ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

▼

Tuesday, 17 September 2019

#ஏவல்_பில்லி_சூனியம், #கண்_திருஷ்டி #பாதிப்பிலிருந்து_தப்ப #

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

#ஏவல்_பில்லி_சூனியம்,
#கண்_திருஷ்டி
#பாதிப்பிலிருந்து_தப்ப #
#என்ன_செய்யலாம்?
தினமும் வெளியே சென்று வரும் நாம், கூடவே பல தீய சக்திகளையும் கூடவே வீட்டிற்கு அழைத்து வருகிறோம் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதில்லை. சாலையில் நடக்கும் விபத்துகள், தற்கொலைகள், அகால மரணம் உள்ளிட்டவற்றால் உடலை பிரியும் ஆத்மாக்கள், மேலோகம் செல்லும் காலம் வரை, இங்கேயே ஆவி ரூபத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்.
அந்த துர்ஆத்மாக்களை கடந்து செல்லும் போது, அதன் தாக்கம் நமக்கும் ஏற்படும். இதனால், கேட்ட அதிர்வலைகள் வீட்டில் உள்ளவர்களையும் பாதிக்க கூடும். இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வரும் போதும், சுடுகாடு, கல்லறைகளுக்கு சென்று வரும்போதும், இத்தகைய கெட்ட அதிர்வுகள் நம்மை தாக்க வாய்ப்புள்ளது.
அதே போல், கெட்ட எண்ணத்துடன், நம் மீது பொறாமையில், ஏவல், பில்லி சூனியம் ஆகியவற்றை நம் மீது யாரேனும் ஏவினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
இத்தகைய பதிப்புகளில் இருந்து தப்ப எளிதான, அதே சமயம் சக்தி வாய்ந்த பரிகாரங்கள் உள்ளன.
பெரும்பாலானோர் வீட்டு வாசலில் கண் திருஷ்டி கணபதி படம் வாசலில் தொங்க விடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கவும், பிறர் கண் திருஷ்டி நம் வீட்டில் படாமல் இருக்கவும் இவ்வாறு செய்வது வழக்கம். எனினும்,இது மட்டுமே போதாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சுவாமி படங்களை பார்த்து வணங்கி விட்டு, நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் தரித்து செல்ல வேண்டும். குறிப்பாக, இரு புருவ மத்தியில் குங்குமம் வைப்பதால், கேட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பலாம்.
கடைகளில் விற்கும் குங்குமத்திற்கு பதில், கோவில்களில் தரப்படும் குங்குமத்திற்கு சக்தி அதிகம். சந்தனம் வைக்கும் பழக்கம் உடையோர், அதையும் வைக்கலாம்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, வீடு வாசலில் கால் கழுவிவிட்டு சென்றால் நம்மை பின் தொடர்ந்த தீய சக்திகளை வாசலிலேயே விட்டுவிட்டு, வீட்டிற்குள் நுழையலாம். அவை அங்கிருந்து சென்றுவிடும்.
வீட்டு வாசலில், தினமும் காலை, மாலை இரு வேளையும் கோலமிடுவது, கெட்ட சக்திகளை விரட்டி, லட்சுமி கடாக்ஷத்தை கொடுக்கும்.
சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தினமும், மிளகாய் அல்லது சூடம் பயன்படுத்தி சுற்றிப்போடுவதால் கண் திருஷ்டியை கழிக்கலாம்.
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் உப்பு நீர் தெளித்து, வீட்டை சுத்தம் செய்வதால் நெகடிவ் வைப்ரேசன் அகன்று, பாசிட்டிவ் வைப்ரேசன் அதிகரிக்கும்.
வீட்டு பூஜை அறையில், நரசிம்மர், பிரத்யங்கரா, சாமுண்டி, காளி உள்ளிட்ட தெய்வங்களை வைத்து சுத்தபத்தமாக, பயபக்தியுடன் வணங்கி வந்தால், பேய்,பிசாசுகளின் தொல்லையில் இருந்து தப்பலாம்.
இவை எல்லாவற்றிர்க்கும் மேல், #ஆரா எனப்படும் நம் உடலை சுற்றி இருக்கும் பிரத்யேக மண்டலத்தை எப்போதும் நினைவு கூர்ந்து, அத்துடன் மன ரீதியில் பேச ஆரம்பித்தால், தீய சக்திகள் நம்மை அண்டாமல் அவை நம்மை காக்கும்.
தினமும் குறைந்தது ஒரு முறையாவது ஒரு கோவிலுக்கு சென்று வர வேண்டும். வீட்டில் வேலுடன் கூடிய முருகன் படம் வைத்து, கந்த சஷ்டி கவசம் தினமும் பாராயணம் செய்து வந்தாலே, எவ்வித தீய சக்திகளும் நம்மை அண்டாது.
தெற்கு பார்த்த வாசல் வீடுகளில் வசிப்போர், வீடு வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைப்பதால், எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் செய்யலாம்.
இவ்வளவுக்கும் மேல் எதிர்மறை சக்திகளின் பாதிப்பை நீங்கள் உணர்ந்தால், சிறிதளவு உப்பை எடுத்துக்கொண்டு, கடவுளை தியானித்து, குளிக்கும் தண்ணீரில் கரைத்து, அதில் கொஞ்சம் வேப்பிலை சேர்த்து அந்த நீரில் குளித்தால் உங்கள் உடலும், மனமும் புத்துணர்வு பெரும்...

No photo description available.
    • V Shanmuga Raj

at September 17, 2019
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

sriannathaipechiamman
View my complete profile
Powered by Blogger.