Friday, 14 July 2017

ஒரு துறவியும் அவருடைய சீடரும்

ஒரு துறவியும் அவருடைய சீடரும்

ஒரு துறவியும் அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் .

அந்த நேரத்தில் வெகுதூரத்தில் ஒரு புலி உருமுவதும் அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது.

உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது . அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான்

ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் .

சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார் . குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து சீடன் கண்களை திறந்து பார்த்தான் .
குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.

சீடன் குரு விழித்ததும் அவரிடம் கேட்டான் எப்படி குருவே கோபமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது.
"நாம் எவ்விதமான அலையை பரப்புகிறோமோ நம்மை சுற்றி இருப்பவர்களும் அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .

எனவே நம்மை சுற்றி நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் . நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் .

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...