Sunday, 8 December 2019

சனி பகவானின் பல்வேறு தரிசனம் !

 * கும்பகோணம் - வலங்கைமான் சாலையில் உள்ள குருஸ்தலமான ஆலங்குடியில் ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோயிலில் காகத்துக்குப் பதில் கருடனை வாகனமாகக் கொண்டு தரிசனம் தருகிறார் .
* கும்பகோணம் - கதிராமங்கலம் சாலையில் உள்ள திருக்கோடிக்காவல் தலத்தில் சனி பகவான் பாலசனீஸ்வரராகக் காட்சியளிக்கிறார் .
* தென்காசி - மதுரை சாலையில் உள்ள இலத்தூரில் ஸ்ரீமதுநாதர் திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் அபய ஹஸ்த நிலையில் கைகளைக் காட்டியபடி காட்சி தருகிறார் .
* திருச்செந்தூரில் கோயிலில் சனீஸ்வரர் மட்டும் 4 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் காக்கை வாகனத்தில் காட்சி தருகிறார் .
* கோவை - பாலக்காடு சாலையில் உள்ள நவக்கிரக மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் ஆலயத்தில் சனி பகவான் வலது காலை காகத்தின் மீது வைத்து அருள்பாலிக்கும் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது .
* பெரும்பாலும் தனித்தே காட்சி தரும் சனி பகவான் அபூர்வமாக சில தலங்களில் தம்பதி சமேதராக காட்சியளிக்கிறார் . அரக்கோணம் - திருத்தணி பாதையில் உள்ள மங்கம்மாபேட்டை என்ற தலத்தில் சனி பகவான் தனி சந்நிதியில் இடது தொடை மீது மனைவி நீலாதேவியை அமர்த்திக் கொண்டு திருக்கல்யாணக் கோலத்தில் 5 அடி உயரத்தில் காட்சி தருகிறார் . இப்படிக் காட்சி தரும் அமைப்பை , ' கல்யாண சனி முகூர்த்தம் ' என்பார்கள் .
* விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் சுமார் 15 கி . மீ . தொலைவில் உள்ள கல்பட்டு கிராமத்தில் சனி பகவானின் விக்கிரகம் நின்ற நிலையில் தனித்துக் காணப்படுகிறது .
* கும்பகோணம் - வடமட்டம் பேருந்து பாதையில் 1 கி . மீ . , தொலைவில் உள்ள கோனேரிராஜபுரம் , சிவன் கோயிலில் மேற்குப் பார்த்த நிலையில் உள்ளார். திருநள்ளாறு செல்லும் முன் நளனும் அவன் மனைவியும் இத்தலத்துக்கு வந்து சனி பகவானை வழிபட்டு அனுக்ரஹம் பெற்றுள்ளனர் .
மற்ற தலங்களில் கறுப்பு வஸ்திரம் தரித்திருக்கும் சனி பகவான் இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அருள்பாலிக்கிறார் . இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் .
* ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலில் சனி பகவான் மனைவியர் இருவருடன் தனிச் சந்நிதியில் வாகனம் இன்றி அருள் புரிகிறார் .
* மயிலாடுதுறை அருகில் உள்ள கூறைநாடு ஸ்ரீ புனுகீஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்குத் தனி விமானம் , தனி கும்பம் , தனிச் சந்நிதி உண்டு . இவர் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருகிறார் .
* திருச்சி தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் சனி பெயர்ச்சி அன்று சனி பகவான் சுவாமியுடன் வீதி உலா வருகிறார் .
* திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பொங்கு சனி என்ற பெயரில் தனிச் சந்நிதியில் நின்ற நிலையில் அருள்புரிகிறார்.
* பொதுவாக நவக்கிரகங்கள் நின்ற நிலையிலேயே எங்கும் காணப்படும் . ஆனால் , திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோயில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சனி பகவான் நவக்கிரக சந்நிதியில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் .
* புதுச்சேரி - கோரிமேடு அருகே உள்ள மொரட்டாண்டியில் 27 அடி உயரத்தில் பஞ்சலோக விவேகும் சனீவரர் அருள்பாலிக்கிறார்
* கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 10கிமீ தொலைவில் நாச்சியார் கோயிலில் ராமநாதேஸ்வர்ர் பர்வதவர்த்தினி கோயிலில் சனி பகவான் இரண்டு மனைவியருடன் மாந்தி குளிகன் என இரு பிள்ளைகளுடன் குடும்பசகிதமாக மங்கலசனீஸ்வர்ர் என்ற பெயரில் தரிசனம் தருகிறார் அவருக்கு எதிரில் காக வாகனம் துஜ ஸ்தம்பமாக உள்ளது
நாச்சியார் கோயில் வண்டிப்பேட்டை நிறுத்தத்தில் மங்கல சனீஸ்வர்ர் கோயில் எனக் கேட்டால் சொல்வார்கள்.
சனி பகவான் முல மந்திரம்
ஓம் சனீஸ்வராய நம
தினமும் காலை வேலையில் குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்தால் சனி பகவான் நளம் தருவா் .
சனி பகவான் காயத்ரி மந்திரம்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: பிரசோதயாத்
மேற்கண்ட காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறையோ இருபத்தேழு முறையோ உள்ளா்ந்த பக்தியுடன் பாராயணம் செய்தால் சனி பகவான் மிகவும் மகிழ்ந்து . கடன் தொல்லைகளையும் , தீராத நோய்களையும் தீா்ப்பாா் , எல்லா வளங்களையும் வழங்குவாா் .
சனி தோஷங்களால் பாதிக்கப்பட்டவா்கள் சனி பகவான் கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , எள் முடிச்சு விளங்கு ஏற்றி வழிபடுவதால் தொழல் வளம் , துன்பங்கள் தீரும் , திருமணத் தடை நீங்கும்,சகல வளங்களும் கிடைக்கும்
தாிசனம் செய்ய வேண்டிய தலங்கள்
தினம் கூறினால் நன்மை கிட்டும்
முனிவா்கள் தேவா் ஏனை முா்த்திகள்
முதலா னோா்கள் மனிதா்கள்சகலவாழ்வுகள் மகிமையல்லால் வேறுண்டோ ?
கனிவு தெய்வம் நீயே கதிா்சேயே
காகம்ஏறும்
சனிபக வானே போற்றி தனியனேத் கருள்செய் வாயே

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...