Friday, 14 July 2017

சித்திரை நட்சத்திர வடிவம்

சித்திரை நட்சத்திர வடிவம்

சித்திரை நட்சத்திர வடிவம் - ஸ்வஸ்திகா
==================================

ஸ்வஸ்திகா என்பது சித்திரை நட்சத்திர வடிவம் ஆகும். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த விநாயகருக்கு அவரது கையில் (ஹஸ்தத்தில்) ஸ்வஸ்திகா வடிவம் வரையப்படுகிறது. ஹஸ்தம் என்றல் சமஸ்கிருதத்தில் உள்ளங்கை என்று பொருள். சித்திரை நட்சத்திரத்தின் வானியல் பெயர் Spica ஆகும். இந்த நட்சத்திரம்  சுபர்சவநாதர் என்ற சமண சமயத்தின்மதபோதகர் பின்பற்றியது என்ற கூற்றும் உண்டு. இவர் ஏழாவது சமண சமய அருகன் (தீர்த்தங்கரர்) ஆவார். சமண சமய சின்னங்களில் ஸ்வஸ்திகா வடிவத்திறக்கு தனி இடம் உண்டு.        

சுபர்சவநாதர் என்ற அருகன் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரது நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரங்கள் பின்வருமாறு கேட்டையின் ஆறாவது நட்சத்திரம் அவிட்டம், பதினைந்தாவது நட்சத்திரம் மிருகசீரிடம் மற்றும் இருபத்துநான்காவது நட்சத்திரம் சித்திரை ஆகும். ஸ்வஸ்திகா என்ற சித்திரை நட்சத்திர வடிவத்தை இந்த சமண சமய  அருகன் பயன்படுத்தி புகழ் பெற்றார். ஏற்கனவே கூறியது போல் சம்பத்து அல்லது பரம மித்திர நட்சத்திர வடிவம் தான் அருகில் இயற்கையாக அமையப்பெறாதவர்கள், சாதக நட்சத்திரம் பயன்படுத்தி நலம் பெறலாம்.

ஹிட்லர் பூராடம் நட்சத்திரம் அவரது நட்சத்திரத்திற்கு செம நட்சத்திரம் சித்திரை ஆகும். எனவே இவருக்கு இந்த சித்திரை நட்சத்திர ஸ்வஸ்திகா வடிவம் பல வெற்றியை பெற்று கொடுத்தது.

ஸ்வஸ்திகா நலம் தரும் நட்சத்திரங்கள்
===================================

ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி - வளம் தரும்

சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் - தைரியம் தரும்

கேட்டை, ஆயில்யம், ரேவதி - சாதக சூழல் தரும்

பூராடம், பூரம், பரணி - நலம் தரும்

ஸ்வாதி, திருவாதிரை, சதயம் - வழிகாட்டியாய் அமையும் 

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...