Saturday, 16 April 2022

திருவாதிரை விரதம் - ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :*

                      திருவாதிரை விரதம் - ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :*

சிவபெருமானை வழிபடக்கூடிய பல்வேறு வகையான விரதங்களில் ஒன்று தான் திருவாதிரை. சிவபெருமானுக்கு மார்கழி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாள் தான் திருவாதிரை விரதம்.


சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. ஆகவே சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறும்.


*ஆருத்ரா தரிசனம் :*


தமிழ்நாட்டில் பழமையான சிவன் கோயில்கள் நிறைய உள்ளன. அவற்றில் சமயக்குறவர்கள் என்று கூறப்படும் நால்வரால் பாடப்பட்ட 276 சிவன் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதாவது முதல் முதலில் பாடல் பெற்ற சிவாலயமாக இந்த உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் புகழப்படுகிறது. இதன் காரணமாக சிவபெருமான் இங்கு உண்பதற்கும், உறங்குவதற்கும் இந்த ஆலயத்திற்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.


*வரலாறு:*


இயற்கையாகவே நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் மென்மை தன்மை கொண்டது. அதாவது ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாத தன்மை கொண்டது. மேளம் முழங்கப்பட்டால் மரகதம் உடைபடும், ஆகவே உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் உள்ள நடராஜர் சிலை மரகதம் கற்களால் செய்யப்பட்டதால் ஒலி, ஒளி அதிர்வுகளிலில் இருந்து விக்ரகத்தை பாதுகாக்க சந்தனம் பூசி பாதுகாப்பாக பராமரிக்கின்றனர்.

 

இதன் காரணமாக உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் அன்று பக்தகோடிகள் அங்குள்ள இறைவனை தரிசனம் செய்கின்றன. அதாவது அந்த சிவாலயத்தில் அன்று சாமி விக்ரகத்திற்கு சந்தனம் கலைக்கப்பட்டு அன்று இரவு மீண்டும் சந்தனம் பூசப்படுகிறது. அதாவது அன்று 32 வகையான அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின் மீண்டும் சாமி சிலைக்கு சந்தனம் பூசப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபட்டால் நம் வாழ்வில் நன்மை நடக்கும் என்று நம்பப்படுகிறது.


*திருவாதிரை விரதம் :*


திருவாதிரை விரதம் என்பது தீர்க்க சுமங்கலி வரமளிக்கும் விரதம் என்று சொல்லப்படுகிறது. இந்த நன்னாளில் திருவாதிரை விரதம் எடுத்து, சுமங்கலிகள் தங்கள் தாலியினை மாற்றி சிவபெருமானை வழிபட்டால், தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விரதம் மாங்கல்யம் நோம்பு என்றும் அழைக்கப்படுகிறது.


*திருவாதிரை நோம்பு :*


பெண்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து அதற்கு அருகம்புல் வைத்து, விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, விநாயகருக்கு முன் தாலி சரடு வைத்து சுமங்கலி பெண்கள், விநாயகரை வழிபடுவார்கள்.


இந்த விரதத்தை பூர்த்தி செய்ய 18 வகையான காய்கறிகளில் சமைத்து, திருவாதிரை களி செய்து, பச்சரிசியில் அடை செய்தும் விநாயகருக்கு படையலிட்டு வழிபடுவார்கள்.


பின் சுமங்கலி பெண்கள் நிலவு தரிசனம் செய்வார்கள் பின் தாலி கயிறை மாற்றி கொள்வார்கள். இறுதியாக நோம்பிற்கு வந்தவர்கள் விருந்து உண்டபின் அனைவரும் விரதமிருந்த பெண்ணை தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.


*திருவாதிரை நோம்பு இருப்பதன் பலன்‌ :*


இந்த திருவாதிரை விரதம் நாளில் கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட வேண்டும். தங்கள் கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கலாம். எவரெல்லாம் இந்த திருவாதிரை நோம்பு இருக்கின்றார்களோ அவர்களுக்கு சிவசக்தின் அருள் கிட்டும். அதேபோல் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் வரமும் தங்களுக்கு கிடைக்கும். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.


No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...