Wednesday, 25 March 2026

நீண்ட_நாட்களாக_குழந்தை_பாக்கியம்_இல்லையா_?


#

நீண்ட_நாட்களாக_குழந்தை_பாக்கியம்_இல்லையா_
?
எவ்வளவு மருத்துவரை பார்த்து பலன் இல்லாமல் இருக்கிறதா? ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி இப்படி வழிபாடு செய்து பாருங்கள். விரைவிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முழுமை அடைய வேண்டும் என்றால் அவருக்கு நடக்க வேண்டிய அனைத்து விதமான சுப காரியங்களும் சரியான நேரத்தில் நடைபெற வேண்டும். அந்த வகையில் பலருக்கும் தடையாக இருப்பது திருமண தடை. திருமணம் நடைபெற்று விட்டாலும் இன்றைய காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. அதனால் தான் குழந்தை பாக்கியத்தை தருவதற்காகவே பலவிதமான மருத்துவமனைகள் இன்றைய காலத்தில் அதிகரித்து வருகின்றன. இவ்வளவு மருத்துவ வசதிகள் அதிகரித்தும் பலரும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையோடு ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபாடு..
நாம் பலவிதமான தெய்வங்களை வழிபாடு செய்வோம். இருப்பினும் காரிய வெற்றி உண்டாக வேண்டும் என்றால் நாம் விநாயகருக்கு அடுத்தப்படியாக ஆஞ்சநேயரை தான் வழிபாடு செய்வோம். இவர்கள் இருவரும் தான் காரிய தடைகளை நீக்கி வெற்றியை தரக்கூடியவர்கள். மேலும் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குவதற்கும் விநாயகரும் ஆஞ்சநேயருமே மிகவும் உகந்த தெய்வங்களாக திகழ்கிறார்கள், அதனால் ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கிரக தோஷங்கள் நீங்குவதோடு வெற்றியும் வந்து சேரும்.
இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக ஐந்து சனிக்கிழமை செய்யலாம் அல்லது மூன்று மூல நட்சத்திரம் செய்யலாம் அல்லது மூன்று அமாவாசை தினங்களில் செய்யலாம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான வழிபாடாக தான் வடை மாலை சாற்றும் வழிபாடு திகழ்கிறது. வடை மாலை தயார் செய்யும் பொழுது கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் சேர்த்து வடை தயார் செய்ய வேண்டும். நாமே நம் கை பட வடையை தயார் செய்து கொள்ள வேண்டும். எத்தனை எண்ணிக்கையில் வடையை சாற்ற வேண்டும் என்பது அவரவரது விருப்பம்.
இதை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டும். இரண்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வைத்து முழுமனதோடு ஆஞ்சநேயருக்கு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு ஆஞ்சநேயரை 21 முறை வலம் வர வேண்டும். 21 முறை வலம் வரும் பொழுதும் ராம நாமத்தை உச்சரிக்க வேண்டும். 21வது சுற்று அடி பிரதக்ஷணமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயரின் கழுத்தில் இருக்கக்கூடிய வடை மாலை குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு அந்த வடை மாலையை எடுத்து கோவிலுக்கு வரக்கூடிய தம்பதிகளுக்கு முதலில் மூன்று வடைகளை பிரசாதமாக கொடுக்க வேண்டும். பிறகு யாருக்கு வேண்டுமானாலும் வடையை பிரசாதமாக தரலாம். அவ்வாறு வடையை பிரசாதமாக தரும் பொழுது முழுவடையாக தர வேண்டும். அதை உடைத்து சிறு சிறு துண்டுகளாக தரக்கூடாது. இந்த முறையில் ஆஞ்சநேயரை தம்பதி சகித்தமாக யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு தடைப்பட்டு இருக்கக்கூடிய குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு காரிய வெற்றியும் உண்டாகும்.
ராகு தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குவதோடு காரிய வெற்றியையும், குழந்தை பாக்கியத்தையும் அருளக்கூடிய இந்த வடை மாலை வழிபாட்டை முழு மனதோடு ஆஞ்சநேயருக்கு செய்து காரிய வெற்றியையும் குழந்தை பாக்கியத்தையும் பெறலாம்

No comments:

Post a Comment