அழகான வரிகள்....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.
ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!
மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..
சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..
மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..
புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!
வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!
அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!
நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!
நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்
வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..
விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை!
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை!! இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..
விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!.
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...
¤ இன்னொருவன்..
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,
5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...
¤ இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...
¤ இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...
☆நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை.
☆எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...
☆அவனைப்போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில், உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருப்பான்.
☆உனக்கு விதிக்கப்பட்டது வேறு..
அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்!... அவ்வளவே...
☆ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...
No comments:
Post a Comment