தினசரி
காலை எழுந்த உடன் அவரவர் இரு கரங்களையும் சேர்த்து உள்ளங்கையை காணவும்.
உள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்.
உள்ளங்கையில் சக்தி, சரஸ்வதி, லட்சுமி, என மூன்று அன்னையரும் வந்து தங்கும் மையமாகும். இவர்களை நினைத்து உள்ளங்கையை பார்த்தால் கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் நமக்கு கிடைக்கும்.
உள்ளங்கையை குளிக்கும்போதும், தலையில் எண்ணெய் தேய்க்கும் போதும் தவிர்த்து மற்ற நேரங்களிலும், எந்த
காரணம் கொண்டும் தலையில் கையை வைக்க கூடாது . நாம் பெற்றுள்ள கர்ம வினை
பாவங்கள் பெருகிவிடும். அந்த வினை நம்மை வீழ்ச்சி அடைய வைக்கும். எனவே
உள்ளங்கையை தலையில் படும்படி சூரிய நமஸ்கார வேளை, குளியல் வேளை, எண்ணெய்
தேய்க்கும் போது தவிர மற்ற வேளையில் படவே கூடாது . ஆண்களுக்கு
வெள்ளிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது. பெண்களுக்கு சனிக்கிழமை
உள்ளங்கை தலையில் படக்கூடாது . செவ்வாய்கிழமை யாருக்குமே சூரிய நமஸ்கார
வேளைக்கு பிறகு படக்கூடாது. அதற்கு முன் படலாம். பொதுவாக உள்ளங்கை சூரிய
உதயத்திற்கு முன் தலையில் பட்டால் தோஷமில்லை. உதயத்திற்கு பின் அவசியம்
காரணமின்றி படாமல் பார்த்துக் கொள்ளவும். இரவில் உறங்கும்போது கூட தலையில்
கை வைக்காம் தூங்குவதே சிறந்தது. தலையில், கன்னத்தில்
காதில் உள்ளங்கை வைத்து படுத்துறங்கினால் எந்நிலையில் உள்ளவராயினும்
தரித்திரம் பிடிக்கும். எனவே கவனம் உள்ளங்கையை காலை எழுந்ததும் பார்த்து
கண்களில் வணக்கத்துடன் ஒற்றிக்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர மகா
அதிஷ்டசாலியாக வருவீர். வாழ்வீர், வளர்வீர் வளமுடன்.
No comments:
Post a Comment