ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

▼

Saturday, 24 March 2018

இந்தியாவில் கிரக தேவதை வழிபாடுகள்

இந்தியாவில் கிரக தேவதை வழிபாடுகள்

ஒரு ஜோதிடர் முருகன் வழிபாடு இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது. வட இந்தியாவில் முருகன் வழிபாடு இல்லை, ஆனால் அங்கு பிள்ளையார் வழிபாடு அதிகமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தார். அவருக்கு பதில் கூறும் முகமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் என் மனதில் தோன்றிய அனுமானங்கள் மட்டுமே. இதுதான் நிச்சயமான காரணம் என்று சொல்ல நான் விரும்பவில்லை.
உலக நாடுகளில் இந்தியாவில் மட்டுமே நவக்கிரக வழிபாடும், நவக்கிரக தேவதா வழிபாடும் உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வழிப்பாட்டு முறைகள் கிடையாது என்பதால் ஜோதிட அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகள் இந்தியாவில் எப்படி அமைந்துள்ளது எனப்பார்ப்போம்.
ராசி மண்டலத்தை நான்கு திசைகளாக பிரித்துள்ளார்கள். அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
மேசம்-சிம்மம்-தனுசு- கிழக்கு
ரிசபம்-கன்னி-மகரம்-தெற்கு
மிதுனம்-துலாம்-கும்பம்-மேற்கு
கடகம்-விருச்சிகம்-மீனம்-வடக்கு
நக்கிரகங்களில் சூரியன் கிழக்கு திசையைக்குறிக்கும் மேச ராசியில் உச்சமடைகிறான். சந்திரன் தெற்கு திசையைகுறிக்கும் ரிசப ராசியில் உச்சமடைகிறான். செவ்வாய் தெற்கு திசையைக்குறிக்கும் மகரத்தில் உச்சமடைகிறான். புதன் தெற்கு திசையைக்குறிக்கும் கன்னியில் உச்சமடைகிறான். குரு வடக்கு திசையைக்குறிக்கும் கடக ராசியில் உச்சமடைகிறான். சுக்கிரன் வடக்கு திசையைக்குறிக்கும் மீன ராசியில் உச்சமடைகிறான். சனி மேற்கு திசையைக்குறிக்கும் துலாம் ராசியில் உச்சமடைகிறான். ராகு தெற்கு திசையைக்குறிக்கும் ரிசப ராசியில் உச்சமடைகிறான். கேது வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிகத்தில் உச்சமடைகிறான்.
நக்கிரகங்களில் சூரியன் மேற்கு திசையைக்குறிக்கும் துலாம் ராசியில் நீச்சமடைகிறான். சந்திரன் வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிகத்தில் நீச்சமடைகிறான். செவ்வாய் வடக்கு திசையைக்குறிக்கும் கடகத்தில் நீச்சமடைகிறான். புதன் வடக்கு திசையைக்குறிக்கும் மீனத்தில் நீச்சமடைகிறான். குரு தெற்கு திசையைக்குறிக்கும் மகரத்தில் நீச்சமடைகிறான். சுக்கிரன் தெற்கு திசையைக்குறிக்கும் கன்னி ராசியில் நீச்சமடைகிறான். சனி கிழக்கு திசையைக்குறிக்கும் மேச ராசியில் மேச ராசியில் நீச்சமடைகிறான். ராகு வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிக ராசியில் நீச்சமடைகிறான். கேது தெற்கு திசையைக்குறிக்கும் ரிசபத்தில் நீச்சமடைகிறான்.
நவக்கிரக தேவதைகள்
சூரியன்-சிவன் வழிபாடு
சந்திரன்- பார்வதி (அம்மன்) வழிபாடு
செவ்வாய்-முருகன்
புதன்- விஷ்னு
குரு- பிரஹஸ்பதி (ஆசாரியன்)
சுக்கிரன்-லக்ஷ்மி
சனி- சனி வழிபாடு
ராகு-சித்தர் வழிபாடு,துர்கை வழிபாடு
கேது-ரிஷி வழிபாடு, பிள்ளையார் வழிபாடு
வடக்கு திசை ராசியில் செவ்வாய்,சந்திரன், ராகு, புதன் நீச்சம். குரு,சுக்கிரன்,கேது உச்சம். எனவே வட இந்தியாவில் முருகன் வழிபாடு, அம்மன்வழிபாடு, சித்தர் வழிபாடு விஷ்ணு வழிபாடுகள் குறைவு. ஆனால் அங்கே மகான் (குரு) வழிபாடு, லக்ஷ்மி வழிபாடு ,ரிஷி வழிபாடு மற்றும் பிள்ளையார் வழிபாடு அதிகம்.
தெற்கு திசை ராசியில் செவ்வாய், சந்திரன், ராகு, புதன் உச்சம். குரு, சுக்கிரன்,கேது நீச்சம். எனவே தென் இந்தியாவில் குரு வழிபாடு, ரிஷி வழிபாடு,லக்ஷ்மி வழிபாடு குறைவு. ஆனால் முருகன் வழிபாடு , அம்மன் வழிபாடு , சித்தர் வழிபாடு விஷ்ணு வழிபாடுகள் அதிகமாக உள்ளது.
கிழக்கு திசை ராசியில் சூரியன் உச்சம், சனி நீச்சம். எனவே கிழக்கு இந்தியாவில் சிவ வழிபாடு அதிகம். சனி வழிபாடு குறைவு.
மேற்கு திசை ராசியில் சனி உச்சம், சூரியன் நீச்சம். எனவே மேற்கு இந்தியாவில் சனீஸ்வரன் வழிபாடு அதிகம். சிவ வழிபாடு குறைவு.
No automatic alt text available.

at March 24, 2018
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

sriannathaipechiamman
View my complete profile
Powered by Blogger.