Saturday, 18 February 2017

*சாபங்கள்* நீங்க வேண்டுமா?

எங்களின் ஆன்லைன் சேவை http://astroav.in/

*சாபங்கள்* நீங்க வேண்டுமா??

ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது அவனது முன்ஜென்ம வினை, அவனது முன்னோர்களின் வினை பொறுத்தே அமைகிறது. முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால் இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு.

ஒரு சாதாரண மனிதன் இன்னொரு மனிதனால் தேவையற்ற முறையில் அல்லது அதர்ம வழியில் தாக்கப்படும் போது தன்னையும் மீறிய சோகத்திற்கு ஆட்படுகிறான். அந்த நேரம் அவன் மனது நிகழ்ந்த நிகழ்ச்சியிலேயே நிலைத்து விடுகிறது. சுற்றுப் புறச் சூழல்கள் அனைத்தும் மறந்து தனக்கு ஏற்பட்ட அநியாயத்தை மட்டுமே நினைத்து நினைத்து மனம் உருகி ஒருநிலைப் பட்டுவிடுகிறது. அப்போது அவனிடமிருந்து வருகின்ற வார்த்தை அடிவயிற்றில் இருந்து ஒரு ஓநாயின் ஓலம் போல வெளிப்பட்டு எதிராளியை தாக்குகிறது. எதிரியை மட்டும் அல்ல எதிரியின் வம்சத்தை கூட தாக்குகின்ற அளவிற்கு அந்த வார்த்தை சக்தி மிகுந்த சாபமாகி விடுகிறது. இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாத சோதனைகளைச் சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சிலருக்கு வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது. அவர்களுக்கு முன்னோர்கள் சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யாருடைய சாபமோ என்று சொல்வர். ஒரு சிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர்.

கற்றறிந்த பெரியவர்கள், வயோதிகர்கள் விடும் சாபம் சிலரை பாதிக்கலாம். எனவே தான் பிறர் கோபப்படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். அங்ஙனம் ஏற்படும் சாபங்கள் விலக இறை வழிபாடுதான் தீர்வு. தந்தையின் சாபம் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்யவேண்டும்.


தாயின் சாபம் விலக, ஏகாதசி திதியில் ஏகாம்பரேஸ்வரரை முறையாக வழிபாடு செய்ய வேண்டும். சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களின் சாபம் விலக, அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்மனிதனுக்கு உண்டாகும் 5 விதமான தோஷங்கள்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர்.

ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 

1.வஞ்சித தோஷம்
2.பந்த தோஷம்
3.கல்பித தோஷம் 
4.வந்தூலக தோஷம் 
5.ப்ரணகால தோஷம் எனப்படும்.

வஞ்சித தோஷம்:- பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

பந்த தோஷம்:- நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

கல்பித தோஷம்:- பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.




வந்தூலக தோஷம்:- ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.



ப்ரணகால தோஷம்:- திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.


சாபம் நீங்க செல்ல வேண்டிய கோவில்


ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருகோவில்
ஆத்துப்பொள்ளாச்சி









ஜோதிஷஆதித்யா, 
திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி
செல்:+91 99941-50658

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...