ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

▼

Monday, 4 February 2019

சுவாமி எதிரே நிற்காதீர்!

                                                           சுவாமி எதிரே நிற்காதீர்!
 கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர்.
கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு.
அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.
கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது
* வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது
* சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது
* பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது
* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது
* கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது
* கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது
* நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது
* தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து திரும்ப வேண்டும்
* ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது
* மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது
* கோவிலில் உண்ண கூடாது, உறங்க கூடாது
* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது
* பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் மற்றவரை வணங்க கூடாது
* கோவில் சொத்துக்களை எந்தவிதத்திலும் அபகரிக்க கூடாது
* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது
* அஷ்டமி, நவமி, அம்மாவசை, பௌர்ணமி, மத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த நாட்களில் வில்வம் பறிக்க கூடாது. முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும்
* தெய்வ வழிபடு ஈர உடையுடனும், ஓர் ஆடையுடனும் வழிபட கூடாது
* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது
* சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது
* கோவிலுக்கு சென்று வந்த உடனே கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பின்னர்தான் கால்களை கழுவ வேண்டும்
* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் சிறந்ததாகும்
* கோவிலில் நுழையும் போதும் வெளியே வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் வேண்டும்
* ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
* கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
* நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியனத்தையோ இடையுறு செய்ய கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே செல் போன் பேசுதல்) —
கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது…
* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.
* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.
* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.
* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.
* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.
* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.
முதன் முதலில் தோப்புக்கரணம் போட்டவர்
தோப்புக்கரணம் என்ற சொல் தோர்பிகரணம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது.
தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்றும் கூறுகிறோம்.
சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர்.
ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பது இரண்டு. பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது.
கை என்பதை சமஸ்கிருதத்தில் தோஸ் என்பர்.
தோஷா என்றால் ஒரு கை.
தோர்ப்யாம் என்றால் இரண்டு கைகள்.
மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள்.
தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு.
அப்படியானால், தோப்புக்கரணத்தை தோர்ப்யாம் கர்ணம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால், தோர்பி என்ற சொல்லுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் என்று பொருள்.
அப்படியானால், நான்கு கைகளையுடைய திருமால் தான் முதன்முதலில் தன் மருமகனான விநாயகருக்கு காதுகளை மாற்றிப்பிடித்து தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டி சிரிக்க வைத்தார்.
குட்டு என்றால் என்ன?
விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல.
இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம் வெளிப்படும் போது குட்டு உடைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு.
வியாசர் பாரதக்கதையைச் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதினார்.
அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வியாசர், இடையிடையே சிக்கலான ஸ்லோகங்களைச் சொல்லி விநாயகரை யோசனையில் ஆழ்த்தினார்.
அந்த ஸ்லோகங்களுக்கு பாரத குட்டு என்று பெயர்.
அந்த நேரத்தைப் பயன்படுத்தி அடுத்த ஸ்லோகங்களைச் சொல்ல தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் வியாசர்.
விநாயகனே! நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தக் குட்டு (ரகசியம்) உடையாமல், என் தன்மானத்தைக் காப்பாற்று, என்ற பொருளிலும் தலையில் குட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள்.
Image may contain: indoor

at February 04, 2019
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

sriannathaipechiamman
View my complete profile
Powered by Blogger.