Monday, 4 March 2019

உன் இயற்கையான குணம் என்னவென்று உனக்கு தெரிந்து விடும்

உன் இயற்கையான குணம் என்னவென்று உனக்கு தெரிந்து விடும்
பூனைய வச்சு ஒருவன் ஊர் ஊராக வித்தை காட்டி என் பூனை நான் சொல்வதையெல்லாம் கேட்கும் என்று கூறினானாம்
அங்குள்ள ஒரு பெரியவர் உன் பூனை நான் சொல்வதையும் கேட்கும் என்றார் .
வித்தைக்காட்டுபவனுக்கு கோபம் அது எப்படி உன் பேச்சை கேட்கும் நான் பல வருடமாக பயிற்சி கொடுத்துகொண்டிருக்கிறேன் என் பேச்சை மட்டுமே கேட்கும் என்றான் .
அந்த பெரியவர் இல்லை என் பேச்சையும் கேட்கும் என்று மீண்டும் கூறினார் .
என் பூனை என் பேச்சை கேட்கிறதா ? உன் பேச்சை கேட்கிறதா ?? பந்தயம் வைப்போமா என்றான் .
பெரியவர் உன் பூனை என் பேச்சை கேட்டுவிட்டால் இனி நீ வித்தை காட்டும் தொழிலையே விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டிக்கு ஒப்புக்கொண்டார் .
போட்டி ஆரம்பமானது வித்தைகாரன் சொல்வதையெல்லாம் கேட்டது பெரியவர் அமைதியாக வேடிக்கை பார்த்தார் .
கூட்டம் ஆரவாரம் செய்தது .
வித்தைக்காரன் ஒரு வளையத்தை வைத்து அதற்குள் புகுந்து வெளியே வா என்றான் .
அந்த நேரத்தில் பெரியவர் தன் பையில் வைத்திருந்த எலியை மைதானத்தில் விட்டு பூனையே அதை பிடி என்றார் .
எலியை கண்ட பூனை எலியை விரட்ட வித்தைக்காரன் முழித்தான்
பெரியவர் கூறினார் பார்த்தாயா உன் பூனை நான் சொல்வதையும் கேட்கும் என்றார் .

மனிதனின் மனமும் அப்படிதான் சில நல்ல விஷயங்களை கேட்டு படித்து மனதை மாற்றி வித்தைக்காரனை போல பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோமே தவிர நமது மனதின் உண்மையான குணம் மாறாமல்தான் இருக்கிறது .
அதைத்தான் நபியவர்களும் கூறினார்கள் ஒரு மலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டது என்று யாராவது கூறினால் நம்புங்கள் ஒரு மனிதனின் இயற்கையான குணம் மாறி விட்டது என்று கூறினால் நம்பாதீர்கள் என்றார்கள் .
குணத்தை சில பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தலாமே தவிர முழுமையாக மாற்ற முடியாது .
ஒரு மகானிடம் ஒரு மனிதன் நான் நீங்கள் கூறிய நல்லதையும் செய்கிறேன் என் பழக்க வழக்கத்தில் இருக்கும் தீமைகளையும் செய்கிறேன் நிறுத்த முடியவில்லை என்ன செய்வது என்று கேட்டார்
அந்த ஞானி கூறினார் நீ நல்லதும் செய் தீயதும் செய் என்றாவது ஒருநாள் ஒரு விஷயம் நின்று விடும் என்றார் .
அந்த மனிதர் திகைத்து தீயவை நிற்பதற்கு பதிலாக நல்லவை நின்று விட்டால் என்ன செய்வது என்றார் .
அந்த பெரியவர் அதுவும் நல்லதுதான்
உன் இயற்கையான குணம் என்னவென்று உனக்கு தெரிந்து விடும் என்றார் ....
 

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...