Monday, 15 January 2018

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?



மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?


➦ அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா?

➥ விநாயகருக்கு துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கையில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன் பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்தகலசமாகிய மோகதம் ஆகியவை காணப்படும்.

➦ அங்குசம் யானையை அடக்க உதவும் கருவியாகும். விநாயகரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால் தான் அவரது முகம் யானை வடிவில் இருக்கிறது. அவர் பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப் போடுகிறார்.

➥ ஒடிந்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகமும் உருண்டை, இந்த மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதையே இது காட்டுகிறது.

➦ இதே போல், அரச மரத்தடியில் விநாயகர் தவறாது இடம்பெற்றிருப்பார்.

➥ இது ஏன் தெரியுமா? அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கும் சக்தி கொண்டது.

➦ எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் உள்ள அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்தில் இருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கின்றார்கள்.

➥ அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது மழை பெய்தாலும், நல்ல வெயில் அடித்தாலும் குடை தேவைப்படுகிறது. பனிக்காலத்தில் இளவெயிலாக இருக்கும். அப்போது குடை தேவையில்லை. அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவையும் அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்குகிறது என்பது இதன் ரகசியம்.

➦ பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல! வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள்.

➥ அப்போது அவர்கள் மழை, வெயிலில் இருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால்தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். இப்படி, சீதோஷ்ண நிலையால் மனிதன் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற கருணையுடன், தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...