இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த பஞ்சபூதங்கள் என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம். மண்ணின் கூறாக மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை ஆகியவை ஐந்தும் இருக்கின்றன. நீரின் கூறாக இரத்தம், கொழுப்பு, வியர்வை, உமிழ்நீர், சிறுநீர் ஆகியவை ஐந்தும் இருக்கின்றன. நெருப்பின் கூறாக உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் ஆகிய ஐந்தும் இருக்கின்றன.
காற்றின் கூறாக நடத்தல், ஓடல், நிற்றல், இருத்தல்ர கிடத்தில் ஆகிய ஐந்தும் திகழ்கின்றன. ஆகாயத்தின் கூறாக காமம், லோபம், குரோதம், மோகம், மதம் ஆகிய ஐந்தும் விளங்குகின்றன. இவற்றை சித்தர்கள் புறக்கரணம் அல்லது புறக் கருவிகள் என்பர்.
புறக் கரணங்களைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் இந்த பூதங்களின் சேர்க்கையால் என்னவெல்லாம் உருவாகிறது என்று தெரிந்து கொள்வோம்.
முதலில் மண்ணின் கூறு.
மண் + மண் = எலும்பு
மண் + நீர் = மாமிசம்
மண் + நெருப்பு = தோல்
மண் + வாயு = நரம்பு
மண் + ஆகாயம் = முடி.
நீரின் கூறு.
நீர் + நீர் =சிறு நீர்
நீர் + மண் = உமிழ் நீர்
நீர் + நெருப்பு = வியர்வை
நீர் + வாயு = இரத்தம்
நீர் + ஆகாயம் = சுக்கிலம்.
நெருப்பின் கூறு.
நெருப்பு + நெருப்பு = தூக்கம்
நெருப்பு + மண் = பசி
நெருப்பு + நீர் = தாகம்
நெருப்பு + வாயு =ஆலகியம்
நெருப்பு + ஆகாயம் = சேர்க்கை.
வாயுவின் கூறு.
வாயு + வாயு = ஓடல்
வாயு + மண் = படுத்தல்
வாயு + நீர் = நடத்தல்
வாயு + நெருப்பு = உட்காருதல்
வாயு + ஆகாயம் = தாண்டல்.
ஆகாயத்தின் கூறு.
ஆகாயம் + ஆகாயம் = மோகம்
ஆகாயம் + மண் = ராகம்
ஆகாயம் + நீர் = துவேஷம்
ஆகாயம் + நெருப்பு = பயம்
ஆகாயம் + வாயு = நாணம்.
இதே போன்று நம்முடைய ஆதாரங்களும் பஞ்சபூதங்களின் தன்மைகளைக் கொண்டுள்ளன என்பது சித்தர்கள் வாக்கு.
மூலாதாரம் மண்பூதம், சுவாதிஷ்டானம் நீர் பூதம், மணிபூரகம் நெருப்பு பூதம், அனாஹதம் வாயு பூதம், விசுத்தி ஆகாய பூதம் என்றும் ஆக்ஞா, சகஸ்ராரம் என்ற இரண்டு ஆதாரங்களும் உயர்நிலை ஆதாரங்கள் எனவும், அவைகளுக்கு தனிப்பட்ட பஞ்சபூதத் தன்மை கிடையாது என்று சொல்கிறார்கள். விசுத்தியை தாண்டும் போது ஆகாயபூதத்தோடு கலந்துவிடுவார்கள் யோகிகள்.
35 வயதுக்கு மேல்தான் மேல்நிலை ஆதாரங்கள் வலுப் பெறும் என்றும், மிகமிக அரிதாக கோடியில் ஒருவருக்கு இளமையிலேயே அதுவும் இயற்கையிலேயே இவை வலுவாக அமைந்து விடுவதுண்டு. அது இறைவனின் அருள் அல்லது பூர்வ ஜென்ம பலன் என்று கூறலாம். எவர் ஒருவர் மேல்நிலை ஆதரங்களின் எல்லைகளைத் தொடுகிறாரோ அவர் கர்மாவானது அறுபடுகிறது. பாவ, புண்ணிய கர்ம பந்தங்கள் அறுபட்ட பரமாக சுத்தவெளியாக மாறிவிடுவார்.
இப்படி ஆன்மா சுத்தப் படுத்தப்படும் நிகழ்வு விஷுத்தி என்கிற ஐந்தாவது ஆதாரத்தில்தான் நடை பெறுகிறது. எனவேதான் அது தூய்மையான என்ற பொருள் கொண்ட விஷுதி என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகே ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முடியும்.
No comments:
Post a Comment