Tuesday, 8 May 2018

எளிய மூலிகை பரிகாரங்கள்

எளிய மூலிகை பரிகாரங்கள்

 இனம் தெரியாத பயம், படபடப்பு, பயத்தினால் தூக்கமின்மை உள்ளோர்கள்

🌿செந்நாயுருவி🌿
வேரை தாயத்தில் அடைத்து கழுத்தில், கைகளில் கட்டி கொள்ள மேற்கண்டவை நீங்கும். எந்த நாளும் செய்யலாம். நல்ல நேரம் மட்டும் பார்த்தால் போதுமானது. வேறு எந்த நிபந்தனையும் இல்லை. ஜாதகத்தில்
🌿கேது-சந்திரன், சந்திரன்-செவ்வாய், சனி-சந்திரன் சேர்க்கை
உள்ளோர்🌿
அவசியம் அணிதல் நன்று. மேலும்
🌿அஸ்வினி, பரணி, ரோஹிணி நட்சத்திரக்காரர்கள்🌿
இதை அணிய நன்மைகள் பல நேரும்.
எங்கு சென்றும் நீங்காத உடல் பிரச்னை இருந்து வந்தால், காரணம் தெரியாமல் இருந்தால்,
🌿பப்பாளி பழம் ஒன்று எடுத்து தலையை வலது புறமாக 27 முறை சுற்றி பின்பு அதை பசுவிற்கு கொடுக்க, உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும்.🌿
குழந்தைகள் திருஷ்டியால் அழுது கொண்டே இருந்தால்
🌿பப்பாளி மரத்தின் இலையை சிறிது நேரம் குழந்தையின் நெற்றியிலோ அல்லது வயிற்றிலோ வைத்திருக்க, திருஷ்டி நீங்கி அழுகை நிற்கும்.


No comments:

Post a Comment

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று

 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு ...