Sunday, 30 June 2019

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள்:-

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

ஓம் அருள்வேல் போற்றி
ஓம் அபயவேல் போற்றி
ஓம் அழகுவேல் போற்றி
ஓம் அரிய வேல் போற்றி
ஓம் அயில் வேல் போற்றி
ஓம் அனைய வேல் போற்றி
ஓம் அன்பு வேல் போற்றி
ஓம் அற்புத வேல் போற்றி
ஓம் அடக்கும் வேல் போற்றி
ஓம் அகராந்தக வேல் போற்றி
ஓம் ஆளும் வேல் போற்றி
ஓம் ஆட்கொள் வேல் போற்றி
ஓம் இனிய வேல் போற்றி
ஒம் இரங்கு வேல் போற்றி
ஓம் இலை வேல் போற்றி
ஓம் இறை வேல் போற்றி
ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
ஓம் ஈறிலா வேல் போற்றி
ஓம் உக்கிர வேல் போற்றி
ஓம் உய்க்கும் வேல் போற்றி
ஓம் எழில் வேல் போற்றி
ஓம் எளிய வேல் போற்றி
ஓம் எரி வேல் போற்றி
ஓம் எதிர் வேல் போற்றி
ஓம் ஒளிர் வேல் போற்றி
ஓம் ஒப்பில் வேல் போற்றி
ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
ஓம் ஓங்கார வேல் போற்றி
ஓம் கதிர் வேல் போற்றி
ஓம் கனக வேல் போற்றி
ஓம் கருணை வேல் போற்றி
ஓம் கந்தன் வேல் போற்றி
ஓம் கற்பக வேல் போற்றி
ஓம் கம்பீர வேல் போற்றி
ஓம் கூர் வேல் போற்றி
ஓம் கூத்தன் வேல் போற்றி
ஓம் கொடு வேல் போற்றி
ஓம் கொற்ற வேல் போற்றி
ஓம் சமர் வேல் போற்றி
ஓம் சம்கார வேல் போற்றி
ஓம் சக்தி வேல் போற்றி
ஓம் சதுர் வேல் போற்றி
ஓம் சங்கரன் வேல் போற்றி
ஓம் சண்முக வேல் போற்றி
ஓம் சமரில் வேல் போற்றி
ஓம் சர்வ சக்திவேல் போற்றி
ஓம் சின வேல் போற்றி
ஓம் சிறைமீட்கும் வேல் போற்றி
ஓம் சித்ர வேல் போற்றி
ஓம் சிங்காரன் வேல் போற்றி
ஓம் சுரர் வேல் போற்றி
ஓம் சுடர் வேல் போற்றி
ஓம் சூர வேல் போற்றி
ஒம் ஞான வேல் போற்றி
ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
ஓம் தனி வேல் போற்றி
ஓம் தாரை வேல் போற்றி
ஓம் திருவேல் போற்றி
ஓம் திகழ் வேல் போற்றி
ஓம் தீர வேல் போற்றி
ஓம் தீதழி வேல் போற்றி
ஓம் துணை வேல் போற்றி
ஓம் துளைக்கும் வேல் போற்றி
ஓம் நல்வேல் போற்றி
ஓம் நீள் வேல் போற்றி
ஓம் நுண் வேல் போற்றி
ஓம் நெடு வேல் போற்றி
ஓம் பரு வேல் போற்றி
ஓம் பரன் வேல் போற்றி
ஓம் படை வேல் போற்றி
ஓம் பக்தர் வேல் போற்றி
ஓம் புகழ் வேல் போற்றி
ஓம் புகல் வேல் போற்றி
ஓம் புஷ்ப வேல் போற்றி
ஓம் புனித வேல் போற்றி
ஓம் புண்ய வேல் போற்றி
ஒம் பூஜ்ய வேல் போற்றி
ஓம் பெரு வேல் போற்றி
ஓம் பிரம்ம வேல் போற்றி
ஓம் பொருவேல் போற்றி
ஓம் பொறுக்கும் வேல் போற்றி
ஓம் மந்திர வேல் போற்றி
ஓம் மலநாசக வேல் போற்றி
ஓம் முனை வேல் போற்றி
ஓம் முரன் வேல் போற்றி
ஓம் முருகன் வேல் போற்றி
ஓம் முக்தி திரு வேல் போற்றி
ஓம் ரத்தின வேல் போற்றி
ஓம் ராஜ வேல் போற்றி
ஓம் ருத்திர வேல் போற்றி
ஓம் ருணமோசன வேல் போற்றி
ஓம் வடிவேல் போற்றி
ஓம் வஜ்ர வேல் போற்றி
ஓம் வல் வேல் போற்றி
ஓம் வளர்வேல் போற்றி
ஓம் வழிவிடு வேல் போற்றி
ஓம் வரமருள் வேல் போற்றி
ஓம் விளையாடும் வேல் போற்றி
ஓம் வினைபொடி வேல் போற்றி
ஓம் வீரவேல் போற்றி
ஓம் விசித்திர வேல் போற்றி
ஓம் வெல் வேல் போற்றி
ஓம் வெற்றி வேல் போற்றி
ஓம் ஜய வேல் போற்றி
ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி

*ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் சரவண பவாய நமஹ*

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்


ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்!

  ஆலயத்துக்குச் சென்று இறைவழிபாடு செய்வதற்கு எத்தனையோ ஆகம கோட்பாடுகள், ஐதீக விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று தினமும் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்பதாகும். தினமும் காலை, மாலை இரு நேரமும் ஆலயத்துக்கு செல்பவர்கள் முழுமையான இறையருள் இன்பத்தை பெற முடியும்.

யார் ஒருவர் தினமும் ஆலயத்துக்கு செல்கிறாரோ, அவருக்கு ஆலயத்தில் உள்ள தெய்வீக அலை சக்தி நிரம்ப கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் நாம் எல்லாரும் தினமும் ஆலயத்துக்கு செல்கிறோமா? இல்லை. நம்மில் 95 சதவீதம் பேர் தினமும் ஆலயத்துக்கு செல்வதில்லை.

இந்துக்களில் பெரும் பாலானவர்கள் குறிப்பிட்ட விழாக்கள் சமயங்களில் மட்டுமே ஆலயம் பக்கம் எட்டி பார்க்கிறார்கள். இப்படி ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒருநாள் என்று ஆலயத்துக்கு செல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தினமும் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆனால் தற்போதைய எந்திரமயமான வாழ்க்கையில் எல்லாராலும் தினமும் ஆலயம் செல்ல முடிவதில்லை.அத்தகைய சூழலில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் வாரம் ஒரு தடவையாவது ஆலயம் செல்ல வேண்டும். நாம் ஆலயத்துக்கு செல்லாத ஒவ்வொரு நாளையும் நமக்கு ஏற்பட்ட இழப்பாகத்தான் கருத வேண்டும்.

இந்த இழப்பை எப்படி சரி செய்வது?

அதற்கும் பல வழிகள் உள்ளன.

அதில் முதன்மையானதாக கருதப்படுவது ஜென்ம நட்சத்திர வழிபாடாகும். இது நம் எல்லோராலும் மிக, மிக எளிதாக கடைபிடிக்கக் கூடியது. அதோடு மிகுந்த பலன் தரக்கூடியது.

நாம்   சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.

அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும்.

பிறந்த நட்ச்சத்திரம் , அந்த நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் . எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி.

இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்ச்சத்திரங்கள் .

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்.எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள்.

குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, உங்கள் ஜாதகம் மூலம், (தீமைகள் அகல, தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிபிடத்தக்கது.

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்  . தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது.

ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன்.

வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.

நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது.

அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திரத்தின் அதி தெய்வம் (அதிதேவதை)                                                                                                                                 எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம்.

பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை. பிறந்த நாளை பெரிய பார்டி கொண்டாடுவது ஆங்கில கலாச்சாரமே, இதில் எந்த வித ஜோதிட அனுகூலமோ ரகசியமோ இல்லை.உங்கள் நட்சத்திரத்திற்கான அதிதேவதை 

அசுவினி   சரஸ்வதி

பரணி  துர்கை

கார்த்திகை   அக்னி, ஸ்ரீ முருகப் பெருமான்

ரோகிணி    பிரம்மா ,ஸ்ரீ கிருஷ்ணன்

மிருகசீரிடம்   சந்திரன் , ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர்

திருவாதிரை    சிவபெருமான்

புனர்பூசம்   அதிதி ,ஸ்ரீ ராமர்

பூசம்   பிரகஸ்பதி  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (குரு)

ஆயில்யம்   ஆதிசேஷன்

மகம்   பித்ருக்கள்,சுக்கிரன்  ஸ்ரீ சூரிய பகவான்

பூரம்   பார்வதி ,ஸ்ரீ ஆண்டாள்

உத்திரம்   சூரியன் ,ஸ்ரீ மகாலக்ஷ்மி

அஸ்தம்   சாஸ்தா,ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை   விஷ்வகர்மா ,ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி   வாயு ,ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம்   முருகன்

அனுசம்   ஶ்ரீலஷ்மி, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்

கேட்டை   இந்திரன் ,ஸ்ரீ வராஹ பெருமாள்

மூலம்    நிருதி , ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம்   வருணன் , ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

உத்திராடம்   கணபதி

திருவோணம்   விஷ்ணு ,ஸ்ரீ ஹயக்கிரீவர்

அவிட்டம்  வசுக்கள்,ஸ்ரீ அனந்தசயனப் பெருமாள்

சதயம்   எமன் ,ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி  குபேரன்,ஸ்ரீ ஏகபாதர்

உத்திரட்டாதி    காமதேனு,ஸ்ரீ மகா ஈஸ்வரர்

ரேவதி  சனிபகவான்,ஸ்ரீ அரங்கநாதன்

இப்போது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அறிந்துகொண்டீர்கள். இனியென்ன... அந்தத் தெய்வத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நினைக்க மறக்காதீர்கள். வழிபட மறக்காதீர்கள்.உங்கள் நட்சத்திரத்திற்கு   நட்சத்திர தேவதை தொடர்பான ஆலயங்களுக்கு சென்று வர 100 சதவிகித வெற்றியை அடைவீர்கள்

Thursday, 20 June 2019

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

எங்களின்ஆன்லைன் சேவை - htt p://astroav.in/


“ உங்கள் வாழ்க்கையில் சிறுவர் முதல் முதியோர் வரை, பிறப்பு முதல் இருக்கும் வரை நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை இவை அனைத்தையும் இதுவரை ஜோதிடத்தில் நீங்கள் அறிந்திடாத ரகசியங்களை பிரசன்னத்தின் மூலம் மிக துல்லியமாக கணித்து சொல்ல முடியும். “

பல புதிய தொழில் நுட்பத்தை மூலதனமாக கொண்டு எங்களின் சேவையை வழங்குகிறோம்.
  தகவல்களும்; 99941 50658 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
 
ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருகோவிலில்செயலார்




ஜோதிடமாமணி,
பிரசன்ன திலகம், ஜோதிஷஆதித்யா, 
திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி

+91 99941-50658

Thursday, 6 June 2019

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

Wednesday, 5 June 2019

மகாபாரதத்தில்

                                                                   

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/



மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.?
எவர் தெளிவாகக் கூறுவார்கள் ?
குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.
இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.
சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.
பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.
இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.
புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்..
இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது.
இது தான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான்.
ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது.
புரிந்ததா ?
கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.
*கேட்டு கொடுப்பது தானம் !*
*கேட்காமல் அளிப்பது தர்மம் !*
                                                              

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...