Friday, 8 April 2022

வெள்ளிக்கிழமை அன்று சில விஷயங்களை செய்யக்கூடாது

 வெள்ளிக்கிழமை அன்று சில விஷயங்களை செய்யக்கூடாது என்று, நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் இன்று நாம் எத்தனையோ பழக்கங்களை வெள்ளிக்கிழமை அன்று, செய்யக்கூடாத சில விஷயங்களை நேரமின்மை காரணமாக, செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.

 இருப்பினும் குறிப்பிட்ட இந்த தினத்தில் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும், குறிப்பிட்ட சில விஷயங்களை செய்தால் மகாலட்சுமி எந்தவிதமான தடையும் இல்லாமல் நம் வீட்டிற்குள் வருவாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

 காலை எழுந்தவுடன் பெண்களுக்கு வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று, காலை உங்கள் வாசலில் தாமரை பூ கோலம் போடுவது மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்காக மற்ற கோலங்களை எல்லாம் போட்டால் தவறு இல்லை. இருப்பினும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தாமரைப் பூக்கோலம் லட்சுமி கலாச்சாரத்தை அதிகப்படியாக உண்டாகும்

. - Advertisement - மற்ற நாட்களில் எல்லாம் சமையலறையை சுத்தம் செய்யாமலே, சமைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தாலும், (எந்த நாட்களிலும் சமையலறையை சுத்தம் செய்யாமல் சமையலை, காலையில் தொடங்கக்கூடாது தான்) வியாழக்கிழமை இரவு மட்டுமாவது எச்சில் பாத்திரங்களை சமையலறையில், அப்படியே போட்டு வைக்காமல் சமையலறையை சுத்தமாக சுத்தம் செய்துவிட்டு, வெள்ளிக்கிழமை காலை நீங்கள் உங்களது சமையலறையை, லட்சுமிகலாட்சியத்தோடு தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

 வெள்ளிக்கிழமை காலை 6 மணி நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரமும், துடைக்கப்படாத மேடையும், அடுப்பும் அவ்வளவு சரியல்ல. வெள்ளிக்கிழமை அன்று வீடு கூட்டும் போது சில பெண்கள் மறதியாக, வீடு கூட்டும் துடைப்பத்தால் கதவு ஓரங்களில், ஜன்னல் ஓரங்களில், மூலைமுடுக்குகளில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் பண்ணி எடுப்பார்கள். - Advertisement - அதாவது, ஒட்டடைக்குச்சி இல்லாமல், வேறு ஒரு கிழமைமையில் கூட, துடைப்பத்தால் ஒட்டடை அடிப்பது தவறு. எப்போதுமே ஒட்டடையை துடைப்பத்தால் தட்டக்கூடாது. ஒட்டடைக்குச்சியால் தான் சுத்தம் செய்ய வேண்டும். 

குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று கூட்டும்போது அங்கங்கே ஒட்டடையை பார்த்தாலும் அதை சுத்தம் செய்யக்கூடாது. முடிந்தவரை உங்கள் வீட்டில் ஒட்டடையை சுத்தம் செய்யும் வேலையை ஆண்களிடம் கொடுத்து விடுங்கள்.

 பெண்கள் செய்வது அவ்வளவு உத்தமம் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. எந்த கிழமைமையாக இருந்தாலும் சரி, மாலை 4.30 மணிக்கு முன்பாக உங்களது வீட்டை கூட்டி விடுங்கள். அதாவது காலை ஒரு வேளை வீட்டை கூட்டுவார்கள், மாலை ஒருவேளை வீட்டை கூறுவார்கள் அல்லவா?

 வெள்ளிக்கிழமை என்றாலே துவரை பருப்பு சமைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். உங்களால் பருப்பை தனியாக சமைக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் சாதம் வடிப்பீர்கள் அல்லவா? அதில் ஒரு நான்கு துவரம்பருப்பை சேர்த்து போட்டு வேக வைத்து வடித்து விடுங்கள் அவ்வளவுதான்.

 இப்போதெல்லாம் தினம்தோறும் துணி துவைக்கும் பழக்கம் என்பதே இல்லை. அந்த காலங்களில் எல்லாம் அழுக்குத் துணியை இப்படி எடுத்து வைக்க மாட்டார்கள். தினம் தோறும் இருக்கும் அழுக்கு துணியை, தினம்தோறும் துவைத்து வைப்பார்கள். இன்று நேரமின்மை காரணமாக, ஆண்கள் பெண்கள் எல்லோரும் வேலைக்கு செல்வதன் காரணமாக அழுக்குத் துணிகளை சேர்த்துவைக்கும் சூழ்நிலை. சில பேர் வீடுகளில் அந்த அழுக்கு துணிகளை எல்லாம் வெள்ளிக்கிழமை அன்று காலை மொத்தமாக துவைப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. முடிந்தால் வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்து வைத்துவிடுங்கள். முடியாதவர்கள் அந்த அழுக்கு துணிகளில் வாடை வெளியே தெரியாத அளவிற்கு, ஏதாவது ஒரு கூடையில் போட்டு மூடி வீட்டிற்குள், யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட வேண்டும்.

 சனிக்கிழமை துவைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமையன்று மூட்டையாக சேர்த்து வைத்திருக்கும் அழுக்குத்துணி கட்டாயம் துவைக்கக் கூடாது. அதாவது ஒரு நாள் துணியை துவைப்பதில் தவறில்லை. சேர்த்துவைத்த துணியை கட்டாயம் துவைக்கக் கூடாது. அது தரித்திரத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சில பேர் வீடுகளில் எல்லாம் குப்பைத் தொட்டியும், குப்பை வாறும் முரமும், பார்க்கவே படு மோசமாக இருக்கும். குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும். இந்த நாற்றம் வீசாமல் அந்த குப்பை தொட்டியையும், குப்பை வாறும் முறம், துடைப்பம், இவை மூன்றையும், வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்து, வெயிலில் காய வைப்பது பெண்களின் கட்டாயக் கடமை. குறிப்பாக அந்த துடைப்பதில், சில பேர் வீடுகளில் முடி சுற்றிக்கொண்டு இருக்கும் பாருங்கள்! அதை எடுக்கவே மாட்டார்கள். கூட்டி முடித்தபின்பு அந்த முடியை எல்லாம் சுத்தமாக அந்த துடைப்பத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில்

 வீட்டிற்குள் மூதேவி வாசம் செய்ய மாட்டாள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...