Friday, 8 August 2025

தாய் மாமன் உறவு என்பது

 தாய் மாமன் உறவு என்பது வெறும் ரத்த பந்தம் மட்டுமல்ல –

அது பாசத்தாலும், பொறுப்பாலும் பிணைக்கப்பட்ட ஓர் ஆழமான உறவு.❤️
💠 தாய் மாமனின் கடமைகளும், அன்பும் 💠
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாய் மாமனுக்கு தனி இடம் உண்டு.
ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து,
காது குத்து
மொட்டை
பூப்புனித நீராட்டு விழா
எனப் பல முக்கிய நிகழ்வுகளில் தாய் மாமனின் பங்கு இன்றியமையாதது.
மிகவும் முக்கியமாக,
ஒரு பெண்ணின் திருமணத்தில்,
மாங்கல்யச் சரடு எடுத்துத் தருவது,
சீர்வரிசை செய்வது
என பல சடங்குகளில் தாய் மாமன் முன்னிலை வகிக்கிறார்.
தன் சகோதரியின் பிள்ளைகளை,
தன் சொந்த பிள்ளைகளாகவே கருதி,
அவர்களுக்குத் துணையாகவும்,
அன்பான வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
தன் குடும்பம் மட்டுமல்லாமல்,
தன் சகோதரியின் குடும்பத்தின் நலனுக்காகவும்,
மகிழ்ச்சிக்காகவும்,
தான் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் தயங்குவதில்லை.
💠 தாய் மாமன் உறவின் முக்கியத்துவம் 💠
தமிழ்ச் சமூகத்தில், தாய் மாமனின் உறவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது.
இந்த உறவு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் பிணைப்பு.
இது வெறும் சடங்குகளுக்காக மட்டுமல்ல –
அது பாசத்தின் வெளிப்பாடாகவும்,
அரவணைப்பின் அடையாளமாகவும் உள்ளது.
🙏 இன்று நம்மால் செய்யக் கூடிய சிறு நன்றி 🙏
இன்று தாய் மாமன் தினத்தை முன்னிட்டு,
உங்கள் தாய் மாமனுக்கு
🟢 வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்
🟢 அவரது அன்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றி சொல்லவும்
🟢 ஒரு அழைப்பு, ஒரு செய்தி, அல்லது ஒரு சிறு பரிசு…
அவர் முகத்தில் வரும் ஒரு சிரிப்பு…
உங்கள் நெஞ்சத்தை நெகிழவைக்கும்!
🪔 தாயின் பாசத்துடன் நம்மை தீண்டும் அந்த நிழல் மரத்துக்கு – நன்றி, தாய் மாமா! 🪔

கனிகள் உண்ணப் பிணிகள் தீரும்


 கனிகள் உண்ணப் பிணிகள் தீரும்

**************************************
எலுமிச்சை ராஜகனி
************************
மங்கல கனி மத்திர கனி திருஷ்டி கனி செம்பு சத்து அதிகம் குளிர்ச்சியானது உடல் சூடு தணியும் பித்தம் குறையும் விட்டமின் சி அதிகம் சோர்வு தீரும் சுறு சுறுப்பு தரும் இரத்த சுத்தி கிருமிநாசினி லெமன் சாறு தேன் கலந்து சாப்பிட பற்பல பிணிகள் போகும்.
தக்காளி.
***********
விட்டமின் b12 தக்காளி ரசம் உடலுக்கு நல்லது தக்காளி ஜூஸ்சாப்பிட தோல் நன்றாக இருக்கும். தக்காளி சூப் உடலுக்கு தெம்பு தக்காளி பச்சடி ஜாம் சுவை மிகுந்தது எலும்பு வளர்ச்சி பல் உறுதி ரத்த சுத்தி.
வெள்ளரிப்பழம்.
*****************
சூடு குறையும் அரிப்பு வெள்ளை வெட்டை போகும் .
வில்வபழம் .
*************
எந்தவித நோயையும் குணப்படுத்தும் ஆஸ்துமா குணமாகும் மலடு நீங்கும் நினைவாற்றல் பெருகும் வாய்ப்புண் குடலற்புண் தீரும் .
ஆப்பிள் .
*********
தினமும் ஒரு பழம் சாப்பிட இளமை அழகு தரும் குடல் நோய்கள் தீரும் சகல விட்டமின்களும் உண்டு .
ரத்த சுத்தி Liver Tonic .கற்கள் கரைக்கும் இரைப்பை அமில நீக்கி .வலிப்பு வாதம் போம். இதய நிவாரணி .
பேரிச்சை .
*************
மாதவிலக்கு தடைபடாது கண் ஒளிபெறும் இரும்பு சத்து சுண்ணாம்புச் சத்து மிக்கது ஆண்மைக் குறைவை நீக்கி வீர்ய சக்தி உண்டாகும் பற்கள் உறுதி நோய் எதிர்ப்பு சக்தி.
திராட்சை .
**********
ரத்த சுத்தி. உள் வெளி உறுப்புகள் பலப்படும் .தோலை பாதுகாக்கும். ஜீரண சக்தி மிக்கது. குடற் புண் தீரும். வாயுக்கோளாறு நரம்புத் தளர்ச்சி குணமாகும் முக வசீகரம் வைட்டமின் சி ரத்த விருத்தி இதய பலம்.
நாவல் .
*******
குளிர்ச்சி தரும் .ரத்த மூலம் குணமாகும் .நீரிழிவுக்கு நல்ல மருந்து. கருப்பை கோளாறு குணமடையும். வைட்டமின் a நீரிழிவு நிவாரணி.
நேற்றைய தொடர்ச்சி.
கனிகள் உண்ணப் பிணிகள் தீரும்.
அன்னாசி.
************
சூடு .ஆரம்பநிலை கருவை கலைக்கும். ரத்த சுத்தி. ரத்தவிருத்தி. பித்தம் தணியும். தேனில் சாப்பிட ஈரல் பல படும் .ஆண்மை குறைவிற்கு பாலில் சேர்த்து சாப்பிடவும். கபம் போம் .களைப்பும் போகும். வைட்டமின்-சி குடற்புழுக்களை அளழிக்கும் .கண் நோய் குணமாகும் இடுப்பு வலி போகும். கழிவகற்றி புழு நீக்கி. மலமிளக்கி. ஈரல் வலுப்பெறும் .
விளாம்பழம்.
***************
சர்க்கரை சேர்த்து சாப்பிடவேண்டும் பித்தம் வாந்தி மயக்கம் தீரும். தோல் நோய் தீரும். ரத்த சுத்தி நினைவாற்றல் தரும். எலும்புகள் பலமடையும். வைட்டமின் ஏ ஜீரணசக்தி இதயம் பலம். மூலம் போக்கி, நரம்பு சக்தி, வீர்ய விருத்தி.
மாதுளை .
***********
நல்ல ஜீரணசக்தி ,புளிப்பு மாதுளையால் வாந்தி போகும், கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியத்துடன் வளரும், ரத்த சுத்தி ,ஆண்மைக்கு நல்லது ,தேனுடன் சாப்பிட மேனி அழகும் ,வைட்டமின் ஏ ,இதய வலி வயிற்று புண் தீரும். நீரிழிவு மூலம் போம் .மலடு நீங்கி.
மாம்பழம் .
***********
விட்டமின் ஏ, ரத்தசுத்தி ,சூடு ,பால் சர்க்கரை கலந்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி மூட்டுவலி போகும் ,கண்னொளி பெருகும்,
பப்பாளி .
**********
விர்யசக்தி, ரத்தவிருத்தி ,விட்டமின் ஏ ,சூடு ,கண் பார்வை தெளிவுபெறும் ,தோல் நோய்களை தடுக்கும் ,சிறுநீரக கற்களை கரைக்கும், ஜீரணசக்தி மாதவிலக்கு கோளாறு போக்கும், நோய் அணுகாது நச்சுக் கிருமிகளைக் கொள்ளும் ஆற்றல் உடையது ,ஜீரண காரி லிவர் டானிக், புண் ஆற்றி
வாழைப்பழம் .
****************
விட்டமின் ஏ, இரும்பு சுண்ணாம்பு சத்து ,ஆண்மை விருத்திக்கு செவ்வாழை ,சூடு தணிய மலைவாழை ,
வீர்ய சக்தி பெற ரஸ்தாளி ,மலமிளக்கிக்கு பூவன் வாழைப்பழம், மூல நோயாளிக்கும் ஏற்றது ,பஞ்சாமிர்தம் நல்ல டானிக் சுவைத்து உன்ன சளி உண்டாகாது.
பலாப்பழம்.
*************
தேன் கலந்து சாப்பிட சுவை மிகவும். சுண்ணாம்பு இரும்பு சத்துடையது. குங்குமப்பூ கலந்து சாப்பிட உயிர் சக்தி உண்டாகும் .கக்குவான் இருமல் போம் கழிவு நீக்கி வீர்ய விருத்தி ,எரிவு போக்கி .
ஆரஞ்சு .
*********
தேன் கலந்து சாப்பிட உடல் தேறும், நோயாளிக்கு உயிர் போன்றது ,உள்ளுறுப்பு சூடு தணியும் ,விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி உடையது ,ரத்த சுத்தி, தினமும் சாப்பிட கண் நோய்கள் வராது ,மூளைக்கு நல்ல பலம் ,இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும் ,காலையில் சாப்பிட குடல்புண் குணமாகும், கால்சியம் ,நுரையீரல் சுத்தி.
ஊக்க டானிக்.
நெல்லிக்கணி
****************
இதய நோய் சிறந்தது. வாந்தி பேதி போம்.இரத்த சுத்தி, கண்நோய்கள் குணமாகும் ,குடல் கழிகவற்றி ,முப்பிணி சமன் ,குளிர்ச்சி ,கருப்பை நோய் போகும் ,வைட்டமின்-சி இளமைப் பொலிவு கூடும்! நீரிழிவு நோய் தீர,பல் ஈறு பாதுகாப்பு ,தோல் பாதுகாப்பு .
************************************************

*ஆவணி அவிட்டம் திருநாள்* *பூணூலின் உண்மையான மகிமை*

 *ஆவணி அவிட்டம் திருநாள்* *


பூணூலின் உண்மையான மகிமை*

*ஆகஸ்ட் 9, ஆவணி அவிட்டம்*🌷
‘புது பூணூல் போட்டாச்சா?’ என்று கேட்கையிலேயே, அது ஆவணி அவிட்டப் பண்டிகையென்று சிறு குழந்தைகள் கூட சொல்லிவிடும். பூணூல் அணியும் வழக்கமுள்ள இந்துக்களான அந்தணர், வைசியர்கள், சமணரௌகள், விஸ்வகர்மா போன்றவர்கள் ஆவணி அவிட்டப் பண்டிகையன்று, பழைய பூணூலை மாற்றி புதுப் பூணூல் அணிவார்கள். ஆவணி அவிட்ட பண்டிகை கிராமப்புறங்களில் ஆற்றங்கரைப் பக்கத்திலும், நகரங்களில் கோயில்கள், பொது மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும்.
ஆவணி அவிட்டம் கொண்டாடும் காலம்: ரிக் வேதம் பின்பற்றுவர்கள், ஆவணி மாத திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதத்தினர் ஆவணி மாத பௌர்ணமியிலும், சாம வேதக்காரர்கள், ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்திலும் ஆவணி அவிட்டம் கொண்டாடுவார்கள். கேரளாவிலும், குஜராத்திலும் அதர்வண வேதத்தினர் இதனைக் கொண்டாடுகின்றனர்.
சாம வேதத்தைப் பொறுத்தவரை மந்திரங்கள் அதிகம். எருக்க இலையில் அரிசி வைத்து நீரில் தர்ப்பணம் செய்வார்கள். தேவ, ரிஷி, பிதுர் ஆகிய பல்வேறு தர்ப்பணங்கள் செய்து, வேள்வி வளர்த்து, கும்பம் வைத்து பூஜை செய்வார்கள். வடமொழியில் ‘அத்யயனம்’ என்றால் கல்வி. வேதம் பற்றிய கல்வியை உபகர்மா அல்லது ஆவணி அவிட்டம் என்பார்கள். உபகர்மா எனும் வேதத்தைத் தொடர்ந்து சொல்லி வந்தால், மந்திரத்திற்கு பலன் அதிகமாகும்.
தலை ஆவணி அவிட்டம்: சிறு வயதில், முதன் முதலில் பூணூல் அணிவித்து பிரம்மோபதேசம் செய்யப்பட்ட சிறுவர்களுக்கு, அதன் பிறகு வரும் ஆவணி அவிட்டம் ‘தலை ஆவணி அவிட்ட’மாகும். அன்று சிறுவர்களுக்கு பட்டம் கட்டி விசேஷ மந்திரங்களைக் கூறி ஆசீர்வதிப்பது வழக்கம்.
காஞ்சி பெரியவர் பூணூல் மாற்றுவது குறித்து கூறிய சில செய்திகள்:
பூணூலை வருடம் ஒரு முறை ஆவணி அவிட்டம் அன்று மட்டும் மாற்றுவது சரி கிடையாது. மாதந்தோறும் பூணூலை மாற்றுவது அவசியம். அதாவது, அமாவாசை தர்ப்பணம் செய்கையில் மாற்றி விடவேண்டும். தீட்டுப் பட்டால் மாற்ற வேண்டும். அதேபோல், வீட்டில் குழந்தை பிறந்து 11ம் நாள் புண்ணியாஜனமன்று பூணூல் மாற்றுதல் அவசியம். துக்கம் விசாரிக்க சென்று வந்தால் பூணூலை மாற்ற வேண்டும். பூணூல் என்பது காயத்ரி மந்திரம் செய்தது. வெறும் நூல் கிடையாது. உடம்பை ரட்சிக்கும் புனித நூலாகிய பூணூலை, மறந்தும்கூட முதுகு சொறியப் பயன்படுத்துவது கூடாது.
ஆவணி அவிட்டம் தர்ப்பண பலன்கள்: ரிஷிகள், தேவர்கள் மற்றும் முன்னோர்களது ஆசிகள் கிடைக்கும். சரஸ்வதி கடாட்சம் ஏற்படும். தீய சக்திகள் அண்டாது. உடல் தேஜஸுடன் விளங்கும். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.
காயத்ரி ஜபம் (மந்திரம்) விபரங்கள்:
ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வருவது காயத்ரி ஜபம். வேதங்களின் தாய் காயத்ரி எனக் கூறப்படுகிறது.
‘ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்’
என்கிற சக்தி வாய்ந்த மந்திரமாகிய காயத்ரி ஜபத்தை, சங்கல்பம் செய்த பின்னர் 108 அல்லது 1008 முறைகள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். மேலும், இதை தினமும் சூரிய நமஸ்காரத்திற்குப் பின்னும் செய்யலாம்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.
காயத்ரி ஜபம் செய்கையில், மோதிர விரலின் இரண்டாவது கணு தொடங்கி கீழ் நோக்கி வந்து சுண்டு விரலின் முதல் கணு வரை மேல் நோக்கி சென்று, ஆள்காட்டி விரலின் அடிக்கணு வரை வந்தால் பத்து எண்ணிக்கை வரும். ஒவ்வொரு பத்தாக எண்ணி 108, 1008 எனச் செய்யலாம். முத்து, பவளம் போன்ற மாலைகளை கைகளால் உருட்டியவாறும் எண்ணலாம்.
காயத்ரி மந்திரத்தில் சக்தி வாய்ந்த பத்து பதங்கள் உள்ளன. அவை: 1. தத், 2. ஸவிது, 3. வரேண்யம், 4. பர்கோ, 5. தேவஸ்ய, 6. தீமஹி, 7. தியோ, 8. யோ, 9. த:, 10. ப்ரசோதயாத் ஆகியவையாகும்.
காயத்ரி ஜபம் செய்வதின் மூலம் முகத்தில் அமைதி தவழும், எடுத்த காரியத்தை தடங்கலின்றி முடிக்க முடியும், நோய்கள் நம்மை அண்டாது, நினைத்தது நடக்கும். ஆவணி அவிட்டமும், காயத்ரி ஜபமும் ஆண்களுக்குரிய பண்டிகைகள் என்றாலும், வீட்டுப் பெண்களும் இதில் ஈடுபாட்டுடன் அமர்க்களமாக ஸத்தி விருந்து தயாரித்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.🌷

Thursday, 24 July 2025

சுனை நீரை குடிப்பவர்கள் சாகாவரம் பெறுவர்




 எதிர்காலத்தில் மனிதன் இறக்காமல் இருப்பதற்கான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுமா? இது பலரின் கேள்வி. என்னைப் பொறுத்தவரை மரணம் ஒரு வரம். மரணம் பெருங்கருணை. உண்மையில் மரணம் துன்பங்களில் இருந்து விடுதலை, நான் மரணத்தை எண்ணி என்றும் கலங்கியதே இல்லை அதை எந்த நேரத்திலும் வரவேற்க காத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால் மரணம் தான் என்னைக் கண்டு பயப்படுகிறது😂😂

சரி உங்களுக்காக ஒரு கதை இது ,இந்த கதையை வாசித்தபின் முடிவிற்கு வாருங்கள் 🤪
அலெக்சாண்டர் இந்தியாவுக்கு செல்லுமுன் இந்திய ஞானத்தைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் அதிசயங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருந்தார்.
அதில் ஒன்று, வட இந்தியாவில் ஏதோ ஒரு குகையில் ஒரு சுனை இருப்பதாகவும், அந்த சுனை நீரை குடிப்பவர்கள் சாகாவரம் பெறுவர் என்பதுமாம்.
அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு முன் மிகுந்த பிரயத்தனத்திற்கு பின் அந்த குகையைக் கண்டுபிடித்தும் விட்டார்.
படைகளை பின்னே நிறுத்தி விட்டு அலெக்சாண்டர் மட்டும் முன்னேறி குகைக்குள் சென்றார். அது நீண்ட ஒரு குகை. குகையின் இறுதியில் சிறியதாக ஒரு சுனை இருப்பதைக் கண்டார். தண்ணீர் தெளிவாக சலனமற்று இருந்தது. அருகில் சென்றார். குனிந்தார். கவனமாக இரு கைகளையும் குவித்து தண்ணீரை அள்ளினார்.
என்ன ஒரு அற்புதம்.
இனிமேல் சாவில்லை. உலகம் முழுதும் செல்லலாம், உலகத்தை வெல்லலாம். மரணத்தை வென்றுவிட்டேன்.
அப்பொழுது ஒரு குரல் கேட்டது. தலையை நிமிர்த்திப் பார்த்தார். எதிர்க்கரையில் மிகவும் சோகமான தோற்றத்துடன் ஒரு காகம் அமர்ந்திருந்தது. அது பேசியது.
"ஒரு நிமிடம்…"
அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.
காகம் தொடர்ந்தது.
"ஒரு நிமிடம்…அந்த நீரைப் பருகுவதற்கு முன் என் கதையைக் கேளுங்கள். நானும் உங்களைப் போல்தான்…சில நூறு வருடங்களுக்கு முன் ஒரு நாள் மிகுந்த ஆசையுடன் இந்த நீரைப் பருகினேன். இந்த உலக சுகங்களை ஆசை தீர அனுபவித்தேன். இனி பார்க்க வேண்டியது எதுவும் இல்லை. அனுபவிக்க வேண்டியது எதுவுமில்லை. எல்லாம் அலுத்து விட்டது. என்னுடன் இருந்த உறவினர்களும் நண்பர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு என்று எவரும் இல்லை. எனக்கு வாழவும் பிடிக்கவில்லை. இந்த நீரைப்பருகி சாகா வரம் பெற்று விட்டதால் இறக்கவும் முடியவில்லை. வாழ்க்கை மிகவும் நரகமாகி விட்டது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்று யாராவது எப்பொழுதாவது வருவாராயின் அவர்களை எச்சரிக்கிறேன். இனி உன் விருப்பம்" என்று முடித்தது.
அலெக்சாண்டருக்கு ஒரே குழப்பம். கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தான். இறுதியில் அந்தக் காகம் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது. மரணத்தின் தெளிவு பிறந்தது. உண்மையில் மரணம் என்பது கொண்டாடப்படவேண்டிய ஒன்று. மானுடப் பிறவியின் துன்பங்களில் இருந்து விடுதலை இறவனின் அடியில் பேரானந்தம்🙏

Monday, 7 July 2025

*சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு


 *சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே
*700 மருந்து நிறுவனங்கள்* (கம்பெனிகள்) ஆண்டுக்குப்
*பல இலட்சம் கோடி ரூபாய்களை* அள்ளிச் செல்கின்றனர்.
இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் ;
வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.
இதற்கான
*அரு மருந்து நம்மிடமே உள்ளது.*
சக்கரை நோய்க்குக் காரணம் *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*
ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?
*உமிழ்நீர் தான்.*
சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.
*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் *இயற்கை மருந்து.*
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.
வாழ்வதற்காக உண்டனர்.
அதனால்தான் பொறுமையுடனும்
அமைதியுடனும்
பொறுப்புடனும் உணவருந்தினர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.
கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.
அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்
உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்
நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*
நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,
சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.
நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.
நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.
எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.
நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.
உங்கள் நலனில்...!

புனுகு என்றால் என்ன?


 புனுகு என்றால் என்ன?


(புனுகுப் பூனையிலிருந்து பெறப்படும் அபூர்வ மருத்துவ பொக்கிஷமான புனுகின் மகத்துவங்கள், மருத்துவ ரகசியங்கள், பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு கொடுத்த பதிலை தொகுத்து பதிவிடுகிறேன்.)

புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் சித்த பெருமக்கள்..

புனுகு என்பது அடர்ந்த காடுகளில் வசிக்கும் பூனைகளிடம் இருந்து பெறப்படுவதாகும், இந்தப் பூனைகள் குறிப்பிடும் அளவில், ஆப்பிரிக்க தேசங்களில் காணப்படுகின்றன, நமது நாட்டில் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
சிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் மலபார் புனுகுப் பூனைகள், அடர்த்தியான வாலுடன், பின்பக்கம் உள்ள முடிகள் சிலிர்த்து காணப்படுவதே, புனுகுப் பூனைகளின் தனி அடையாளமாக விளங்குகிறது.

ஏனெனில் இதே போன்ற தோற்றத்தில் உள்ள சாதாரணப் பூனைகளையும் சிலர் புனுகுப் பூனைகள் என்று நினைத்து, அவற்றை பிறருக்குத் தெரியாமல் வளர்த்து வருவர். அரிய விலங்காகையால், வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி, குற்றமாகும். தற்காலங்களில் காடுகளை அழித்து கட்டிடங்களைக் கட்டுவதும், பாதைகள் அமைப்பதும், இவற்றின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்து அங்கிருந்து தப்பி, சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிடுகின்றன புனுகுப் பூனைகள். சமவெளிகளில், உள்ள அடர்ந்த முந்திரித் தோப்புகள் மற்றும் நீர் நிலைகளின் ஓரம் உள்ள குறுங்காடுகளில் தஞ்சமடைந்துள்ளன.

புனுகுப் பூனைகள்:-
----------------------------------

இரவில் விழித்திருந்து இரை தேடும் புனுகுப்பூனைகள், சின்னஞ்சிறு விலங்குகள், முட்டைகள் மற்றும் சில வேர்க் கிழங்குகளை உணவாக உண்பவை. தனிமை விரும்பிகளான இவை எதிரியைக் கண்டால் தாக்கும் இயல்புடையவை. வாசனை எண்ணை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக, புனுகுப் பூனைகளில் இருந்து கிடைக்கும் புனுகை எடுப்பதற்காக, புனுகுப் பூனைகளை வீடுகளில் வளர்க்க முடியாது, அவை மிகவும் கடினமான சிரமம் தரும் ஒரு செயலாகும்.
இவை, முட்டைகளை வேட்டையாடுவதால், இவற்றைக் கொல்ல பண்ணைகள் வைத்திருப்போர், வேட்டை நாய்களைப் பயன்படுத்துகின்றனர். ஆயினும் தனித்து வாழும் இயல்புடையதாக இருப்பதால், புனுகுப் பூனைகள் இனம், இன்னும் முற்றிலும் அழியாமல் இருந்தாலும், எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. புனுகு என்பது, இந்தப் பூனைகளின் சுரப்பிகளில் இருந்து பெறப்படும் ஒரு வாசனைமிக்க சுரப்பாகும். இவற்றை சேகரிக்க அடர்ந்த காடுகளில் வாழும் இந்தப் பூனைகளைப் பிடிப்பது, என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகும்.

புனுகின் பயன்கள்:-
----------------------------------
வாசனை மிகுதியால், ஆன்மீகத்தில் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் இடம்பெறுகிறது. இறைவனின் திருமேனிக்கு புனுகுக் காப்பிடுவது என்பது, மிகவும் விஷேசமான நற்பலன்களைத் தரவல்லது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. சித்த மருத்துவத்தில், உடலில் வியாதிகளைப் போக்குவதில் மற்றும் வாசனைத் திரவியங்கள், வாசனை மணமூட்டிகளில் சேர்க்கப்படுகிறது.

ஏழுமலையானுக்கு உகந்த புனுகு:
------------------------------------------------------------
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு, வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில், செய்யப்படும் அபிஷேகத்தில், புனுகு எண்ணை முக்கியமாகப் பயன்படுத்தப்படும்.
தொடர்ந்த தேவைகளுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் புனுகைப் பெறுவதில், கால தாமதங்கள் ஏற்பட்டதால், சில புனுகுப் பூனைகள், திருமலை தேவஸ்தான வன விலங்குப் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அரிய வன விலங்குகளை, வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், தேசிய வன விலங்குத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று, புனுகுப் பூனைகளை, திருப்பதியில் வளர்த்து வருவது, குறிப்பிடத்தக்கது.

வைத்தீஸ்வரன் கோவில்:-
---------------------------------------------
திருமுருகனின் அற்புத ஆசி வழங்கும் ஆலயங்களுள் ஒன்றாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி எனும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் பிரசாதமாக வழங்கப்படும் புனுகு எண்ணை உடல் கட்டிகள், பருக்கள் போன்ற சரும வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு உடல் வியாதிகளைப் போக்கும் அருமருந்தாக, தீராத வியாதிகளையும் தீர்க்கும் தன்மை மிக்கதாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.

மேலும் இக்கோவிலில், செல்வமுத்துக்குமார சுவாமி எனப்படும் முருகப் பெருமானுக்கு, அர்த்த ஜாம பூஜை எனும், இரவில் திருநடை அடைப்பிற்கு முன் செய்யப்படும் சிறப்பு பூஜையில், புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம் மற்றும் எலுமிச்சை கொண்டு காப்பிட்டு, பன்னீர் மலர்களால், அர்ச்சித்து, பால் சாதம் மற்றும் பால் நைவேத்தியம் செய்து, இரவில் தரிசித்து வணங்க, உடல் நலம் பெற்று மனம் அமைதியடையும், செல்வம் தளைக்கும் என்பது முருனகடியார்களின் பரிபூரண நம்பிக்கை ஆகும்.

மருத்துவத்தில் புனுகின் பயன்கள்:-
--------------------------------------------------------------
சுவாசப் பாதிப்புகள் நீங்க, புனுகை உபயோகித்து, மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள் நம் சித்த பெருமக்கள்.
புனுகு, கஸ்தூரி மஞ்சள், பூவரசன் வேர், வெள்ளெருக்கன் வேர், சிருநாகப் பூ மற்றும் வெடி உப்பு. இவற்றில் கஸ்தூரி மஞ்சள் இரு பங்கு கூடுதலாகச் சேர்த்து, பூவரசன் வேர் மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவற்றை புனுகைவிட ஒரு பங்கு கூடுதலாக எடுத்துக்கொண்டு, எல்லா பொருட்களையும் சேர்த்து, சற்று நீர் இட்டு, அம்மியில் வைத்து, நன்கு மையாக அரைக்க வேண்டும்.

அரைத்த இந்த புனுகுப் பசையை, ஒரு வெள்ளைத்துணியின் ஒரு பக்கத்தில் முழுவதுமாக நன்கு தடவி வைக்க வேண்டும், பின்னர் அதை வெயிலில் இட்டு, அவற்றிலுள்ள நீர் எல்லாம் ஆவியாகி, நன்கு காய்ந்ததும், மடித்து சுத்தமான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த புனுகு மருந்துத் துணியை, சிறு அளவில் கத்தரித்து எடுத்துக் கொண்டு, அதை சுருட்டி, தீயில் காட்டி, வரும் புகையை, மூக்கில் நன்கு இழுத்து சுவாசிக்க வேண்டும்.

இந்த முறையில், புனுகு மருந்துத் துணியை தினமும் இரண்டு வேளை, சுருட்டிக் கொண்டு, தீயில் இட்டு, புகையை சுவாசித்து வர, சுவாச பாதிப்புகள் யாவும், நீங்கி விடும். இதன் மூலம், மூச்சு விடுதலில் உள்ள குறைபாடுகள், மூக்கின் நுகர்தலில் உள்ள பாதிப்புகள் எல்லாம் விலகி, உடல் நலமாகும்.

முகப்பருக்கள், தழும்புகளை போக்க:-
-----------------------------------------------------------------
சிலருக்கு முகப்பருக்கள் வந்தது தெரியாமல், அவற்றை கை விரல்களால் கிள்ளி விடுவர், அதன் மூலம், அவற்றின் நச்சுக்கள் பரவி, தழும்பாகி முகத்தின் பொலிவை பாதிக்கும் படியாக அமையும்.

இதற்கு சிறந்த தீர்வாக, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி வந்து, இரவில் படுக்கப் போகும் முன், முகத்தை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு, பருக்கள், தழும்புகள் உள்ள இடங்களில் புனுகைத் தடவி, காலையில் எழுந்தவுடன், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர, அதுவரை மன வாட்டம் தந்து வந்த, முகப் பொலிவை பாதித்த பருக்கள் மற்றும் தழும்புகள் எல்லாம் விரைவில், மறைந்துவிடும். முகமும் புத்தெழில் பெரும்புனுகு, கிடைக்கவில்லை என்றால், புனுகு எண்ணையை உபயோகித்தும் பலன்களைப் பெறலாம்.

முகம் பொலிவாக:-
--------------------------------
சிலருக்கு முகத்தில் எண்ணை வடிந்து, முகம் களையிழந்து காணப்படும், அவர்கள் புனுகு, ரோஜா மலர்கள், வசம்பு, கஸ்தூரி மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, பூலாங்கிழங்கு மற்றும் சந்தனம் சேர்த்து, நன்கு இடித்து தூளாக்கி, அதை, சிறிது நீர்விட்டு எடுத்துக் கொண்டு, முகத்தில் தினமும் தடவி சற்று நேரம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை அலசிவர, முகத்தின் மாசுக்கள் மறைந்து, பளிங்கு போன்ற முகம், பொலிவாக அமையும்.

புனுகுக் குளியல்:-
-------------------------------
வாசனை திரவியங்களால் தண்ணீரை நிரப்பி, அந்த நீரில் நீராடுவது என்பது, உலக அழகிகளுக்கு மட்டும் உரியதல்ல, நமது தேசத்திலும் சிலர் அவ்வண்ணம் குளித்து, தேக பளபளப்பு, நறுமணம் கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள்.

வாசனைப் பொருட்கள்:-
------------------------------------------
புனுகு, கஸ்தூரி மற்றும் சந்தனம் போன்றவற்றை நீரில் கலந்து, அந்த நீரில் குளித்து வர, உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, வியாதிகளின் பாதிப்புகள் அகலும். உடலும் மனமும் புத்துணர்வடையும். மேலும், உடல் நறுமணத்துடன் திகழும். இந்தக் குளியல் குளித்து முடித்த பின்னர், உடலில் நன்கு பசி எடுக்கும்.

புனுகின் பிற பயன்பாடுகள்:-
--------------------------------------------------
புனுகைக் கலந்து தயாரிக்கப்படும் ஊதுவத்திகள் மற்றும் புகைப்பான்கள் சிறந்த நறுமணமூட்டியாகவும், மனதை அமைதியாக்கும் தன்மையும் மிக்கதாகத் திகழ்கிறது. புனுகின் மூலம், தயாரிக்கப்படும் எண்ணை, பல்வேறு வாசனை திரவிய உற்பத்தியிலும், மூலிகை மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.

பாசிட்டிவ் எண்ணத்தை பலப்படுத்தும்:-
--------------------------------------------------------------------
அந்த காலங்களில் நம் முன்னோர்களின் வாசனை திரவியங்களில் புனுகு முக்கியமான இடத்தை பெற்றிருந்தது. இது புனுகு பூனையிடமிருந்து கிடைக்கின்றது.இந்த வகை பூனைகள் சாம்பல் நிறத்தில், அடர்த்தியான வாலும், மேலே புள்ளிகளுடனும் இருக்கும். இவை ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படும். இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா ஆகிய இடங்களில் இருக்கின்றன.

இவைகளை வீட்டில் வளர்க்க கூடாது. வீட்டில் வளர்க்க அரசின் அனுமதி பெற வேண்டும்.இந்த வகை பூனைகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை.ஆனால் எதிரிகளை தாக்கும் குணம் கொண்டவை.இவற்றின் உடம்பில் இருந்து சுரக்கும் திரவத்திலிருந்தும், கழிவிலிருந்தும் புனுகு தயாரிக்கப்படுகிறது.

புனுகின் மனம் கஸ்தூரியின் வாசம் கொண்டிருக்கும்.தண்ணீரில் கரையாது . இது ஒரு நறுமணமூட்டி. புனுகினை சிறிது எடுத்து நெற்றியில் இட்டால் எதிரில் உள்ளவர்களின் எதிர்மறை எண்ணங்கள் மறையும்,திருஷ்டியும் கழியும், பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும், சிலர் இதை வசியம் என்பார்கள், ஆனால் இது உண்மையல்ல.

இதன் பலன்கள் பல, சித்த வைத்தியத்தில் அதிகம் பயன்படுகின்றது.சுவாச பாதிப்பு, உடலில் கட்டிகள், சிரங்கு, பருக்கள், தழும்புகள் போன்றவற்றை போக்கும். இதை அழகு சாதனங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

புனுகு பற்றிய தெரியாத தகவல்கள்:-
-----------------------------------------------------------------

#புனுகுப்பூனை எனப்படும் விலங்கிடமிருந்துதான் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை "புனுகு" என்பார்கள். இதனுடன் சந்தனப் பவுடரை கலந்து விட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். இதுதான் ஜவ்வாது.

புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் முன்னோர்கள்.

வனத்துறைச் சட்டப்படி இத்தகையப் பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்... போன்ற நாடுகளில் புனுகுப் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

புனுகுப்பூனைகள் காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது. இந்தக் கொட்டைகளைச் சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இது "சீவெட் காபி" (Civet coffee) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடனும், வாசனையுடனும் இருக்கும். இதனால் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இந்தேனிஸியா போன்ற நாடுகளில், புனுகுப் பூனைக் கழிவு காபி கொட்டை ஒரு கிலோ பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

மகிழ்வித்து மகிழுங்கள்.. ஆரோக்கியம்

இது அரிதான பொருள் என்பதால் கிடைப்பதும் கஷ்டம். விலையும் சற்று அதிகம் தான்.

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்.

Thursday, 12 June 2025

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக




 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று

நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப்பில் வைத்த கொஞ்ச நேரத்தில் கேஸ் நின்று விட்டது.
உடனே புது சிலிண்டரை மாத்தினேன்.
வைத்த உடனே கேஸ் லீக் ஆகியது.
உடனே எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு யோசிக்க, அப்போது நேரமோ ஒன்பது மணி.
மெக்கானிக்கை எங்கே தேடுவது?,
உடனடியாக கூகுளில் தேட எமர்ஜென்சி கேஸ் லீக்கேஜ் என்றால் 1906 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிந்து அதற்கு ஃபோன் செய்தேன்.
ஒரு அதிகாரி பேசினார்.
கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்டார்.
நான் நம்பரை சொன்னவுடன் எனது பெயர் முகவரி மற்றும் டீலர் பெயர் இவற்றை கூறி நம்முடன் சரிபார்த்து விட்டு சற்று நேரத்தில் ஆள் வருவார் எனவும் சிலிண்டரில் பிரச்னை என்றால் எதுவும் பணம் தரத் தேவையில்லை , ரெகுலேட்டர் ட்யூப் இவற்றில் பழுது இருந்தால் அதற்கான பணம் தர வேண்டும் என்றார்.
சில நொடிகளில் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில் புகார் எண், மெக்கானிக்கின் தொடர்பு எண், வேலை முடிந்ததும் அவரிடம் கூற வேண்டிய ஒடிபி எண் ஆகியவை இருந்தது.
பத்து நிமிடத்தில் மெக்கானிக் என்னை தொடர்பு கொண்டு வழியை கேட்டு கொண்டார்.
வீட்டுக்கு வந்து சிலிண்டரை சோதித்து வாஷர் இல்லை எனவும் கூறி புதிய வாஷரையும் மாற்றி விட்டு அடுப்பை பற்றவைத்து சோதித்து எல்லாம் நன்றாக உள்ளது.
இனி பயமில்லை என்று சொல்லி அந்த ஒடிபி எண்ணை கேட்டு உடனே அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.
இதற்காக நான் பணம் தந்தபோது அதை வேண்டாம் என மறுத்து விட்டார்.
அடுத்த ஜந்து நிமிடத்தில் எனக்கு ஃபோன் செய்து தங்களது புகார் சரியாகி விட்டதா என்று விசாரித்தனர்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இந்த சேவை பற்றி எனக்கு இதுவரை தெரியாது. அற்புதமான சேவை.
இது நம்மில் பலருக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்காக!!....!

Saturday, 24 May 2025

திருமூலர் தரும் ரகசிய கணக்கு:


மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று வெளியேற முயலும். அவ்வாறு வெளியேற விடாமல், மெதுவாக ஊர்ந்து செல்லுமாறு வெளிவிட வேண்டும். அவ்வாறு வெளிவிட வேண்டுமானால் பெருமூளைப் புறணியின் கட்டளை வேண்டும். தானாக நிகழ்கிற செயலைக்கூட மூளையின் கட்டளைக்கு உட்படுத்தும் போது, சோர்ந்திருக்கும் மூளை செயல்பாட்டுக்கு வருவது இந்த முந்நிலை மூச்சுயிர்ப்பின் சிறப்பு.
இங்கு கணக்கிட்டுச் சூத்திரம் தருகிறார் என்குரு திருமூலர்:
ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;
ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;
ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
- திருமந்திரம்:568
மூச்சை ஏற்றும்போது, இடது நாசியின் வழியாகப் பதினாறு மாத்திரை அளவுக்கு ஏற்றலாம். புதிய காற்றை உள்விடாமலும் உள்வந்த காற்றை வெளிவிடாமலும் ஆறுதலாக அறுபத்துநாலு மாத்திரை அளவுக்கு நிறுத்திக்கொள்ளலாம். முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்கு வலது நாசியின்வழியாக மெதுவாக ஊரவைத்து வெளியேற்றலாம். அளவு மாறினால் சிக்கல்.
அடுத்ததாக குதிரைகள் செய்யும் கும்பகத்தை பற்றி சொல்கிறார்...
குதிரைகள் தாவி ஓடுவதற்குக் கூடுதல் ஆற்றல் வேண்டுமென்பதால், கூடுதல் மூச்சை உள்ளிழுக்கின்றன. ஒரு பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு. பாயும்முன் உள்ளிழுத்த காற்றைப் பாயும்போது உள்நிறுத்துகின்றன; மேலெழுந்த கால்கள் கீழேபடும்வரை தம்மை அறியாமலே கும்பகம் செய்கின்றன. மேலெழுந்த கால்கள் கீழே படும்போதுதான் மூச்சை வெளிவிடுகின்றன. உள்ளிழுத்த அதே அளவு காற்று வெளிவிடப்படுகிறது. ஆற்றலின் தேவை மிகும்போது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றலின் அளவும் கூடும்.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம்; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும்; சோம்பு தவிர்ப்பிக்கும்;
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோருக்கே.
- திருமந்திரம்:566
பறவையைக் காட்டிலும் சிறப்பாகப் பறக்கும் குதிரை. அதை வசப்படுத்தி ஏறிக்கொண்டால், அதைவிடக் களிப்புத் தருவது கள்ளும்கூட இல்லை; சோம்பல் நீங்கி உங்களில் ஒரு துள்ளல் வரும்; உள்ளதைச் சொன்னோம்; உணர்வுடையோர் கேளுங்கள் என்று சொன்னதோடு விடாமல்,
ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்,
நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
- திருமந்திரம்:722
என்று ஆணையிட்டும் சொல்கிறார். நான்கு கால் குதிரையே மூச்சைப் பிடித்து விண்ணில் எழுகிறது. உங்களுக்குக் கிடைத்திருப்பது பன்னிரண்டு கால் குதிரை அல்லவோ? அந்தக் குதிரையைக் கட்டியாள உங்களால் முடியுமென்றால், ஏது இறப்பு? நீராலும், நிலத்தாலும் பிற பூதங்களாலும் யாக்கப்பட்ட உங்கள் உடம்பு அழியாது.
பன்னிரண்டு கால் புரவி என்பது பன்னிரண்டு விரற்கடை அளவுக்குப் பாயும் மூச்சுக் குதிரை.
இந்தச் சூத்திரத்தைப் பிடித்துக்கொள்ளும் பத்திரகிரியார்.....
பன்னிரண்டு கால்புரவி
பாய்ந்துசில்லம் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குள்
பிணைப்பதுஇனி எக்காலம்?
- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்:141

என்று ஏங்குகிறார். பன்னிரண்டு கால் குதிரை பாய்வதில் சிக்கலில்லை; பாயும் வேகத்தில் சிதறிச் சில்லாகிவிடாமல் கணக்காகப் பாயப் பழக்கவேண்டாமா? இடம் வா என்றால் இடம் வரவும், வலம் வா என்றால் வலம் வரவும், நில்லென்றால் நிற்கவும் வேண்டாமா? குதிரை பழக்கிக் கடிவாளம் போடுவது எக்காலம்?

Saturday, 17 May 2025

27 நட்சத்திர கோயில்கள் –

 27 நட்சத்திர கோயில்கள் – ஜாதக தோஷ நிவாரணத்திற்கான தெய்வீக வழிகாட்டி!


பிறப்பின் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருந்ததோ அதுவே ஜாதக நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் ஒரு மனிதனின் மனநிலை, உடல்நிலை, துல்லியமான சிந்தனை மற்றும் வாழ்க்கையின் பல துறைகளையும் தீர்மானிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் விளைவாக சிலருக்கு நல்ல எதிர்வினை கிடைக்கும், சிலருக்கு அதிர்ஷ்டம் தாமதமாகவே வரும். ஆனால், இதற்கு தீர்வாகவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற 27 ஆலயங்களை நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை நட்சத்திர பரிகார ஸ்தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் நடைபெறும் வழிபாடுகள், ஹோமங்கள், அர்ச்சனைகள் மற்றும் அபிஷேகங்கள் மூலம், நட்சத்திரத்தின் ஒழுக்குகளும், தோஷங்களும் நீங்கிச் சாந்தி, செழிப்பு, ஆரோக்கியம், குழந்தைப் பேறு மற்றும் தொழில் வளர்ச்சி உண்டாகும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் – ஒரு பரிகார வழிகாட்டி
1. #அசுவினி – பிள்ளையார்பட்டி மாருத்தீஸ்வரர் கோயில், சிவகங்கை
இந்த நட்சத்திரம் கொண்டவர்கள், உடல்நல பிரச்சினைகள், வாகன விபத்துகள், மற்றும் சிந்தனையிலான குழப்பங்களை அனுபவிப்பவர்கள். இவர்கள் மாருத்தீஸ்வரரை வழிபட்டால் உடல்நலம் மேம்படும்.
2. #பரணி – அக்னீஸ்வரர் கோயில், கும்பகோணம்
பரணி நட்சத்திரம் பெரும் தீவிர சக்தி கொண்டது. அக்னீஸ்வரர் வழிபாடு, ராகு, கேது மற்றும் சுக்கிர தோஷங்களை நீக்குகிறது.
3. #கார்த்திகை – கார்த்திகேயபெருமான் கோயில், சுவாமிமலை
முருகன் வழிபாடு, மன உறுதி, படிப்பு மற்றும் காரிய வெற்றிக்கு உதவும். கார்த்திகை நட்சத்திரத்தை கொண்டவர்கள் வழிப்பட வேண்டிய முக்கிய ஆலயம் இது.
4. #ரோகிணி – நந்தீஸ்வரர் கோயில், நந்தீபுரம்
மன அழுத்தம், பணத்தடை, உறவுப் பிரச்சனை போன்றவை நிவர்த்தி செய்ய நந்தீஸ்வரரைக் கருதப்படுகிறது.
5. #மிருகசீரிடம் – ஆம்ரவனேஸ்வரர் கோயில், திருவாமூர்அ
நீதி, கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாடு தேவைப்படும் வாழ்வில், இந்தக் கோயில் வழிபாடு மிக அவசியம்.
6. #திருவாதிரை – நந்தீஸ்வரர் கோயில், திருநெல்வேலி
இங்கே வழிபடுவது நரம்பியல் நோய்கள் மற்றும் மனவியாதிகளை தாண்ட உதவுகிறது.
7. #பூசம் – ஆறப்பரிச்வரர் கோயில், பட்டுக்கோட்டை
அதிக கப தோஷம், மன அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு சரியான பரிகாரம்.
8. #ஆயில்யம் – நகுலீஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்
நாக தோஷம், ராகு/கேது பகவானின் கிரஹ தோஷங்கள், குழந்தை பிரச்சனைகள் நீங்கும்.
9. #மகம் – மகாலிங்கஸ்வரர் கோயில், திருக்கடையூர்
மனம் நிலையாக இல்லாத நிலை, அதிர்ஷ்டக் குறைவு போன்றவற்றில் இருந்து விடுபட உதவும்.
10. #பூரம் – நித்தியசுந்தரேஸ்வரர் கோயில், புடுக்கோட்டை
மிகவும் சக்திவாய்ந்த ஆலயம். பரிகார பூஜைகள் செய்வதன் மூலம் கல்வி மற்றும் வேலைக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்.
11. #உத்திரம் – பாகவலீஸ்வரர் கோயில், திருச்சி
அழுக்காறு, பிசாசு தோஷம் மற்றும் குடும்பக் குழப்பங்கள் தீரும்.
12. #அஸ்தம் – இராசர குபேர லட்சுமி சமேத யமராஜர் கோயில், திருக்கோவிலூர்
பரிகார யம தரிசனம், வம்ச தோஷ நிவாரணம், செல்வ வளைச்சல்.
13. #சித்திரை – சித்ரசாபதேஸ்வரர் கோயில், திருநல்லூர்
கலை, கணிதம், ஆழ்ந்த சிந்தனையை மேம்படுத்தும்.
14. #சுவாதி – முசுந்தேஸ்வரர் கோயில், புஞ்சை
மூளை சம்பந்தமான நோய்கள் மற்றும் தர்மபதி வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
15. #விசாகம் – முசுந்தேஸ்வரர் கோயில், மேலமங்கலம்
மதம், ஞானம், ஆன்மீகம், துறவிகள், தன்னிறைவு பெற இங்கு வழிபடலாம்.
16. #அனுஷம் – கமலாபதி சமேத கமலாம்பிகை சமேத சம்புமூர்த்தி கோயில்
பிணி நீக்கம், தீராத நோய்கள், பூர்வ ஜன்ம தோஷங்களை களைக்கும் ஆலயம்.
17. #கேட்டை – வரதராஜபெருமாள் கோயில், நாகப்பட்டினம்
நாராயணர் அருள் பெறுவதற்காக, கெட்ட சக்திகள் மற்றும் கனவிலே பயங்கரத் தோற்றங்களை நீக்க.
18. #மூலம் - ரங்கநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை
ஆன்மீக வளர்ச்சி, திருமண தடை, பண வசீகரம் ஆகியவற்றில் பெருமளவு பலன்கள்.
19. #பூராடம் – தண்டாயுதபாணி கோயில், மயிலாடுதுறை
இளமை, புத்திசாலித்தனமும், கல்வித் திறமையும் மேம்படும்.
20. #உத்திராடம் – ஆழ்வார்திருநகரி கோயில், திருநெல்வேலி
முன்னோர்களின் அருள், குடும்ப இணக்கம் மற்றும் நிதி நிலை நல்லது.
21. #திருவோணம் – பிரம்ம விஷ்ணு ருத்ரர் கோயில், திருநந்தி
சம்பந்தமான கிரஹ தோஷங்களைத் தீர்க்கவும், புத்தி மேம்படவும்.
22. #அவிட்டம் – பத்ரகாளி அம்மன் சமேத சிவசுந்தரேஸ்வரர் கோயில், சிகரலை
மனப் பிரச்சனை, அலர்ஜி, குழந்தை பிரச்சனைக்கு தீர்வு.
23. #சதயம் – வாடாபத்ரசாயி கோயில், திருக்கண்ணங்குடி
முதன்மை காட்சி — சதய நட்சத்திரம் பெற்றவர்கள் தொழில் முனைவோர், சமூக சேவையாளர்களுக்கு பரிகாரம்.
24. #பூரட்டாதி – சுந்தரவரதர் கோயில், திருவல்லிக்கேணி
பரிகாரம் வழிபாடு நன்மை தரும். அதிக வெற்றி, செல்வ விருத்தி.
25. #உத்திரட்டாதி – பவளக்குன்று சுவாமி கோயில், திருவண்ணாமலை
தவம், தியானம், ஆன்மீக ஒளி பெற பரிகாரம் தரும்.
26. #ரேவதி – சீதாலக்ஷ்மி சமேத ரேவதீஸ்வரர் கோயில், திருவெண்காடு
மன அமைதி, குடும்ப சமரசம், தீராத நோய்களுக்கு நிவாரணம்.
27. #ஆதிரை – நந்தீஸ்வரர் கோயில், திருநெல்வேலி
காரண நோய்கள், மூச்சுத் தடைகள், மன வலிமை வளர்க்கவும் பரிகாரம் தரும்.
நட்சத்திர ஆலயங்களுக்கு செல்வது ஏன் அவசியம்?
1. #தோஷ_நிவாரணம்:
சந்திர தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், ராகு/கேது தோஷம், முன் ஜென்ம பாபம்.
2. #வாழ்க்கை_முன்னேற்றம்:
கல்வி, திருமணம், தொழில், பிள்ளை பேறு, நிதி வளர்ச்சி.
3. #ஆன்மீக_மேம்பாடு:
மன உறுதி, ஆழ்ந்த சிந்தனை, தவ வாழ்வு.
4. #சமூகவாழ்க்கை:
குடும்ப ஒற்றுமை, சமூக பண்பாடு, பொறுமை, சகிப்புத்தன்மை.
வழிபாட்டு முறை:
உங்கள் ஜாதக நட்சத்திரத்தின்படி அந்தக் கோயிலில் பவித்ரமா சென்று விஷேஷ அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிறப்பு அன்னதானம் அல்லது விளக்கேற்றம் செய்தால் பலன்கள் அதிகரிக்கும்.
சந்திர வாரத்தில் (திங்கட்கிழமை) பயணம் மேற்கொள்ளலாம்.
பக்திபூர்வமான நாமஜபம் மற்றும் ஸ்லோக பாராயணம் செய்வது மேலானது.
இந்த 27 நட்சத்திரக் கோயில்கள் — ஒரு ஜாதகர் வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களிலும் அமைதி, ஆற்றல், வளம் மற்றும் ஆனந்தத்தை கொண்டு வரும்
ஜாதகம்பார்க்க9994150658 

தாய் மாமன் உறவு என்பது

 தாய் மாமன் உறவு என்பது வெறும் ரத்த பந்தம் மட்டுமல்ல – அது பாசத்தாலும், பொறுப்பாலும் பிணைக்கப்பட்ட ஓர் ஆழமான உறவு. தாய் மாமனின் கடமைகளும், ...