Friday, 16 August 2019

மாற்றம் ஒன்றே மாறாதது.


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது.
பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது.
இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கி இருக்கின்றன.
அவை நிலையானது என, நம்பப்படுகிறது.
மாற்றம் வரும்போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
இதை புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது.
‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, வேலையின் தன்மைக்கேற்ப தன்னிடமும் சில மாற்றங்கள் தேவை என்பதை புரிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.
மனம் உவந்து தன்னைத்தானே சூழ்நிலைக்கேற்ப செதுக்கி கொள்ளத் தெரிந்தவரே மகிழ்ச்சியாகவும் திறம்படவும் செயல்பட முடியும்.
மாற்ற முடிந்த செயல்களைத்தான் மாற்ற முடியும்.அதனால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆம்.,நண்பர்களே..,
பனிக்கரடி ‘குளிருதே குளிருதே..என்ன வாழ்க்கை இது’ என மனம் உடைந்து போகாமல்,அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறதே...
அதே போல நாமும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.. மாற்ற முடிந்ததை மாற்ற முயற்சி செய்யலாம்.
மாற்றவே முடியாத செயல்களை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வோம்

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...