Sunday, 21 May 2023

சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள் முடிந்தவர்கள் படியுங்கள்

 சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்

ஆசன மந்திரம் :
1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா
2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா
3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா
பஞ்சகலா மந்திரம் :
1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம:
2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம:
3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம:
4. ஓம் ஹ்யைம் ஸாந்தி கலாயை நம:
5. ஓம் ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம:
ஸம்ஹிதா மந்திரம் :
1. பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களும்
2. ஷடங்க மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது.
பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் :
1. ஈசானம் : ஓம் ஹோம் ஈஸாந மூர்த்தயே நம:
2. தத்புருஷம்: : ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:
3. அகோரம் : ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய நம:
4. வாமதேவம் : ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:
5. ஸத்யோஜாதம்: ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:
ஷடங்க மந்திரங்கள் :
1. ஹ்ருதயம் : ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
2. சிரஸ் : ஓம் ஹீம் ஸிரஸே நம:
3. சிகை : ஓம் ஹூம் ஸிகாயை நம:
4. கவசம் : ஓம் ஹைம் கவசாய நம:
5. நேத்ரம் : ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம:
6. அஸ்த்ரம் : ஓம் ஹ: அஸ்த்ராய நம:
காயத்ரீ :
1. அஸ்த்ர காயத்ரீ :
ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி
தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.
2. சிவ காயத்ரீ :
ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்
ஸப்தகோடி மஹாமந்திரம் :
1. நம: 2. ஸ்வாஹா 3. ஸ்வதா
4. வஷட் 5. வெளஷட் 6. ஹும் 7. பட்
3.9 கர ந்யாஸம் :
3.9.1 ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால், இடது, வலது கைகளால், மேலும் கிழுமாக இடது வலது கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும். இடது கையை இரு முறையும், வலது கையை ஒரு முறையும் அவ்வாறு செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.9.2 இரு கைகளும் சக்தி சிவ வடிவம் என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து (பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்குக் கீழே, புதன் மேட்டில், கட்டை விரலால் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
3.9.3 பிறகு ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல் விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ) சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக் கொண்டே, நடு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (யோக முத்திரை (அ) மோக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்ட, சுண்டு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின் விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.
3.9.4 பிறகு உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு (அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என்ற மூன்று விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு (கடா முத்திரை), பின் கூப்பி, ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
3.9.5 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம; என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சீரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று உச்சரித்து, அஸ்த்ர முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக, கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக் கொண்டு த்யானிக்க வேண்டும்.
3.10.7 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சிரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.8 உஷ: முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத் தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம் செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும்.
3.10.9 தாளத்ரயம்: கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க முத்திரையால், ஓம் ஹூம் ஹ: அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ முதலிலும், பட்- ஐ ஈறாகவும் கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம் என்பது இடது உள்ளங்கையில் வலது கை கட்க முத்திரை விரல்களால் மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும் அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே தாளத்ரயம்.
3.10.10. திக்பந்தனம் : விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும் சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும் திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம் உண்டாக்கி அக்நி தேவரைக் காவல் வைப்பதாகப் பாவிக்க வேண்டும்.
3.10.11 அவகுண்டனம் : ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும் அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும்.
3.10.12 பரமீகரணம் : நிறைவாக, ஓம ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம் முதல் சிகை வரை தடவ வேண்டும். பாதம் முதல் கேசம் வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம் என்று பெயர்.
3.10.13 இந்த ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில் எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து, ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும் உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான் அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக) பாவித்தல் வேண்டும்.
3.9.6 பின்னர், அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம் செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும், மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும் முறை சுற்றுவதாகும்.
3.9.7 நிறைவாக, ஓம் ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம் செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு எதிரே கொண்டு வந்து முடிப்பது.
3.9.8 இதுவே சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும்.
3.10 அங்க ந்யாஸம் :
3.10.1 கர ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே அங்க ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.2. ஓம் ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.10.3 திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும் திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
3.10.4 பிறகு, ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே சின் முத்திரையால் நெற்றியில் நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால் நாபியில் நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.
3.10.5 பிறகு திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில் நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க வேண்டும்.
3.10.6. பிறகு, ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
3.10.14. இதுவே சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும் முறையாகும்
3.11. ஆத்மபூஜா த்யாநம்: நாதம் லிங்கம் என்றும், அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும், ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது. சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி அன்னியில் சிவம் இல்லை; இவை, புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில் என்னை போலும் அபேதமாக இருப்பதாக அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம் செய்து, அதிலே சிவாஸநம் செய்து, சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது.
3.12 சகளீகரணம்: கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர்.
3.13. விசேஷ அர்க்யம்:
3.13.1 சகளீகரணம் செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம்.
3.13.2 பொன், தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம் போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு, அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும்.
3.13.3 நீரீக்ஷணம்: நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று பொருள்படும். ஓம் ஹாம் சிவாய நம: என்று மூல மந்திரம் உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு, சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும் அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே நிரீக்ஷணம் செய்தல் எனப்படும்.
3.13.4 ப்ரோக்ஷணம் : பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற அம்ருத தாரா மயமாக சுத்த ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும் கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர்.
3.13.5 பிறகு, அந்த நீரிலே சந்தனம், புஷ்பம், அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம, வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய மந்திரங்களால் பூஜை செய் வேண்டும். ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும்.
3.13.6 தாடனம்: அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர். தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின் அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி ஒரு முறை தட்டுதலே தாடனம்.
3.13.7 அப்யுக்ஷணம் : கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த நீரை சூடி, கவச மந்திரத்தை உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம்.
3.13.8 அடுத்து, அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட தாளத்ரயம் சாய்ய வேண்டும்.
3.13.9 தொடர்ந்து, கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும் செய்தல் வேண்டும்.
3.13.10 நிறைவாக, வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து, சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப் புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
3.13.11. மேற்சொன்ன கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில் சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது.
3.14 சாமான்யார்க்யம் : சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு சுத்த ஜலத்தை நிரப்பி, அதில் ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால் அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை
கொடுத்து செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர்
3.15 ஐவகை சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார், பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும் கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர சுத்தி (5) லிங்க சுத்தி.
3.16 ஆத்ம சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.
3.17 ஸ்தான சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில் விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று தடவை தாளம் செய்து, சிட்டிகை போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல் 3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும், மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி, தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி ரக்ஷõ பந்தனம் செய்தல்.
3.18 த்ரவ்ய சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற பூஜைக்கான உதவியாளர்களையும், பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல் 2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம் கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம் கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ) ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ) கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல் (உ தேனு முத்திரை கொடுத்து அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு, தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல்.
3.19 மந்திர சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித் தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும். இது திரவிய சுத்தி செய்த பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று ஆஸனம் கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ மூர்த்தயே நச: என்று பூஜை செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால் திலகம் இட்டு, மூல மந்திரத்தால் சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக் கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும், மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி.
3.20 லிங்க சுத்தி : முதல் நாள் (அல்லது, முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து, நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும். இது செய்ய வேண்டிய முறை : முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை : பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப, தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள், பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய மந்திரம் கூறி அர்க்ய ஜலம், ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்; நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி. இதன் பிறகே அலங்காரம்
3.21 கலாகர்ஷணம் : பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம் முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது, முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும்.
3.22 அபிஷேகத்துக்குப் பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி புஷ்பத்தை வைக்க வேண்டும்.
3.23 சிவோகம்பாவனை செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம் பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்; பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால் தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம், காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில் மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே சிவோகம்பாவனை.
3.24 நெற்றியில் குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம் செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால் ஆணவம், கர்வம், மலம், மாயைகள் நீங்கி ஞானம் பிறக்க வழி கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை விநாயகர் முன்பு செய்தல் சிறப்பு
3.25 பூஜை செய்யும் திசை : கிழக்கு அல்லது மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு முகமாக நின்று பூஜை செய்ய வேண்டும்
3.26 கட்டை விரலால் மட்டும் எடுத்து விபூதி அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு விரலால் விபூதி அளித்தால் மரணம் உண்டாகும்; நடு விரலால் விபூதி அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்; கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால் பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும்.
3.27 அனைத்துக் கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும் தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள் கிரியைகளின் அங்கம்;
சிவாச்சாரியார்
.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள். ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ,
செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.
3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.
3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.
3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்
3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்
3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள்.

Friday, 12 May 2023

*நடராஜர் தலங்களும் திரு நடனமும்*.


 *நடராஜர் தலங்களும் திரு நடனமும்*.

சிவலோகத்து *ஐந்து தொழில் புரியும் *பஞ்ச கிருத்திய நடராஜர்* அன்பர்களுக்காகப் பலவிதத் திருநடனக் காட்சி அருளிய திருத் தலங்கள் .
*1* . *_சிதம்பரம்_ – ஆனந்த நடராஜர், மாணிக்கக் கூத்தர்*
*2** .*_மதுரை_ ---- சுந்தரக் கூத்தர்*
*3* . *_திருநெல்_ _வேலி_ --- செல்வ நடராஜர்*
*4* . *_திருக்_ _குற்றாலம்_ – சித்திரக் கூத்தன்*
*5* *_திருவாலங்காடு_ --- ஊர்த்துவத் தாண்டவர்*
*6* *_திரு_* *_உத்தர கோச_* *_மங்கை_ ---- மரகத நடராஜர்*
*7* . *_தாருகாவனம்_ --- ஞானக் கூத்தர்*
*8* . *_திரு விடை வாய்_* ------ *சந்தியா தாண்டவர்*.
.
*9* . _*திருவாரூர்*_*--------ஆயிரம் புஜங்க லலித நடராஜர்*
*10* .*கொள்ளிக்காடு_ ----– திரு மேனியின் *மேல் பாதி பெண்ணாகும் இருபால் அர்த நாரி அம்மை யப்ப நடராஜர்.*
*11* . *_திருவாய்மூர்_ ---- அம்மை நடராஜர்*
*12* . *_திரு நல்லம்_* (கோனேரி ராஜ புரம்) --- *சுயம்பு நடராஜர்*
*13* . *செப்பறை*,
_*திருப் பனையூர்*_ ----- *அழகிய கூத்தர்*
*14* . _*கும்ப கோணம்* *நாகேஸ்வரன்* *கோயில்* , *நல்லூர் பெரிய ஆண்டவர்*_ *_கோயில்_* ---- *சதுரத் தாண்டவர்*.
*15 . _திருவெண் காடு_* ----- *அற்புதக் கூத்தர்.*
*16 . _திரு இடைச் சுரம்_ ------- அதிசயக் கூத்தர்*. .
*17* . _*பேரூர் பட்டீஸ்வரம்*_ . *ஆனந்த நடராஜர்*
*18 _திருவாதவூர்_*, *_இராமேஸ்வரம்_ , திருவதிகை, திரு வடுகூர் ------ அருள் கூத்தர்.* .
*19 _திரு நீடூர்_ ---- கான நிருத்தர்*
*20 . _திருத்_ _தலையாலங்காடு_ ----- வரத நடராஜர் மகுடக் கூத்தர்*.
*21.* _*தீர்த்தன கிரி*_ ( திருத்தினை நகர் ) ------- *இசைக் கூத்தர்*
*22* . *திருப் பனையூர்* ------ *ஒரு காதில் தோடு அணியும் அர்த நாரி அம்மையப்ப நடராஜர்.* .
இவ்வாறு இன்னும் பல தலங்கள்.     

★ ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார்.

★ அடேங்கப்பா! இந்த உயிர்கள் எத்தனை பெரிய பாவ மூட்டைகளை கரைக்க வேண்டியிருக்கிறது! அதற்கு ஏகப்பட்ட பிறவிகள் எடுக்க வேண்டுமே என்று வருத்தப்படுவார். அப்போது, அவர் உள்ளத்தில் கருணை பொங்கும், மீண்டும் உயிர்களைப் படைக்க முடிவெடுப்பார்.

★ மகிழ்ச்சியில் அப்போது நடனம் புரிவார். அதையே 'ஆனந்த தாண்டவம்" என்பர். சிவன் நடனமாடும் போது 'நடராஜர்" என்ற பட்டப்பெயர் பெறுவார்.

நடராஜருக்கு களி படைப்பது ஏன்?🌹🌿

★ சிதம்பரத்தில் வாழ்ந்த சேந்தனார் என்னும் அடியவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவிடுவது வழக்கம். ஒருநாள் மழை பெய்த சமயத்தில், அடியவர் ஒருவர் உணவுக்காக வந்தார். சேந்தனாரின் மனைவி களி தயாரிக்க அரிசி, உளுந்துமாவு எடுத்தார்.

★ அடுப்பு பற்ற வைக்க முடியாமல், விறகெல்லாம் மழையில் நனைந்திருந்தது. இருந்தாலும், ஈரவிறகை வைத்தே ஒருவழியாக சமைத்து அடியவருக்கு களி படைத்தார். அவரும் அதை சாப்பிட்டு மகிழ்ந்தார். அன்றைய நாள் திருவாதிரை நாளாக இருந்தது.

★ சேந்தனார் மறுநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்றார். அங்கு கோவிலில் சுவாமியின் வாயில் களி ஒட்டியிருந்ததைக் கண்டார். மெய் சிலிர்த்துப் போனார். அடியவராக வந்து தங்களை ஆட்கொண்டவர் நடராஜரே என்பதை உணர்ந்தார். அன்று முதல் 'திருவாதிரை" அன்று களி படைக்கும் வழக்கம் வந்தது.                          

தெரிந்து #கொள்வோம்அஷ்ட #பைரவர்கள்:


 #தெரிந்து #கொள்வோம்

1. அசிதாங்க பைரவர்
2. ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோத பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீஷண பைரவர்
8. சம்ஹார பைரவர்
மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன. வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம்.
எட்டு பைரவர்களின் வாகனங்கள்:
1. அசிதாங்க பைரவர் - அன்ன வாகனம்
2. ருரு பைரவர் – காளை வாகனம்
3. சண்ட பைரவர் – மயில் வாகனம்
4. குரோத பைரவர் - கருட வாகனம்
5. உன்மத்தபைரவர் - குதிரை வாகனம்
6. கபால பைரவர் - யானை வாகனம்
7. பீஷண பைரவர் - சிம்ம வாகனம்
8. சம்ஹார பைரவர் - நாய் வாகனம்
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.
அஷ்ட(எட்டு) பைரவர்கள்
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.
ருரு பைரவர்
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சிவிளங்குகிறாள்.
சண்ட பைரவர்
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.
குரோதன பைரவர்
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.
உன்மத்த பைரவர்
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.
கபால பைரவர்
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். கருடனைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.
பீக்ஷன பைரவர்
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.
காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன
அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில்
குரோத பைரவர் - காமாட்சி ஆலயம்
உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில்
ருரு பைரவர் - அனுமன் காட்டில்
கபால பைரவர் - லாட் பஜாரில்
சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில்
பீஷண பைரவர் - பூத பைரவத்தில்
சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்.
அறுபத்து நான்கு பைரவர்கள்
பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.
1. நீலகண்ட பைரவர்
2. விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர்
16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர்
18. க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர்
28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர்
30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர்
44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர்
46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர்
48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
62. காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்
சொர்ண ஆகர்ஷண பைரவர்
சுவர்ண கால பைரவர் , திருவண்ணாமலை
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
கால பைரவர்
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
வேறு பைரவ வடிவங்கள்
"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்குவர் என்று பொருள்.
பைரவ வழிபாடு
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பைரவ விரதம்
பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும்.பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
எதிரிகள் தொல்லைகள் நீங்க ஹோமம் சிறப்பான முறையில் செய்து தருவோம்....
தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும். 🙏🙏🙏🙏

Wednesday, 10 May 2023

சமையல் பகுதியில் சில குறிப்புகள்


 🔴 வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது
*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.
*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும
*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

இந்துக்களின் 16 சடங்குகள்

 இந்துக்களின் 16 சடங்குகள்

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.
அகத்தின் எட்டு (😎 சடங்குகள்:
1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
😎 பேராசை இல்லாமை
புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:
1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.
2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.
4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.
5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.
6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.
7) குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) – குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.
😎 குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) – குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.
9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) – குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) – குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.
12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) – குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.
13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) –வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.
14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) – ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) – உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.
(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)
16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) – ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.
இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.
“எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. ஒருசில புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று கௌதமர் தர்மசூத்திரம் (8:23) -இல் குறிப்பிடப்பட்டுள்ளது

Friday, 5 May 2023

இராமேஸ்வரம் 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!


 இராமேஸ்வரம்

திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின்
மகிமைகளும்!
இராமேஸ்வரம் தல வரலாறு ஶ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றார்.
ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ஶ்ரீராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.
எனவே...
ஶ்ரீராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது.
மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.
1. மகாலெட்சுமிதீர்த்தம்
இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.
இதில் ஸ்ஞானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம்,
3. காயத்ரி தீர்த்தம்,
4. சரஸ்வதி தீர்த்தம்.
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது.
இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.
5. சேது மாதவ தீர்த்தம்,
இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம்.
இதில் ஶ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.
6. நள தீர்த்தம்,
மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது.
இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
7. நீல தீர்த்தம்,
மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது.
இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
8. கவாய தீர்த்தம்,
இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது.
இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
9. கவாட்ச தீர்த்தம்,
இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது.
இதில் நீராடுவதால் நரகத்திற்கு
செல்ல மாட்டார்கள்.
மன வலிமை, தேக ஆரோக்கியம்,
திட சரீரம் கிடைக்கும்.
10. கந்நமாதன தீர்த்தம்,
சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது.
இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.
11. சங்கு தீர்த்தம்,
ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில்
பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.
12. சக்கர தீர்த்தம்.
ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது.
இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.
13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்,
இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது.
இதில் நீராடுவதால்
பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன்,
பில்லி சுனியமும் நீங்கும்.
14. சூர்ய தீர்த்தம்,
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.
இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.
15. சந்திர தீர்த்தம்,
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.
இதில் நீராடுவதால்
ரோக நிவர்த்தி அகலும்.
16. கங்கா தீர்த்தம்,
17. யமுனா தீர்த்தம்,
18. காயத்ரிதீர்த்தம்,
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது.
இவைகளில் நீராடுவதனால் பிணி,
மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.
19. சாத்யாம்ருத தீர்த்தம்,
திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது.
இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.
20. சிவ தீர்த்தம்,
இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது.
இதில் ஸ்ஞானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
21. சர்வ தீர்த்தம்,
இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சன்னதி
முன் உள்ளது.
இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.
கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள்.
இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.
22. கோடி தீர்த்தம்.
இந்த தீர்த்தமானது ஶ்ரீ இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது.
அதனால் ஶ்ரீராமனாவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது.
அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது.
இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இதற்கு கட்டணம் உண்டு.
பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.
கோடி தீர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது
என்பது சம்பிரதாயம்.

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...