ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

▼

Monday, 1 October 2018

ஆயுள் வளர்க்கும் பிராணாயாமம்!

                                                   ஆயுள் வளர்க்கும் பிராணாயாமம்!

 *குழந்தைப் பேறு காலதாமதம் ஆகிறது என்று கவலைப்படுபவர்கள் ப்ராணாயாமம் செய்வது மிகவும் அவசியமாகும்.*
இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள உறுப்புகளில் உள்ள குறைபாடுகள், கட்டிகள் போன்றவற்றைத் தவிர மற்ற பெரும்பாலான குறைபாடுகள் ப்ராணாயாமம் செய்வதால் சரியாகிவிடும்.
எல்லாம் சரியாக இருக்கும் ஆனால், ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் குழந்தை பாக்கியத் தடை ஏற்படும்.
அப்படியே குழந்தை பாக்கியம் உண்டாகி அது ஜெனித்தாலும் அதற்கு ஆரோக்யக் குறைபாடுகள் காணப்படும்.
நமது மூச்சுக் காற்றில் இருந்து ப்ராண சக்தியை பிரித்து, எடுத்துக் கொடுப்பது ஹீமோகுளோபினே ஆகும்.
அதன் குறைபாடு இருப்பவர்களுக்கு உடலில் ப்ராண சக்தி குறைந்து விடுவதால் உயிர் அணுக்கள் வலிமையற்றவைகளாகப் போய் விடுகின்றன.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இதனால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில காயங்கள், கட்டிகள், புண்களில் தோன்றும் தொற்றுகள் உயிர் அணுக்களைக் கொன்று விடும்.
ப்ராண சக்தி அதிகமாகும் போது உடலில் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்கும். தொற்று நோய்க் கிருமிகள் அழிக்கப்படும்.
ப்ராணாயாமம் செய்தால் மட்டும் என்ன மாற்றங்கள் ஏற்பட்டு விடப் போகிறது ?
என்றால், எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ப்ராணனே வியக்தமாய் மாறும் போது சக்தியாகி மானுட சரீரத்தில் நடைபெறும் செயல்களாக வடிவெடுக்கிறது.
அதுவே உயிராகவும் திகழ்கிறது. அதுவே நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவின் உள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ப்ராணன் உடலில் தொழிலாக, நரம்பில் ஓட்டமாக, இதயத்தில் துடிப்பாக மேலும் நுரையீரல் விரிந்து சுருங்கவும், நாளமில்லா சுரப்பிகள் திறம்பட இயங்கி தம் சுரப்பு நீர்களை சுரப்பிக்கவும், உணவு செரிக்கவும், கழிவுகள் வெளியேறவும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனதை கட்டுப்படுத்தி எண்ணங்களை வலிமையாக்கவும் காரணமாக அமைகிறது.
இல்வாழ்க்கையானாலும், யோக நிலையானாலும் ப்ராணனின் பங்கு அளவிட முடியாததாகும்.
இல்வாழ்வைப் பொருத்தவரை உழைப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும், மற்ற எல்லா கடமைகளைச் செய்வதற்கும் ப்ராணசக்தி அதிகம் செலவாகிறது.
யோகநிலையிலோ அது பெருகி பெருகி திணிவு ஏற்பட்டு தன் மூலமான ப்ரம்மத்திடம் போய் சேர்கிறது. எனவே அதிகம் செலவு செய்கிற இல்வாழ்வில் உள்ளவர்கள் கட்டாயம் ப்ராண சக்தியை மேம்படுத்தி தக்க வைத்துக் கொள்ள அல்லது சமன் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
ப்ராணனை நம் உடல் பல வழிகளில் பெற்றுக் கொண்டாலும், மூச்சின் வழியாகவே அதிகம் பெற முடியும்.
அதன் சக்தியை நாம் உணர வேண்டுமானால் மூச்சின் மூலமாகவே உணர முடியும்.
மின்சாரத்தை டெஸட்டர் மூலம் அடையாளம் காண்பது போல ப்ராணனை மூச்சின் மூலம் அடையாளம் காணமுடியும்.
அதோடு மட்டுமல்ல மூச்சின் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்துவது என்பது அதை சமன் செய்வதைக் குறிப்பதே. அதாவது செலவுக்குத் தகுந்த வரவு இருந்தால் நம் உடலில் ப்ராண சக்தி குறைபாடு ஏற்படாது.
ப்ராண சக்தி குறைவற்றவர்கள் உடல், மனம் அறிவு எல்லாம் செம்மையாகச் செயல்படும்.
ப்ரம்த்தின் சக்தியே ப்ராணன் என்பதால் ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
எதிர்மறைச் சிந்தனைகள் தோன்றாது.
உண்மைகள் இயல்பாகவே தெளிவாகப் புரியும்.
மனிதன் தன் வாழ்நாளில் அறிவையும், மனோ சக்திகளையும் 10 சதவிகிதம் கூடப் பயன்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன.
காரணம் நன்கு மூச்சு விடுவதற்குக் கூட மனிதன் கற்றுக் கொள்ளவில்லை.
நம் முன்னோர்களின் பாடல்களில் நாயை இழிவானதாகப் பாடியிருப்பார்கள்.
ஏன் அப்படிப் பாடினார்கள் ?
நாய் நன்றி உள்ளது தானே ? என்றால், நாயானது தேவையில்லாமல் தன் மூச்சை விரையம் செய்து ப்ராணசக்தியை இழந்து குறைந்த ஆயுட்காலம் மட்டுமே வாழ்ந்து மடியும்.
அது போல மாடு, பெரியவர்கள் திட்டும் போது மாடு மாதிரி என்றெல்லாம் திட்டுவார்கள்.
அதுவும் அப்படித்தான் அசை போடுவதன் மூலம் தன் மூச்சை விரையம் செய்து ப்ராண சக்தியை இழந்து குறைந்த ஆயுட்காலத்தில் மறைந்துவிடும்.
இதிலிருந்து தெரியும் உண்மை என்னவென்றால் ப்ராண சக்தியை வீண் விரையம் செய்பவன் இழிவானவன் என்பதாகும் கருத்து.
எனவே நாம் முதலில் குழந்தைகளுக்கு மூச்சு விடக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மலைவாசிகள், காட்டுவாசிகள் கலாச்சாரங்களில் இந்தப் பழக்கம் உண்டு.
அவர்கள் குழந்தைகளை வாய் வழியே மூச்சு விடக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.
பிறந்த நாள் முதலே மூச்சு ஒழுங்குபடுத்தும் படியான பழக்கங்களைக் கையாளுவார்கள்.
படுக்க வைப்பது, உட்கார வைப்பது, தன் முதுகில் தொட்டில் போலக் கட்டிக் கொண்டு நடக்கும் போது குழந்தையை வைத்திருக்கும் முறை எல்லாவற்றையும் உற்று கவனித்தால் மூச்சுப் பயிற்சிக்கான நடவடிக்கைகளாக இருப்பது புரியும்.
அந்தக் குழந்தை வளரும் போது இயல்பாகவே அது நன்கு முறைப்படி மூச்சு விடும்.
நாம் மிகக் குறைந்த அளவு காற்றையே மூச்சாக உள் இழுத்து, அதையும் விரைவாக வெளியற்றி விடுகிறோம்.
எனவேதான் தற்காலம் மனிதனின் ஆயுள் மிகவும் குறைவாக உள்ளது.
அரை லிட்டர் காற்றை இழுத்து அரை லிட்டர் வெளியே விடுகிறோம்.
அதுவே முறைப்படி நன்கு சுவாசிக்கப் பழகிய மனிதன் இரண்டரை லிட்டர் காற்றை உள் இழுக்க முடியும்.
ஆனால், அவ்வாறு செய்வதில்லை. எனவே நுரையீரலின் ஐந்தில் ஒரு பங்கு பகுதி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
மற்ற பகுதியில் உள்ள செல்கள் எல்லாம் பயன்பாடு இல்லாத காரணத்தால் மரித்துப் போய்விடுகின்றன. இது மனிதனுக்கு பேரிழப்பாகும்.
அந்தோ பரிதாபம் இதை அறியாமலேயே அவன் மாண்டு போகிறானே.
இந்தப் பழக்கவழக்கங்களையெல்லாம் நம்மில் இருந்து மறைத்தவர்கள் கொடும் பாவிகள்.
மேலும் மூளைக்கு போதிய அளவு இரத்த ஓட்டம், ப்ராணவாயு, ப்ராணசக்தி கிடைக்காமல் போகிறது. மனம் அமைதியை இழக்கிறது.
உடல் உறுப்புகளில் உள்ள செல்கள் போதிய ப்ராணசக்தி இல்லாத காரணத்தால் மரித்துப் போய்விடுகின்றன.
பிறகு ஓய்வெடுக்கும் போது அவை மீண்டும் உயிர்ப்படைவதில்லை.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முறைப்படி ப்ராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள்.
இயலாதவர்கள் இந்த ஐந்து விஷயங்களையாவது கடைபிடியுங்கள்.
1. ஆழமாக மூச்சு விடுதல்.
2. மெல்ல மெல்ல மூச்சு விடுதல்.
3. இடையீடின்றி தொடர்ந்து மூச்சு விடுதல்.
4. சுலபமாக மூச்சு விடுதல்.
5. மூச்சை நன்கு உற்று கவனித்தல்.
வாழ்க வளமுடன்.
*"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்".

C
V Shanmuga Raj
.
at October 01, 2018
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

sriannathaipechiamman
View my complete profile
Powered by Blogger.