Monday, 31 December 2018

உதய சந்திர சூரியர் உருவான கதை இன்று..

                           உதய சந்திர சூரியர் உருவான கதை இன்று..
  வனவாசத்தில் சித்திரக்கூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற இராமரும், சீதையும் முதன்முதலாக அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்கு ஒருநாள் தங்கினராம்..
யாரிந்த அத்திரி முனிவர்..?
உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர்..
பிரம்மதேவரின் மானசபுத்திரர்.. அவருடைய மனைவி அனுசூயா..
பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை..
தனது ஆசிரமத்தில் தங்கிய இராமசீதா தம்பதியிடம் அத்திரி முனிவர் தனது மனைவி அனுசூயாவைக் காட்டி, "இராமா..
அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள்..
அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் என்று பொருள்..
பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக.." என்று கூறினார்..
மேலும் அவர் பேசிய போது..
"ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். அதைக் கண்ட அனுசூயா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள்..
எங்கும் பசுமையை உண்டாக்கினாள்..
அதுமட்டுமல்ல..
ஒருமுறை அனுசூயாவின் தோழியை முனிவர் ஒருவர்,
"பொழுது விடிந்தால் நீ விதவையாவாய்.."
என்று சபிக்க, அபலையாக ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து தஞ்சம் புகுந்தாள் தோழி..
நட்புக்கு கைகொடுக்க முன்வந்த அனுசூயா தனது தோழியிடம், "விடிந்தால் தானே நீ விதவையாவாய்.. விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன்.." என்று ஆறுதல் கூறி, தனது தவ வலிமையால் சூரியனை உதிக்காமல் செய்தாள்..
நாட்கள் அனைத்தும் இரவாகவே கழிய, உலகமே திகைத்து நின்றது..
அனுசூயாவிடம் தேவர்கள் வேண்டிக் கொள்ள, தனது தோழியை சுமங்கலியாக வாழ வைத்தால் மட்டுமே பகல் வரும் என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா..
தேவர்களும் முனிவரின் சாபத்தை திரும்பிப் பெறச் செய்து, சூரியனை உலகிற்கு தருவித்தனர்.."
என்று அத்திரி முனிவர் கூறக் கேட்ட இராம சீதை, அனுசூயாவை வணங்கினர்..
பணிவுடன் பதிலளித்த அனுசூயா,
"எனது கணவர் அத்தரி முனிவர் சாதாரணரர் அல்ல..
புகழிலும், தவத்திலும் ஈடு இணையில்லாதவர்..
உலகிற்கே ஒளிதரும் சூரியனுக்கு வாழ்வு தந்த வள்ளல் இவர்..
ஒருமுறை அசுரர்களில் ஒருவனான சொர்ணபானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டு, இராகுகேதுவாக மாறினான்.
தனது பகையைத் தீர்த்துக் கொள்ள சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான்..
ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே..
அதே போல, இரவில் ஒளியைத் தரும் சந்திரனை உருவாக்கியதும் அத்திரியின் தவ வலிமையால் தான்..
ஆழமான சமுத்திரத்தின் உள்ளே, பல தேவவருடங்கள் தவமிருந்த அத்திரி முனிவரின் கண்களில் தோன்றிய அபார ஜோதி, கடல் நீரைக் கிழித்துக் கொண்டு மேலெழும்ப, அந்த ஜோதியினை இரவின் நிலாவாகப் படைத்தார் பிரம்மா..
இரவில் பூமிக்கு ஒளிதரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே.."
என்று அனுசூயா முடிக்க
இருவரையும் ஒருசேர வணங்கினர் இராமசீதா தம்பதியர்..
மக்களுக்காக அன்று மழையையும், ஒளியையும் வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதியை நாமும் பிரார்த்தித்து வளம் பெறுவோம்..!
#அனைவருக்கும் #முருகவேலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
எங்கும் புத்தொளி பரவட்டும்..!!
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...