Thursday, 26 December 2019

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக


கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?
• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..
• பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ...
• இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ...
• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
• உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..
• அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..
• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் ...
• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ...
• ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் ...
• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் ... *வாழ்க* *வளமுடன்* .

Sunday, 15 December 2019

*கர்மா*

  *(1)மாயாவுக்கு வசப்பட்டு* *தலைகீழான கர்மம் செய்யக்கூடாது என்பதில் கவனம்* *இருக்க வேண்டும்.*
*(2)கர்மா என்பது மிக ஆழமானது.*
*அனைத்துக்கும் ஆதாரம் கர்மா தான்.*
*(3)இருக்கின்ற எல்லா தத்துவங்களையும்* *விட சிறந்த தத்துவம்*
*"கர்ம தத்துவம் ஆகும்".*
*(4)கர்ம தத்துவத்தில் இருந்து யாரும் தப்பிக்கவே* *முடியாது* .
*(5*
*ஒரு தவறு செய்தால் மீண்டும் அதை* *செய்யாதீர்கள்* .
*இது டிராமா*
*👩‍🦰ஒரு போதும் நாம் செய்த தவறுக்கு மன்னிப்பே* *கிடையாது* .
*👩‍🦰அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக* *வேண்டும்* .
*(6)நாம் எதை விதைக்கிறோமோ,*
*அதை தான் அறுபடை பண்ண வேண்டும்.*
👩‍🦰 *நல்ல செயல்கள் செய்தால் நல்லவைகள்* *நம்மை தேடி வரும்.*
👩‍🦰 *தீயதை செய்யும் போது,தீயவையே வரும்.*
*(7)தீயவை செய்யும் போது நம்*
*மனட்சாட்சியே*
*நம்மை வறுத்து எடுத்து விடும்.*
👩‍🦰 *தர்மராஜ் தண்டையில் இருந்து யாரும் தப்பவே முடியாது.*
*(8)ஹிட்லர் எத்தனை பேரை கொன்றார்.*
👩‍🦰 *ஆனால் கடைசியில் எதிரிகள் அவரை* *சூழ்ந்து கொண்ட போது,*
*அவரே தன்னை சுட்டுக்கொன்று* *தற்கொலை செய்து கொண்டார்.*
*(9)ஞானத்திற்கு வந்த பிறகு,*
*கர்மத்தின் ரகசியங்களை தெரிந்து* *கொண்டபிறகு* ,
*தவறு செய்தால்*
*1க்கு 100 மடங்கு தண்டனை* *கிடைக்கும்* .
*(10)நாம் அனுபவிக்கும் சுகம்,துக்கம்* *அனைத்துக்கும் நாம் தான் காரணம்.*
*நாம் படைத்தது தான் நமக்கு வருது* .
👩‍🦰 *யார் மீதும் பழியை போடக்கூடாது.*
*யாரையும் கை காட்டக்கூடாது.*
*(11)பணிவுத் தன்மையோட* *இருக்க வேண்டும்.*
*எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருக்க வேண்டும்.*
*(12)ஒருவருடைய வாழ்க்கையில் எப்போது வளர்ச்சி ஏற்படுகிறது?*
*👩‍🦰வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டத்தை,கடக்கும் போது அவர்களது* *வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுகிறது.*
*(13)எழுதி வைத்துக் கொள்ளுங்கள்,*
*"எந்த அளவு வலியை அனுபவிக்கிறீர்களோ,*
*அந்த அளவு மிகப்பெரிய வளர்ச்சி அடைவீர்கள்.*
*(14)யாராவது பாராட்டிக் கொண்டே இருந்தால் நமக்குள்* *வளர்ச்சி ஏற்படாது.*
👩‍🦰 *யாராவது குறை சொல்லும்* *போது தான்,*
*நமக்குள் போய் மாற்றத்தை* *கொண்டு வந்து, வளர்ச்சி அடைவோம்.*
*(15)பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.*
*👩‍🦰நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் நாமே தான்* *பொறுப்பு* .
*(16)சில சமயம் வாழ்க்கையில்* *குழப்பம் ஏற்படும் போது ,உங்களுக்குள் சென்று* *பாருங்கள்* ,
*உள்ளே இருக்கும் குழப்பம் போய்விடும்.*
*(17)உள்ளே இருக்கும் குழப்பம் போய்விட்டால்,* *வெளியே இருக்கும் குழப்பமும்* *போய்விடும்* .
*(18)தனிப்பட்ட மனம்,*
*பொதுவான மனம்,*
*இந்த இரண்டு மனமும், இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது.*
*👩‍🦰இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது* .
*(19)இந்த பிரபஞ்சமே அதிர்வலைகளுடன்* *கூடிய கடலாக இருக்கிறது.*
👩‍🦰 *யார் என்ன பேசுகிறார்களோ,*
*அது ஆகாயத்தில் பதிவாகி விடுகிறது.*
*👩‍🦰இதை ஒரு போதும் அழிக்கவே முடியாது.*
*(20)அப்ப நம்ம கோவத்தில் பேசுவதை* *நினைத்துப்பாருங்கள்* .
*அதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.*
*(21)எதைக்கொடுக்கிறோமோ அதுவே திரும்ப வரும்.*
👩‍🦰 *ஒரு நபருக்கு வெறுப்பை கொடுத்தால்*
*அதுவே நமக்கு வந்து சேரும்* .
👩‍🦰 *எனவே என்ன கொடுக்கிறோம்* *என்பதில் கவனம் வையுங்கள்.*
*(22)எந்த விஷயத்தில் மனம்* *ஒருமுகப்படுகிறதோ* ,
*அதே மாதிரியே ஆகிவிடுவோம்.*
👩‍🦰 *ஒருவரை நினைத்துக் கொண்டே* *இருந்தால்,அவரை மாதிரியே ஆகிவிடுவோம்.*
👩‍🦰 *அப்ப கடவுளிடம் உங்கள் மனதை போக்கஸ்* *பண்ணுங்கள்* ,
*அவரை மாதிரியே ஆகி விடுவோம்.*
*(23)ஒரு தவறு செய்து விட்டால்,*
*அதையே திரும்ப திரும்ப செய்யக்கூடாது.*
*நீங்கள் மாறினால் தான் உலகம் மாறும்.*
*(24)எந்த ஒரு நல்லது செய்தாலும் அதன் பலன் நிச்சயமாக* *நமக்கு வரும்.*
*ஆனால் அது வரைக்கும் பொறுமையாக* *இருக்க வேண்டும்.*
*(25)சின்ன சின்ன காரியங்களை செய்து கொண்டே* *இருங்கள்* ,
*அதுவே முழுமையாகி விடும்*

Friday, 13 December 2019

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்*

*அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்*
*அல்லிப்பூ* செல்வம் பெருகும்
*பூவரசம்பூ* உடல் நலம் பெருகும்
*வாடமல்லி* மரணபயம் நீங்கும்
*மல்லிகை* குடும்ப அமைதி
*செம்பருத்தி* ஆன்ம பலம்
*காசாம்பூ* நன்மைகள்
*அரளிப்பூ* கடன்கள் நீங்கும்
*அலரிப்பூ* இன்பமான வாழ்க்கை
*செம்பருத்தி* ஆன்ம பலம்
*ஆவாரம் பூ* நினைவாற்றல் பெருகும்
*கொடிரோஜா* குடும்ப ஒற்றுமை
*ரோஜா பூ* நினைத்தது நடக்கும்
*மருக்கொழுந்து* குலதெய்வம் அருள்
*சம்பங்கி* இடமாற்றம் கிடைக்கும்
*செம்பருத்தி பூ* நோயற்ற வாழ்வு
*நந்தியாவட்டை* குழந்தை குறை நீங்கும்
*சங்குப்பூ (வெள்ளை)* சிவப்பூஜைக்கு சிறந்தது
*சங்குப்பூ (நீலம்)* விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
*மனோரஞ்சிதம்* குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
*தாமரைப்பூ* செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
*நாகலிங்கப்பூ* லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
*முல்லை பூ* தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்
*பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ)* முன்னேற்றம் பெருகும்
*தங்க அரளி (மஞ்சள் பூ)* குருவின் அருள் , பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
*பவள மல்லி* இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர் களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.

பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
அரச்சனை செய்த பூக்கள் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
*பூசைக்கு சிறப்பான பூக்கள்*
திருமாலுக்கு -- பவளமல்லி , மரிக்கொழுந்து துளசி
சிவன் -- வில்வம் செவ்வரளி
முருகன் -- முல்லை, செவ்வந்தி, ரோஜா
அம்பாளுக்கு -- வெள்ளை நிறப்பூக்கள்
ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.
*ஆகாதபூக்கள்*
விநாயகருக்கு -- துளசி
சிவனுக்கு -- தாழம்பூ
அம்பாளுக்கு -- அருகம்புல்
பெருமாளிற்கு -- அருகம்புல்
பைரவர் -- நந்தியாவட்டை ,
சூரியனுக்கு -- வில்வம்
ஆகியவை பூஜைக்கு ஆகாதவை...

Thursday, 12 December 2019

ஆன்மீகம் தகவல்கள்

1 சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.
2 துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.
3 சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு சீட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.
4 மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
5 இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.
* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும். துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
6 சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.
7 வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.
8 தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும்.
9 மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.
10 சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.
11 குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.
12 இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.
13 வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.
14 அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.
15 சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

Monday, 9 December 2019

பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?

            பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?
1. ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு  பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும்
என்பதை குறிக்கிறது.

2.ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது.

3.அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

4.வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க
நேரிடும்.

5. ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணம் கரையத்
தொடங்கும் என்று பொருள்.

6.வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

7.ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை
ஏற்படுத்த போவதாக அர்த்தம்.

#இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அதற்கு 10 எளிய
வாஸ்து குறிப்புகள் உள்ளன.

1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை

சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப்
பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு
உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

2. ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம்

வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

3. மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம்

பூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.

4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை

சனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து
புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும்.

5. பூஜை அறையில் புனித கங்கை நீர்

புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம்
உண்டாகும்.

6. தீயசக்திகளை துரத்தும் உப்பு

வீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து
நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.

7. சரியான திக்கில் சமையலறை

வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு
மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கோமா
என்பதை உறுதி செய்யுங்கள்.

8. சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது

எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள்
சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.

9. படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி

படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில்
இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள
கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து வரும்

10. அமைதியைத் தூண்டும் மணியோசை

மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும்
தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.

Sunday, 8 December 2019

சனி பகவானின் பல்வேறு தரிசனம் !

 * கும்பகோணம் - வலங்கைமான் சாலையில் உள்ள குருஸ்தலமான ஆலங்குடியில் ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோயிலில் காகத்துக்குப் பதில் கருடனை வாகனமாகக் கொண்டு தரிசனம் தருகிறார் .
* கும்பகோணம் - கதிராமங்கலம் சாலையில் உள்ள திருக்கோடிக்காவல் தலத்தில் சனி பகவான் பாலசனீஸ்வரராகக் காட்சியளிக்கிறார் .
* தென்காசி - மதுரை சாலையில் உள்ள இலத்தூரில் ஸ்ரீமதுநாதர் திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் அபய ஹஸ்த நிலையில் கைகளைக் காட்டியபடி காட்சி தருகிறார் .
* திருச்செந்தூரில் கோயிலில் சனீஸ்வரர் மட்டும் 4 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் காக்கை வாகனத்தில் காட்சி தருகிறார் .
* கோவை - பாலக்காடு சாலையில் உள்ள நவக்கிரக மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் ஆலயத்தில் சனி பகவான் வலது காலை காகத்தின் மீது வைத்து அருள்பாலிக்கும் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது .
* பெரும்பாலும் தனித்தே காட்சி தரும் சனி பகவான் அபூர்வமாக சில தலங்களில் தம்பதி சமேதராக காட்சியளிக்கிறார் . அரக்கோணம் - திருத்தணி பாதையில் உள்ள மங்கம்மாபேட்டை என்ற தலத்தில் சனி பகவான் தனி சந்நிதியில் இடது தொடை மீது மனைவி நீலாதேவியை அமர்த்திக் கொண்டு திருக்கல்யாணக் கோலத்தில் 5 அடி உயரத்தில் காட்சி தருகிறார் . இப்படிக் காட்சி தரும் அமைப்பை , ' கல்யாண சனி முகூர்த்தம் ' என்பார்கள் .
* விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் சுமார் 15 கி . மீ . தொலைவில் உள்ள கல்பட்டு கிராமத்தில் சனி பகவானின் விக்கிரகம் நின்ற நிலையில் தனித்துக் காணப்படுகிறது .
* கும்பகோணம் - வடமட்டம் பேருந்து பாதையில் 1 கி . மீ . , தொலைவில் உள்ள கோனேரிராஜபுரம் , சிவன் கோயிலில் மேற்குப் பார்த்த நிலையில் உள்ளார். திருநள்ளாறு செல்லும் முன் நளனும் அவன் மனைவியும் இத்தலத்துக்கு வந்து சனி பகவானை வழிபட்டு அனுக்ரஹம் பெற்றுள்ளனர் .
மற்ற தலங்களில் கறுப்பு வஸ்திரம் தரித்திருக்கும் சனி பகவான் இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அருள்பாலிக்கிறார் . இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் .
* ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலில் சனி பகவான் மனைவியர் இருவருடன் தனிச் சந்நிதியில் வாகனம் இன்றி அருள் புரிகிறார் .
* மயிலாடுதுறை அருகில் உள்ள கூறைநாடு ஸ்ரீ புனுகீஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்குத் தனி விமானம் , தனி கும்பம் , தனிச் சந்நிதி உண்டு . இவர் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருகிறார் .
* திருச்சி தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் சனி பெயர்ச்சி அன்று சனி பகவான் சுவாமியுடன் வீதி உலா வருகிறார் .
* திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பொங்கு சனி என்ற பெயரில் தனிச் சந்நிதியில் நின்ற நிலையில் அருள்புரிகிறார்.
* பொதுவாக நவக்கிரகங்கள் நின்ற நிலையிலேயே எங்கும் காணப்படும் . ஆனால் , திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோயில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சனி பகவான் நவக்கிரக சந்நிதியில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் .
* புதுச்சேரி - கோரிமேடு அருகே உள்ள மொரட்டாண்டியில் 27 அடி உயரத்தில் பஞ்சலோக விவேகும் சனீவரர் அருள்பாலிக்கிறார்
* கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 10கிமீ தொலைவில் நாச்சியார் கோயிலில் ராமநாதேஸ்வர்ர் பர்வதவர்த்தினி கோயிலில் சனி பகவான் இரண்டு மனைவியருடன் மாந்தி குளிகன் என இரு பிள்ளைகளுடன் குடும்பசகிதமாக மங்கலசனீஸ்வர்ர் என்ற பெயரில் தரிசனம் தருகிறார் அவருக்கு எதிரில் காக வாகனம் துஜ ஸ்தம்பமாக உள்ளது
நாச்சியார் கோயில் வண்டிப்பேட்டை நிறுத்தத்தில் மங்கல சனீஸ்வர்ர் கோயில் எனக் கேட்டால் சொல்வார்கள்.
சனி பகவான் முல மந்திரம்
ஓம் சனீஸ்வராய நம
தினமும் காலை வேலையில் குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்தால் சனி பகவான் நளம் தருவா் .
சனி பகவான் காயத்ரி மந்திரம்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: பிரசோதயாத்
மேற்கண்ட காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறையோ இருபத்தேழு முறையோ உள்ளா்ந்த பக்தியுடன் பாராயணம் செய்தால் சனி பகவான் மிகவும் மகிழ்ந்து . கடன் தொல்லைகளையும் , தீராத நோய்களையும் தீா்ப்பாா் , எல்லா வளங்களையும் வழங்குவாா் .
சனி தோஷங்களால் பாதிக்கப்பட்டவா்கள் சனி பகவான் கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , எள் முடிச்சு விளங்கு ஏற்றி வழிபடுவதால் தொழல் வளம் , துன்பங்கள் தீரும் , திருமணத் தடை நீங்கும்,சகல வளங்களும் கிடைக்கும்
தாிசனம் செய்ய வேண்டிய தலங்கள்
தினம் கூறினால் நன்மை கிட்டும்
முனிவா்கள் தேவா் ஏனை முா்த்திகள்
முதலா னோா்கள் மனிதா்கள்சகலவாழ்வுகள் மகிமையல்லால் வேறுண்டோ ?
கனிவு தெய்வம் நீயே கதிா்சேயே
காகம்ஏறும்
சனிபக வானே போற்றி தனியனேத் கருள்செய் வாயே

Thursday, 5 December 2019

*உருவத்தை வைத்து எடை போடாதே.....*



*உருவத்தை வைஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.
அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.
அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு
துன்பப்பட்டார்.
அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.
திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.
கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.
அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.
"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
"நான் பிச்சைக்காரனா,
மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.
பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.
நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்
.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.
அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை
." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.
"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.
அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.
அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.
குள்ளமாக,கறுப்பாக,
எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.
"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.
"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,
கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.
"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.
"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.
இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.
சபை முழுக்க கொதித்தெழுந்தது.
"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.
"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.
"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.
"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.
உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.
"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.
ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா?இல்லை.
இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.
என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?
தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.
இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.
பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.
அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.
வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.
அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?
தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.
உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.
ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.
தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.
பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.
முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.
ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
கடவுளை தவிர..த்து எடை போடாதே.....*

Sunday, 1 December 2019

#அறுபது_வயது என்ன விசேஷம்?

                                     அறுபது_வயது என்ன விசேஷம்?
  ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம்.
ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி.
“ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே”
“ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§”
என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம். ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரமாணமும் உள்ளது.
இவ்வாறு செய்தால் தான் முதல் நக்ஷத்ரத்தில் செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யமுடியும். பின்னால் வரும் நக்ஷத்ரத்தில் செய்வது என்று வைத்துக் கொண்டால் அன்று செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10 அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் அப்போது அடுத்த மாதம் வந்து விடும். பங்குனி மாதமானால் வருஷமே மாறிவிடும். எனவே ஜன்ம வருஷத்தில் ஜன்ம மாதத்தில் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் தான் சாந்தி கர்மாவைச் செய்து கொள்ளவேண்டும். சௌனகர் வசனப்படி ஸ்த்ரீகளும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்ளலாம்.
ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என நாம் கூறினாலும் ரிஷிகள் (சௌனகர், போதாயனர்) உக்ரரத சாந்தி என்ற பெயரால் அழைக்கிறார்கள். (உக்ரரதோ ம்ருத்யு ரூபோ கர்த:- உக்ரரதம் எனில் ம்ருத்யு ரூபமான பெரும் பள்ளம் (பாழும் கிணறு)) இந்த சாந்தி செய்யும் முறை பல பிரகாரமாக பல மஹரிஷிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சிறிது மாறுதல் இருந்தாலும் பொதுவாக முக்கிய கர்மாவில் மாற்றமில்லை. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் ஆகிய க்ரந்தங்களில் சௌனகோக்த ப்ரயோகம் உள்ளது. மதுரைக்கு வடக்கே சௌனகோக்த ப்ரகாரமே அனுஷ்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்யாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய தென் பிரதேசங்களில் பெரும்பாலும் ரோமச மஹரிஷி கூறிய பிரகாரம் நடந்து வருகிறது. ரிக்வேதிகள், ஆபஸ்தம்ப ஸ¨த்ரிகள் பலர் பல ஸாமவேதிகள், போதாயன ஸ¨த்ரிகள் எல்லாரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். சில ஸாமவேதிகள் மட்டும் கௌதமர் கூறிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.
ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு).
முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக.
ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி |
தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத ||
இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார்.
எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:
சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம்.
சாஸ்த்ரக் கணக்கு:
விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.
“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”
ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.
“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||
மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).
விஞ்ஞானக் கணக்கு:
இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.
துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.
(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)
சதாபிஷேகச் சிறப்பு:
த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ
வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||
நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன்.
தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.
வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்
மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர்.
பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.
இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.
சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:
1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.
2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும்.
10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.
12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே”
என்று பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:” என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும்.
14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும்.
17. தானங்கள்: தசதானங்களான கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம், வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும் இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை, காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம்.
18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது. மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக் கொண்டாட்டம்!!
19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்)
20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள்.
21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை.
22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம்
23. மங்களஹாரத்தி
24. சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும். இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க) அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்) வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு வரலாம்.
26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
27. ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும் முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில் கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும். சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம், காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர கீர்த்தனை பாடலாம்.
கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்:
81 வயதில் 1000 பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப் பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார்.
சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||
ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||
ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||
சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||
நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம்
இறைவன் அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம். வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல் செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம் வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற 5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக) ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக.
ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...