நமது இந்து மதத்தை பற்றி குறை கூறுபவர்கள்
தேவர்கள்*
நமது இந்து மதத்தை பற்றி குறை கூறுபவர்கள் உங்கள் மதத்தில் பல கடவுள்கள் இருக்கிறார்கள் ஒரு தெய்வ வழிபாடு என்பது இல்லைவே இல்லை. என்று முக்கியமான ஒரு குற்றசாட்டை முன் வைக்கிறார்கள். நம்மில் பலரும் அந்த குற்றசாட்டை கேட்டு அவர்கள் சொல்வதும் உண்மைதானே.கல்விக்கு ஒரு கடவுள், செல்வத்திற்கு பெற, இறப்பிலிருந்து தப்பிக்க என ஏகப்பட்ட கடவுள்களை வைத்திருக்கிறமே. என்று தனக்குள்ளேயே சமதானம் சொல்லி கொள்பவர்களும் உண்டு, பல தெய்வ வழிபாடு எல்லாம் இல்லை ஒரே தெய்வம் தான் அதற்கு பல பெயர்களை வைத்திருக்கிறார்கள் என்று பதில் சொல்பவர்கள் கூட ஒரே தெய்வத்திற்கு பல பெயர்கள் என்றால் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறதே யார் அந்த தேவர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் பலநேரம் தவிக்கிறார்கள்.
நெருப்பின் கடவுள் அக்கினி காற்றின் கடவுள் வாயு, தண்ணிரின் கடவுள் வருணன் என்று எல்லாம் சொல்லப்படுபவைகள் உண்மையில் கடவுள் தானோ என்று குழம்பியும் போகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றால் யார்? தேவர்கள் என்பது கடவுளை குறிக்கும் வார்த்தையா? இல்லையா? என்று எல்லாம் நமக்குள் சந்தேகங்கள் கிளம்புவதை தவிர்க்க இயலாது. உண்மையில் தேவர்கள் என்ற வார்த்தை கடவுளை சுட்டி காட்டுவது அல்ல தெய்வம் என்றால் தான் கடவுளை குறிக்கும் அப்போது தேவர்கள் என்றால் யார்?
கிறிஸ்த்துவர்களின் வேத நூலான பைபிளை படித்தவர்கள் அதில் தேவ தூதர்கள் என்று சிலர் பூமிக்கு வந்து போவதை குறிப்பிட்டு இருப்பதை அறிவார்கள். தேவதூதர்களின் முக்கியமான பணி கடவுளின் சித்தத்தை மனிதருக்கு தெரிவிப்பது மனிதர்களின் கஷ்டங்களை நீக்க சொல்லி கடவுளிடம் மன்றாடுவது. இப்படி தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.
கத்தோலிக்க மத பிராத்தனை கூட ஏசுநாதரின் தாயாரான கன்னி மரியாளை நோக்கி எங்களுக்காக கர்த்தரை வேண்டி கொள்ளும் என்ற பிராத்தனையை கேட்டாலே தேவர்கள் மற்றும் தேவதைகள் என்பது கடவுளின் தூதர்கள் அல்லது பணியாளர்கள் என்பது சொல்லாமலே விளங்கும். இஸ்லாமிய மதத்தில் கூட மலக்குகள் என்று சிலரை குறிப்பிடுவார்கள். இறுதி தீர்ப்பு நாளன்று மனிதர்களின் நல்லது கெட்டதுகளை எடுத்து சொல்லி விளக்குபவர்கள் என்று இஸ்லாமிய நூல்கள் சொல்லுகின்றன.
கடவுள் என்பவன் இந்துமத தத்துவப்படி ஒருவனே அவனே படைக்கும் போது பிரம்மாவாகவும், காக்கும் போது விஷ்ணுவாகவும், அழிக்கும் போது சிவனாகவும் இருக்கிறான். கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தையும், உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் அதனதன் வாழ்வுக்கு ஏற்றுவாறு ஒழுங்குபடி அமைத்து கொடுப்பது தேவர்கள் ஆகும். எப்படி கிறிஸ்த்துவத்தின் தேவதூதர்கள் என்பது கடவுளின் தூதர்களோ, இஸ்லாத்தின் மலக்குகள், இறை பணியாளர்களோ அப்படி தான் இந்து மதத்தில் தேவர்களும். மனிதர்களை போலவே தேவர்களும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள் தான். மனிதர்களுக்கு உயிரோடு வாழும் காலங்களில் பௌதிக உடல் மட்டும் தான் உண்டு, ஆனால் தேவர்களுக்கோ உருவமும் உண்டு, உருவம் இல்லாத நிலையும் உண்டு.
கடவுளால் படைக்கப்பட்ட தேவர்களை தவிர மனித வாழ்க்கையில் உயர்ந்த தவத்தையும், மிக உயர்ந்த ஞானத்தையும் எல்லாவற்றையும் விட சிறந்த தியாகத்தை புரிந்தவர்களும், ஆத்ம பரிணாமத்தின் மூலம் தேவர்கள் ஆவதும் உண்டு, தேவர்களின் செயல்களுக்கு ஏற்ப அவர்களின் பெயர்களும் கின்னரர், கிம்புருஷர், யட்சர், சித்தர், சாரணர், சாத்தியர் கந்தர்வர் என மாறுபடும். தேவர்களுக்கு மூன்று வகையான ரூபங்கள் உடையதாக இந்து மத வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. தேவலோகத்தில் புனித சரீரத்தோடு அவர்கள் இருப்பதை ஆதி தைவீக ரூபம் என்றும், பூமியில் பஞ்ச புதங்களோடு கலந்து உருவமற்று இருக்கும் போது ஆதி பௌதிக ரூபம் என்றும், ஒவ்வொரு உயிர்கள் இடத்திலும் நிறைந்து இருக்கும் போது அத்யாத்மிக ரூபம் என்றும் சொல்லப்படுகிறது.
மனிதர்கள் வாழுகின்ற பூமியை பூலோகம் என்று அழைப்பது போல் தேவர்கள் வாழுகின்ற அண்ட வெளியில் ஒரு பகுதியை தேவலோகம் என்று அழைக்கிறார்கள். இந்த தேவலோகம் என்பது பூமியிலிருந்து 85 நூறாயிரம் யோசனை தூரத்தில் அமைந்துள்ளதாக பாகவதம் உட்பட பல புராண நூல்கள் சொல்லுகின்றன. தேவலோகத்தின் தலைநகர் அமராவதி பட்டணமாகும்.
இந்த பட்டணத்திலிருந்து தான் தேவர்களின் இணையற்ற அரசனாக தேவேந்திரன் ஆட்சி செய்கிறான் என்று பல பண்டைய நூல்கள் நமக்கு தரும் தகவல்களாகும் தேவலோகத்தில் இன்பத்தை தவிர வேறு எந்த உணர்வுகளுமே கிடையாது. பசி, பிணி, மூப்பு சாக்காடு என்ற நான்கு வகை கஷ்டங்கள் தேவலோக வாசிகளுக்கு இல்லவே இல்லை. இவர்களுக்கு பசியெடுப்பது இல்லையென்றாலும் அமிர்தத்தை மட்டும் உணவாக உட்கொள்கிறார்கள் நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.
தேவர்களின் அரசன் தேவேந்திரன் என்பது நமக்கு தெரியும். இவனது மனைவி பெயர் இந்திராணி, மகன் பெயர் ஜெயத்தன், சுதன்மா என்ற தேவசபையில் அரசு புரியும் இவன் ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பவனி வருவானாம். இவனுக்கு கீழ் தான் முப்பது கோடி தேவர்களும்.
இவர்களில் ஆதித்தர் என்ற தேவர் குழு பன்னிரெண்டு பேர் கொண்டதாகும். ஏகாதச ருத்திரர்கள் என்ற குழு பதினொரு பேர் கொண்டதாகும். இது தவிர அஷ்டவசுக்கள், அஸ்வினி தேவர் இருவர் ஆக முப்பது பேர்தான் தேவர்கள் இந்த முப்பது பேருக்கும், தலைக்கு ஒரு கோடி பணியாளர்கள், இப்போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றால் யார் என்பது தெளிவாக தெரிந்திருக்கும்.
வைகத்தன், விபஸ்சுதன், வாசன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோக பிரகாசன், லோக சாட்சி, திருவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன் அங்கிமாலி என்பவர்கள் பன்னிரெண்டு ஆதித்தர்கள் ஆவார்கள். மகாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலகண்டன், ஈசானன், விஜயன், பீமதேவன், பவோர்ப்பவன், கபாலி செழியன் என்ற பதினொரு பேரும் ஏகாதசருத்ரர்கள் ஆவார்கள். இந்த ருத்ரர்கள் படைப்பு கடவுளான பிரம்மாவின் நெற்றியில் தோன்றி அவன் படைப்பு தொழிலுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தது அனலன், அனிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியுஷன், பிரபாசன் என்பவர்கள் அஷ்ட வசுக்கள் ஆவார்கள். நாசத்யன், தசரன் என்னும் இரண்டு பேர்கள் அஸ்வினி குமார்கள் என்ற மருத்துவ தேவர்கள் ஆவார்கள்.
தேவர்களை மனிதர்கள் தங்களது ஊன கண்களால் காண முடியாது. நாமெல்லாம் பல ஆண்டுகள் பாடுபட்டால் தான் வேத அறிவை முழுமையாக பெற முடியும். ஆனால் தேவர்கள் பிறக்கும் போதே வேத அறிவோடு பிறப்பதாக சொல்லப்படுகிறது. வேத அறிவு என்பது வெறுமனே மந்திரங்களை உருப்போடுவது அல்ல. வேதத்தை நெஞ்சோடு நெஞ்ஞாக உணர்ந்து அனுபவிப்பதே ஆகும்.
மனிதர்கள் செய்கின்ற செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை கடவுளிடம் இருந்து மறைக்க முடியாது என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறோம். கடவுளுக்கு வேறு வேலையே கிடையாதா? உலகில் உள்ள ஒவ்வொருவரும் என்ன செய்கிறான். ஏது செய்கிறான் என்று கண்காணிப்பது தான் அவரது வேலையா? அது எப்படி ஒரே நேரத்தில் பலகோடி உயிர்களின்செயல்களை ஒரே கடவுளால் கண் காணிக்க முடிகிறது என்று பல நேரங்களில் நமக்கு சந்தேகம் வருவதுண்டு
அதற்கு விடையாக இந்த புராணங்கள் உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களின் ஒவ்வொரு உறுப்பிலும் தனித்தனியான கவனத்தை தேவர்கள் வைத்திருக்கிறார்கள் ஒரு செயற்கை கோளானது பூமியில் உள்ள அனைத்து நடமாட்டங்களையும் கண்டுபிடித்து கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பது போல தேவர்களின் கண்காணிப்பு கடவுளின் கவனத்திற்கு விஷயத்தை கொண்டு சேர்த்து விடும் என்ற ரீதியில் சூரியன் உயிர்களின் கண்களிலும் அக்னி வாக்கினிலும், இந்திரன் கைகளிலும் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
பொதுவாகவே மனிதர்களுக்கு அதிகமாக எண்ணங்கள் உற்பத்தியாவதற்கு கண்கள் தான் காரணமாகிறது. பல நேரங்களில் கண் வழியாக பெற்ற எண்ணமே வாய்வழி சொல்லாக வருகிறது. அடுத்த கட்டமாக கைகள் மூலம் செயலாக வடிவெடுக்கிறது. ஆக உயிர்களின் சிந்தனை சொல், செயல் எல்லாமே கடவுளால் ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்க படுகிறது
இப்படி உணர்ந்தவன் தனது புத்தியை தீய வழியில் செலவிடமாட்டான். தீயவழியில் செலவிடாத புத்தி மனிதனை நற்கர்மங்களில் மட்டுமே ஈடுபடுத்துகிறது. நல்ல காரியத்தை தொடர்ந்து செய்யும் சாதாரண மனிதர்கள் கூட தேவர்களாகி விடலாம். இந்து மத சட்டப்படி மனிதன் தேவனாகலாம், ஆனால் தேவராக இருந்தால் கூட மீண்டும் மனிதராக பிறந்தால் தான் கடவுளின் பாதத்தில் ஐக்கியமாக முடியும் தேவராவதும் கடவுளோடு கலப்பதும் நாம் நல்ல மனிதர்களாக வாழ்கிறோமா என்பதில் தான் இருக்கிறது...
🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

No comments:
Post a Comment