Thursday, 27 May 2021

*தீய பழக்கங்களிலிருந்து வெளிவருவது எப்படி? கீழ் குறிப்பிடும் சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.

 *தீய பழக்கங்களிலிருந்து வெளிவருவது எப்படி?

கீழ் குறிப்பிடும் சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.
*

*பழக்கம் என்பது இரும்பு சங்கிலி போல, அதனை உடைக்க விடாமுயற்சி என்ற சுத்தியல் கட்டாயம் தேவை. நாளுக்கு நாள் அதனிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்... அந்த முயற்சியை பலர் பரிகசிப்பார்கள்‌. சிலர் பாராட்டுவார்கள். உங்களுக்கு நீங்களே தினம்தினம் முன்னேறி இருக்கிறீர்களா என்பதை மட்டும் கவனியுங்கள் .மற்றவர்களின் விமர்சனத்தை புறக்கணியுங்கள்‌. தீய பழக்கங்களிலிருந்து விடுபட அந்த எண்ணங்களில் இருந்து முற்றிலும் விடுபட சில மாதங்கள் கூட ஆகலாம். ஆனால் தொடர் முயற்சி தேவை. ஒவ்வொரு நாள் முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். என்னால் முடியும், என்னால் முடியும் நான் என்னை மாற்றிக் கொள்வேன். மாற்றி காட்டுவேன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளவனாக நான் இருப்பேன்... என படிக்கும் மாணவன் போல போல அடிக்கடி சொல்லி பாருங்கள். நல்ல மாற்றம் இருக்கும். ஏமாற்றம் இருக்காது. உங்களுக்கு நீங்களே முரண் படாதீர்கள். இப்படி நீங்களே முரண் படுவதுதான், நம்மை செயல்பாட்டில் பின்னுக்கு தள்ளிவிடும். எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் தீய பழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ‌. அதைப் பிறர் சொல்வதில்லை என நம்புங்கள். தீயபழக்கம் என்றால் மது மாது சூது பொய் என்பது மட்டுமல்ல. கோபம், விரக்தியாக இருத்தல், பொறாமை படுதல், பிறருக்கு உதவி செய்யாமல் இருத்தல், விடியற்காலையில் எழாமல் இருத்தல், நல்ல செயல் செய்யும் பிறரை பாராட்டாமல் இருத்தல், பண்பாடு தெரியாமல் இருத்தல், பெரியோரை மதியாமை, தனக்கு மட்டுமே வேண்டும் என்கின்ற பேராசை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், எதற்கெடுத்தாலும் குற்றம் காணுதல், (இன்னும் சொல்லலாம்...)என அனைத்துமே தீய பழக்கங்கள்தான். எனவே நீங்கள் மட்டும்தான் தீய பழக்கம் கொண்டுள்ளீர்கள் என எண்ணாதீர்கள். உங்களின் பழக்கம் அதிக பாதிப்பு அடையச் செய்கிறது அவ்வளவுதான். மனிதர்கள் பெரும்பாலும் மேற்சொன்ன சில தீய பழக்க வழக்கங்களை தம்மையும் அறியாமல் கடைபிடிப்பவர்கள்தான். அதிலிருந்து வெளியேற நாளும் முயற்சிப்பவர்கள்தான். அதனால் உங்களை தாழ்வாக கருதாதீர்கள். விடாமுயற்சி செய்யுங்கள்... அது மட்டுமே மிக விரைவில் தீய பழக்கங்கள் இருந்து வெளியேற துணை புரியும். ஆழ்மனம் அதற்கு உறுதுணையாக இருக்கும். தீய பழக்கங்களிலிருந்து எந்த வழிகள் மூலம் வெளியேறுவது என்பதும்கூட உங்களுக்கு 100 சதவீதம் தெரியும்.. செயல்படுத்த வேண்டியது மட்டுமே பாக்கி. அதற்கு "விடா முயற்சி" தேவை அவ்வளவே.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...