Saturday, 13 December 2025

கோயமுத்தூர் சாந்தி சோஷியல் சர்வீஸ். கோயமுத்தூர் செல்பவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை பயன்படுத்திக் கொள்ளவும்.

 


கோயமுத்தூர் சாந்தி சோஷியல் சர்வீஸ். கோயமுத்தூர் செல்பவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை பயன்படுத்திக் கொள்ளவும்.

ப்பா பிரமித்து விட்டேன்,
பல தடவை கோயம்புத்தூர் வந்து சென்று இருந்தாலும் இந்த சேவை மையத்திற்கு செல்லும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது,
என்ன ஒரு சுத்தம் என்ன ஒரு கனிவான பேச்சு, என்ன ஒரு டேஸ்ட், விவரிக்க வார்த்தையே இல்லை,
என் வாழ்நாளில் இப்படி ஒரு சேவையை கண்டதில்லை,
எத்தனை ஆயிரம் பேர்களுடைய பசிகளை போக்குகிறார்கள்,
இதற்காகவே இவர்கள் ஆயிரம் ஆயிரம் வருடம் இவர்களும் இவர்களுடைய குடும்பத்தாரும் நீடூடி வாழ வேண்டும்.
உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்த ஒரு பொருளையும் இவர்கள் சேர்ப்பது இல்லை,
மைதாவில் செய்யப்பட்ட எந்த ஒரு உணவும் இங்கே இல்லை,
பரோட்டா பிரட் வகைகள் பன் வகைகள் கோதுமையில் மட்டுமே கிடைக்கிறது,
லெமன் ஜூஸ் ரூபாய் பத்து க்கு கிடைக்கிறது.
இட்லி மூன்று பத்து ரூபாய்,
சப்பாத்தி இரண்டு இருபது ரூபாய்,
பொங்கல் இருபது ரூபாய், கோதுமை உப்புமா 20 ரூபாய்,
ஒரு தோசை 15 ரூபாய்
இதற்கெல்லாம் மேல் மதிய உணவு இருபது ரூபாய்க்கு தரமாக மிகவும் தரமாக கிடைக்கிறது,
விலை குறைவாக கொடுக்கிறோம் என்று தரத்திலும் சரி சுவையிலும் சரி சுகாதாரத்திலும் சரி எந்த விதமான சமரசமும் செய்யாமல் மிக சிறப்பாக வழங்கி வருகிறார்கள்,
ஒரு மிகப்பெரிய உணவகத்தை சிறிதும் வியாபார நோக்கோடு இல்லாமல் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்,
அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவருக்கும் 8 மணி நேர வேலை மட்டுமே,
அதிலும் ஈ எஸ் ஐ , பி எப், மற்றும் மருத்துவ காப்பீடும் கொடுக்கிறார்கள்,
அதற்கு ஏற்றார் போல் ஊழியர்களும் அவரவர் வேலையை மிகவும் தெளிவாக கண்ணியமாக செய்கிறார்கள்,
அவர்கள் அணிந்திருக்கும் சீருடைகளும் மிகவும் நேர்த்தியாகவும், மிகவும் சுத்தமாகவும் இருக்கிறார்கள்,
இவர்கள் நினைத்து இருந்தால் வாகன நிறுத்தத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் ஐந்தாவது போட்டிருந்தால் கூட அதிலே ஆயிரக்கணக்கில் தினமும் வருமானம் கிடைத்திருக்கும் அதையும் இலவசமாகவே தருகிறார்கள் இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் அனைத்திற்குமே இலவச நிறுத்தும் வசதி பாதுகாப்போடு இருக்கிறது, அதுவும் பாதுகாப்பு மெய்க் காவலர்களுடன்,
அவர்களிடம் பேசும் போது அவர்கள் கூறியது இன்று வரை எந்த ஒரு வாகனமும் அங்கு திருடு போனது இல்லை என்று பெருமையாக கூறினார்கள்,
கழிவறை வசதியும் கை கழுவும் இடமும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.
உணவகம் இல்லாமல், குறைந்த விலை மருந்தகமும் இங்கு செயல்படுகிறது, குறைந்த கட்டண மருத்துவமனையும் இங்கே இருக்கிறது,
கண் கண்ணாடி வாங்கும் வசதியும் குறைந்த விலையில் கிடைக்கிறது,
பெட்ரோல் பங்கும் நிர்வாகம் செய்தார்கள்,
வாழ்த்துக்கள் சாந்தி சேவை மையத்திற்கு, அதன் உரிமையாளர்களுக்கும், அதை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கும், அதன் ஊழியர்களுக்கும் ,
உங்கள் சேவையால் பயன்பெற்ற ஒரு பயனாளியின் மனதார வாழ்த்து பதிவு இது மிக்க நன்றி.
சாந்தி சோஷியல் சர்வீஸ்,
சிங்காநல்லூர்,
கோயம்புத்தூர்.

No comments:

Post a Comment

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...