பொதுவாக அனைவரும் அவரவர் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
பிறருடைய கர்மாவை வாங்கிக் கொள்பவர்கள் காளி வழிபாடு செய்ய வேண்டும்.
பிறருடைய கர்மாவை குறைக்க முயற்சி செய்பவர்கள் சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்.
இஷ்ட தெய்வம் என்று சொல்லிக் கொள்பவர்கள் அந்த தெய்வத்தை இடைவிடாமல் தினமும் வழிபட வேண்டும். மேலும் இஷ்ட தெய்வத்தை தாராளமாக பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
ஆசைப்பட்டதை தேவையானதை உடனே அடைய உபாசனா தெய்வத்தை அவர்களுடைய இருப்பிடத்திற்கே சென்று வழிபட வேண்டும்.
அனைத்து சுகபோகங்களும் தங்குதடை இல்லாமல் கிடைக்கப்பெற்று.... வாழ்க்கையை கடினம் இல்லாமல் ஆக்கிக் கொள்வதற்கும் லௌகீக வாழ்க்கையை எளிதாக கடப்பதற்கும் எண்ணியது எண்ணியபடி நடப்பதற்கும் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் வழிபட வேண்டும்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த ஊழ்வினையின் காரணமாக அவதிப்படுபவர்கள் அனைத்து துன்பத்திலிருந்தும் விடுபட நினைப்பவர்கள் பிறவிப்பினியை அகற்றி பிறவி இல்லா பெருநிலையை அடைய நினைப்பவர்கள் சிவனையும் அம்பாளையும் வழிபட வேண்டும்.
யாராக இருந்தாலும் முழுமுதற் கடவுளான முழுமுதற்கண் நாயகனான விநாயகரையும் விநாயகரின் அன்பிற்கினிய பாசமிகு சகோதரரான முருகப்பெருமானையும் வழிபட்ட பின்பு மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வம் எல்லாம் அன்பென்றிரு.
அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய் இருந்தால் சிவனின் அன்பை பெறலாம்.
சிவனின் அன்பை பெற்றால் பிறவிப் பெருங்கடலை எளிதாக கடக்கலாம்.
எனவே...
சிவனே என்று இரு.
No comments:
Post a Comment