Tuesday, 12 November 2019

*அர்த்தநாரீஸ்வரர்


*அர்த்தநாரீஸ்வரர்*
முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவ பக்தர். அவர் எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார்.
பார்வதி தேவியை வழிபடமாட்டார் .சிவனும் பார்வதியும் ஒன்றாக இருந்தாலும் அவர் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபடுவார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டார்.
*சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று உணர்த்திய அர்த்தநாரீஸ்வரர்*
இதையறிந்த சிவன் பார்வதிதேவிக்கு தன் உடலின் இட பாகத்தை கொடுத்து சரி பாதியாக தேவியை தன்னுடன் இணைத்து சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று அவருக்கு கூறினார்.
இதன் மூலமாக சிவனும் சக்தியும் ஒன்று தான் என்று உலகிற்கும் உணர்த்தினார். இவ்வாறு சிவனும் சக்தியும் இணைந்து உருவான வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கபட்டது.
திடீரென்று ஏற்பட்ட இருளின் காரணமாக உலகின் அணைத்து வழிபாட்டு முறைகளும் மாறின.
இதனால் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதை கண்ட பார்வதி சிவனிடம் இத்தவறு மீண்டும் நிகழாதிருக்க நாம் இருவரும் தனித்தனி என்ற முறை மாறி ஒருவர் என்ற நிலை உருவாகவேண்டும் என்று வேண்டினார்.
இந்த வேண்டுகோளை ஏற்று தேவியருக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக சிவன் ஒப்புக்கொண்டார்.
அதற்காக பார்வதியிடம் இமயமலையிலும், காசியிலும், காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றன் கரையிலும், கடைசியாக திருவண்ணாமலையிலும் தவம் செய்து சாப விமோச்சனம் பெறவேண்டும் என்று கூறினார்.
பார்வதி தேவியும் அவ்வாறே தவம் செய்தார். இறுதியில் திருவண்ணாமலையில் சிவன் பார்வதிக்கு காட்சி தந்து நீ யாருக்காக சோகமுற்று இத்தொல்லைகளுக்கு ஆளானாயோ அந்த முருகன் இப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள திருக்கொடிமாடச்செங்குன்றூரில் குடிகொண்டுள்ளான்.
அதனால் அதுவே நாம் தங்குவதற்கு ஏற்ற இடம் என்று கூறி அங்கு சென்று தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி பார்வதியும் அங்கு சென்று தவம் செய்து சிவனுடன் இரண்டற கலந்து அர்த்தநாரீஸ்வரராக கட்சியளிகின்றனர்.
இந்த நாகமலை உருவானதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது..முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுகும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது.
இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. இதன்படி ஆதிசேஷன் தன் படங்களால் மேருமலையை அழுத்தி பிடித்துக்கொள்ளவேண்டும். அதை வாயுபகவான் தன் பலத்தால் விடுவிக்க வேண்டும் என்பதே அந்த பந்தயம்.
ஆனால் வாயுபகவானால் ஆதிசேஷன் பிடியை தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுபகவான் தன் சக்தியை அடக்கிக்கொண்டார். இதனால் அணைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த பேரழிவை கண்ட தேவர்களும், முனிவர்களும் ஆதிசேஷனிடம் பிடியை தளர்த்துமாறு வேண்டினர் .
அவரும் தன் பிடியை தளர்த்த இதை பயன்படுத்திக்கொண்ட வாயுபகவான் தன் முழு சக்தியையும் பயன்படுத்தி வேகமாக மோதி மலையின் சிகரத்துடன் ஆதிசேஷன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாக விழ செய்தார்.
அவ்வாறு விழுந்த பாகங்களில் ஒன்றுதான் இந்த நாகமலை அதாவது இந்த திருச்செங்கோடு என்று அந்த புராணக்கதை கூறுகிறது.

No comments:

Post a Comment

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று

 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு ...