மேலே, விரல்களும் அடியிலே உள்ள மேடுகள் கிரகங்களின் பலா பலத்தைத் அறியத் தருகின்றன. 

ஆள்காட்டும் முதல் விரல் – குரு, நடுவில் உள்ள இரண்டாவது விரல்- சனி, மூன்றாவது பவித்திர விரல் – சூரியன், நான்காவது சுண்டு விரல் – புதன். புதனுக்கு அடுத்த கீழ்ப்பாகம் – செவ்வாய், கட்டை விரலுக்குக் கீழே உள்ள மேடு – சுக்கிரன், உள்ளங் கையில் செவ்வாய்க்கு கீழ்மேடு – சந்திரன். 

நான்கு விரல்களுக்கு அடியில் நீண்ட ரேகைக்கு இருதய ரேகை என்று பெயர். இந்தரேகை தெய்வீகமானது. செவ்வாய் மேட்டில் இருந்து உற்பத்தியாகி குறுக்கே போகின்ற ரேகைக்கு புத்தி ரேகை என்று பெயர் கட்டை விரலுக்கு அடியில் சுக்கிர மேட்டை வளைத்து போயிருக்கும் ரேகைக்கு ஆயுள் ரேகை என்று பெயர். சந்திர மண்டலத்திற்கும் ஆயுள் ரேகைக்கும் மத்தியில் உள்ள ரேகைக்கு விதிரேகை என்று பெயர்.
 
ஒவ்வொரு விரலும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி பிரிக்கப்பட்ட பாகத்துக்கு “அங்குலாஸ்தி” என்று பெயர். ஒவ்வொரு விரலின் நகமுள்ள முதல் அங்குலாஸ்தி ஆத்ம சக்தியைக் குறிக்கிறது. இரண்டாவது அங்குலாஸ்தி ஸ்தூலத்தைக் குறிக்கிறது. மூன்றாவது அங்குலா ஸ்தி சம்பத்தைக் குறிக்கிறது.
 
கட்டை விரல் – ஆத்ம சக்தி
ஆள்காட்டி விரல் – சக்தி
நடுவிரல் – விதிப்பயன்
மோதிரவிரல் – பிரகாசம்
சுண்டுவிரல் – சாத்திரம்
 
இப்போது உங்கள் கையின் மகத்துவத்தைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டு இருப்பீர்கள். இதை புரிந்து கொண்டால் தான் இனி வரும் கருத்துக்கள் தங்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்துடன் தொடர்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட விரல்களுக்கு குறிப்பிட்ட உடல் உறுப்புக்களுடன் தொடர்பு உள்ளது. எனவே கை விரல்கள், எந்த பகுதிகளுக்கு தொடர்புள்ளது என்று தெரிந்து கொண்டு அதன்படி பிரச்சனைகளுக்குத் தகுந்த விரல்களில், அதற்க்கு உரிய (GEMS) நவரத்தினம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
 
ஆள்காட்டிவிரல்: 

              “தர்ஜனி” என்று அழைக்கப்படும் இது குருவின் ஆதிக்க்தத்தில் உள்ள விரலாகும். இந்த விரலின் கீழ் தான் குருமேடு இருக்கிறது. இந்த விரலானது சுவாச சம்பந்தமான நரம்புகளுடனும் வயிறு சம்மந்தப்பட்ட நரம்புகளுடனும் நேரடித் தொடர்பு உடையது. எனவே நுரையீரல், வயிறு சம்மந்தப்பட்ட நோய்களுக்கு இந்த ஆள் காட்டி விரலில் தகுந்த(GEMS) ரத்தன கற்களை மோதிரத்தில் கட்டி அணியவும். சந்திரன்- செவ்வாய் – குரு ஆகிய கிரகங்களுக்கான முத்து – பவளம் – புஷ்பராகம் கற்களை ஆள்காட்டி விரலில் தான் அணிய வேண்டும். நல்ல தூக்கம் வேண்டுமானால் வெள்ளை முத்து மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அணிந்து கொண்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.


 
நடுவிரல் :
               இது கையின் மத்திய விரலாகும். இது சனியின் நேரடி ஆதிக்கத்தில் உள்ள விரலாகும். இது சிறுகுடல் – மணம் – மூளை – லிவர் மற்றும் மனப் பிரச்சனைகளுடன் தொடர்புள்ளது. ஆகவே புதன் – ராகு-சுக்கிரனாகிய கிரகங்களுக்கான கற்களை மத்திய நடு விரலில் அணிய வேண்டும். சனிபகவான் இந்த மூன்று கிரகங்களுக்கும் நட்ப்பாகும். நீலம்-வெள்ளை பவளம் – வெள்ளை முத்து – வைரம், வெள்ளை ஜிர்கான் ஆகிய கற்கள் உள்ள மோதிரத்தை நடு விரலில் அணிய வேண்டும்.
 
மோதிரவிரல்:
                      இது “அநாமிகா” என்றும் சொல்லப்படும். இது வாழ்வின் மகிழ்சிகரமான பகுதிகளை உள்ளடக்கியது. சூரியன் இதன் அதிபதியாக இருக்கிறார். இந்த விரல் கிட்னி – வயிறு – ஜனன – உற்பத்தி உறுப்புக்கள் ரத்த ஓட்டத்துடன் சமந்தப்பட்டதாகும். குருவின் புஷ்பராகம் செவ்வாயின் பவளம் – கேதுவின் வைடூரியம் – ஆகிய(GEMS) ரத்தன கற்களால் கட்டிய மோதிரத்தை இந்த விரலில் அணியவும். ரூபி – பவளம் – வைடூரியம்-வெள்ளை – முத்து – மூன்ஸ்டோன்- மஞ்சள்புஷ்பராகம் – டோபாஸ் ஆகியவற்றை இந்த விரலில் அணியவும்.
 
சுண்டுவிரல்:
                        இது புதனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுண்டு விரல் ஜனன உறுப்புக்கள்-முழங்கால்-பாதம்-கால்கள் ஆகிய நரம்புகளுடன் தொடர்புள்ளது. நம் சரீரத்தில் இடுப்புக்குக் கீழே உள்ளபகுதிகளில் பிரச்சனைகள் ஏற்ப்பட்டால் சுண்டு விரலில் அதற்குத் தகுந்த ரத்தன கற்களை மோதிரமாகக் கட்டி அணிந்து வந்தால் நல்ல பலன் தரும். ராகு, சனிக்குரிய ரத்தினகற்களையும் சுண்டு விரலில் அணியலாம். புதன் சனிக்கு நட்பு கிரகமாவதால் நீலம். கோமேதகம் ஆகியவைகளை இந்த விரலில் அணியலாம்.
 
                         ஒவ்வொரு கிரகமும் அபாரமான ஆற்றல்களை உடையது. இத்தகைய ஆற்றல்களை நாம் நமது நலன்களுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடையலாம். தொழில் – வியாபாரங்கள் அமோகமாக நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் நல்ல வசதியான வாழ்க்கை அமைப்பு கிடைக்கும். தடைப்பட்ட திருமனம் இனிதே கைகூடும். கணவன்-மனைவி உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். 
 

                        கிரகங்களின் நன்மைகளை நாம் அடைய அக்கிரகங்கள் தங்களது உச்ச ராசிகளிலும் ஆட்சி ராசிகளிலும் கோச்சாரத்தில் சஞ்சாராம் செய்யும் போது பலம் அடைகின்றன. அந்த காலக் கட்டத்தில் அந்தந்த கிரகங்களுக்கு உரிய இரத்தின (GEMS) கற்களை மோதிரமாகக் கட்டி அணிந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் உடல் நலக் குறைவாக உள்ளவர்கள் விரைவில் குணமாவர்கள். அமாவாசை – பௌர்ணமி ஆகிய இரண்டு நாட்களில் மோதிரத்தை சுத்தமான நீரில் கழுவி வாசனை திரவியம் சேர்த்து மீண்டும் கையில் அணிந்து கொள்வது, தாங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் வலிமை அதிகரிக்கும். இது எங்களது அனுபவ ஆய்வின் அடிபடையில் தங்களுக்கு அறியத் தருகின்றோம். 

Thursday, 5 October 2017

ராகு – கேது தோஷம் எதனால் ஏற்படுகிறது?

ராகு – கேது தோஷம் எதனால் ஏற்படுகிறது?


ராகு கேது

ராகு-கேது தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அம்மன் கோவில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்து – அம்பாளின் கோபத்திற்கு ஆளானதால் ஏற்படலாம்.
மூதாதையர்கள் செய்கின்ற புண்ணியங்கள் கிடைக்கிற போது அவர்கள் செய்யும் சில ரகசியமான பாவங்களை மூன்றாவது தலைமுறைக்கு எடுத்துக் காட்டவும் ராகு – கேது தோஷங்கள் ஏற்படலாம்.
சேர்ந்திருந்த தம்பதிகளை – அதிகாரத்தினாலோ அல்லது பகைமையினாலோ பிரித்த பாவத்தை அவர்களது மூன்றாவது தலைமுறையினர்கள் பெறுவதை சுட்டிக் காட்டவே ராகு – கேது தோஷம் ஏற்படுகிறது.
வயதான பெண்களை முன் ஜென்ம காலத்தில் சரியாகக் கவனிக்காமல் கொடுமைப்படுத்தியதற்கு – அவர்கள் இட்ட சாபம் கூட ராகு-கேது தோஷமாக மாறி மூன்றாம் தலைமுறையினருக்கு காலாகாலத்தில் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும், களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது.

குடும்பத்தைப் பிரித்து பெரியோர்களது சாபத்தைப் பெற்றதினால் அவர்களது சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டத்தில் கேதுவுமாக இருந்து மூன்றாவது தலைமுறையினரது இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் ஆக்குவதோடு வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கவும் ‘ராகு-கேது’ செயல்படுகிறது.
சகோதரர்களை வஞ்சனை செய்து – கெடுத்து – ஏமாற்றி அவர்களது உண்மையான பாசத்தை மதிக்காமல் உதறித்தள்ளி கைவிட்ட போது – ‘அவர்கள் அடிவயிற்றிலிருந்து இட்ட சாபம்- ஒருவருக்கு மூன்றாவது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமாக 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள். ராகு-கேது தோஷம் அதிக பலமுள்ளதாகவே இருக்கும்.
சொத்து விஷயத்தில் ஏமாற்றிப் பிடுங்கியதோடு பெற்ற தாயின் வயிற்றெரிச்சலைக் கொட்டியதால் முன் ஜென்மத்தில் அந்த அன்னை இட்ட கண்ணீர் ராகு-கேதுவாக மாறி இந்த ஜென்மத்தில் இருக்கிற சுகங்களை இழக்க வைப்பதோடு சிறு வயதில் தாயைப் பறிக்கொடுக்க அல்லது இருக்கிற சொத்து சுகங்களை தேவை இல்லாமல் இழக்க நான்காம் வீட்டில் ராகுவும் அல்லது கேதுவும்.
வேலை செய்தபோது கூலி கொடுக்காமல் ஏமாற்றிய பாவமும் பொறாமை காரணமாக இன்னொருவர் வேலையைப் பறிக்க வைத்து, அந்தக் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்த பாவமும் சேர்ந்து ராகு-கேதுவாக மாறி இன்றைக்கு ஜீவனஸ்தானத்தில் அமர்ந்து தொழிலில் முன்னுக்கு வர முடியாமல் – தடுமாற வைக்க ராகு -4ல், அல்லது 10ல் கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து தோஷத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளை- குழந்தையென்று பாவிக்காமல் அவர்களைக் கொடுமைப்படுத்தி பெற்றோர்கள் அப்போது கடமையைத் தவற விட்டதின் காரணமாகவும், அந்தக் குழந்தைகள் அழுத ஒவ்வொரு கண்ணீர் துளியும் ராகு-கேதுவாக விஸ்வரூபம் எடுத்து இன்றைக்கு புத்திர பாக்கிய ஸ்தானத்தில் இருக்கலாம்.
நம்பிய நண்பர்களை ஏமாற்றி பிரித்து நடுத்தெருவில் நிறுத்தி விட்டு சொத்து, சுகம் போன்றவற்றை அபகரித்ததை முன் ஜென்மத்தில் செய்தமைக்காக இப்போது ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருக்கலாம் என்று அகஸ்தியரின் ஜீவ நாடியில் அகத்திய மாமுனிவர் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.


நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?

நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?


navagragam
கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.
navagaraga
எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.
எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்:
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.
புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
navagragha
சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.
ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
navagragha
பலன் தரும் பாடல்
திருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா ?

குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா ?


amman
நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே. நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. வாருங்கள் இது குறித்து பார்ப்போம்.
navagragam
சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க:
சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க:
அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
navagragam
செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது, திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர் கவலைப்படுவதுண்டு. இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால், வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய் தோஷம் விலகும்.
navagragha
புதனால் ஏற்படும் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை. சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல் நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
navagragha-mandhiram
வியாழனால் ஏற்படும் தோஷம் நீங்க:
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சுக்கிரன் :
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
sukran
சனி :
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
ராகு :
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
ragu ketu
கேது :
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை


நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை சாப்பிட கூடாது என்று சொன்னதற்கு பின்பு ஒரு சிறந்த அறிவியல் இருக்கத்தான் செய்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.
perumal
புரட்டாசி மாதத்தில் பொதுவாக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கும். அதோடு இந்த மாதத்தில் தான் மழையும் வர துவங்கும் . அனால் பூமி குளிரும்படி மழை பெய்யாது. இதனால் பூமியில் இருந்து அதிக அளவிலான வெப்பம் வெளியில் வரும். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் நாம் அசைவ உணவு உண்பதால் உடம்பில் வெப்பம் அதிகரித்து தேவையற்ற உபாதைகள் வரும்.
சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால் இயற்கையாகவே புரட்டாசி மாதத்தில் நமது ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் அந்த நேரத்தில் அசைவ உணவை தவிர்ப்பது சிறந்தது. அதோடு இந்த மாதத்தில் பெய்யும் திடீர் மழை மூலம் ஏற்படும் வெப்ப மாறுதல்களால் பலருக்கு ஜலதோஷம், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும். இந்த நோய்களுக்கு சிறந்து தீர்வு துளசி.
thulasi chedi
அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி நீர் நிச்சயம் பிரசாதமாக கிடைக்கும். இதனாலேயே இந்த மாதத்தில் நம்மை அடிக்கடி பெருமாள் கோயிலிற்கு சென்று துளசி நீரை அருந்த செய்தார்கள் நம் முன்னோர்கள்.
thulasi theertham
மேலே கூறிய காரணங்களை தவிர்த்து அறிவியல் ரீதியாக வேறு பல காரணங்களும் இருக்கலாம். அறிவியலை போல ஆன்மீக ரீதியாகவும் புரட்டாசிமாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்கான சில காரணங்கள் உள்ளன. அதுகுறித்து வேறு பதிவில் பார்ப்போம்.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...