பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியாமலும் அதற்கு தீர்வே கிடைக்காமலும் சில செயல்கள் குழப்பும் இயல்புடையது.
அதற்கு காரணமான பிரேத சாபத்தை பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம்.

பிரேத சாபம்

இறந்த நபரை அடக்கம் செய்யும் பொழுது தடுப்பது அல்லது இடஞ்சல் செய்வது

இறந்த நபருக்கு உரிய ஈமகாரியங்களை செய்யாமல் அவரின் வாரிசுகள் புறக்கணிப்பது

இறந்த நபரை இகழ்வது

வருடாந்திர இறப்பு திதி காரியங்களை செய்யாமல் இருப்பது
போன்ற செயல்கள் ஒரு நபருக்கு பிரேத சாபத்தை உருவாக்குகிறது.

பிரேத மரியாதை:

பிரேதம் செல்லும் பொழுது எழுந்து நின்று மரியாதை செய்யும் வழக்கமும்
பிரேதத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் வழக்கமும் இதனால் தான் உண்டாகின.


பிரேத சாபத்தின் விளைவுகள்:

பிரேத சாபத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் அதீத உடல் சூடாகி வேர்க்கும்

அடிக்கடி இரவு நேரத்தில் கூட குளிப்பார்கள்

அதீத தாகமும் பசியும் ஏற்படும்.

தலைவலி தொடர்கதையாக இருக்கும்.

வயிற்று வலி ஏற்படும்

பயமும் கோபமும் எரிச்சலும் வரும்.

சிந்திக்க இயலாமல் குழம்பிய மனநிலையில் இருப்பார்கள்.

இயல்பான நிலையில் இருக்க மாட்டார்கள்.
மேலே சொல்லப்பட்ட விபரத்தில் இரண்டிற்கு மேற்பட்ட நிலை ஒரு நபருக்கு இருந்தால் அவர் பிரேத சாபத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று அறியலாம்.

பிரசன்னம் பார்க்கவும்

கண்டறிய இயலாத
பிரச்சனைகளை கண்டறியவும்,
No comments:
Post a Comment